Todays Educational News
கல்வி செய்தி
முக்கிய செய்திகள் – Google செய்திகள்
BBCTamil.com | இந்தியா
FLASH NEWS
விகடன்-தினத்தந்தி கல்வி செய்திகள்
முக்கிய செய்திகள்
மேலும் கல்வி செய்திகள்
Tamilnadu Teachers friendly blog
தினகரன் கல்வி செய்திகள்
தமிழ் முரசு செய்திகள்
தினகரன் முக்கிய செய்திகள் --
TEACHER TamilNadu
தமிழ் முரசு முக்கிய செய்திகள்
Dinamani
Daily Thanthi
கல்வி அஞ்சல்
புதிய தலைமுறை தொலைக்காட்சி
Tuesday, February 28, 2012
Friday, February 24, 2012
dinamani news 22.2.12
பார்வை :www.testfnagai.blogspot.com
அன்புடன்
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
நாகப்பட்டினம் மாவட்டக்கிளை
Thursday, February 23, 2012
வினை விதைக்கிறோம்
வினை விதைக்கிறோம்
First Published : 23 Feb 2012 03:19:24 AM IST
Last Updated : 23 Feb 2012 03:21:13 AM IST
இந்தியா முழுவதிலும், ஒவ்வொரு மாநிலத்திலும் தொடக்கக் கல்வி மற்றும் நடுநிலைக் கல்வியின் தரம், பள்ளிகளின் நிலை, வசதி, மாணவர் சேர்க்கை போன்றவை ஆய்வு செய்யப்படுகின்றன. இத்தகைய "கல்விக் கணக்கெடுப்பு ஆண்டறிக்கை - 2011' அண்மையில் வெளியிடப்பட்டது.
இந்த அறிக்கையில் தமிழ்நாடு மகிழ்ச்சி கொள்ள இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. முதலாவதாக, 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் பள்ளி செல்வது 100 விழுக்காடு உறுதி செய்யப்பட்டுள்ளது. மாணவர், ஆசிரியர் பள்ளி வருகையும் 90 விழுக்காடுக்கு அதிகமாக உள்ளது. இது ஓர் ஆரோக்கியமான சூழல்.
அதேவேளையில், அரசும் பெற்றோரும் கவலைகொள்ளக்கூடிய இரண்டு விஷயங்களும் உள்ளன. முதலாவதாக, 5-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் 32 விழுக்காடு மாணவர்களுக்குத்தான் எழுத்துக்கூட்டி படிக்கத் தெரிந்துள்ளது. இது 8-ம் வகுப்பில் சற்றே உயர்ந்து 66 விழுக்காடு மாணவர்கள் எளிய தமிழைப் படிக்க இயலுவோராக இருக்கின்றனர்.
இரண்டாவதாக, 5-ம் வகுப்பில் 45 விழுக்காடு மாணவர்களால் கழித்தல் கணக்கு மட்டுமே செய்ய முடியும். 14 விழுக்காடு மாணவர்களால் மட்டுமே கழித்தல், வகுத்தல் இரண்டையும் செய்ய இயலுகிறது. எட்டாம் வகுப்பில் இந்த நிலை மாறுகிறது. கழித்தல் மட்டும் செய்யக்கூடிய மாணவர்கள் 38 விழுக்காடாகவும், கழித்தல், வகுத்தல் இரண்டும் செய்யக்கூடிய மாணவர்கள் 45 விழுக்காடாகவும் உயருகிறது.
இந்த ஆய்வு ஏதோ அரசுப் பள்ளிகளுக்கு மட்டுமே சொந்தம் என்று யாரும் கருதிவிட வேண்டியதில்லை. தனியார் பள்ளிகளையும் உள்ளடக்கியதுதான் இந்த ஆய்வு. தனியார் பள்ளிகளில் பணத்தைக் கொட்டிப் படிக்க வைத்தால், சிறப்பாகக் கல்வி பயில வாய்ப்பு ஏற்படும் என்கிற எண்ணத்தில்தான் தனியார் பள்ளிகளை மக்கள் நாடுகின்றனர். ஆனால், அங்கும் பெரிய அளவில் மாற்றம் இல்லை.
ஐந்தாம் வகுப்பு மாணவர்களிடம் 2-ம் வகுப்பு தமிழ்ப்பாட நூலைக் கொடுத்துப் படிக்கச் சொன்னபோது, அரசுப் பள்ளி மாணவர்களில் 68 விழுக்காடு மாணவர்கள் திணறினார்கள் என்றால், தனியார் பள்ளிகளில் கொஞ்சம் குறைவு- அதாவது 66 விழுக்காடு!
8-ம் வகுப்பு பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களில் 15 விழுக்காட்டினர் ட்யூஷன் படிக்கின்றனர் என்றால், தனியார் பள்ளி மாணவர்கள் 25 விழுக்காட்டினர் ட்யூஷன் படிக்கின்றார்கள். தனியார் பள்ளியில் படித்தாலும் நான்கில் ஒருவர் ட்யூஷன் படித்துதான் அறிவை வளர்த்துக்கொள்ள முடியும் என்றால், தனியார் பள்ளிகளுக்கு கொட்டி அழுது கண்ட பலன் என்ன என்பது பெற்றோர் சிந்திக்க வேண்டிய விஷயம்.
இந்த ஆய்வில் கிடைக்கும் இன்னொரு தகவல், தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களில் 92 விழுக்காட்டினரின் வீட்டு மொழி, தமிழ் மொழியாக இருக்கின்றது. அப்படி இருந்தும், இவர்களால் தமிழைச் சரியாகப் படிக்க முடியவில்லை என்றால், கற்பித்தல் முறையில்தான் தவறு இருக்கிறது என்பது உறுதியாகின்றது.
ஆங்கில மொழியில் கிராமப்புறப் பள்ளி மாணவர்களும், அரசுப் பள்ளி மாணவர்களும் பின்தங்கியிருக்கிறார்கள் என்பதாலும், தனியார் பள்ளிகளில்தான் ஆங்கில அறிவு சிறப்பாகக் கிடைக்கும் என்பதாலும்தான் தனியார் பள்ளிகளை மக்கள் நாடுகின்றனர். ஆனால், தாய்மொழியான தமிழையே இந்தத் தனியார் பள்ளி மாணவர்களால் ஒழுங்காகப் படிக்க முடியவில்லை என்றால், இவர்களால் ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்ளவும், படிக்கவும் எழுதவும் எவ்வாறு முடியும்?
ஒரு மாணவன் பள்ளிக்கூட வாசலை மிதிக்காமலேயே கற்றுக்கொள்ளக்கூடிய, மிக இயல்பான கற்றல் சூழல் இப்போது இருக்கின்றது. இன்றைய தமிழ்நாட்டில் தொலைக்காட்சிப் பெட்டிகள் இல்லாத வீடே கிடையாது என்ற நிலைமை உள்ளது. தொலைக்காட்சியில் இடம்பெறும் பெயர்கள், டிவி விளம்பரங்களைக் குழந்தைகள் எழுத்துக்கூட்டி படிக்க முடியும். ஊர் முழுவதும் சுவரொட்டிகளுக்குப் பஞ்சமே இல்லை. கடைகளின் விளம்பரங்கள் இரவு நேரத்தில்கூட தமிழிலும் ஆங்கிலத்திலும் மின்னுகின்றன. இதில் நகரம், கிராமம் என்ற எல்லைக்கோடுகள் மறைந்து வருகின்றன. பிறகும் ஏன் மாணவர்களால் எளிய தமிழைப் படிக்கவும், சிறிய கணக்குகளைப் பிழையின்றி கணிக்கவும் முடியவில்லை?
இந்த ஆய்வு தமிழ்நாட்டின் எல்லா மாவட்டங்களையும் சேர்ந்த சுமார் 26,000 மாணவர்களிடம் நடத்தப்பட்டது என்றாலும், "ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்' என்கிற அளவில் இந்த ஆய்வின் முடிவுகள் குறித்து, மதிப்பீடு என்கின்ற வகையில் தமிழக அரசு மிகத் தீவிர கவனம் செலுத்தியாக வேண்டும்.
பள்ளி வாராக் குழந்தைகள் இல்லை என்ற நிலையை எட்டி விட்டோம். ஆசிரியர்கள் வகுப்புக்கு வருவதும்கூட நன்றாக இருக்கின்றது. ஆனால், கற்றல் மட்டும் இல்லை. கல்வி தரமானதாக இல்லை என்றால், அதற்கு ஒரே காரணம் கல்வித்துறையின் கற்பித்தல் முறைதான் என்பது வெளிப்படை.
நமது கல்வி முறையில் இருக்கும் அடிப்படைக் குறைபாடு, ஆசிரியர்கள் மத்தியில் அர்ப்பணிப்பு உணர்வு இல்லாமை. அரை நூற்றாண்டுக்கு முன்னால் அரை வயிற்றுக் கஞ்சியுடன் ஆசிரியர் தொழிலில் ஈடுபட்டவர்களிடம் காணப்பட்ட அர்ப்பணிப்பு உணர்வு இன்று அரசு ஊழியர்களாக ஊதியம் பெறும் ஆசிரியர்களிடம் இல்லாமல் இருப்பதற்குக் காரணம் அவர்கள் ஆசிரியர் பணியை சேவையாகக் கருதாமல் ஒரு தொழிலாகக் கருதுவதுதான். மேலும், சமுதாயத்தில் ஆசிரியர்களுக்கு இருந்த உன்னதமான இடமும் மரியாதையும் இல்லாமல் போனதும் ஒரு காரணம்.
கல்வித் துறையில் அரசியல் தலையீடு, பணம் சம்பாதிப்பதற்காக மட்டுமே கல்வி என்கிற பெற்றோரின் தவறான அணுகுமுறை, ஆசிரியர்களின் தரம், ஆசிரியர்கள்மீது சமுதாயத்தில், குறிப்பாக, பெற்றோரிடத்தில் காணப்படும் மரியாதையின்மை போன்றவைதான் இந்த நிலைமைக்குக் காரணம் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
காரணங்கள் தெரிகிறது. அந்தத் தவறுகளைத் திருத்திக் கல்வி முறையை மேம்படுத்தும் எண்ணம் இல்லை என்றால் அது யார் தவறு? நாளைய தலைமுறையைப் பற்றி நாம் கவலைப்படாமல் இருப்பது நமக்கு நாமே குழி பறித்துக் கொண்டிருப்பது என்பதை மறந்துவிட வேண்டாம்!

Wednesday, February 22, 2012
Monday, February 13, 2012
மாணவர்களை நல்வழிப்படுத்த ஆசிரியர்களுக்கு அதிகாரம் வேண்டும்: சங்கங்கள் கோரிக்கை

First Published : 13 Feb 2012 05:53:15 AM IST
சென்னை, பிப். 12: சென்னையில் பள்ளி வகுப்பறையில் ஆசிரியரை மாணவர் கொலை செய்த சம்பவத்துக்கு ஆசிரியர் சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன. அதோடு, மாணவர்களை நல்வழிப்படுத்துவதற்கு ஆசிரியர்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்றும் அந்த சங்கங்கள் கோரியுள்ளன.
இதுதொடர்பாக தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் கழகத்தின் மாநிலத் தலைவர் இளங்கோவன் கூறியது:
கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு தமிழக அரசும், கல்வித் துறையும் தக்க பாதுகாப்பு வழங்க வேண்டும்.
அந்த மாணவருக்கு கடுமையான தண்டனை வழங்குவதோடு, ஆசிரியரின் குடும்பத்துக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்றார் அவர்.
தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கழகத்தின் பொதுச்செயலாளர் வா.ராதாகிருஷ்ணன்: இந்தச் சம்பவம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. சினிமா தாக்கத்தின் காரணமாக, பதின் பருவத்தில் உள்ள மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். தவறான செயல்களில் ஈடுபடும் மாணவர்களை நல்வழிப்படுத்தும் அதிகாரம் தலைமையாசிரியர்களுக்கு இல்லை.
மாணவர்களின் நலனுக்காகவும், தவறான பாதையில் செல்பவர்களை முறைப்படுத்தவும் ஆசிரியர்களுக்கு குறைந்தபட்ச அதிகாரம் வழங்க வேண்டும். இதுதொடர்பாக, கல்வியாளர்கள், தலைமையாசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோர் அடங்கிய குழுவை அமைத்து, வழிகாட்டி விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என்றார் அவர்.
தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் சாமி. சத்தியமூர்த்தி: இந்தச் சம்பவம் வருந்தத்தக்கதும், கண்டிக்கத்தக்கதும் ஆகும். தவறு செய்யும் மாணவர்களுக்கு சிறு தண்டனைகள்கூட வழங்கக் கூடாது என்று சட்டங்கள், விதிமுறைகள் உள்ளன. இதனால், ஆசிரியர்களின் கைகள் கட்டப்பட்டது போன்ற சூழல் நிலவுகிறது.
இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க, 2 அல்லது 3 பள்ளிகளுக்கு ஒரு உளவியல் ஆலோசகரை அரசு நியமனம் செய்யலாம் என்றார் அவர்.
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் என்.ரங்கராஜனும் இந்தச் சம்பவத்தை வன்மையாகக் கண்டித்துள்ளார்.

Saturday, February 11, 2012
HRA AND HOUSINGLOAN BOTH CAN BE DEDUCATED FOR INCOME TAX
You have been sent 6 pictures.
claiming hra deductions and housing loan deductions_1-001.jpg
hra & housing loan dedution_2-001.jpg
hra & housing loan dedution_2-002.jpg
hra & housing loan dedutions_3-001.jpg
i have taken a house loan for a new house_4-001.jpg
i have taken a house loan for a new house_4-002.jpg
These pictures were sent with Picasa, from Google.
Try it out here: http://picasa.google.com/
உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பதவி: தேர்வெழுத 66,957 பேர் தகுதி
First Published : 11 Feb 2012 12:32:11 AM IST
சென்னை, பிப்.10: தமிழகம் முழுவதும் 34 உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு எழுத 66,957 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் http://trb.tn.nic.in என்ற இணையதளத்தில் தகுதிபெற்ற விண்ணப்பதாரர்களின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்ப எண்ணைக் கொண்டு இந்தத் தேர்வுக்குத் தகுதியுள்ளதா என்பதை அறிந்துகொள்ளலாம்.
தமிழகம் முழுவதும் 34 உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த அக்டோபர் மாதம் வெளியிட்டது. மொத்தம் 34 பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வுக்கு சுமார் 68,500 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
கடந்த ஆண்டு நவம்பர் 19-ம் தேதி முதல் இந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வந்தன. பரிசீலனையில் சுமார் 1,500 பேர் இந்தத் தேர்வு எழுதுவதற்கான தகுதியைப் பெறவில்லை எனத் தெரியவந்தது.
இதையடுத்து, 66,957 பேர் இந்தத் தேர்வு எழுதத் தகுதி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டு, அந்த விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தகுதி பெறாதவர்களுக்கு, அவர்கள் ஏன் தகுதி பெறவில்லை என்றும் காரணமும் கூறப்பட்டுள்ளது.
உதவி தொடக்கக் கல்வி அலுவலர் எழுத்துத் தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு, தகுதியுள்ள அனைவருக்கும் ஹால் டிக்கெட் அனுப்பப்பட உள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு தடை விதிக்க முடியாது: உயர் நீதிமன்றம்

First Published : 11 Feb 2012 03:19:12 AM IST
சென்னை, பிப். 10: பள்ளி ஆசிரியர்களை நியமிக்கும் முன் அவர்களுக்குத் தகுதித் தேர்வு நடத்த வேண்டும் என்ற தமிழக அரசின் ஆணைக்குத் தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் படி ஆசிரியர் நியமனத்தின்போது தகுதித் தேர்வு என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்படி ஆசிரியர் பணியில் சேர விரும்புபவர்கள் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்று கடந்த நவம்பர் 15-ம் தேதி தமிழக அரசின் கல்வித் துறை அரசாணை வெளியிட்டது.
இந்த அரசாணைக்குத் தடை விதிக்கக் கோரி தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் வேலைவாய்ப்பு சங்கம் சார்பில் அதன் செயலாளர் முருகதாஸ் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்காக ஏற்கெனவே நடைபெற்ற சான்றிதழ் சரிபார்ப்புப் பணிக்கு எங்கள் சங்க உறுப்பினர்களில் 27 பேர் அழைக்கப்பட்டனர். அவர்களில் சிலர் ஏற்கெனவே பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவர்களும் தகுதித் தேர்வு எழுதுவது கட்டாயம் என்று இப்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் முடிந்த நிலையில் மீண்டும் தகுதித் தேர்வு எழுத வேண்டும் என்று கூறுவது சட்ட விரோதமாகும். ஆகவே, எங்கள் சங்க உறுப்பினர்கள் 27 பேரை தகுதித் தேர்வு எழுத நிர்பந்திக்கும் அரசாணைக்குத் தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி கே. சந்துரு, ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு தடை விதிக்க முடியாது என்று வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தார்.
அவரது தீர்ப்பு விவரம்:
பணி நியமனம் தொடர்பாக நாடாளுமன்றம் இயற்றும் சட்டத்தை அமல்படுத்துவதைத் தவிர மாநில அரசுக்கு வேறு வழியில்லை. கல்லூரிப் பேராசிரியர்கள் நியமனத்தில் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு மற்றும் மாநில அளவிலான நுழைவுத் தேர்வுகளை யு.ஜி.சி. நடத்தி வருகிறது. இவ்வாறு தேர்வு நடத்துவது சரியே என்று உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது.
தமிழகம் முழுவதும் காளான்கள் முளைப்பதைப் போல ஏராளமான ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் தோன்றியுள்ள சூழ்நிலையில் ஆசிரியர் தேர்வில் தரத்தை உறுதிப்படுத்த மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. ஆகவே, ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்துவது தொடர்பான தமிழக அரசின் அரசாணை சரியானதே.
மேலும், பணி நியமன தேர்வுப் பட்டியலில் இடம்பெற்ற காரணத்தாலேயே ஒருவர் பணியில் நியமிக்கப்பட்டதற்கான உரிமையைக் கோர முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. ஒரு குறிப்பிட்ட தேர்வு முறையில் நியமனம் நடைபெற வேண்டிய சூழலில், ஏற்கெனவே நடைபெற்ற தேர்வை அரசு ரத்து செய்தால் அது பற்றிக் கேள்வி எழுப்ப முடியாது.
மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன்படி ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதை அரசாணை தெளிவுபடுத்துகிறது. அந்தச் சட்டத்தின்படி செயல்பட வேண்டியது மாநில அரசின் கடமையாகும். ஆகவே, அரசாணைக்கு எதிரான இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

Friday, February 10, 2012
Subscribe to:
Posts (Atom)