கோவை:மாநகராட்சிப் பள்ளிகளில், கம்ப்யூட்டர் உதவியுடன் பாடம் கற்கும் திட்டம் குறித்த ஆய்வுக் கூட்டம், நடந்தது. கம்ப்யூட்டரை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட பாடங்களின் தொகுப்பு அடங்கிய "டிவிடி', இக்கூட்டத்தில் வெளியிடப்பட்டது.மாநகராட்சிப் பள்ளி மாணவர்களின், கம்ப்யூட்டர் அறிவை மேம்படுத்தும் நோக்கத்துடன், "டிஜிட்டல் ஈக்குவலைசர் புரோகிராம்' எனும், கம்ப்யூட்டரை அடிப்படையாகக் கொண்ட பயிற்சி நடைபெற்று வருகிறது. அமெரிக்கவாழ் இந்தியர்களை உறுப்பினர்களை கொண்ட "அமெரிக்கன் இந்தியா பவுண்டேஷன்' அமைப்பினர் வழங்கும், இந்த இலவச பயிற்சித் திட்டத்துக்கு, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில், சிறந்த வரவேற்பு உள்ளது.தொடர் மதிப்பீட்டு முறையின் கீழ், மாணவர்களின் திறனை மதிப்பீடு செய்யவும், இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள், பயிற்சி அளித்து வருகின்றனர். ஏப்ரல் மாதம் துவங்கி நடைபெற்று வரும், இந்த பயிற்சித் திட்டத்தின், முதல் ஆய்வுக் கூட்டம், நடந்தது. கம்ப்யூட்டரை பயன்படுத்தி, புரொஜெக்டுகள் உருவாக்கிய சிறந்த மாநகராட்சிப் பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டப்படனர்.கடந்த மூன்று மாதங்களில் அளித்த பயிற்சியை, பாடவாரியாக தொகுத்து உருவாக்கிய "டிவிடி', மாநகராட்சியின் 27 பள்ளிகளுக்கு வழங்கப்பட்டது.
"டிவிடி' யை வெளியிட்டு, கமிஷனர் பொன்னுசாமி பேசுகையில்,""புத்தகத்தில் படிப்பதை விட, "விஷூவல்' ஆக, பாடங்களை, கம்ப்யூட்டர் திரையில் கற்கும்போது எளிதில் மறக்காது.
இதற்கான பயிற்சியில், மாணவர்களின் திறனை மேம்படுத்த, ஆசிரியர்கள் நன்கு பயிற்சி பெற வேண்டும்; கூடுதல் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்."டிவிடி'யை, வகுப்பறையில் திரையிட்டு ஆசிரியர்கள் கற்பித்தால், கடந்த மூன்று மாதங்கள் நடத்திய பாடங்களை மறக்கவே முடியாது. அடுத்த மூன்று மாதத்துக்கான பயிற்சியின் முடிவில், அடுத்த "டிவிடி' வழங்கப்படும். இதன் மூலம், மாநகராட்சிப் பள்ளிகளின் தரத்தை இன்னும் மேம்படுத்த வேண்டும்,'' என்றார். மாநகராட்சி கல்வி அலுவலர் வசந்தா கூறுகையில், ""14,384 மாணவர்களில், இதுவரை 4,827 மாணவர்களுக்கு, பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பயிற்சி பெற்றவர்களில், 1,111 பேர் புரொஜெக்டுகள் தயாரித்துள்ளனர். கம்ப்யூட்டர் படிப்பில் சிறந்து விளங்கும் 322 மாணவர்கள், "மாணவ ஆசிரியர்கள்' ஆக, தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள், பிற மாணவர்களுக்கு, பயிற்சியின் போது உதவுவர்,'' என்றார்.அமெரிக்கன் இந்தியா பவுண்டேஷனின் மாநில திட்ட மேலாளர் பாஸ்கரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அலெக்சாண்டர் மற்றும் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

No comments:
Post a Comment