SAY NO TO PPP, TET ,CPS

நிதி வழங்குக

GREAT SALUTE TO OUR ESWARANJI

Todays Educational News

கல்வி செய்தி

முக்கிய செய்திகள் – Google செய்திகள்

BBCTamil.com | இந்தியா

FLASH NEWS

முக்கிய செய்திகள்



FIGHT UNTILL YOU WIN YOUR DEMANDS

மேலும் கல்வி செய்திகள்

Tamilnadu Teachers friendly blog

தினகரன் கல்வி செய்திகள்

தமிழ் முரசு செய்திகள்

தினகரன் முக்கிய செய்திகள் --

TEACHER TamilNadu

தமிழ் முரசு முக்கிய செய்திகள்

Dinamani

Daily Thanthi

கல்வி அஞ்சல்

புதிய தலைமுறை தொலைக்காட்சி

Thursday, May 10, 2012

TRAINING FOR ENGLISH TEACHERS

ஆங்கில ஆசிரியர்களுக்குப் பயிற்சி


பிரிட்டிஷ் தூதரகத்தின் கீழ் இயங்கி வரும் பிரிட்டிஷ் கவுன்சில், ஆங்கில மொழி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் புதிய படிப்புகளை அறிமுகம் செய்துள்ளது. இது குறித்து கவுன்சிலின் தென்னிந்தியப் பிரிவு இயக்குநர் பால் செல்லர்ஸ் சென்னையில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது: டி.கே.டி. (டீச்சிங் நாலெட்ஜ் டெஸ்ட்) படிப்பை கேம்பிரிட்ஜின் டி.கே.டி. தேர்வுக்கான பயிற்சியாகவோ அல்லது ஆசிரியர் பயிற்சியாகவோ எடுத்துக்கொள்ளலாம். அனைத்து வயதினரும் இந்தப் படிப்பில் சேரலாம். இரண்டு பருவங்களில் மூன்று மாட்யூல்களாக கற்பிக்கப்படும் இதில் கட்டணச் சலுகைகள் வழங்கப்படும். 7 வாரங்கள் கொண்ட இந்தப் பயிற்சி, சென்னை, ஹைதராபாதில் மே 30-ம் தேதி தொடங்கும் என்றார்.
இந்தப் பயிற்சி சென்னையில் ஜூன் 11-ம் தேதி முதல் 13-ம் தேதி வரையும், ஹைதராபாதில் ஆகஸ்ட் மாதமும் நடைபெறும்' என்றார்.

பிரிட்டிஷ் கவுன்சிலின் உதவிக்கரம் ஆங்கிலத்தில் ஆளுமை



இன்றைய சூழலில் தொடர்பியல் திறனை வளர்த்துக் கொள்வதால் மட்டுமே, போட்டிகள், சவால்களை எதிர்கொண்டு அதிக வாய்ப்புகளை வென்றெடுக்கலாம். பட்டங்கள், பதக்கங்களைக் குவித்திருந்தால் மட்டும் போதாது. நுனி நாக்கில் ஆங்கிலத்தில் சரளமாக வார்த்தைகளை அழகான உச்சரிப்புடன் பேசினால் போதும். உலகம் வியப்புடன் திரும்பிப் பார்க்கும் என்று நம்புகிறீர்களா?

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் திறன் பெற வேண்டுமா? இதோ, நீங்களும் அட்சரம் பிசகாமல் ஆங்கிலத்தில் பேசும் திறனை வளர்த்து, இந்த உலகத்தை உங்கள் நாவின் அசைவால், அசர வைக்க உதவிக் கரம் நீட்டி வழிகாட்டுகிறது பிரிட்டிஷ் கவுன்சில். இதற்காக பிரிட்டிஷ் கவுன்சில் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது. இதுகுறித்து, அதன் தொடர்பு அலுவலர் ரஜினி ராஜன் கூறியதாவது:

உலகில் 53 நாடுகளில் ஆங்கிலப் பயிற்சி வகுப்புகளை பிரிட்டிஷ் கவுன்சில் நடத்தி வருகிறது. இந்தியாவில் சென்னை, தில்லி, ஹைதராபாத், கொல்கத்தா உள்ளிட்ட எங்களது மையங்களில் ஆண்டுதோறும் 12 ஆயிரம் பேர் ஆங்கிலம் கற்கின்றனர். ஆண்டுதோறும் நடத்தும் 4 வகையான ஆங்கிலப் பயிற்சி வகுப்புகள் குறித்த விவரம் ஆங்கிலம்-எவல்யூஷன்  (42
மணி நேரம்): சரளமான பேச்சு, சொல் திறன், எழுத்தாற்றல், கவனிக்கும் திறன், இலக்கணம், துல்லியம் என உச்சரிப்பு ஆகியவற்றில் பயிற்சி அளிக்கப்படும். ஆங்கிலம்-எக்ஸிகியூட்டிவ் (42 மணி நேரம்): படைப்பாற்றல்,கூட்டங்கள்,பேச்சுவார்த்தை,தொழில்-வணிகரீதியான கடிதங்கள் எழுதுதல், இ-மெயில், குறிப்புகள் அனுப்புதல் ஆகியவற்றில் பயிற்சி வழங்கப்படும்.

ஆங்கிலம்- இம்பேக்ட் (42 மணி நேரம்): நேர்முகம், குழு விவாதம், பொது மேடைகளில் சரளமாகப் பேசுதல் ஆகியவற்றில் பயிற்சி அளிக்கப்படும். தொழில் வணிக ரீதியாக எழுதும் திறன் (14 மணி நேரம்): மேலாண்மைத் திறனுடன் இ-மெயில், கடிதங்கள், குறிப்பெடுத்தல், விளக்கம் கோருதல் (மெமோ), தொலை நகல் (ஃபேக்ஸ்) செய்தி அனுப்புதல் ஆகியவற்றில் பயிற்சி அளிக்கப்படும். ஆங்கிலம் கற்பித்தலுக்கான சான்றிதழ் பயிற்சி-சி.இ.எல்.டி.ஏ. (120 மணி நேரம்): வயது வந்தோருக்கு ஆங்கிலம் கற்பித்தலில் முறையியலுடன் கூடிய பயிற்சி அளிக்கப்படும். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் வழங்கும் சர்வதேச அளவிலான அங்கீகாரம் உள்ள சான்றிதழ் இந்தப் பயிற்சிக்கு அளிக்கப்படுகிறது.

குழந்தைகளுக்கு...குழந்தைகளும் ஆங்கிலத்தில் திறன் பெறும் வகையில் 2 வகையான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

இதன் விவரம்: சிறப்பு பயிற்சி (ரெகுலர் கோர்ஸ்-28 மணி நேரம்): 13 முதல் 15 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு ஆங்கிலத்தில் பேச்சு, கவனித்தல், சொல்வளம், படித்தல், எழுதுதல், உச்சரிப்பு ஆகியவற்றில் பயிற்சி தரப்படும். கோடைகால பயிற்சி (30 மணி நேரம்): 8 முதல் 15 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு ஆங்கிலத்தில் பேசுதல், கவனித்தல், சொல்வளம், இலக்கணம், படித்தல், எழுதுதல், துல்லியமான உச்சரிப்பு ஆகியவற்றில் பயிற்சி அளிக்கப்படும். அனைத்துப்  பயிற்சி வகுப்புகளில் சேருவோருக்கும் தகுதியும், அனுபவமும் பெற்ற ஆசிரியர்களால் பயிற்றுவிக்கப்படும். கலந்துரையாடலுடன் கூடியதாக இந்த பயிற்சி இருக்கும்.

பயிற்சி வகுப்புகளின் நேரம்
வார நாள்களில் தினமும் காலை 7 முதல் இரவு 9 மணி நேரம் பயிற்சி வகுப்புகள் நடைபெறும். வார இறுதி நாள்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் தினமும் காலை 9 முதல் இரவு 8 மணி வரை வகுப்புகள் நடைபெறும். இதில் தங்களுக்கு விருப்பமான நேரத்தில் (ஒதுக்கப்பட்ட) தினமும் 2 மணி நேரம் வரை பயிற்சி வகுப்புகளில் பங்கேற்கலாம்.

பயிற்சியில் சேருவதற்கு முன்பாக, ஆங்கிலத்தில் உங்களது திறனை அறியும் வகையில் இலவசமாக நடத்தும் நிலை தேர்வுகளில் (லெவல் டெஸ்ட்) தேர்ச்சி பெறுவது அவசியம்.
மேலும் விவரங்களுக்கு...
பிரிட்டிஷ் கவுன்சில் சென்னை மையம்
737,அண்ணா சாலை
தொ.பே. எண்கள்: 044-4205 0600,
இணையதள முகவரி: www.britishcouncil.org.in

No comments: