தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கிளை தொடக்கம்
First Published : 23 Jan 2012 12:38:44 PM IST
நாகப்பட்டினம், ஜன. 22: தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சீர்காழி கிளை தொடக்க விழா சீர்காழி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட மணிக்கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நாகை மாவட்டத் தலைவர் ப. முருகபாஸ்கரன் தலைமை வகித்தார்.
மாநிலத் துணைத் தலைவர் இரா. முத்துகிருஷ்ணன், மாவட்டச் செயலர்கள் மு. லட்சுமிநாராயணன், மாநிலப் பொதுக் குழு உறுப்பினர்கள் சி. பிரபா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக் கூட்டத்தில், சீர்காழி கிளையின் தலைவராக து. சிவசாமி, செயலராக அய். முத்துக்குமார், பொருளாளராக பூ. திருமுருகன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

No comments:
Post a Comment