SAY NO TO PPP, TET ,CPS

நிதி வழங்குக

GREAT SALUTE TO OUR ESWARANJI

Todays Educational News

கல்வி செய்தி

முக்கிய செய்திகள் – Google செய்திகள்

BBCTamil.com | இந்தியா

FLASH NEWS

முக்கிய செய்திகள்



FIGHT UNTILL YOU WIN YOUR DEMANDS

மேலும் கல்வி செய்திகள்

Tamilnadu Teachers friendly blog

தினகரன் கல்வி செய்திகள்

தமிழ் முரசு செய்திகள்

தினகரன் முக்கிய செய்திகள் --

TEACHER TamilNadu

தமிழ் முரசு முக்கிய செய்திகள்

Dinamani

Daily Thanthi

கல்வி அஞ்சல்

புதிய தலைமுறை தொலைக்காட்சி

Thursday, February 19, 2015

thethi school shadow graphy



--
பார்வை :www.testfnagai.blogspot.com

www.facebook.com/nagai.koottani
அன்புடன்

தமிழ்நாடு  தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி 
நாகப்பட்டினம் மாவட்டக்கிளை

paper news



--
பார்வை :www.testfnagai.blogspot.com

www.facebook.com/nagai.koottani
அன்புடன்

தமிழ்நாடு  தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி 
நாகப்பட்டினம் மாவட்டக்கிளை

Tuesday, February 17, 2015

NAGAI ASIRIYAR KOOTTANI BLOCK SECRETARIES MEETING 16.02.2015


PHOTOS OF NAGAI ASIRIYAR KOOTTANI BLOCK SECREATARIES MEETING 16.02.2015






--
பார்வை :www.testfnagai.blogspot.com

www.facebook.com/nagai.koottani
அன்புடன்

தமிழ்நாடு  தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி 
நாகப்பட்டினம் மாவட்டக்கிளை

Monday, February 09, 2015

மூடுவிழாவை நோக்கிச் செல்லும் 2000 தமிழக அரசுப் பள்ளிகள்?


பிப்ரவரி 09,2015,11:06 IST




கோவை: தமிழகம் முழுவதும், 2000 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், மாணவர்கள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால், இந்த பள்ளிகள் மூடுவிழாவை நோக்கிச் செல்வதாக, அதிருப்தி தெரிவிக்கின்றனர் ஆசிரியர்கள்.
தமிழகம் முழுவதும், 31 ஆயிரத்து 173 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் செயல்படுகின்றன. ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்; 28.4 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், கல்வித்தரத்தை உயர்த்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டாலும், ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கை சரிந்துகொண்டே வருகிறது.
பள்ளி மானியக் கோரிக்கை கொள்கை விளக்க குறிப்புகளின்படி, கடந்த 2008--09ல், அரசு ஆரம்பப் பள்ளிகளில், 43.67 லட்சம் மாணவர்கள் படித்தனர். இந்த எண்ணிக்கை, ஆண்டுதோறும் சரிந்து, 2012-13ம் ஆண்டில் 36.58 லட்சமானது.
அதேபோன்று, நடுநிலைப் பள்ளிகளில், 50.46 லட்சமாக இருந்த மாணவர்களின் எண்ணிக்கை, தற்போது, 45.3 லட்சமாக குறைந்துள்ளது. கடந்த இரு கல்வியாண்டுகளில், மாணவர் எண்ணிக்கை மேலும் குறைந்துள்ளது.
அதே நேரத்தில், தனியார் பள்ளிகளில் அதிகரித்து வருகிறது. கடந்த 2008-09ல் 34.5 லட்சமாக இருந்த மாணவர்கள் எண்ணிக்கை, தற்போது 45.4 லட்சமாக அதிகரித்துள்ளது. மாணவர் எண்ணிக்கை குறைவால், கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் ஏறத்தாழ 1500 அரசு ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகள் மூடப்பட்டன.
நடப்பு கல்வியாண்டில், பள்ளிக் கல்வித்துறையால் சேகரிக்கப்பட்ட புள்ளி விபரங்களின்படி, 2000 பள்ளிகளில் 20க்கும் குறைவான மாணவர்கள் மட்டுமே படிப்பதாகவும், 11 ஆயிரம் பள்ளிகளில் இரண்டு ஆசிரியர்களே பணிபுரிந்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதனால், படிப்படியாக 2000 பள்ளிகளை, அருகாமையிலுள்ள பள்ளிகளுடன் இணைப்பதற்கான ஆலோசனையில் கல்வி அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.
இதுகுறித்து, இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்க மாநில செயலர் ராபர்ட் கூறியதாவது: அரசு ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து வருகிறது. ஆக்கப்பூர்வமான மாற்றங்கள், கல்வித்துறையில் அவசியம்.
மறைமுகமாக, பல்வேறு அரசு பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன. தற்போது சுமார் 2000 பள்ளிகள் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள காரணத்தால், மூடுவிழாவை எதிர்நோக்கியுள்ளன. பள்ளிகளில், மாணவர் சேர்க்கை சரிவதற்கான காரணத்தை ஆராய்ந்து அதனை சரிசெய்யாமல், பள்ளிகளை மூடும் செயல்பாடுகளால், எதிர்காலத்தில், கல்வி முற்றிலும் தனியார் வசம் போகும் நிலை ஏற்படும். இவ்வாறு ராபர்ட் தெரிவித்தார்.

Sunday, February 08, 2015

ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தகுதித்தேர்வு நடக்குமா? ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் வேலை இல்லாமல் தவிப்பு


பதிவு செய்த நாள்

08பிப்
2015 
01:03
கடந்த, 2014ம் ஆண்டில், தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்படாத நிலையில், நடப்பாண்டிலாவது தகுதித்தேர்வை நடத்த, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஆசிரியர்களிடம் கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தில், 2010ம் ஆண்டு, கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் அமல்படுத்தப்பட்டது. இச்சட்டத்தில், தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் மட்டுமே, இனி பணி நியமனம் செய்யப்பட வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது. இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை, தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை கொண்டே நியமிக்க முடியும்.

நியமனம்:

இதன் அடிப்படையில், தமிழக அரசு, கடந்த, 2012ம் ஆண்டில், முதல் தகுதித்தேர்வை நடத்தியது. இதில், பல லட்சம் பேர் தேர்வெழுதிய நிலையில், 2,000 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றதால், ஒரு சில மாதங்களில் மீண்டும் தேர்வு நடத்தப்பட்டது. இரண்டிலும், தேர்ச்சி பெற்ற, 20 ஆயிரம் பேருக்கும், உடனடியாக அரசு பள்ளிகளில் நியமனம் வழங்கப்பட்டது. கடந்த, 2013ம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு, ஆசிரியர்களிடையே ஆர்வம் அதிகரித்தது. தேர்ச்சி பெற்றால் அரசு வேலை என்ற குறிக்கோளில், ஏராளமானோர் தீவிரமாக பயிற்சியெடுக்க துவங்கினர். இதனால், அந்த ஆண்டில் நடந்த தகுதித்தேர்வில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றனர். 10 ஆயிரத்திற்கும் குறைந்த காலிப்பணியிடங்களே இருந்த நிலையில், அனைவருக்கும் அரசு வேலை தர முடியாத சூழல் உருவானது. இதற்காக தரம் பிரிக்கும் முயற்சியில், 'வெயிட்டேஜ்' முறை அமல்படுத்தப்பட்டது. இதில் உள்ள குறைபாடுகள் குறித்து, நீதிமன்றத்தில் தொடர்ந்த பல்வேறு வழக்குகளின் காரணமாக, அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணிநியமனம் தாமதமாகிக்கொண்டே இருந்தது. வெயிட்டேஜ் முறை மாற்றியமைக்கப்பட்டு, அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு கண்டு, ஒரு வழியாக, கடந்த சில மாதங்களுக்கு முன், 10 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன.

ஆர்வம்:

கடந்த இரண்டு ஆண்டில் நடந்த, மூன்று ஆசிரியர் தேர்விலும், அரசு பணியிடங்கள் நிரப்பப்பட்டதால், ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தினால், அரசு பணி நியமனம் வழங்கப்படும் என்ற எண்ணம் பொதுமக்களிடையே உருவாகியுள்ளது. ஆண்டுதோறும், அரசு பள்ளிகளில் சரிந்து வரும் மாணவர் எண்ணிக்கையால், தற்போதுள்ள ஆசிரியர் எண்ணிக்கையே உபரியாக இருந்து வருகிறது. அரசு பள்ளிகளில் பணிநியமனம் என்பது, இப்போதைக்கு தேவைப்படாது என்பதால், ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்துவது குறித்தும், எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. பணிநியமனம் இல்லாமல், ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்பட்டால், மக்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும் என்பதால், ஆசிரியர் தேர்வு வாரியம் தயக்கம் காட்டி வருகிறது. கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தில், ஆண்டுக்கு இரு முறை தகுதித்தேர்வு நடத்தப்பட வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், ஒன்றரை ஆண்டுக்கு மேலாகியும், ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்த எவ்வித அறிவிப்பும் இல்லாமல் இருப்பது, ஆசிரியர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

வலியுறுத்தல்:

இதுகுறித்து, ஆசிரியர்கள் கூறியதாவது: அரசும் சரி, பொதுமக்களும் சரி, ஆசிரியர் தகுதித்தேர்வை, அரசு பள்ளிகளில் பணி நியமனத்துக்காக நடத்தப்படும் போட்டித்தேர்வாகவே கருதுகின்றனர். உண்மையில், தனியார் பள்ளிகள், உதவிப் பெறும் பள்ளிகள் என, அனைத்திலும், தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களை நியமிக்க வேண்டும் என்பதை சட்டம் வலியுறுத்துகிறது. இப்படியிருக்கும் போது, அரசு பணியை மட்டும் கருத்தில் கொண்டு, ஆசிரியர் தகுதித்தேர்வை நடத்தாமல், தள்ளி வைத்துக்கொண்டே வருவது, பலரின் வாய்ப்புகளை தட்டிப்பறிக்கும் செயலாக உள்ளது. அதிலும், கடந்த இரண்டு ஆண்டுகளில், பி.எட்., மற்றும் இடைநிலை ஆசிரியர் கல்வி முடித்தவர்கள், உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களாக சேர, நிர்வாகம் அனுமதித்தாலும், சேர முடியாத சூழல் உருவாகியுள்ளது. தகுதியான ஆசிரியர் என்பதற்கான அளவுகோலாக, ஆசிரியர் தகுதித்தேர்வை கருதி, உடனடியாக அதை நடத்திட, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்

எலக்ட்ரானிக் மீடியாக்களின் பயன்பாடால் ஆசிரியர் நினைவுத்திறன் பாதிக்கிறது: துணைவேந்தர்

எலக்ட்ரானிக் மீடியாக்களின் பயன்பாடால் ஆசிரியர் நினைவுத்திறன் பாதிக்கிறது: துணைவேந்தர்பிப்ரவரி 08,2015,10:22 IST


Print
Email
காரைக்குடி: "எல்.சி.டி.,புரொஜக்டர் உள்ளிட்ட எலக்ட்ரானிக் மீடியாக்கள் மூலம் கற்பிப்பதால், ஆசிரியர்களின் நினைவு திறன் குறைந்து வருகிறது" என தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை., துணைவேந்தர் விஸ்வநாதன் கூறினார்.
காரைக்குடி ராஜராஜன் இன்ஜி., கல்லுாரியில் உலக தமிழ் பண்பாட்டு இயக்கம், மலேசிய தமிழ் மணி மன்றம், ஆயுத எழுத்து பன்னாட்டு தமிழியல் ஆய்விதழ் இயக்கம் சார்பில், மொழிப்பாடம் கற்றல், கற்பித்தலில் தற்கால போக்குகள் குறித்த கருத்தரங்கம் நடந்தது.
இதில் அவர் பேசியதாவது: சைகை வடிவமாக இருந்த மொழி, சித்திரம், எழுத்து, என வளர்ச்சி பெற்றது. மனிதனின் கலாசாரத்தை பிரதிபலிப்பது மொழி. புறா மூலம் அனுப்பப்பட்ட செய்தி பரிமாற்றம், இன்று பல்வேறு பரிணாமத்தை எட்டியுள்ளது. எலக்ட்ரானிக் மீடியா நம்மை ஆக்கிரமித்து விட்டது.
இவற்றை கற்றல், கற்பித்தல் பணிக்கு எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை நாம் கற்று கொள்ள வேண்டும். கரும்பலகையில் எழுதும்போது சரியான உச்சரிப்பு இருந்தது. கருத்தரங்குகளில் புரொஜக்டர் மூலம் கற்பிக்கப்படுகிறது. கரன்ட் கட் ஆனால், கற்பித்தலும் கட்டாகி விடுகிறது.
எலக்ட்ரானிக் மீடியாக்களால், நினைவு திறன் குறைந்துள்ளது. ஸ்பெல் செக் வந்த பிறகு தமிழை தவறின்றி எழுத முடியவில்லை. ஆசிரியர் இன்றி, மதிப்பு கல்வியை பெற முடியாது. ஆசிரியர் ஒருவரை எந்த எலக்ட்ரானிக் சாதனமும் வீழ்த்தி விட முடியாது. மொபைல் போனின் பயன்பாடு, கணினி பயன்பாட்டை குறைத்து விட்டது.
மொபைல் போனில் உள்ள நல்ல விஷயங்களை நாம் தள்ளி வைத்து, தேவையில்லாததை கற்று கொள்கிறோம். பேஸ்புக், வாட்ஸ் அப் போன்றவை, கற்பித்தல் பணியை எளிதாக்க கொண்டு வரப்பட்டவை. நம் வேலையை மிச்சப்படுத்துவதற்கு அல்ல. கருவிகள் நமக்கு உதவியாக இருக்க வேண்டும். அதற்கு நாம் அடிமையாகக்கூடாது, என்றார்.

Aided school new teachers salary

-----

Monday, February 02, 2015

செயற்கைக் கோள்களை பற்றிய புரிதலை, பள்ளி பருவத்திலேயே விதைக்க வேண்டும்"

செயற்கைக் கோள்களை பற்றிய புரிதலை, பள்ளி பருவத்திலேயே விதைக்க வேண்டும்"
பிப்ரவரி 01,2015,11:17 IST




l
செயற்கைக் கோள்களின் பயன்பாடுகளை பற்றி, பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்றுவித்து வரும் சென்னை பல்கலைக் கழகத்தின் புவியியல் துறை பேராசிரியர், பாஸ்கரனிடம் பேசியதில் இருந்து...
செயற்கைக்கோள் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்க வேண்டிய அவசியம் என்ன?
நாம், மிகுந்த பொருட்செலவில், செயற்கைக் கோள்களை அனுப்பி கொண்டிருக்கிறோம். ஆனால், அவற்றின் பயனை மிகக்குறைந்த அளவே அனுபவித்து வருகிறோம். காரணம், அவற்றின் செயல்பாடுகளை பற்றி நாம் அறியாததுதான். அதை போக்க, செயற்கைக் கோள்களை பற்றிய புரிதலை, பள்ளி பருவத்திலேயே விதைக்க வேண்டும். அதற்காக, பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டு விட்டன. ஆயினும், ஆசிரியர்களுக்கு அவற்றை பற்றிய புரிதல் இல்லை. எனவேதான், அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
நம் செயற்கைக்கோள்களின் பயனை முழுமையாக அனுபவிக்காத துறைகள் என்னென்ன?
எல்லா துறைகளுமே, முழுமை யான பயனை அனுபவிக்காத துறைகள் தான். குறிப்பாக, தொலைத்தொடர்பு, வேளாண்மை, பேரிடர் மேலாண்மை, இயற்கை வளங்களை கண்டறிவது உள்ளிட்ட துறைகளில், செயற்கைக்கோள்கள் மூலம் நிறைய சாதிக்க முடியும். ஆனால், அப்படிப்பட்ட நிலை இல்லாததால் தான், அந்தந்த துறைகளின் முன்னேற்றத்தில், தேக்கநிலை நிலவுகிறது.
செயற்கைக்கோள்களை பற்றி அறிந்து கொள்வதால் எந்தெந்த துறைகளில் வேலை வாய்ப்புகளை பெருக்க முடியும்?
ஜி.ஐ.எஸ்., என்னும் ஜியோ இன்பர்மேட்டிக் சிஸ்டம், ஜி.பி.எஸ்., என்னும் குளோபல் பொசிஷனிங் சிஸ்டம், ஆர்.எஸ்., என்னும் ரிமோட் சென்சிங், ரேடார், நேவிகேட்டர் போன்றவற்றின் பயன்பாடு அதிகம். பூமிக்கு அடியில் இருக்கும் கட்டடங்கள், பழமையான அடையாளங்களை ரேடார் மூலம் கண்டறிந்து, ஆராய்ந்து, தொல்லியலாளர்கள் பாதுகாக்கலாம். ஜி.பி.எஸ்.,சை, போக்குவரத்து போலீசார் பயன்படுத்த துவங்கினால், பெருமளவில் நெரிசல் தவிர்க்கப்படும்.
அதனால், உடனுக்குடன் மாற்று வழிகளை அடையாளம் காட்ட முடியும். ரேடார்களின் உதவியால், நிலத்தடி நீர்மட்டத்தின் அளவை கண்டறிந்து, விவசாயிகள் என்ன பயிரை, எந்த பருவத்தில் பயிரிடலாம் என்பதையும், எந்த நிலப்பகுதியில், எந்த பயிர் அதிகமாக பயிரிடப்பட்டுள்ளது என்பதையும் அறிந்து, சந்தை தேவைக்கேற்ப, பயிர் சுழற்சியை ஊக்குவிக்க, வேளாண்மை துறையினர் செயற்கைக்கோள்களை பயன்படுத்த வேண்டும்.
கடல் அலையின் போக்கு, அதன் உயரம், மீன் வலசையின் பாதை, அவற்றின் செறிவு ஆகியவற்றை கண்டறிந்து, மீனவர்களுக்கு வழிகாட்டி, அவர்களின் தேவையில்லா உழைப்பையும், எரிபொருள் வீணாவதையும் தவிர்க்க, மீன்வள துறையினர், செயற்கைக்கோள்களை பயன்படுத்த வேண்டும்.
சென்சார்களை கொண்டு, வனவிலங்குகளின் வாழ்விடம், நடமாட்டம், அவற்றின் ஆதார நிலை, எதிரிகளின் நடமாட்டம், காடுகளின் செறிவு, மரக்கடத்தல் உள்ளிட்டவற்றை ஆராய்ந்து, சுற்றுலா பயணிகள், பகுதிவாசிகளுக்கு வழிகாட்டி, விலங்குகளின் தாக்குதலையும், வளங்களின் சேதத்தையும் தவிர்க்கலாம்.
அதேபோல், தேவைக்கேற்ப செயல்படும் வகையில் தானியங்கி, தண்ணீர் குழாய்களை அமைத்து, வேளாண்மை, தீ விபத்து போன்றவற்றில் பயன்படுத்தி, நீர் சிக்கனத்தையும், பாதுகாப்பையும் உறுதிபடுத்தலாம். செய்தி, மக்கள்தொடர்பு துறைகளில் தேவையில்லாத வதந்திகளை தவிர்க்கவும், சரியான புள்ளிவிவரங்களை கொடுக்கவும், தொலைத்தொடர்பு செயற்கைக்கோள்களை மிகுதியாக பயன்படுத்தி, மக்களின் நம்பிக்கையை பெறலாம்.
வானிலை ஆராய்ச்சி நிலையங்களில், தட்பவெட்ப செயற்கைக் கோள்களை பயன்படுத்தி, மழைப்பொழிவு, காற்றின் ஈரப்பதம், வெப்பம் உள்ளிட்டவற்றை தெளிவாக கண்டறியலாம். ரேடார்களின் உதவியால், புவி அதிர்ச்சி, எரிமலை வெடிப்பு ஆகியவற்றை முன்கூட்டியே அறிந்து கொள்ளலாம். இப்படி எல்லா துறைகளிலும், தேவைகளின் அவசியத்திற்கேற்ப, செயற்கைக்கோள்களின் பயன்பாட்டை அதிகரிக்கலாம்.
எல்லா துறைகளிலும் செயற்கைக்கோள்களின் பயன்பாடு குறித்தான பாட பிரிவுகளை கல்லூரிகளில் துவக்கவும், படிக்க வைக்கவும் அதிக செலவாகுமே?
இல்லை. பெரும்பாலான தகவல்களை, அரசிடம் இருந்து நாம் இலவசமாகவே பெறலாம். பல புதிய பயன்பாட்டு படிப்புகளுக்கு, பல்கலைக்கழக மானிய குழு உள்ளிட்ட அமைப்புகள் நிறைய நிதியுதவி அளிக்கின்றன. மாணவர்களும், தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி, உதவித்தொகையை பெற முடியும். செயற்கைக்கோள் பயன்பாட்டினை எல்லா துறைகளுக்கும் எடுத்து சென்றால், படிப்பால் உயர்வு, தாழ்வற்ற, வேலையில்லா, திண்டாட்டமில்லாத, தனித்திறமை வாய்ந்த இளைஞர்களை உருவாக்க முடியும்.
வேலைக்காக மற்ற நாடுகளை தேடி, இந்திய இளைஞர்கள் ஓடவேண்டிய நிலை இருக்காது. அந்த நாளை உருவாக்க, ஆட்சியாளர்கள், கல்வி நிறுவனங்கள், ஆசிரியர், பெற்றோர் என அனைவரும் முயல வேண்டும்.