260 ஆசிரியர்களுக்கு ரூ.6 கோடி பணப்பயன்
சென்னை:தமிழ்நாடு நிர்வாக தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்து உத்தரவு பெற்ற, தொடக்கக் கல்வித்துறையைச் சேர்ந்த, 260 ஆசிரியருக்கு, ஆறு கோடி ரூபாய் நிலுவைத் தொகையாக வழங்கப்படும் என, தமிழக அரசு அறிவித்தது.கடந்த, 1988 ஜூன் 1ம் தேதிக்கு முன்வரை, ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியரின் சம்பளம் ஒரே நிலையில் இருந்தது. இந்த தேதிக்குப் பின், இரண்டு ஆசிரியர்களுக்கும் தனித்தனியே சம்பள விகிதம் மாற்றப்பட்டது. இதையடுத்து, 1988, ஜூன் 1ம் தேதிக்கு முன்வரை பணியாற்றிய காலத்தை, புதிய சம்பள விகிதப்படி கணக்கிட்டு வழங்கக்கோரி, இடைநிலை ஆசிரியர் மற்றும் ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் 65 பேர், தமிழ்நாடு நிர்வாக தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்தனர். இவர்களுக்கு, புதிய விகிதத்தில் சம்பளம் கணக்கிட்டு வழங்க உத்தரவிடப்பட்டது. இவர்களை பின்பற்றி, மேலும், 195 பேர் வழக்கு தொடுத்து உத்தரவு பெற்றனர்.அதன்படி, 260 பேருக்கும், ஆறு கோடியே ஆறு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என, பள்ளிக் கல்வித்துறை பிறப்பித்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது. இதன்படி, 260 ஆசிரியரில் ஒவ்வொருவரும் குறைந்தபட்சம், 1.75 லட்ச ரூபாயும், அதிகபட்சமாக, மூன்று லட்சத்து 7,500 ரூபாயும் பெறுவர்.
No comments:
Post a Comment