அக்டோபர் 14ல் ஆசிரியர் தகுதித் தேர்வு : புதியவர்களும் விண்ணப்பிக்கலாம்
First Published : 21 Sep 2012 05:58:58 PM IST
சென்னை, செப். 21 : தமிழகத்தில் வரும் அக்டோபர் 14ம் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த தேர்வில் புதிதாக விண்ணப்பிப்பவர்களும் தேர்வெழுத அனுமதிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணியாற்ற ஆசிரியர்களுக்கு நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த ஜூலை 12ம் தேதி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் தோல்வி அடைந்ததை அடுத்து மறுதேர்வு நடத்த அறிவிப்பு வெளியானது.
இதில், புதிதாக தேர்வெழுத விரும்புவோரையும் அனுமதிக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீது இன்று பதில் தாக்கல் செய்த ஆசிரியர் தேர்வுக்குழு வாரியத் தலைவர், புதிதாக விண்ணப்பிப்பவர்களும் ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதலாம். அதற்கு வசதியாக அக்டோபர் 5 ம் தேதி நடத்துவதாக அறிவிக்கப்பட்ட தேர்வு அக்டோபர் 14ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
மேலும், 24ம் தேதி முதல் 28ம் தேதி வரை புதிதாக தேர்வெழுத விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என்று கூறியிருந்தார். இதனை நீதிபதி ஏற்றுக் கொண்டதை அடுத்து வழக்கு முடிவுக்கு வந்தது.
டி.இ.டி., தகுதித்தேர்வு ஒத்திவைப்பு
சென்னை: ஆசிரியர் தகுதித்தேர்வு அக்டோபர் 14ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெற்றது. இதில் குறைந்த அளவிலேயே தேர்ச்சி பெற்றனர். இதனையடுத்து மீண்டும் அக்டோபர் 3ம் தேதி நடைபெறும் எனவும், புதிதாக யாரும் விண்ணப்பிக்க முடியாது என அறிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆசிரியர் தகுதி தேர்வு அக்டோபர் 14ம் தேதி நடைபெறும் என ஆசிரியர் தகுதி தேர்வு வாரிய தலைவர் சென்னை ஐகோர்ட்டில் கூறினார். புதிதாக விண்ணப்பிப்பவர்கள் வரும் 24ம் தேதி முதல் 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment