பிறப்புச் சான்றிதழில் குளறுபடி: பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவு-26-06-2012
விருதுநகர்: பள்ளி சான்றிதழில் பிறந்த தேதி குளறுபடிகளை, தலைமை ஆசிரியர்கள் சரி செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கிராமங்களில் 5 வயதுக்கு முன்பே குழந்தைகளை பள்ளியில் சேர்த்து, பிறந்த தேதியை மாற்றிப் பதிவு செய்கின்றனர். இதனால் பிறப்புச் சான்றிதழ் மற்றும் பள்ளி சான்றுகளில் வேறுபாடு ஏற்படுகிறது. இக்குளறுபடிகளால் மாணவர்கள், பொதுத்தேர்வு எழுதும்போது சிக்கல் ஏற்படுகிறது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
இதன்படி நடவடிக்கை எடுத்துள்ள கல்வித்துறை, உள்ளாட்சிகளில் வழங்கப்படும் பிறப்பு சான்றிதழ்படி, பள்ளி மாற்றுச் சான்றிதழில் திருத்தம் செய்யலாம் என தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.
No comments:
Post a Comment