2012
19
Sep
சென்னை: பள்ளிகள் நாளை வழக்கம்போல இயங்கும் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அட்டவணைப் படி காலாண்டு தேர்வு நடக்கும் என்றும் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சபீதா தெரிவித்தார். எதிர்க்கட்சிகள் பந்த் அறிவித்துள்ளதால் 20ம் தேதி (நாளை) தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக நேற்று மதியம் பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் தேவராஜன் அறிவித்தார். ஆனால், சிறிது நேரத்திலேயே இந்த உத்தரவு வாபஸ் பெறப்பட்டது. வழக்கம்போல பள்ளிகள் இயங்கும் என அரசு அறிவித்தது. இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா கூறுகையில், ‘‘தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளும் நாளை வழக்கம்போல இயங்கும். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அட்டவணைப்படி காலாண்டு தேர்வு நடக்கும்’’ என்றார்
செப். 20ம் தேதி வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும்-19-09-2012
தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லாமல் விடுமுறை குறித்த முடிவை பள்ளிக் கல்வித்துறை எடுத்ததாக கூறப்படுகிறது. பின்பு அரசுக்கு விஷயம் தெரிந்ததும், வேலைநிறுத்தத்திற்கு அர்சே ஆதரவு தெரிவித்ததைப் போல் ஆகிவிடும் என்பதால், விடுமுறை அறிவிப்பைத் திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே வெளியிட்ட அறிவிப்பை உடனடியாக வாபஸ் பெறுங்கள், என பள்ளிக் கல்வித்துறைக்கு தமிழக அரசு உத்தரவிடப்பட்டதாக துறை வட்டாரம் தெரிவிக்கின்றன.சென்னை: டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் நாளை முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள பள்ளிகள் அனைத்தும் வழக்கம் போல் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
நாளை அனைத்து பள்ளிகளும் செயல்படும்: கல்வித் துறை அறிவிப்பு
First Published : 19 Sep 2012 12:00:00 AM IST
சென்னை, செப். 18: தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் வியாழக்கிழமை வழக்கம்போல் செயல்படும் என்று பள்ளிக் கல்வித் துறை செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.
முன்னதாக, வேலைநிறுத்தத்தையொட்டி, அனைத்துப் பள்ளிகளுக்கும் வியாழக்கிழமை விடுமுறை என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.
ஆனால், பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை முடிவு எடுக்கவில்லை எனவும், விடுமுறை தொடர்பான அறிவிப்பு தவறாக வெளியாகியுள்ளதாகவும் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை மாலையில் மறுப்பு தெரிவித்தனர்.
டீசல் விலை உயர்வு, சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி ஆகியவற்றைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் சார்பில் செப்டம்பர் 20-ம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் இப்போது காலாண்டுத் தேர்வு நடைபெற்று வருகிறது. வேலைநிறுத்த அறிவிப்பையொட்டி, இந்தத் தேர்வுகளை தள்ளிவைப்பது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை ஆலோசித்து வந்தது. இந்த நிலையில், பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான சுற்றறிக்கை செவ்வாய்க்கிழமை காலையில் அனுப்பப்பட்டது.
அதன் விவரம்: அனைத்து வகை பள்ளிகளுக்கும் செப்டம்பர் 20-ம் தேதி விடுமுறை அளிக்கப்படுகிறது. 10, 12 ஆம் வகுப்புகளுக்கு மாநிலம் முழுவதும் பொதுவான காலாண்டுத் தேர்வு நடைபெற்று வருகிறது.
அந்த வகுப்புகளுக்கு வியாழக்கிழமை நடைபெற இருந்த தேர்வை, இறுதி தேர்வு நாளுக்கு மறுநாள் நடத்த வேண்டும். மற்ற வகுப்புகளுக்கு நடைபெற இருந்த தேர்வை எந்த தேதியில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களே முடிவு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
திடீர் திருப்பம்: இதையடுத்து, சில மாவட்டங்களில் மாற்று தேர்வு தேதிகளையும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவித்துவிட்டனர். இந் நிலையில், பள்ளி கல்வித் துறை செவ்வாய்க்கிழமை மாலையில் திடீரென விடுமுறை அறிவிப்பை மறுத்தது. இது தொடர்பாக வெளியிட்ட செய்திக்குறிப்பில் பள்ளிகள் வியாழக்கிழமை வழக்கம்போல் இயங்கும் என்று தெரிவித்துள்ளது.முன்னதாக, வேலைநிறுத்தத்தையொட்டி, அனைத்துப் பள்ளிகளுக்கும் வியாழக்கிழமை விடுமுறை என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.
ஆனால், பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை முடிவு எடுக்கவில்லை எனவும், விடுமுறை தொடர்பான அறிவிப்பு தவறாக வெளியாகியுள்ளதாகவும் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை மாலையில் மறுப்பு தெரிவித்தனர்.
டீசல் விலை உயர்வு, சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி ஆகியவற்றைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் சார்பில் செப்டம்பர் 20-ம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் இப்போது காலாண்டுத் தேர்வு நடைபெற்று வருகிறது. வேலைநிறுத்த அறிவிப்பையொட்டி, இந்தத் தேர்வுகளை தள்ளிவைப்பது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை ஆலோசித்து வந்தது. இந்த நிலையில், பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான சுற்றறிக்கை செவ்வாய்க்கிழமை காலையில் அனுப்பப்பட்டது.
அதன் விவரம்: அனைத்து வகை பள்ளிகளுக்கும் செப்டம்பர் 20-ம் தேதி விடுமுறை அளிக்கப்படுகிறது. 10, 12 ஆம் வகுப்புகளுக்கு மாநிலம் முழுவதும் பொதுவான காலாண்டுத் தேர்வு நடைபெற்று வருகிறது.
அந்த வகுப்புகளுக்கு வியாழக்கிழமை நடைபெற இருந்த தேர்வை, இறுதி தேர்வு நாளுக்கு மறுநாள் நடத்த வேண்டும். மற்ற வகுப்புகளுக்கு நடைபெற இருந்த தேர்வை எந்த தேதியில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களே முடிவு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சென்னை:"அனைத்து பள்ளிகளுக்கும், நாளை விடுமுறை' என, காலையில் அறிவிப்பை வெளியிட்ட பள்ளிக் கல்வித்துறை, மாலையில் திடீரென அறிவிப்பை, "வாபஸ்' பெற்றது.டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை, நாடு தழுவிய அளவில், "பந்த்' நடக்கும் என, எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன. இதனால், பள்ளிகள் இயங்குமா, இயங்காதா என்ற குழப்பம் ஏற்பட்டது. இது குறித்து, அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு, நேற்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.அதன்படி, "20ம் தேதி அனைத்து வகை பள்ளிகளுக்கும் விடுமுறை; 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு, தேர்வு முடியும் மறுநாளன்று நடக்கும். இதர வகுப்புகளுக்கான தேர்வை, வேறு தேதியில் நடத்துவது குறித்து, அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முடிவெடுத்துக் கொள்ளலாம்' என்ற அறிவிப்பை, பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டது. இந்த உத்தரவு, உடனடியாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டன.இதையடுத்து, நேற்று தேர்வுக்கு வந்த மாணவ, மாணவியரிடம், 20ம் தேதி விடுமுறை குறித்த அறிவிப்பை, ஆசிரியர் வெளியிட்டனர். இதற்கிடையே, காலையில் வெளியிட்ட அறிவிப்பை, திடீரென மாலையில் பள்ளிக் கல்வித்துறை, "வாபஸ்' பெற்றது.
தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளும் 20.09.2012 வியாழன் அன்று வழக்கம் போல் செயல்படும் என்று தெரிவிக்கப்படுகிறது
Dear DEEOs,
Ensure the Quarterly Examination to be conducted on 20-09-2012. Question Paper reaches concern School Headmasters by Tomorrow (19-09-2012) evening and report immediately.
கீழே உள்ள கடிதத்தில் நமது தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்கள் விடுமுறையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்
No comments:
Post a Comment