கொளுத்தும் வெயில்: பள்ளிகள் திறப்பது ஒத்திவைப்பு?
சென்னை, மே 29: மே மாதம் முடிவடையும் நிலையிலும் வெயிலின் உக்கிரம் குறையாததால் பள்ளிகள் திறப்பது ஒத்திவைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழகம் முழுவதும் தேர்வுக்குப் பிறகு அரசு, உதவி பெறும் பள்ளிகளுக்கு மே 1-ம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்பட்டது. கோடை விடுமுறைக்குப் பிறகு ஜூன் 1-ம் தேதி (வெள்ளிக்கிழமை) அரசு, அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளும், தனியார் பள்ளிகளும், மெட்ரிகுலேஷன் பள்ளிகளும் திறக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னை, வேலூர், புதுவை, கடலூர், திருச்சி, மதுரை, நெல்லை உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமாக கோடை வெயில் பதிவாகி வருகிறது. கத்திரி வெயில் முடிவடைந்த பிறகும் சென்னையில் 108 டிகிரி வெயில் பதிவாகி உள்ளது. மேலும் தனியார் பள்ளிகள் ஜூன் 4-ம் தேதியும், சி.பி.எஸ்.இ. பள்ளிகள் 18-ம் தேதியும் திறக்கப்பட உள்ளன.
இதனால் அரசுப் பள்ளிகள் திறப்பது கால தாமதம் ஏற்படுமா என்ற கேள்வி பெற்றோரிடையே ஏற்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறும்போது, கத்திரி வெயில் முடிவடைந்துவிட்டதால் படிப்படியாக வெயிலின் உக்கிரம் குறையும் என்று எதிர்பார்க்கிறோம். ஒருவேளை வெயிலின் உக்கிரம் மிக அதிகமாக இருந்தால் பள்ளிகளைத் திறப்பது குறித்து அரசு முடிவு செய்து அறிவிக்கும் என்றனர்
.
புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் உள்ள பள்ளிகளில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறக்கும் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜூன் முதல் தேதியன்று திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது தற்போது ஜூன் 4 ஆக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அக்னி வெயில் முடிந்த பிறகும் யூனியன் பிரதேசங்களில் வெப்பம் தணியாமல் இருப்பதால் பள்ளிகள் திறக்கும் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment