ஆசிரியர் இயக்கப் பயிற்சி முகாம்
First Published : 12 Dec 2011 01:29:36 PM IST
நாகப்பட்டினம், டிச. 11: நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் ஒரு நாள் இயக்கப் பயிற்சி முகாம் திருஇந்தளூர் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
முகாமை தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில முன்னாள் தலைவர் வீ.மா. பெரியசாமி தொடக்கி வைத்துப் பேசினார். அமைப்பின் மாவட்டத் தலைவர் முருக. பாஸ்கரன், மாவட்டச் செயலர் மு. லட்சுமிநாராயணன், பொருளாளர் ப. ஜோதி, மாநிலத் துணைத் தலைவர் இரா. முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் பயிற்சி முகாமின் நோக்கம் குறித்து பேசினர். அமைப்பின் மாநில கருத்தாளர் லட்சுமிகாந்தம் பயிற்சி அளித்தார். இதில் தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மயிலாடுதுறை, செம்பனார்கோவில், குத்தாலம், கொள்ளிடம் கிளைகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் 70 பேர் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை சங்கத்தின் வட்டச் செயலர் முருகேசன், மாநிலப் பொதுக் குழு உறுப்பினர் பன்னீர்செல்வம் ஆகியோர் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment