SAY NO TO PPP, TET ,CPS

நிதி வழங்குக

GREAT SALUTE TO OUR ESWARANJI

Todays Educational News

கல்வி செய்தி

முக்கிய செய்திகள் – Google செய்திகள்

BBCTamil.com | இந்தியா

FLASH NEWS

முக்கிய செய்திகள்



FIGHT UNTILL YOU WIN YOUR DEMANDS

மேலும் கல்வி செய்திகள்

Tamilnadu Teachers friendly blog

தினகரன் கல்வி செய்திகள்

தமிழ் முரசு செய்திகள்

தினகரன் முக்கிய செய்திகள் --

TEACHER TamilNadu

தமிழ் முரசு முக்கிய செய்திகள்

Dinamani

Daily Thanthi

கல்வி அஞ்சல்

புதிய தலைமுறை தொலைக்காட்சி

Friday, September 07, 2012

OUR CM LAUNCHES OFFICIAL WEB FOR SCHOOL EDUCATION www.tnschools.gov.in

அரசு பள்ளிகளுக்கென சிறப்பு இணையதளம் துவக்கம்!
Posted Date : 12:14 (06/09/2012)Last updated : 12:22 (06/09/2012)
சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகள் குறித்த விவரங்களை அறிந்து கொள்ளும் வகையில்,அனைத்துத் தகவல்களையும் உள்ளடக்கிய புதிய  இணையதளத்தை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா துவக்கி வைத்துள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,"தமிழக முதலமைச்சர்  ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில், பள்ளிக் கல்வித்துறையின் “கல்வி தகவல்  சார்ந்த மேலாண்மை முறைமையினை” துவக்கி வைத்தார்.  இந்தியாவிலேயே  முதன்முறையாக தமிழ்நாட்டில் இம்முறைமை உருவாக்கப்பட்டு துவக்கி  வைக்கப்பட்டுள்ளது.

இம்முறைமையில் பொதுவான இணையதளம், கல்வி பாடப்பொருள் வழங்கும்  இணையதளம், குறுஞ்செய்தி மூலம் ஆசிரியர் வருகைப் பதிவு இணையதளம் மற்றும்  துறையிடை தகவல் பரிமாற்றம் முறைமை ஆகியவற்றை உள்ளடக்கி அனைத்து  பள்ளிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பயன் அளிக்கும் வகையில்  உருவாக்கப்பட்டுள்ளது. 

பள்ளிக் கல்வித்துறைக்கு என தனியாக தொடங்கப்படும் பொதுவான இணையதளத்தில்  (www.tnschools.gov.in) தொடக்கப் பள்ளிகள், உயர்நிலை, மேல்நிலைப்  பள்ளிகளின் அமைப்பு, அமைவிடம், கட்டட வசதி போன்றவைகள் பதிவு செய்யப்படும்.  மேலும், அந்தப் பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள்,  ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் பெயர், பணி, பணியில் சேர்ந்த நாள், வயது,  ஓய்வு பெறும் நாள்  போன்ற அனைத்து விவரங்களும் முழுமையாக  பதிவு  செய்யப்படும். பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கை, இடை நிற்றல்,  தேர்வுகள், தேர்ச்சி போன்றவைகள் பதிவு செய்யப்படும்.  இதில் பயிலும் மாணவ,  மாணவியர் ஒவ்வொருவருக்கும் தர எண் அளிக்கப்பட்டு, ஆண்டு தோறும் அந்த மாணவ  மாணவியரின் நிலை கண்காணிக்கப்படும்.

விரைவில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளின் விவரங்கள், உதவி பெறும்  பள்ளிகளின் விவரங்கள் மற்றும் சுய நிதி பள்ளிகளின் விவரங்கள்  இந்த  இணையதளத்தில் பதிவு செய்யப்படும். பள்ளிகள் தொடர்பான  விவரங்களை அறிந்து  கொள்ள வேண்டும் என்றாலோ அல்லது கணினி வழி காண வேண்டும் என்றாலோ மேலே  குறிப்பிடப்பட்டுள்ள இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இணையதளம் வாயிலாக மாணவர்களுக்கு பாடப்பொருள்களை எளிதாகவும் இனிதாகவும்  கற்பிக்கும் பொருட்டு கல்விப் பாடப்பொருள் வழங்கும் www.ecs.tnschools.gov.in  என்ற புதிய இணையதளம்;பள்ளிக் கல்வித் துறையில் தலைமைச் செயலகம் முதல்  மாநில அளவில் உள்ள இயக்ககங்கள் மற்றும் மாவட்ட அளவிலான பள்ளிக் கல்வி  அலுவலகங்களுக்கிடையேயான தகவல் பரிமாற்றம் மிகவும் சிறந்த முறையில் கணினி  வழியாக நடைபெற உதவும் பொருட்டு துறைகளுக்கிடையே தகவல் பரிமாற்றத்திற்கென  www.admin.tnschools.gov.in என்ற புதிய இணையதளம்; ஆகியவற்றை   உள்ளடக்கிய  கல்வி தகவல் சார்ந்த மேலாண்மை முறைமையினை தமிழக  முதலமைச்சர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்" என்று கூறப்பட்டுள்ளது.

2012
06
Sep
அரசு பள்ளி பற்றிய தகவல்களை பெற இணையதளம்: ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

சென்னை: அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: முதல்வர் ஜெயலலிதா நேற்று தலைமைச் செயலகத்தில், பள்ளிக் கல்வித்துறையின் கல்வி தகவல் சார்ந்த மேலாண்மை முறைமையினை  தொடங்கி வைத்தார். இம்முறைமையில் பொதுவான இணையதளம், கல்வி பாடப்பொருள் வழங்கும் இணையதளம், குறுஞ்செய்தி மூலம் ஆசிரியர் வருகைப் பதிவு  இணையதளம் மற்றும் துறையிடை தகவல் பரிமாற்றம் முறைமை ஆகியவற்றை உள்ளடக்கி அனைத்து பள்ளிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பயன் அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.பள்ளிக் கல்வித்துறைக்கு என தனியாக தொடங்கப்படும் பொதுவான இணையதளத்தில்   (www.tnschools.gov.in)   பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத  பணியாளர்களின் பெயர், பணி, பணியில் சேர்ந்த நாள், வயது, ஓய்வு பெறும் நாள்  போன்ற அனைத்து  விவரங்களும் முழுமையாக பதிவு செய்யப்படும்.

பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கை, இடை நிற்றல், தேர்வுகள், தேர்ச்சி போன்றவைகள் பதிவு செய்யப்படும். இதில் பயிலும் மாணவ, மாணவியர் ஒவ்வொருவருக்கும் தர எண் அளிக்கப்பட்டு, ஆண்டு தோறும் அந்த மாணவ, மாணவியரின் நிலை கண்காணிக்கப்படும். முதல் கட்டமாக திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருச்செந்துரை, அயிலாப்பேட்டை, எட்டரை, சோமரசம் பேட்டை மற்றும் இனாம்குளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளிகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதே போன்று தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளின் விவரங்கள், உதவி பெறும் பள்ளிகளின் விவரங்கள் மற்றும் சுயநிதி பள்ளிகளின் விவரங்கள் இந்த இணையதளத்தில் பதிவு செய்யப்படும். இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வித்துறை குறித்த புதிய இணையதளம் துவக்கம்!-06-09-2012





தமிழகத்தின் பள்ளிக் கல்வித்துறை குறித்த நிலை, தேர்வு தேர்ச்சி சதவீதம், மாணவ, மாணவியரை பற்றிய விவரம் அடங்கிய, புதிய இணையதளத்தை, முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்.
இணையதளம் குறித்து, பள்ளிக் கல்வி இயக்குனர் தேவராஜன் கூறியதாவது: அரசுப் பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் என, அனைத்து வகை பள்ளிகளில் பயிலும், 1.25 கோடி மாணவர்கள், ஆசிரியர்கள் குறித்த தகவல்கள் இந்த இணையத்தில் இடம் பெற்றுள்ளன. www.tnschools.gov.inஎன்பது அந்த இணையதளம்.
அனைத்து மாணவ, மாணவியருக்கும், "ஸ்மார்ட் கார்டு" கொடுக்க திட்டமிட்டுள்ளோம். முதற்கட்டமாக, முதல்வரின் தொகுதியில், ஐந்து பள்ளிகளை சேர்ந்த மாணவருக்கு, "ஸ்மார்ட் கார்டு" வழங்கப்பட்டுள்ளது. மற்ற பள்ளி மாணவ, மாணவியருக்கும், விரைவில் இந்த கார்டு வழங்கப்படும்.
மாணவரின் புகைப்படத்துடன், அவர் பயிலும் பள்ளி குறித்த விவரங்கள், இந்த கார்டில் இருக்கும். இந்த கார்டை, "பார் கோடு ரீடர்" முறையிலோ அல்லது, கார்டில் உள்ள குறியீட்டு எண்ணை, இணைய தளத்தில் பதிவு செய்தால், மாணவரைப் பற்றியும், அவரது குடும்பத்தைப் பற்றியும் முழு விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.
இந்த, ஐ.டி., கார்டு, "டிசி"க்குரிய தகவல்களை உள்ளடக்கியதாக இருக்கும். மேலும், பயிற்சி பெறும் ஆசிரியர், தன் அனுபவம் குறித்த தகவல்களை, இந்த இணைய தளத்தில் பதிவு செய்யலாம். அது குறித்து, மற்ற ஆசிரியர் கருத்துக்களை பறிமாறிக் கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
வரும் காலங்களில், ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை, இந்த இணைய தளம் மூலம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு தேவராஜன் கூறினார். மாநிலத்தின் வரைபடம், மக்கள் தொகை, மொத்தப் பள்ளிகள் எண்ணிக்கை, புதிய மாணவர் சேர்க்கை விவரம், தேர்ச்சி விவரம், மாநிலத்தின் எழுத்தறிவு நிலவரம் உட்பட, 30 தலைப்புகளில், ஏராளமான தகவல்கள் இணையதளத்தில் தரப்பட்டுள்ளன.

TET TOPPER'S INTERVIEW IN DINAMALAR

முதலிடம் நான் எதிர்பாராதது!' ஆசிரியர் தகுதித் தேர்வில், தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ள சித்ரா: நான், 1993ல், இளங்கலை வேதியியல் முடித்தேன். அந்த ஆண்டே, திருமணம் நடந்தது. கணவர் திருப்பதி, ஆசிரியர். அடுத்தடுத்து, இரண்டு பெண் குழந்தைகள் பிறக்க, அவர்களை வளர்ப்பதற்கும், குடும்பத்தைக் கவனிப்பதற்குமே, நேரம் சரியாக இருந்தது. பின், 2008ம் ஆண்டு, பி.எட்., படிக்குமாறு என் கணவர் ஊக்குவித்தார். வேதாரண்யம் ராமச்சந்திரா கல்வியியல் கல்லூரியில், பி.எட்., முடித்தேன். அதிலிருந்து, ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வுகளுக்காக, தொடர்ந்து தயாராகி வந்தேன்; அடுத்தடுத்து தேர்வுகள் எழுதியதில், தோல்வியே கிடைத்தது. தேர்வில், வெற்றி பெற்றவர்கள் எடுத்து வைத்திருந்த குறிப்புகளை வாங்கி, அனைத்தையும் தொகுத்துப் படித்து வந்தேன். ஆசிரியர் தகுதித் தேர்விற்காக, எந்தத் தனிப் பயிற்சியும் பெறவில்லை. பழைய தேர்வுகளில் கேட்கப்பட்ட கடினமான கணக்குகளைப் போட்டுப் பார்ப்பேன். இதனால், தேர்வில் குறைந்த நேரத்திலேயே, கணிதம் சார்ந்த வினாக்களுக்கு விடையளிக்க முடிந்தது. என் மூத்த மகளுக்கு, பிளஸ் 1, பிளஸ் 2 பாடங்களை வீட்டில் சொல்லிக் கொடுத்திருக்கிறேன். தற்போது, பிளஸ் 1 படிக்கும் என் இளைய மகளுக்கு, நான் தான் டியூஷன் ஆசிரியர். அதனால், அவர்கள் பாடங்கள் எனக்கு அத்துப்படி ஆகிவிட்டன. இந்த வெற்றிக்கு என் கணவருக்கும், மகள்களுக்கும் தான், நன்றி சொல்ல வேண்டும். அனைத்திற்கும் மேலாக, வீட்டிற்குள்ளேயே இருந்து, எனக்கு "போர்' அடித்து விட்டது. எப்படியாவது, இந்தத் தேர்வில் வெற்றி பெற்று, நாமும் சமுதாயத்தில் மதிப்பு மிக்கவராக உலா வர வேண்டும் என்ற உத்வேகத்தில் தான், காலை, 4.00 மணிக்கு எழுந்து படித்தேன்; அதன் பலனாக, 150க்கு, 142 மதிப்பெண் பெற்றேன். அதிக மதிப்பெண்கள் பெற்றுத் தேர்வாகி விடுவேன் எனத் தெரியும். ஆனால், தமிழகத்தில் முதலிடம் பெற்றது, நான் எதிர்பாராதது; மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. குடும்பப் பெண்களும், முயற்சி செய்தால் சாதிக்கலாம் என்பதற்கு, நானே உதாரணம்.

Thursday, September 06, 2012

GRACE PERIOD FOR WHO MISSED EMPLOYMENT RENEWAL IN YEAR 2008-2010



DETAILS SOUGHT ABOUT G.O 216-SORTING OUT


FLAG DAY COLLECTION FOR BLIND PEOPLE



FAMOUS TAMIL WRITER PRAISES GOVERNMENT SCHOOLS

நல்லார் ஒருவர்.

அரசுப்பள்ளிகளைப் பற்றி எப்போதுமே நமக்கு இளக்காரமான மனநிலையே இருந்து வருகிறது, ஆனால் நான் அரசுப்பள்ளியில் பயின்றவன் என்ற முறையில் அதன் தரம் மற்றும் குறைபாடுகளை நன்றாக அறிவேன், பெரும்பான்மை தனியார்பள்ளிகள் கல்வியை முழுமையானதொரு வணிகமாக மாற்றியுள்ள சூழலில் அரசுப்பள்ளிகளின் கல்வித்தரம் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டியது மிகமிக அவசியமான ஒன்று.
பெரும்பான்மையான எனது பயணங்களில் அங்குள்ள பள்ளிகளுக்குச் சென்று அதன் தற்போதைய நிலையைக் கண்டறிந்து வருகிறேன், கற்றுத்தரும் முறை மிகவும் பலவீனமாக உள்ளது என்பதே நான் அறிந்த உண்மை, கூடுதலாக போதுமான ஆசிரியர்கள் இல்லை, அடிப்படை வசதிகள் இல்லை என்பதும் முக்கியமான. பிரச்சனையாக உள்ளது, ஆனால் தனியார் பள்ளிகளை விடவும் சிறப்பாகப் பணியாற்றுகின்ற ஆசிரியர்கள் அரசுப்பள்ளிகளில் இருக்கிறார்கள் என்பதை நானே கண்டிருக்கிறேன்,
அவர்களை யாரும் அடையாளம் கண்டு ஊக்கப்படுத்தவோ. அவர்களின் முயற்சிக்குத் துணைநிற்கவோ முயலவில்லை, தங்களால் முடிந்த அளவு அந்த ஆசிரியர்கள் மாணவர்களோடும் அதிகாரத்தோடும் போராடுகிறார்கள், பலநேரம் தோற்றுப்போகிறார்கள், பள்ளியையும் ஒரு அரசு அலுவலகம் போல நடத்தும் கல்வித்துறையின் நிர்வாக முறை அவர்களின் புதுமையான சிந்தனைகளை அனுமதிக்க மறுக்கிறது, இதன் இன்னொரு புறம் சம்பளத்திற்காக மட்டுமே அரசு வேலை என ஆசிரியர் பணிக்கு வந்திருக்கிறேன், ஆகவே நான் மேம்போக்காகவே தான் நடந்து கொள்வேன் என்று பிடிவாதம் பேசும் ஆசிரியர்களையும் நான் அறிவேன்,
அரசுப்பள்ளிகளின் தரம் ஊருக்கு ஊர் வேறுபட்டிருக்கிறது, பெரிய நகரில் உள்ள அரசுப்பள்ளிகள் ஒருதரத்திலும், சிறுநகரம் சார்ந்த பள்ளிகள் அதற்குக் கீழான தரத்திலும், கிராமப்புற அரசு பள்ளிகள் அதற்கும் குறைவான தரத்திலும். மலைவாழ்மக்களுக்கான பள்ளிகள் முற்றிலும் கவனிப்பார் இன்றியும் இருக்கின்றன என்பதே நடைமுறை உண்மை,
அரசுப்பள்ளிகள் ஒரே தரத்தில் செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டினை கல்வி அதிகாரிகளே ஒத்துக் கொள்கிறார்கள், ஆனால் அதைக் களைந்து ஒரே தரம் கொண்டுவர அக்கறை காட்டுவதேயில்லை, அதற்கான விழிப்புணர்வோ. தனிக்கவனமோ மேற்கொள்ளப்படவில்லை, சமச்சீர் கல்வி பற்றிய உரத்தவிவாதங்கள் உருவானது போல அடிப்படை கல்வியின் சீரமைப்பு பற்றி உரத்தவிவாதமும் புதியசெயல்திட்டங்களும் நடைமுறைப்படுத்தபட வேண்டும்
அரசுப்பள்ளிகளை மேம்படுத்துவதில் ஆசிரியர்கள் என்ன செய்ய முடியும் என்ற கேள்விக்கு ராமம்பாளையத்தில் உள்ள அரசினர் ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளி முன்மாதிரியான பதிலைத்தருகிறது
அந்தபள்ளியைப்பற்றி கேள்விப்பட்டு அதைப் பார்ப்பதற்காக நான்கு நாட்களுக்கு முன்பாகச் சென்றிருந்தேன்,
கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில்  38 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது இராமம்பாளையம். ஆயிரம் பேர் வசிக்கின்றன மிகச்சிறிய கிராமம், அங்குள்ள ஆரம்ப பள்ளி 1930களில் துவங்கப்பட்டிருக்கிறது, சமீபமான வருசங்களில் அந்தப் பள்ளியைச் சுற்றிலும் உள்ள ஊர்களில் தனியார் மெட்ரிக் பள்ளிகள் துவங்கபட்டதால் பெரும்பான்மை சிறுவர்கள் அதில் சேர்க்கப்பட்டுவிட்டார்கள், ஆகவே அரசுப்பள்ளியின் மாணவர் எண்ணிக்கை  குறைந்து போயிருக்கிறது,
கணிதம் படித்துவிட்டு புதிய ஆசிரியராக அந்தப் பள்ளிக்கு மாற்றலாகி வந்த பிராங்களின் கல்வி சார்ந்த புதிய சிந்தனைகளைப் பயன்படுத்தி பள்ளியின் தரத்தை உயர்த்த முயன்றிருக்கிறார், இவர் முன்னதாக மலைவாழ்மக்களுக்கான பள்ளியில் வேலை செய்தவர் என்பதால் இயல்பாகவே பொறுமையும் விடாபிடியான முயற்சியும் கற்றுதருவதில் நூறு சதவீத ஈடுபாடும் கொண்டிருந்தார், இவரது முயற்சியால் இன்று அந்தப்பள்ளி தமிழகத்திலே ஒரு முன்மாதிரிப் பள்ளியாக மாறியுள்ளது
ஒன்றிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரையிலான அப்பள்ளியில் தற்போது ஐம்பதுக்கும் குறைவான குழந்தைகள் தான் படிக்கிறார்கள். ஆனால் எந்த தனியார் பள்ளியை விடவும் மேம்பட்டதாக வகுப்பறையையும் கற்றுதருவதையும் பிராங்களின் உருவாக்கியிருக்கிறார்,
இதற்காக  பிராங்களின் உள்ளுர் நிர்வாகத்திடம் பேசி பொருளாதார உதவிகள் பெற்று கூடுதலாக தனது சொந்தப் பணத்தையும் செலவழித்திருக்கிறார், கற்றுதரும் முறையிலும் வகுப்பறையின் சூழலிலும் இதுபோன்ற பள்ளி எதையும் தமிழகத்தில் நான் கண்டதில்லை.
பொதுவாக கரும்பலகை என்றாலே மாணவர்களுக்கு அலர்ஜி, இதற்கு மாற்றே கிடையாதா என்று பலமுறை யோசித்திருக்கிறேன், இந்தப்பள்ளியில் கரும்பலகையே கிடையாது, மாறாக பச்சை நிறப் பலகை உள்ளது, அதுவும் ஆசிரியர்களுக்கு ஒன்று, மாணவர்களுக்கு ஒன்று என இரண்டு,
மாணவர்கள் தாங்கள் விரும்புவதைப் பச்சைப் பலகையில் எழுதிப்பார்த்துக் கொள்ளும்படியாக தரைக்கு மிக நெருக்கமாக அமைக்கபட்டிருக்கிறது, ஆகவே எந்தக் கூச்சமும் இன்றி மாணவர்கள் தாங்கள் கற்றுக் கொண்டதை பச்சைப் பலகையில் எழுதிப் பார்க்கிறார்கள்
அது போலவே பெரும்பான்மை பள்ளிகளில் காணப்படுவது போன்று இரும்பு மற்றும் மரத்தில் உருவாக்கபட்ட நீளநீளமான பெஞ்சுகளுக்குப் பதிலாக வட்டவடிவமான மேஜையும் இருக்கையும் அமைத்திருக்கிறார்கள், அதில் பாடப்புத்தகங்களை வைத்துக் கொள்ள சிறிய காப்பறை காணப்படுகிறது, ஆகவே புத்தகங்களைச் சுமந்து செல்லும் வேதனை சிறுவர்களுக்குக் கிடையாது, தேவையான புத்தகம், நோட்டு மட்டும் வீட்டிற்கு எடுத்துப்போய்வந்தால் போதும்.
பல பள்ளிகளின் வகுப்பறைச் சுவர்கள் பளுப்பாகி, காரை உதிர்ந்து போய் நம்மை அச்சுறுத்துவதாகவே இருக்கிறது, ஆனால் இந்தபள்ளியில் சுவர்கள் முழுவதும் இயற்கைக் காட்சிகளான ஒவியத்தால் நிரம்பியிருக்கிறது, ஏதோ ஒரு ஆர்ட் கேலரியின் உள்ளே போவது போல அத்தனை ரம்மியமாக இருக்கிறது, அழகான ஒவிய அமைப்பு கொண்ட அந்த வகுப்பறை இறுக்கமான காற்றோட்டமில்லாத வகுப்பறை என்ற கொடுங்கனவிற்கு மாற்று வெளியாக இருப்பதைக் கண்டு சந்தோஷம் அடைந்தேன்
மாணவர்கள் தண்ணீர் குடிப்பதற்கு வெந்நீர், குளிர்நீர் என்று இரண்டு குடிநீர் குழாய்கள், படிப்பதற்காக சிறிய நூலகம்.  கணிப்பொறி வசதி, விஞ்ஞானம் மற்றும் கணிதம் கற்பிக்கத் தேவையான உபகரணங்கள், இத்துடன் பள்ளியின் பதிவேடுகளை மாணவர்களை தயாரிக்கிறார்கள்,
,கூடுதலாக ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி, நுண்கலைப்பயிற்சிகள் , நாளிதழ்களை வாசிக்கப் பழகுவது, தினமும் ஒரு நல்ல கருத்தை நோட்டில் எழுதுவது, படித்த புத்தகங்களில் இருந்து பிடித்தமான பகுதிகளை எழுதுவது. கற்பனையாக பாடல்களை உருவாக்குவது, சொற்வளம் உருவாக்கும் பயிற்சி, கற்றல் குறைபாடு கொண்ட சிறுவர்களைத் தனித்து அடையாளம் கொண்டு சிறப்புக் கவனம் தருவது, இவை யாவையும் விட பள்ளியில் தண்டனையே கிடையாது, வகுப்பை மாணவர்கள் தூய்மையாக வைத்திருக்கிறார்கள்
அந்த மாணவர்களுக்காக ஒரு கதைசொல்லும் நிகழ்வை நடத்தினேன், அவர்கள் ஒரு கதையைச் சொல்ல பதிலுக்கு நான் கதை சொல்ல என ஒரு மணி நேரம் கதை, பாடல்கள், பொதுஅறிவுத்திறன் என்று நீண்டு கொண்டே போனது, பெருநகரப் பள்ளியின் தரத்தை விட இந்த மாணவர்களின்  வெளிப்பாட்டுத் திறன் பலமடங்கு சிறப்பாக இருப்பதை உணர முடிந்தது,
தமிழில் மட்டுமில்லாமல் ஆங்கிலத்தில் இந்த மாணவர்கள் நல்ல தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள், செயல்முறை கல்வி திட்டம் வழியாக பாடம் கற்று தரப்படுகிறது, ஆகவே பள்ளியைச் சுற்றியுள்ள செடிகொடிகள் பறவைகளை அடையாளம் கண்டு மாணவர்களே அவற்றின் மாதிரிகளைச் சேகரித்து காட்சிக்கு வைத்திருக்கிறார்கள், மாணவர்களின் கற்றல் திறனை பெற்றோர்கள் அறிந்த கொள்ள தனியே ஒரு கையேடு உருவாக்கியிருக்கிறார்கள்,
கற்றலை எளிதாக்க ஆடியோ வீடியோ உபகரணங்களையும் வகுப்பறையில் பயன்படுத்துகிறார்கள், அதற்கான டிவிடி நூலகமும் தனியே உள்ளது, ஒலிப்பெருக்கியுடன் கூடிய உட்கூரை அமைக்கப்பட்டிருக்கிறது, அது போலவே பள்ளியில் திடீரென ஏதாவது இயற்கை இடர்பாடு உருவானால் வெளியேற ஒரு அவசரகால வழியும் அமைக்கப்பட்டிருக்கிறது
அழகான சீருடை, காலணிகள் மற்றும்  அடையாள அட்டைகள். மாணவர்களின் கற்பனை திறனை ஊக்கப்படுத்த தனிவகுப்புகள் என்று அத்தனையும் இந்த பள்ளியில் சிறப்பாக உள்ளது,
இவை அத்தனையும் இலவசமாகக் கிடைக்கிறது என்பதே இதன் சிறப்பம்சம்,
ராமம்பாளையம் பள்ளியில் உள்ள அத்தனை வசதிகளையும் உருவாக்க அந்த பள்ளி செலவிட்டுள்ள தொகை இரண்டரை லட்சம் மட்டுமே,
பள்ளியில் ஒரு தலைமை ஆசிரியையும், பிராங்களின் இருவருமே பணிக்கு இருக்கிறார்கள், ஒருவேளை பிராங்களின் இடமாற்றம் செய்யப்பட்டுவிட்டால் இந்தப் பணி என்னவாகும் என்ற கவலை தலைமை ஆசிரியரிடம் நிறையவே காணப்படுகிறது.
மாவட்ட ஆட்சிதலைவரில் இருந்து கல்வித்துறை அதிகாரிகள், உள்ளுர் நாளிதழ்கள் வரை பலரும் இப் பள்ளியைப் பாராட்டியிருக்கிறார்கள்,  ஆனால் இது போல இன்னொரு பள்ளியை உருவாக்க முயற்சி செய்யவேயில்லை.
புதிய தலைமுறை இதழில் இப்பள்ளி பற்றி வெளியான கட்டுரையை வாசித்துவிட்டு வெளிநாட்டில் பணியாற்றும் பலரும் தங்களால் ஆன பொருளாதார உதவிகளைச் செய்ய முன்வந்திருக்கிறார்கள், அவர்களுக்கு பிராங்களின் சொன்ன பதில் ,உங்களால் முடியுமானால் உங்கள் சொந்த ஊரில் இது போன்று ஒரு பள்ளியை உருவாக்குங்கள், அல்லது உருமாற்றுங்கள், அது தான் நான் விரும்புவது என்பதே
நான் பிராங்களினுடன் இரண்டு மணிநேரம் பேசிக் கொண்டிருந்தேன், வாழ்க்கைக்கு உதவியாக அடிப்படைக் கல்வியை உருமாற்ற வேண்டும், அதற்குப் புதிய கற்றுதரும் முறைகளும், உபகரணங்களும்  அவசியமானவை, எங்கள் பள்ளியின் தேவை கல்வி சார்ந்த மென்பொருட்கள், புத்தகங்கள் மற்றும் நேஷனல்ஜியாகிரபி வெளியீடுகளாக உள்ள இயற்கை சார்ந்த வீடியோ பதிவுகள் மற்றும் கலைக்களஞ்சியங்கள் போன்றவையே, இத்துடன் Educomp’s smartclass போன்ற மின்திரை வசதியுடன் கூடிய காட்சிவழிக்கல்வி அமைக்க உதவினால் மிகவும் உபயோகமாக இருக்கும்,
இந்த உதவிகளை விடவும் இப்பள்ளி போல தமிழகம் முழுவதும் சிறப்பு வகுப்பறைகளை உருவாக்கி கல்வியின் தரத்தை மேம்படுத்த வேண்டும், அது நாம் அனைவரும் சேர்ந்து செய்யவேண்டிய அவசியமான பணி, அதைச் செய்யத் தவறினால் கல்வியைச் சீரழிப்பதோடு வருங்காலத் தலைமுறையின் அறிவுத்திறனை நாம் ஒடுக்கிவிடுகிறோம் என்பதே உண்மை என்கிறார் பிராங்களின்.
தமிழக அரசின் பத்திரபதிவுத்துறை. நிர்வாகத் துறை என்று பல்வேறு துறைகள் முற்றிலும் கணிணி மயமாக்கபட்டிருக்கிறது, ஆனால் முற்றிலும் கணிணி மயமாக்கப்பட வேண்டிய கல்வித் துறையில் அந்த முயற்சிகள் நடைபெறவேயில்லை.
தமிழகப் பள்ளிகளை ஒரே நெட்வொர்கில் கொண்டுவருவதன் மூலம் கல்வி நிலையங்களுக்கு இடையில் கற்றலில் பரிவர்த்தனையை மேற்கொள்ளலாம், இன்றுள்ள இணைய வசதிகளைப் பயன்படுத்தி தரமான வகுப்புகளை யாவரும் ஒரே நேரத்தில் காணச் செய்ய இயலும், கூடுதலாக பள்ளிகளுக்கு இடையில் ஆசிரியர் மற்றும் மாணவர்களின் தர உயர்விற்கு அதிக சாத்தியங்கள் இருக்கின்றன,
குறைந்த பட்சம் அனைத்து அரசுப்பள்ளிகளும் ஒரே நெட்வொர்கில் இணைக்கப்பட்டால் அதன் செயல்பாட்டினை நுட்பமாக அவதானிக்கவும் மேம்படுத்தவும் எளிமையாக இருக்கும்
அரசுபள்ளிகளுக்கு ஆசிரியர்கள் நேரத்திற்கு வருகிறார்களா என்று கவனிக்க பள்ளி கல்வியதிகாரிக்கு  எஸ்எம்எஸ் அனுப்பும் முறையை அரசு செயல்படுத்திவருகிறது, அதன் காரணமாக ஒரளவு ஆசிரியர்களின் பணிச்செயல்பாடு அவதானிக்கப்படுகிறது, இது போன்ற முயற்சிகள் அரசு தரப்பில் செயல்பட்டபோதும் அதன் தரம் பற்றிய மக்களின் சிந்தனை இன்றும் பின்தங்கியே உள்ளது, அது மாற்றப்பட வேண்டும்.
அரசுபள்ளிகளின் மேம்பாடு என்பது அரசின் செயல்பாட்டால் மட்டுமே மாற்றப்பட வேண்டிய ஒன்றில்லை, உள்ளுர் நிர்வாகம் மற்றும் ஆசிரியர்களின் விருப்பம் மற்றும் முன்முயற்சிகள். அத்துடன் பொதுமக்களின் தீவிரமான அக்கறை இவை யாவும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே முடியும்,
ஆனால் உள்ளுர்நிர்வாகம் சாலை வசதி அமைப்பது, குடிநீர் தொட்டி கட்டுவதில் காட்டும் அக்கறையைப் பள்ளி சார்ந்து காட்டுவதில்லை, காரணம் அதில் ஊழலுக்கு அதிக இடமில்லை என்பதே.
ஆசிரியர்கள் முன்முயற்சி எடுத்தால் எந்தவொன்றையும் சாதிக்க முடியும் என்பதற்கு பிராங்களின் முன்னுதாரணமாக இருக்கிறார்,
இவரது சாதனையைப் பாராட்டி எந்த அங்கீகாரமும் இதுவரை அவருக்குக் கிடைக்கவில்லை,
வகுப்பறை குறித்த கனவு ஒன்றை நிஜமாக்கிக் காட்டியிருக்கிறார் பிராங்களின், ஆகவே இதை முன்னெடுத்துப் போவது நமது கையில் தானிருக்கிறது,
பிராங்களினுக்கு எனது மனம் நிறைந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டேன், விடைபெறும் போது மனதில் தோன்றியது, இது எங்கோ ஒரு கிராமத்தில் விதிவிலக்காக நடைபெற்ற ஒன்று என்பது மாறி தமிழகம் தழுவிய இயக்கமாக மாற வேண்டும், அப்போது தான் அடிப்படை கல்வியின் தரம் மேம்படும்.
சமகாலச் கல்விச் சூழலைப் பார்க்கையில் இந்த எண்ணம் வெறும்கனவைப்போலத்  தோன்றக்கூடும், ஆனால் இது போன்ற ஒரு கனவைத்தான் பிராங்களின் நனவாக்கியிருக்கிறார் என்பதால் எனக்கும் நிறைய நம்பிக்கை இருக்கவே செய்கிறது
••

370 teachers has been Awarded with Dr. Radhakrishnan award

370 ஆசிரியருக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது : பெற்றோர் போல பழக வேண்டுகோள்
சென்னை : தொடக்கக் கல்வி, பள்ளிக்கல்வித் துறை உள்ளிட்ட துறைகளில் சிறப்பாக பணியாற்றிய, 370 ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வி அமைச்சர் சிவபதி, டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கினார். பள்ளிக்கல்வித் துறை சார்பில், முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளையொட்டி, சிறப்பாக பணியாற்றிய, 370 ஆசிரியர்களுக்கு, தமிழக அரசின், "ராதாகிருஷ்ணன் விருது' வழங்கும் விழா, சென்னையில் நேற்று நடந்தது. துறை முதன்மைச் செயலர் சபிதா தலைமை தாங்கினார். பள்ளிக்கல்வி இயக்குனர் தேவராஜன் வரவேற்றார். ஆசிரியர்களுக்கு, "ராதாகிருஷ்ணன் விருது' வழங்கி, அமைச்சர் சிவபதி பேசியதாவது: நானும் ஒரு ஆசிரியர் குடும்பத்தைச் சேர்ந்தவன் தான். அந்த வகையில் எனக்கு, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பதவியை வழங்கிய, முதல்வருக்கு நன்றி கூறுகிறேன். விருது பெற்ற ஆசிரியர் அனைவருமே, வயது முதிர்ந்தவர்களாக, 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணி புரிந்தவர்களாக இருக்கிறீர்கள். உங்களது திறமையையும், உழைப்பையும் கவுரவிக்கும் வகையில், இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித் துறையின் மீது, முதல்வர் அதிக ஈடுபாடு காட்டி வருகிறார். எப்போதும் இல்லாத அளவிற்கு, இத்துறையில், முதல்வர் மாபெரும் புரட்சியை செய்துள்ளார். மாணவ, மாணவியருக்கு விலையில்லா சைக்கிள், புத்தகம், நோட்டுகள், காலணி, பென்சில் என, அனைத்தையும் வழங்கியுள்ளார். கல்வியை மட்டும் போதிக்காமல், அதனுடன், வாழ்க்கையையும், வாழ்வியல் தத்துவத்தையும், ஆசிரியர் கற்றுத்தர வேண்டும். ஒரே ஒரு வேண்டுகோளை மட்டும், ஆசிரியருக்கு விடுக்கிறேன். மாணவ, மாணவியரை, தங்கள் பிள்ளைகளாக பாவிக்க வேண்டும். அதேபோல், ஆசிரியர் கண்டித்தாலும், அது நல்லதற்குத் தான் என, மாணவர் எண்ண வேண்டும். ஆசிரியரை, பெற்றோராக கருதி, மாணவ, மாணவியர் செயல்பட வேண்டும். இவ்வாறு அமைச்சர் சிவபதி பேசினார். ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் சுர்ஜித் சவுத்ரி பேசும்போது, ""நமது ஆசிரியர்களிடம், நல்ல விஷயங்களும் இருக்கின்றன; கெட்ட விஷயங்களும் இருக்கின்றன. பட்டப்படிப்பு முடித்ததும், ஆசிரியர் வேலைக்கு வந்துவிடுகின்றனர். தங்களது தொழிலில், திறமையையும், ஆற்றலையும் வளர்த்துக்கொள்ள அவர்கள் முன்வர வேண்டும். தரமான ஆசிரியரை நியமனம் செய்ய வேண்டும் என்பது, முதல்வரின் குறிக்கோள். அவரின் எண்ணப்படி, 40 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார் . விழாவில், அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்குனர் முகம்மது அஸ்லம், பாட நூல் கழக நிர்வாக இயக்குனர் கோபால், அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்ட கூடுதல் இயக்குனர் இளங்கோவன், இணை இயக்குனர் கண்ணப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடக்கக் கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் நன்றி கூறினார்.விருது விவரம்வெள்ளிப் பதக்கம், விருது சான்றிதழ், 5,000 ரூபாய் ரொக்கப் பரிசு ஆகியவை, ஒவ்வொரு ஆசிரியருக்கும் வழங்கப்பட்டன.

பள்ளி ஆசிரியர்கள் 370 பேருக்கு

டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுஅமைச்சர் வழங்கினார்


சென்னை:பள்ளி ஆசிரியர்கள் 370 பேருக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதை அமைச்சர் சிவபதி வழங்கினார்.பள்ளிக் கல்வித்துறை சார்பில் சென்னையில் நேற்று ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. துறை இயக்குநர் தேவராஜன் வரவேற்றார். அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்ட இயக்குநர் இளங்கோவன், மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் செந்தமிழ்ச் செல்வி, கலெக்டர் ஜெயந்தி, அனை வருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் முகமது அஸ்லம், தமிழ்நாடு பாடநூல் கழக மேலாண் இயக்குநர் கோபால், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் சுர்ஜித் கே.சவுத்ரி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். 370 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சிவபதி வழங்கினார்.தொடக்க கல்வி துறை ஆசிரியர்கள் 198, உயர்நிலை, மேனிலைப் பள்ளி ஆசிரியர்கள் 139, மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் 24, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சித்துறை ஆசிரியர்கள் 6, ஆங்கிலோ இந்தியப் பள்ளி ஆசிரியர்கள் 2, சமூகப் பாதுகாப்பு துறை ஆசிரியர் 1 ஆகியோர் விருது பெற்றனர்.இந்த விருதுடன் ஒரு நற்சான்று பத்திரம், மெடல் மற்றும்Ï.5000 ரொக் கம் வழங்கப்பட்டது. கலெக்டர் ஜெயந்தி, தேசிய ஆசிரியர் நல நிதிக்காக
Ï.3லட்சத்துக்கான காசோலையை அமைச்சரிடம் வழங்கினார். 

Wednesday, September 05, 2012

TEACHER'S DAY -FOR WHOM? -DINAMALAR ARTICLE

யாருக்காக ஆசிரியர் தினம்?-01-01-2004


வருடம் முழுவதும் எத்தனையோ விஷேச நாட்கள் வருகின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக, அதன் முக்கியத்துவத்தைப் பொறுத்து அனுசரிக்கப்படுகின்றன. ஆனால், வருங்கால தலைமுறையினரான மாணவர்கள், அந்த வருங்காலத்தை, தங்களுக்குள் நிர்மாணிப்பதில் பெரும் பங்கு வகிக்கும் ஆசிரியர்களுக்காக, அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் ஒரு வைபவமாக கொண்டாடுவது ஆசிரியர் தினம். அந்த வகையில், மற்ற சிறப்பு தினங்களோடு ஒப்பிடுகையில், இந்த ஆசிரியர் தினமானது மாறுபட்டு நிற்கிறது.
ஆசிரியர் தின வரலாறு
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில், வெவ்வேறு தேதிகளில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. அந்தந்த நாட்டை சேர்ந்த சிறந்த கல்வியாளரை கவுரவிக்க அல்லது அந்தந்த நாட்டில், கல்வி தொடர்பாக ஏற்பட்ட ஒரு சிறப்பான மாற்றத்தை நினைவுகூற என்ற காரணங்களுக்காக ஆசிரியர் தினம் கொண்டாடப்படுவதால், ஒவ்வொரு நாட்டிலும் தேதி மாறுபடுகிறது.
இந்தியாவில் செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. நமது நாட்டின் இரண்டாவது ஜனாதிபதியாக பதவி வகித்த சர்வபள்ளி திரு. ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளையே ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறோம். அவர் ஒரு ஆசிரியராக இருந்தவர். சிறந்த தத்துவமேதை என்று பெயர் பெற்றவர். நல்ல கல்வியாளர். ஒருமுறை அவரது மாணவர்கள் சிலர், அவரின் பிறந்தநாளை கொண்டாடுவதற்கு அனுமதி கேட்டபோது, அவர் பின்வருமாறு கூறினார், "எனது பிறந்தநாளை தனிப்பட்ட முறையில் கொண்டாடுவதைவிட, அதையே ஆசிரியர் தினமாகக் கொண்டாடினால், நான் பெருமையாக உணர்வேன்" என்றார். அவரின் வேண்டுகோளுக்கிணங்க, கடந்த 1962ம் ஆண்டு முதல் இந்தியாவில் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆசிரியப் பணியின் மதிப்பு
ஆசிரியர்களுடைய பணியின் மதிப்பு அளவிடப்பட முடியாதது. ஏனெனில், ஒரு மனிதனை மனிதன் என்று அடையாளப்படுத்துவது, மிருகங்களை மீறிய சிறப்பு பண்புக்கூறுதான். அந்த சிறப்புப் பண்புக்கூறு சிறந்த கல்வியின் மூலமே கிடைக்கிறது. அந்த சிறந்தக் கல்வியை அளிக்கும் மாபெரும் பணி ஆசிரியர்களை சார்ந்துள்ளது. ஏனெனில், ஆசிரியர்கள் உருவாக்கும் மாணவர் சமூகமானது, ஒரு நாட்டின் எதிர்காலத்தை மட்டுமல்ல, இந்த உலகின் எதிர்காலத்தையே தீர்மானிக்கிறது. அனைத்து மக்களின் நல்வாழ்வும் அந்த சமூகத்தின் கைகளில்தான் உள்ளது. எனவே, இந்த இடத்தில் ஆசிரியர் என்பவரின் பணியானது, அனைத்தையும்விட உயர்ந்து நிற்கிறது.
மற்ற பணிகளைப்போல ஆசிரியர் பணி என்பது ஒருவரின் வாழ்வாதாரத்திற்கான பணி அல்ல. தனது வாழ்வையே ஆதாரமாக்கும் பணி. அந்தப் பணியில் வேண்டுமானால், வாழ்வை நகர்த்துவதற்கான ஊதியம் கிடைக்கலாம். ஆனால் அந்த ஊதியத்திற்காக அந்தப் பணி அல்ல என்பதுதான் ஒரு சிறந்த ஆசிரியரின் தத்துவம். ஆசிரியர் பணி என்பது ஒரு உயிரோட்டமான பணி. ஆய்வு ரீதியான பணி. உளவியல் ரீதியான பணி. சேவை ரீதியான பணி. அர்ப்பணிப்புள்ள பணி. கால-நேரமற்ற பணி. ஒரு சிறந்த ஆசிரியர் வகுப்பறைக்குள் மட்டுமே ஆசிரியராக இருப்பதில்லை, இருக்கவும் முடியாது. அவர் தன் வாழ்வின் பெரும்பகுதி நேரங்கள் ஆசிரியராகவே இருக்கிறார். அவரின் சேவைக்கு எல்லை கிடையாது. மனித வாழ்வில் திருப்பு முனையை ஏற்படுத்தி, அதற்கு அர்த்தத்தைக் கொடுக்கும் ஒரு கடமை ஆசிரியருக்கு உள்ளது. உலகில் உள்ள பணிகளிலேயே, ஆசிரியர் பணியே அதிக திறமைகள் தேவைப்படும் பணி என்று சொல்லும் அளவிற்கு அதன் பொறுப்புகள் அதிகம். எனவே, அந்தப் பணிக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவதை உறுதிசெய்வது அரசின் பிரதான கடமை.
அனைவருமே சிறந்த ஆசிரியர்களா?
ஆனால் இன்றைய இந்திய சூழலில், ஆசிரியப் பணி என்பது சலுகைகள் மற்றும் சம்பளம் அதிகம் கிடைப்பதால், துளியளவுக்குக்கூட அப்பணிக்கு பொருத்தமற்ற பலர், அத்துறையில் வேலை வாய்ப்பை பெற்று வருகிறார்கள். பலர் வேலை வாய்ப்புக்கு காத்துக்கொண்டுள்ளார்கள். பலர் அதற்காகப் படித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்று ஆசிரியப் பணியில் இருப்பவர்களில் கணிசமான சதவீதத்தினர், தகுதியும், திறமையும் இல்லாமல், அதைப்பற்றி கவலையும் படாமல், சம்பளத்தோடு, டியூஷன் மற்றும் சொந்த தொழில்களை நடத்திக் கொண்டு வருமானம் ஈட்டி வருகிறார்கள்.
இவர்களே போற்றத்தக்கவர்கள்!
எது எப்படியிருந்தாலும், சிறந்த அர்ப்பணிப்பு உணர்வுடன், எந்த லாபநோக்கமும் இன்றி, பாடப்புத்தக அறிவு மட்டுமின்றி, பல்துறை பரந்த அறிவை மாணவர்களுக்கு வழங்கி, அவர்களின் உலகை விரியச் செய்து, உத்திரவாதமான எதிர்காலத்தை தொடர்ந்து வழங்கி வரும் ஆசிரியக் கண்மணிகள் கணிசமான அளவில் இருந்து, சமூக முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பாடுபட்டு வருகிறார்கள். கற்றல்-கற்பித்தல் என்பதே அவர்களின் தாரக மந்திரம். இத்தகைய ஆசிரியர்கள், சமூக உருவாக்கத்தின் மூல ஆதாரங்களாக திகழ்கிறார்கள்.
இவர்களைப் போன்றவர்களை போற்றவும், புகழவும், கவுரவிக்கவுமே ஆசிரியர் தினம். இந்த தினத்தில், ஆசிரியர்களுக்கு தாங்கள் செய்ய வேண்டியதை மாணவர்கள் சிறப்பாக செய்தலே நன்று!

363 TEACHERS RECEIVED DR.RADHAKRISHNAN AWARD TODAY


டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது - வாழ்த்து கடிதத்துடன் அழைப்பிதழ்-04-09-2012

 தமிழகம் முழுவதும் 370 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது சென்னையில் புதன்கிழமை நடைபெறும் விழாவில் வழங்கப்படுகிறது.
தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் 198 பேரும், உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் 139 பேரும், மெட்ரிக் பள்ளிகளின் ஆசிரியர்கள் 24 பேரும், ஆங்கிலோ இந்தியன் பள்ளி ஆசிரியர்கள் 2 பேரும், சமூக நலத் துறை பள்ளிகளைச் சேர்ந்த ஓர் ஆசிரியரும், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தைச் சேர்ந்த விரிவுரையாளர்கள் 6 பேரும் இந்த விருதைப் பெற உள்ளனர். சேத்துப்பட்டில் உள்ள சென்னை கிறிஸ்தவக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி இந்த விருதுகளை வழங்குகிறார். தமிழகம் முழுவதும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில் குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் பணி அனுபவம் உள்ள ஆசிரியர்கள் மட்டுமே இந்த விருதுக்குப் பரிசீலிக்கப்படுகின்றனர்.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 ஆசிரியர்களாக இருந்தால் அவரது பாடத்தில் மாணவர்கள் அதிக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்; தலைமையாசிரியர்களாக இருந்தால் பள்ளியின் செயல்பாடு கணக்கில் கொள்ளப்படும். தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களாக இருந்தால் அந்தப் பள்ளிகளின் மாணவர் சேர்க்கை, கல்வித் தரம், கற்பித்தலில் பின்பற்றப்படும் புதிய உத்திகள் உள்ளிட்டவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களிடமும், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடமும் இந்த விருதுக்கு விண்ணப்பம் செய்வார்கள். மாவட்ட அளவிலான குழுக்கள் இந்த ஆசிரியர்களின் பெயர்களைப் பரிசீலித்து மாநில அளவிலான குழுவுக்கு அனுப்பும். இந்த ஆண்டு மொத்தம் 760 ஆசிரியர்களின் பெயர்கள் மாநில அளவிலான குழுவுக்கு அனுப்பப்பட்டன. அதிலிருந்து 370 ஆசிரியர்கள் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை: டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள, 363 ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் தேவராஜனின், வாழ்த்து கடிதத்துடன், தனித்தனியே அழைப்பிதழும் அனுப்பப்பட்டுள்ளன.
விருது பெறும் ஆசிரியர்களுக்கு, அழைப்பிதழ் அனுப்பப்படும் முறை, 12 ஆண்டுகளுக்குப் பின், இந்த ஆண்டு தான் நடந்துள்ளது. பள்ளியின் வளர்ச்சியிலும், கல்வித் தர வளர்ச்சியிலும், தன்னை முழுமையாக ஈடுபடுத்தி, சிறப்பாக செயல்படும் ஆசிரியருக்கு, "டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது" வழங்கப்படுகிறது. சென்னை, சேத்துப்பட்டில் உள்ள, எம்.சி.சி., பள்ளியில், நடக்கும் விழாவில், 363 ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் சிவபதி, விருதுகளை வழங்குகிறார்.
இதுகுறித்து, பள்ளிக்கல்வித் துறை வட்டாரங்கள் கூறியதாவது: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலம், சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனரின் வாழ்த்து கடிதத்துடன் கூடிய அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. விருது பெறும் ஆசிரியருக்கு, 12 ஆண்டுகளுக்கு முன், இதுபோல் அழைப்பிதழ் வழங்கப்பட்டது. அதன்பின், இந்த ஆண்டு தான், அழைப்பிதழ் வழங்கப்படுகிறது. இவ்வாறு அவை தெரிவித்தன.
ராதாகிருஷ்ணன் விருது பெறுவதை, ஒவ்வொரு ஆசிரியரும், தம் வாழ்நாள் சாதனையாக கருதுகின்றனர். எனவே, விருதுபெறும் நிகழ்ச்சியைக் காண, மனைவி, பிள்ளைகள், உடன் பிறந்தவர்கள் என, பலரையும் அழைத்து வருவர். விழா நடக்கும் அரங்கிற்குள், சம்பந்தப்பட்ட ஆசிரியரைத் தவிர, வேறு யாரையும் விடுவதில்லை. உடற்பயிற்சி ஆசிரியர்களை, அரங்க நுழைவாயிலில் நிறுத்தி, அதிக கெடுபிடிகளை செய்வதே, பள்ளிக்கல்வித் துறையின் வாடிக்கையாக இருக்கும்.
ஆனால், இந்த ஆண்டு, அதுபோல் எவ்வித அவமரியாதைக்குரிய செயலும் நடக்காது என, அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "விருது பெறுபவர், உடன் வருபவர் என, அனைவரையும் கணக்கிட்டு, 2,500 சாப்பாட்டிற்கு, "ஆர்டர்" வழங்கியுள்ளோம். ஆசிரியருக்கான போக்குவரத்து பயணப்படி உள்ளிட்டவற்றை, உடனடியாக வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளோம்" என்றார்.

CHIEF MINISTER'S GREETINGS FOR TEACHES' DAY


ஆசிரியர் தினம்: முதல்வர் வாழ்த்து

First Published : 05 Sep 2012 12:00:00 AM IST


சென்னை, செப்.4: ஆசிரியர் தினத்தையொட்டி (செப்டம்பர் 5), முதல்வர் ஜெயலலிதா தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: தமிழகத்தில் பிறந்து ஆசிரியராகப் பணிபுரிந்து தமது நற்சிந்தனையாலும், நல்
ஒழுக்கத்தினாலும் மிக உயர்ந்து நாட்டின் உயரிய பதவியாகிய குடியரசுத் தலைவர் பதவியை வகித்து, ஆசிரியர் பணிக்குப் பெருமை தேடித் தந்தவர் எஸ்.ராதாகிருஷ்ணன்.
அவருடைய பிறந்த நாளை ஆசிரியர் தினமாக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5-ம் தேதி அனைவரும் கொண்டாடி மகிழ்கிறோம். நாட்டில் அறியாமையையும், வறுமையையும் ஒழிக்கக் கூடிய கருவி உண்டு என்றால் அதுதான் கல்வி. அந்தக் கல்விச் செல்வத்தை மாணவர்களுக்கு வழங்கும் பெருமையை பெற்றவர்கள் ஆசிரியர்கள். பெற்றோர்களுக்கு அடுத்தபடியாக, தம்மிடம் பயிலும் மாணவர்களிடம் அன்பு காட்டி அரவணைத்து வழிகாட்டுவதன் மூலமே சிறந்த கல்வியைப் பெற்று சமுதாய வளர்ச்சிக்கு உதவ முடியும் என்பதை ராதாகிருஷ்ணன் அறிந்திருந்தார்.
அதன்படி, செயல்பட்டு ஆசிரியர் தொழிலுக்கு மிகப்பெரிய பெருமையைத் தேடித் தந்தார். அவர் காட்டிய வழியில் ஆசிரியர்கள் அனைவரும் நல்ல குறிக்கோள்களையும், சமுதாய உணர்வுகளையும் மாணவர்களுக்கு விதைத்து சிறந்த கல்விப் பணியாற்றிட வேண்டும் என்பதே எனது விருப்பம்.
மாணவச் சமுதாயம் கல்வி கேள்வியில் சிறந்து விளங்கி உலகம் போற்றிட வாழ தமிழக அரசு எண்ணற்ற திட்டங்களைச் செம்மையான முறையில் செயல்படுத்தி வருகிறது. அந்தத் திட்டங்களை சிறந்த முறையில் பயன்படுத்தி மாணவர்களை உருவாக்க வேண்டியது ஆசிரியர்களின் முதன்மையான கடமையாகும். மாணவ சமுதாயத்தின் சிறப்பான வாழ்வுக்கு அல்லும் பகலும் உழைத்திடும் ஆசிரியர்களுக்கு எனது மனமார்ந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

CTET NOT APPLICABLE FOR TAMILNADU TEACHERS APPOINTMENT


சி.பி.எஸ்.இ. தகுதித்தேர்வு - தமிழக அரசு பள்ளிகளில் வேலை கிடையாது-04-09-2012

சென்னை: "சி.பி.எஸ்.இ., நடத்திய, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், மத்திய அரசுப் பள்ளிகளில் மட்டுமே, பணியில் சேர முடியும். தமிழக அரசுப் பள்ளிகளில் நியமனம் செய்ய முடியாது" என, ஆசிரியர் தேர்வு வாரியம், திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது.
"தேசிய அளவிலான ஆசிரியர் தகுதித் தேர்வை, சி.பி.எஸ்.இ., நடத்துகிறது. இத்தேர்வை ஏற்காத மாநிலங்கள், தனியாக ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்திக் கொள்ளலாம்" என, மத்திய அரசு, ஏற்கனவே தெரிவித்துள்ளது. அதன்படி, ஆசிரியர் தகுதித் தேர்வை (டி.இ.டி.,) நடத்தும் பொறுப்பை, ஆசிரியர் தேர்வு வாரியத்திடம், தமிழக அரசு வழங்கியது.
கடந்த, ஜூலை 12ம் தேதி நடத்தப்பட்ட இத்தேர்வில், எதிர்பார்த்த அளவிற்கு தேர்ச்சி சதவீதம் அமையாததால், கடந்த ஆண்டு, ஜூன் மாதம், சி.பி.எஸ்.இ., நடத்திய, டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழக தேர்வரை, ஏன் பரிசீலனை செய்யக் கூடாது என்ற கேள்வி எழுந்துள்ளது. மத்திய அரசு பாடத் திட்டம், தரம் வாய்ந்ததாக உள்ளது என்ற காரணமும் கூறப்படுகிறது.
இதுகுறித்து, ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்த தகவல்: சி.பி.எஸ்.இ., நடத்தும், டி.இ.டி., தேர்வு, மத்திய அரசு பாடத்திட்டபடி நடக்கிறது. எனவே, அத்தேர்வில் தேர்ச்சி பெறுபவர், கேந்திரிய வித்யாலயா உள்ளிட்ட, மத்திய அரசுப் பள்ளிகளில் மட்டுமே, பணியில் சேர முடியும். அவர்களை, தமிழக அரசுப் பள்ளிகளில் சேர்க்க முடியாது.
தமிழக அரசு நடத்தும், டி.இ.டி., தேர்வு, மாநில பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடக்கிறது. எனவே, தமிழக அரசுப் பள்ளிகளில் பணியில் சேர வேண்டும் எனில், டி.ஆர்.பி., நடத்தும், டி.இ.டி., தேர்வைத்தான் எழுத வேண்டும். இவ்வாறு, ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tuesday, September 04, 2012

RULING PARTY POLITICIANS RECOMMENDATIONS FOR DR.RADHAKRISHNAN AWARD

ஆசிரியர் விருதுக்கு ஆளுங்கட்சியினர் பரிந்துரை?-03-09-2012

சென்னை: சிறந்த ஆசிரியருக்கு, வரும் 5ம் தேதி வழங்கப்பட உள்ள ராதாகிருஷ்ணன் விருதுக்காக, ஆசிரியர் அனுப்பிய விண்ணப்பங்களுடன், ஆளுங்கட்சி பிரமுகர்களின் பரிந்துரை கடிதங்களும் அதிகளவில் இடம்பெற்றுள்ளன. இதனால் தர்மசங்கட சூழ்நிலை ஏற்பட்ட போதும், தகுதியான ஆசிரியர் பட்டியல் தயாரிப்பு பணி, இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
எதையும் எதிர்பாராமல், பள்ளியின் வளர்ச்சிக்கும், கல்வித்தரத்தை உயர்த்துவதற்கும் பாடுபடும் ஆசிரியரை கவுரவிக்கும் வகையில், ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படுகிறது.
சிறந்த ஆசிரியர், மாநில அளவிலும், தேசிய அளவிலும் தேர்வு செய்யப்பட்டு, முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான, செப்டம்பர் 5ம் தேதி, இந்த விருது வழங்கப்படுகிறது.
விருதுக்குரிய ஆசிரியரை தேர்வு செய்வதில் உள்ள விதிமுறைகள், 100 சதவீதம் கடைபிடிக்கப்படுகிறதா என்று விசாரித்தால், கல்வித் துறையின் பதில், மவுனமாகத் தான் இருக்கிறது.
வரும் 5ம் தேதி, தமிழக அரசு சார்பில், சென்னையில் நடக்கும் விழாவில், 360 ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. இதற்காக, மாநிலம் முழுவதும் இருந்து, ஆயிரத்திற்கும் அதிகமாக குவிந்த விண்ணப்பங்கள், சென்னையில் ஆய்வு செய்யப்பட்டன.
ஆசிரியர் அனுப்பிய விண்ணப்பங்களுடன், அவர்களுடைய அருமை, பெருமைகள், ஆளுங்கட்சி பிரமுகர்கள் உள்ளிட்ட, வி.ஐ.பி.,க்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் என, பலவற்றையும் சேர்த்து, பெரிய புத்தகம் அளவிற்கு, ஒவ்வொருவரும் கோப்புகள் தயார் செய்து அனுப்பினர்.
ஆளுங்கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் முதல், மாவட்டம், தொகுதி என, பலரும், "இவர், எனக்கு மிகவும் தெரிந்தவர்; திறமையானவர். பள்ளி வளர்ச்சிக்காக, அரும்பாடு பட்டுள்ளார். உள்ளூரில், ஏற்கனவே பல விருதுகளை வாங்கியுள்ளார். இவருக்கு, ராதாகிருஷ்ணன் விருது வழங்குவது மிகப் பொருத்தமாக இருக்கும்&' என, அதில் தெரிவித்துள்ளனர்.
இந்த பரிந்துரை கடிதங்களை, விருதுக்குரிய விண்ணப்பத்துடன் இணைக்கக் கூடாது என்பது விதிமுறை. ஆனாலும், ஆளுங்கட்சியினரின் பரிந்துரை கடிதங்களை எடுக்காமல், அப்படியே மாவட்ட அதிகாரிகள், மாநில அளவிலான குழுவிற்கு அனுப்பி விட்டனர்.
விருதுக்குரிய ஆசிரியரை தேர்வு செய்யும் பணி, இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது என்று கூறப்படுகிறது. கல்வி நடைமுறையை ஒழுங்குபடுத்தி, சிறப்பாக இயங்கும் கல்வி நிலையங்கள் உருவாகி வரும் சூழ்நிலையில், இதற்கான அடிப்படை வரன்முறைகளும் வரும் ஆண்டுகளில் உருவாக்கப்பட வேண்டும் என்று கல்வித்துறை கருதுகிறது.
அதன் மூலம் இத்துறையில் மேலோங்கி இருக்கும் ஆசிரியர் மட்டுமே இந்த விருதைப் பெற வேண்டும் என்ற கருத்து மேலோங்கி வருகிறது; இருந்தாலும், இது, நடைமுறைக்கு வராது என்பதே, சிறந்த ஆசிரியர்களின் கருத்தாக உள்ளது.

Monday, September 03, 2012

TEACHING MADE EFFECTIVE IN COIMBATORE BY COMPUTER DVD

கோவை:மாநகராட்சிப் பள்ளிகளில், கம்ப்யூட்டர் உதவியுடன் பாடம் கற்கும் திட்டம் குறித்த ஆய்வுக் கூட்டம், நடந்தது. கம்ப்யூட்டரை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட பாடங்களின் தொகுப்பு அடங்கிய "டிவிடி', இக்கூட்டத்தில் வெளியிடப்பட்டது.மாநகராட்சிப் பள்ளி மாணவர்களின், கம்ப்யூட்டர் அறிவை மேம்படுத்தும் நோக்கத்துடன், "டிஜிட்டல் ஈக்குவலைசர் புரோகிராம்' எனும், கம்ப்யூட்டரை அடிப்படையாகக் கொண்ட பயிற்சி நடைபெற்று வருகிறது. அமெரிக்கவாழ் இந்தியர்களை உறுப்பினர்களை கொண்ட "அமெரிக்கன் இந்தியா பவுண்டேஷன்' அமைப்பினர் வழங்கும், இந்த இலவச பயிற்சித் திட்டத்துக்கு, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில், சிறந்த வரவேற்பு உள்ளது.தொடர் மதிப்பீட்டு முறையின் கீழ், மாணவர்களின் திறனை மதிப்பீடு செய்யவும், இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள், பயிற்சி அளித்து வருகின்றனர். ஏப்ரல் மாதம் துவங்கி நடைபெற்று வரும், இந்த பயிற்சித் திட்டத்தின், முதல் ஆய்வுக் கூட்டம், நடந்தது. கம்ப்யூட்டரை பயன்படுத்தி, புரொஜெக்டுகள் உருவாக்கிய சிறந்த மாநகராட்சிப் பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டப்படனர்.கடந்த மூன்று மாதங்களில் அளித்த பயிற்சியை, பாடவாரியாக தொகுத்து உருவாக்கிய "டிவிடி', மாநகராட்சியின் 27 பள்ளிகளுக்கு வழங்கப்பட்டது. 
"டிவிடி' யை வெளியிட்டு, கமிஷனர் பொன்னுசாமி பேசுகையில்,""புத்தகத்தில் படிப்பதை விட, "விஷூவல்' ஆக, பாடங்களை, கம்ப்யூட்டர் திரையில் கற்கும்போது எளிதில் மறக்காது.

இதற்கான பயிற்சியில், மாணவர்களின் திறனை மேம்படுத்த, ஆசிரியர்கள் நன்கு பயிற்சி பெற வேண்டும்; கூடுதல் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்."டிவிடி'யை, வகுப்பறையில் திரையிட்டு ஆசிரியர்கள் கற்பித்தால், கடந்த மூன்று மாதங்கள் நடத்திய பாடங்களை மறக்கவே முடியாது. அடுத்த மூன்று மாதத்துக்கான பயிற்சியின் முடிவில், அடுத்த "டிவிடி' வழங்கப்படும். இதன் மூலம், மாநகராட்சிப் பள்ளிகளின் தரத்தை இன்னும் மேம்படுத்த வேண்டும்,'' என்றார். மாநகராட்சி கல்வி அலுவலர் வசந்தா கூறுகையில், ""14,384 மாணவர்களில், இதுவரை 4,827 மாணவர்களுக்கு, பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பயிற்சி பெற்றவர்களில், 1,111 பேர் புரொஜெக்டுகள் தயாரித்துள்ளனர். கம்ப்யூட்டர் படிப்பில் சிறந்து விளங்கும் 322 மாணவர்கள், "மாணவ ஆசிரியர்கள்' ஆக, தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள், பிற மாணவர்களுக்கு, பயிற்சியின் போது உதவுவர்,'' என்றார்.அமெரிக்கன் இந்தியா பவுண்டேஷனின் மாநில திட்ட மேலாளர் பாஸ்கரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அலெக்சாண்டர் மற்றும் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

SCHOLARSHIP SCANDAL - 8 YEAR FILES MISSING


2012
02
Sep
81 லட்சம் கல்வி உதவித்தொகை மோசடி : 8 ஆண்டு பைல்களை அழித்தது யார்? பட்டியல் எடுத்து போலீஸ் விசாரணை

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

நாமக்கல் :நாமக்கல் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் கடந்த 2010, 2011ம் ஆண்டில் சுகாதாரக்குறைவான தொழில் செய்யும் பெற்றோரின் குழந்தைகளுக்கு வழங்கிய கல்வி உதவித்தொகையில் ரூ. 81 லட்சம் மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக 77 தலைமை ஆசிரியர், மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர், கண்காணிப்பாளர் என 79 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2008 முதல் 2010ம் ஆண்டில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இத்துறை மூலம் அளிக்கப்பட்ட கல்வி உதவித்தொகையில் ரூ. 1 கோடி முறைகேடு நடந்துள்ளது. இது தொடர்பாக 12 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதற்கு முந்தைய ஆண்டுகளில் வழங்கப்பட்ட உதவித்தொகையிலும் இது போன்ற மோசடி நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், அதிகாரிகள் குழு ஆதிதிராவிடர்நலத்துறை மூலம் கல்வி உதவித்தொகை தொடர்பான பைல்களை ரெக்கார்டு ரூமில் ஆய்வு செய்தது. இதில் 2003ம் ஆண்டு முதல் 2010 வரையிலான 8 ஆண்டு பைல்களை காணவில்லை. இதனால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். பைல்கள் மாயமானதில் பல அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளது அம்பலமாகி உள்ளது. இதையடுத்து இந்த வழக்கை நல்லிபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து மாவட்ட குற்றப்பிரிவுக்கு மாற்றி நாமக்கல் எஸ்.பி கண்ணம்மாள் நேற்று உத்தரவிட்டார். கடந்த 2003ம் ஆண்டில் இருந்து ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் பணியாற்றிய மாவட்ட அதிகாரி, உதவி அக்கவுன்ட்ஸ் ஆபீசர், இளநிலை உதவியாளர்கள், உதவியாளர்கள், அலுவலக உதவியாளர்கள், டிரைவர்கள் என பலரிடமும் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். அதற்காக அவர்களின் பட்டியலை போலீசார் தயாரித்து வருகின்றனர்.

Saturday, September 01, 2012

EVALUATION OF STUDENTS BY SSA

மாணவர்களின் கல்வித்திறன் கண்டறியும் பணி தொடக்கம்-31-08-2012

சென்னை: தமிழகம் முழுவதும், தொடக்கப் பள்ளி மாணவர்களின் கல்வித்திறனை கண்டறியும் பணி துவக்கப்பட்டுள்ளது. ஒன்றியத்திற்கு ஐந்து பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, அங்குள்ள மாணவர்களின் கல்வித்திறன் விவரம் சேகரிக்கப்படுகிறது.

அனைவருக்கும் கல்வி இயக்ககம் சார்பில், கல்வி மேம்பாட்டிற்காக பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சில மாதங்களுக்கு முன், கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை, கழிப்பறை, குடிநீர் வசதி, விளையாட்டு மைதான வசதிகள் என, அனைத்து விவரங்களும் சேகரிக்கப்பட்டன.
தற்போது, தொடக்கப் பள்ளியில், முதல் வகுப்பிலிருந்து, ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் கல்வித்திறனை கண்டறிய, ஆய்வு நடந்து வருகிறது. மாநிலம் முழுவதும், ஒன்றியத்திற்கு, ஐந்து தொடக்கப் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இதில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள் மூன்று; அரசு நிதியுதவி பெறும் பள்ளி மற்றும் நகராட்சி பள்ளி அல்லது ஆதிதிராவிட நலத்துறை பள்ளி தலா, ஒன்று என பள்ளிகள் தேர்தெடுக்கப்பட்டுள்ளன.ஒவ்வொரு பள்ளிக்கும், அனைவருக்கும் கல்வி இயக்ககம் சார்பில், இரண்டு ஆசிரியர் பயிற்றுனர்கள் அனுப்பப்படுகின்றனர். அவர்கள், ஒவ்வொரு மாணவரிடமும், வாசிப்புத் திறன், எழுத்துத் திறன் ஆகியவற்றை சோதித்து, அவற்றுக்கு மதிப்பெண் போடுகின்றனர்.
மொழிப் பாடங்களில், எழுத்துத் திறனுக்கு, 60 மதிப்பெண்; வாசிப்புத் திறனுக்கு, 40 மதிப்பெண்; கணிதப் பாடத்தில், எழுத்துத் திறனுக்கு, 60 மதிப்பெண்; மனக்கணக்கிற்கு, 40 மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. மதிப்பெண் அடிப்படையில், மாணவர்களின் கல்வித்திறன் கண்டறியப்படுகிறது.
இதுகுறித்து, அனைவருக்கும் கல்வி இயக்கக ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் கூறியதாவது: தொடக்கப் பள்ளி மாணவர்களின் கல்வித்திறனை கண்டறிவதற்காக, தற்போது ஆய்வு நடத்தப்படுகிறது. இப்பணி முடிந்ததும், ஆறாம் வகுப்பிலிருந்து, எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின் கல்வித்திறன் கண்டறியப்படும்.
ஆய்வின் போது கிடைக்கும் விவரங்கள் அனைத்தும், அரசுக்கு அனுப்பப்படும். ஆய்வு அடிப்படையில், கல்வியில் மாற்றங்களை ஏற்படுத்த, அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

TET SECOND PAPER RESULT-A SURVEY

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 31,2012,23:58 IST
பட்டதாரி ஆசிரியருக்கான, டி.இ.டி., இரண்டாம் தாள் தேர்வை, 3.83 லட்சம் தேர்வர் எழுதியபோதும், வெறும், 713 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இது, மோசமாக உள்ள உயர்கல்வியின் தரத்தை வெளிப்படுத்துவதாக கருதப்படுகிறது. இதுதொடர்பான ஆய்வறிக்கையை, ஓரிரு நாளில், ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட உள்ளது.பல்வேறு பாடங்களுக்கு, பட்டதாரி ஆசிரியர் தேர்வு செய்யப்படுகின்றனர். அனைத்து வகையான பாட ஆசிரியரையும், இரு வகைகளுக்குள் கொண்டு வந்து, கணிதம்-அறிவியல் பாடம், சமூக அறிவியல் பாடம் என, இரு வகையாக, டி.இ.டி., இரண்டாம் தாள் தேர்வு நடத்தப்பட்டது.
தரம் மோசம்:


இளங்கலை பட்டப்படிப்பில், முக்கியப் பாடமாக எடுத்தவர், அதே பாடத்தில், பி.எட்., படிப்பையும் முடித்தால், பட்டதாரி ஆசிரியராக தகுதி பெறுவர். இளங்கலை மற்றும் பி.எட்., படிப்புகள் தரமானதாக இருந்தால், டி.இ.டி., இரண்டாம் தாள் தேர்வில், இந்த அளவிற்கு தேர்ச்சி குறைந்திருக்காது என்பது, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வாதம்.இளங்கலை பட்டப்படிப்பின் தரம், ஓரளவுக்கு நன்றாக இருந்தாலும், பி.எட்., படிப்பின் தரம், மிக மோசமாக இருப்பதாக, கல்வித்துறை வட்டாரம் தெரிவிக்கிறது.ஒவ்வொரு பி.எட்., கல்லூரியிலும், மாணவர் சேர்க்கை, இரு விதமாக நடத்தப்படுகிறது. முறையாக, கல்லூரிக்கு வரும் மாணவருக்கு ஒரு கட்டணமும், தேர்வின்போது மட்டும் கல்லூரிக்கு
வரும் மாணவருக்கு தனி கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. பி.எட்., கல்லூரிகளுக்குச் சென்று, திடீர் ஆய்வு மேற்கொண்டால், இந்த முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வரும்.சமீபத்தில், உயர்கல்வித்துறை செயலர் ஸ்ரீதர், ""மாநிலம் முழுவதும் உள்ள, பி.எட்., கல்லூரிகளில், ஆய்வு செய்யப்படும்,'' என்றார். ஆனால், இதுவரை எந்த ஆய்வும் நடத்தப்படவில்லை.
"சோடை போவது ஏன்?'


கல்வித்துறை வட்டாரங்கள் இதுகுறித்து கூறும்போது, ""ஒவ்வொரு ஆண்டும், பி.எட்., தேர்வில், 90 சதவீதத்திற்கும் அதிகான மாணவர்கள் தேர்ச்சி பெறுகின்றனர். இந்த அளவிற்கு தேர்ச்சி பெறுபவர், பத்தாம் வகுப்பு பாடத்திட்ட நிலையில் நடத்தப்படும் போட்டித் தேர்வில், சோடை போவது ஏன்என்பதை, உயர்கல்வித்துறை கவனிக்க வேண்டும்,'' என்றனர்.
இரண்டாம் தாள் தேர்வில், தேர்ச்சி சதவீதம் மிகவும் குறைந்தது தொடர்பாக, பல்வேறு கோணங்களில், ஆசிரியர் தேர்வு வாரியம் ஆய்வு செய்து வருகிறது. இதுதொடர்பான புள்ளி விவரம், ஓரிரு நாளில் வெளியாகும்போது, அது, உயர்கல்வித்துறையை உலுக்கி எடுத்துவிடும்.
பயன் இல்லை


டி.இ.டி., தேர்வை, பி.எட்., படித்துக் கொண்டிருப்பவர்களும் எழுதலாம் என, அறிவிக்கப்பட்டதால், பி.எட்., மாணவர் பலர், இரண்டாம் தாள் தேர்வை எழுதினர். பி.எட்.,டில்தேர்ச்சி பெற்ற பெரும்பாலானோர், டி.இ.டி., தேர்வில் தோல்வியைத் தழுவினர்.ஆனால், பி.எட்.,டில் தோல்வியுற்று, டி.இ.டி., தேர்வில், சிலர் தேர்ச்சி பெற்றுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. பி.எட்., தேர்வில் தோல்வியுற்ற மாணவர், உயர்ந்த தரத்தில் நடத்தப்பட்ட டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற்றது எப்படி என்ற கேள்வியும் எழுந்துள்ளது.இதுபோன்ற தேர்வர் குறித்த புள்ளி விவரம், சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பிறகே தெரியும் என, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பி.எட்.,டில் தோல்வியுற்று, டி.இ.டி., தேர்வில் ஒருவர் தேர்ச்சி பெற்றிருந்தாலும், ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட மாட்டார்கள் என,கூறப்படுகிறது.

செப்., 7ல் சான்றிதழ் சரிபார்ப்பு



டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு, 7, 8 தேதிகளில், சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப் போவதாக, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய நான்கு மண்டலங்களில், சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடக்கும்.இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்ற, 713 பேருக்கு, 7ம் தேதியும்; முதல் தாளில் தேர்ச்சி பெற்ற, 1,735 பேருக்கு, 8ம் தேதியும், சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடக்கும். இதற்கான அழைப்புக் கடிதம், அனைவருக்கும் அனுப்பப்பட்டுள்ளது; டி.ஆர்.பி., இணையதளத்திலும், வெளியிடப்பட்டுள்ளது. கடிதம் கிடைக்காதோர், இணையதளத்தில் (www.trb.tn.nic.in) வெளியிடப்பட்ட அழைப்புக் கடிதத்தை பதிவிறக்கம் செய்து, சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கலாம்.
- நமது நிருபர் -