SAY NO TO PPP, TET ,CPS

நிதி வழங்குக

GREAT SALUTE TO OUR ESWARANJI

Todays Educational News

கல்வி செய்தி

முக்கிய செய்திகள் – Google செய்திகள்

BBCTamil.com | இந்தியா

FLASH NEWS

முக்கிய செய்திகள்



FIGHT UNTILL YOU WIN YOUR DEMANDS

மேலும் கல்வி செய்திகள்

Tamilnadu Teachers friendly blog

தினகரன் கல்வி செய்திகள்

தமிழ் முரசு செய்திகள்

தினகரன் முக்கிய செய்திகள் --

TEACHER TamilNadu

தமிழ் முரசு முக்கிய செய்திகள்

Dinamani

Daily Thanthi

கல்வி அஞ்சல்

புதிய தலைமுறை தொலைக்காட்சி

Saturday, September 22, 2012

HM SUSEPENDED IN ERODE FOR NOT OPENING SCHOOL


நீண்ட நாட்கள் பணிக்கு செல்லாததால்

பள்ளி மூடப்பட்டது தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்: கலெக்டர் நடவடிக்கை


ஈரோடு: மலைப்பகுதியில் உள்ள பள்ளிக்கு, பள்ளி துவங்கிய நாளில் இருந்து செல்லாமல் இருந்து வந்த தலைமையாசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஒன்றியம் பர்கூர் ஊராட்சி கத்திரிமலை கிராமத்தில் பழங்குடியினத்தவர் 300க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். சாலை, போக்குவரத்து, குடிநீர், மருத்துவம், மின்சாரம் என எவ்வித அடிப்படை வசதியும் இல்லாத இந்த மலை கிராமத்தில் கடந்த 97ம் ஆண்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் உண்டு உறைவிடப்பள்ளி துவங்கப்பட்டது. பின்னர் கடந்த ஆண்டில் இப்பள்ளி நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு 75 மாணவ, மாணவியர் படித்து வந்தனர். இந்த கல்வியாண்டு தொடங்கியதில் இருந்து இப்பள்ளிக்கு எந்த ஆசிரியரும் பணிக்கு வராததால் பள்ளி மூடப்பட்டு கிடந்தது. மேலும், இப்பள்ளியில் பல்வேறு முறைகேடு நடைபெற்றதாகவும் குறிப்பாக புதிதாக ஸீ13 லட்சம் செலவில் கூடுதல் கட்டிடம் கட்டும் பணியில் முறைகேடு நடந்துள்ளதாகவும் புகார் எழுந்தது.கடந்த 2006ம் ஆண்ணீடுக்கு பிறகு நியமிக்கப்பட்ட தலைமை ஆசிரியர்களில் ஒருவர்கூட பள்ளி க்கு வந்தது இல்லை என்று  பழங்குடி மக்கள் சங்கம் புகார் கூறியதோடு, இது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, கலெக் டர் சண்முகம் இது தொடர்பாக ஆதிதிராவிடர் நலத் துறை, பள்ளி கல்வித் துறை, அனைவருக் கும் கல்வி இயக்கம், மருத்துவத் துறை உள்பட 5 துறை அதிகாரிகள் அடங்கிய ஒரு குழு அமைத்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டார். இந்த குழுவினர்  விசாரணை நடத்தி, அறிக்கையை ஆதிதிராவிடர் நலத்துறை பொறுப்பு அலுவலரான கலால் துறை உதவி ஆணையர் ரங்கராஜன், கலெக்டர் சண்முகத்திடம் தாக்கல் செய்திருந்தார். இந்த அறிக்கையின் அடிப்படையில் பள்ளிக்கு செல்லாமல் இருந்து வந்த தலைமை ஆசிரியர் புஷ்பராணியை சஸ்பெண்ட் செய்து கலெக்டர் சண்முகம் உத்தரவிட்டார். தலைமை ஆசிரியர் புஷ்பராணி, பள்ளிக்கு செல்லாமல் மாணவர்களுக்கு பாடம் நடத்த ஆசிரியர் பயிற்சி முடித்த ஒருவரை அவராகவே வேலைக்கு அமர்த்தியுள்ளார். அந்த நபர் பாடம் எடுத்து வந்துள்ளார். அவருக்கு புஷ்பராணி தனியாக குறைந்த தொகையை ஊதியமாக கொடுத்துள்ளார். நடப்பாண்டில் பள்ளி திறந்ததில் இருந்து அந்த நபர், பாடம் எடுக்க வருவதை நிறுத்திக் கொண்டார். தலைமை ஆசிரியை புஷ்பராணியும் பள்ளிக்கு வருவதில்லை. இதன் காரணமாக பள்ளி நடப்பாண்டு திறந்ததில் இருந்தே மூடப்பட்டு உள்ளது. ஆனால், உண்டு உறைவிடப்பள்ளி என்பதால் மாணவ,  மாணவிகளுக்கு உணவு மட்டும் வழங்கி வந்துள்ளனர். இப்பள்ளிக்கு மலைப்பகுதியை சேர்ந்த ஒருவரை ஆசிரியராக நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


*சாலை, போக்குவரத்து, பாதுகாக்கப்பட்ட குடிநீர், மருத்துவம், மின்சாரம் என எவ்வித அடிப்படை வசதியும் இல்லை.
*வெளியூருக்கு செல்வதாக இருந்தால் 8 கி.மீ. தூரம் கரடுமுரடான பாதையில் நடந்து லக்கம்பட்டி பிரிவு என்ற இடத்திற்கு வந்து தான் பஸ் ஏற முடியும். மளிகை உள்ளிட்ட எந்தப்பொருளை வாங்க வேண்டும் என்றாலும் லக்கம்பட்டி பிரிவில் இருந்து 10 கி.மீ. பஸ் பயணம் மேற்கொண்டு கொளத்தூர் கிராமத்திற்கு செல்ல வேண்டும்.
*இப்பள்ளியில் ஒரு தலைமை ஆசிரியர், ஒரு துணைத் தலைமை ஆசிரியர், ஒரு உதவி ஆசிரியர் என மூன்று பேர் பணியாற்ற அரசாணை உள்ளது. ஆனால், ஒரு தலைமை ஆசிரியர் மற்றும் ஒரு துணைத் தலைமை ஆசிரியர் என இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே இதுவரை பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
*இப்பள்ளியில் பணியில் சேரும் ஆசிரியர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments: