SAY NO TO PPP, TET ,CPS

நிதி வழங்குக

GREAT SALUTE TO OUR ESWARANJI

Todays Educational News

கல்வி செய்தி

முக்கிய செய்திகள் – Google செய்திகள்

BBCTamil.com | இந்தியா

FLASH NEWS

முக்கிய செய்திகள்



FIGHT UNTILL YOU WIN YOUR DEMANDS

மேலும் கல்வி செய்திகள்

Tamilnadu Teachers friendly blog

தினகரன் கல்வி செய்திகள்

தமிழ் முரசு செய்திகள்

தினகரன் முக்கிய செய்திகள் --

TEACHER TamilNadu

தமிழ் முரசு முக்கிய செய்திகள்

Dinamani

Daily Thanthi

கல்வி அஞ்சல்

புதிய தலைமுறை தொலைக்காட்சி

Thursday, June 21, 2012

TRB ALERTS ABOUT ANTISOCIAL ELEMENTS


சமூக விரோத கும்பலிடம் சிக்க வேண்டாம்: டி.ஆர்.பி. எச்சரிக்கை-21-06-2012


சென்னை: அனைத்து தேர்வுகளும், முறையாக, நேர்மையாக, ஒவ்வொரு நிலையிலும் கவனமுடன் மேற்கொள்ளப்படுகின்றன. தேர்வில், எவ்வித முறைகேடுகளுக்கும் இடம் கிடையாது. சமூக விரோத கும்பலின் பேச்சுக்களை நம்பி, தேர்வர் ஏமாறக் கூடாது. சமூக விரோத கும்பல் அணுகினால், உடனடியாக தகவல் தெரிவிக்கலாம். அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என, டி.ஆர்.பி. தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, டி.ஆர்.பி., நேற்று வெளியிட்ட அறிக்கை: "தமிழக முதல்வர், எப்போதும் இல்லாத அளவிற்கு, இந்த ஆண்டில், 42 ஆயிரம் ஆசிரியர்களை நியமிக்க உத்தரவிட்டார். இதற்கான தேர்வுகள், வெளிப்படையாகவும், நேர்மையாகவும், சரியான முறையிலும் நடந்து வருகின்றன. பள்ளிக் கல்வி அமைச்சரும், டி.ஆர்.பி., தேர்வுகள் அனைத்தையும் வெளிப்படையாக, முறையான அடிப்படையில் நடத்த வேண்டும் என, தெளிவாக கூறியுள்ளார்.
எனினும், டி.ஆர்.பி., தேர்வுகள் குறித்து, வெளியில் சிலர், தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். இத்தகவல், டி.ஆர்.பி.,யின் கவனத்திற்கு வந்துள்ளன. இதனால், தேர்வு நடைமுறைகள் குறித்து, தேர்வர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது, டி.ஆர்.பி.,யின் முக்கிய கடமை. டி.ஆர்.பி.,யில் நடைபெறும் அனைத்துப் பணிகளும், முற்றிலும் கணினிமயமானது.
விண்ணப்பங்கள் பெறப்பட்டதும், அது உடனடியாக, "ஸ்கேன்&' செய்யப்படுகிறது. விண்ணப்பத்தில், பணியாளர்களின் தலையீடு எதையும் அனுமதிப்பதில்லை. பதிவெண் ஒதுக்கீடு, தேர்வு மையம், தேர்வு அறை, இருக்கை விவரம் உள்ளிட்ட அனைத்துப் பணிகளுமே, கம்ப்யூட்டர் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. "ஹால் டிக்கெட்&'டுகள், தபால் மூலம், சம்பந்தப்பட்ட தேர்வருக்கு அனுப்பப்படுகிறது. தேர்வு மையத்தில் இருந்து, விடைத்தாள் நகலை, தேர்வர் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
தேர்வு மையங்களில் இருந்து, விடைத் தாள்களை பெற்று உடனடியாக,"ஸ்கேன்&' செய்யப்பட்டு, கம்ப்யூட்டர் மூலம் மதிப்பீடு செய்யப்படுகிறது. அதன்பின், இட ஒதுக்கீடு அடிப்படையில், மெரிட் பட்டியல் தயாரிக்கப்பட்டு, தேர்வு முடிவு வெளியிடப்படுகிறது. இவை அனைத்துமே, கணினிமயமாக்கப்பட்ட திட்டத்தின் மூலம் நடக்கின்றன.
இறுதிப் பட்டியல் வெளியிடும்போது, தேர்வர்களின் நலன் கருதி, டி.ஆர்.பி., இணையதளத்தில், "கீ-ஆன்சர்&' வெளியிடுவது என, டி.ஆர்.பி., முடிவு செய்துள்ளது. இதன்மூலம், தேர்வர், தங்களது மதிப்பெண்களை சுயமாகவும், தெளிவாகவும் மதிப்பீடு செய்து கொள்ள முடியும்.
எனவே, தேர்வர்கள், டி.ஆர்.பி., செயல்பாடுகளில் முழு நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். சமூக விரோத கும்பல் மற்றும் சம்பந்தமில்லாத நபர்களின் பேச்சைக் கேட்க வேண்டாம். பணம் கொடுத்தால் வேலை என்று கூறும் சமூக விரோத கும்பலிடம், தேர்வர் சிக்கி ஏமாறக் கூடாது. அப்படிப்பட்ட நபர்களைப் பற்றி தகவல் கூறினால், அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது.

No comments: