மாணவர்களை நல்வழிப்படுத்த ஆசிரியர்களுக்கு அதிகாரம் வேண்டும்: சங்கங்கள் கோரிக்கை
First Published : 13 Feb 2012 05:53:15 AM IST
சென்னை, பிப். 12: சென்னையில் பள்ளி வகுப்பறையில் ஆசிரியரை மாணவர் கொலை செய்த சம்பவத்துக்கு ஆசிரியர் சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன. அதோடு, மாணவர்களை நல்வழிப்படுத்துவதற்கு ஆசிரியர்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்றும் அந்த சங்கங்கள் கோரியுள்ளன.
இதுதொடர்பாக தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் கழகத்தின் மாநிலத் தலைவர் இளங்கோவன் கூறியது:
கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு தமிழக அரசும், கல்வித் துறையும் தக்க பாதுகாப்பு வழங்க வேண்டும்.
அந்த மாணவருக்கு கடுமையான தண்டனை வழங்குவதோடு, ஆசிரியரின் குடும்பத்துக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்றார் அவர்.
தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கழகத்தின் பொதுச்செயலாளர் வா.ராதாகிருஷ்ணன்: இந்தச் சம்பவம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. சினிமா தாக்கத்தின் காரணமாக, பதின் பருவத்தில் உள்ள மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். தவறான செயல்களில் ஈடுபடும் மாணவர்களை நல்வழிப்படுத்தும் அதிகாரம் தலைமையாசிரியர்களுக்கு இல்லை.
மாணவர்களின் நலனுக்காகவும், தவறான பாதையில் செல்பவர்களை முறைப்படுத்தவும் ஆசிரியர்களுக்கு குறைந்தபட்ச அதிகாரம் வழங்க வேண்டும். இதுதொடர்பாக, கல்வியாளர்கள், தலைமையாசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோர் அடங்கிய குழுவை அமைத்து, வழிகாட்டி விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என்றார் அவர்.
தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் சாமி. சத்தியமூர்த்தி: இந்தச் சம்பவம் வருந்தத்தக்கதும், கண்டிக்கத்தக்கதும் ஆகும். தவறு செய்யும் மாணவர்களுக்கு சிறு தண்டனைகள்கூட வழங்கக் கூடாது என்று சட்டங்கள், விதிமுறைகள் உள்ளன. இதனால், ஆசிரியர்களின் கைகள் கட்டப்பட்டது போன்ற சூழல் நிலவுகிறது.
இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க, 2 அல்லது 3 பள்ளிகளுக்கு ஒரு உளவியல் ஆலோசகரை அரசு நியமனம் செய்யலாம் என்றார் அவர்.
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் என்.ரங்கராஜனும் இந்தச் சம்பவத்தை வன்மையாகக் கண்டித்துள்ளார்.

No comments:
Post a Comment