உதவி தொடக்கக்கல்வி அலுவலர் 113 பேருக்கு பணியிட மாறுதல்-24-06-2012
சென்னை: தமிழகத்தில், 113 உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு, பணியிட மாறுதலுக்கான உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பணியிட மாறுதலுக்கான கவுன்சிலிங், தொடக்கக் கல்வி இயக்குனரகத்தில் நேற்று நடந்தது. பணியிட மாறுதல் கேட்டு, 227 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 113 பேர், விரும்பிய இடங்களை தேர்வு செய்தனர்.
இதையடுத்து, இவர்கள் அனைவருக்கும், பணியிட மாறுதலுக்கான உத்தரவுகளை, இயக்குனர் ராமேஸ்வர முருகன் வழங்கினார். துறையில், 63 உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடங்கள், காலியாக உள்ளன. இதில், ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய போட்டித் தேர்வு மூலம், 34 பேர் நேரடியாக உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களாக, தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு, விரைவில் பணி நியமன உத்தரவு வழங்கப்பட உள்ளது. மீதியுள்ள இடங்கள், பதவி உயர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.
No comments:
Post a Comment