SAY NO TO PPP, TET ,CPS

நிதி வழங்குக

GREAT SALUTE TO OUR ESWARANJI

Todays Educational News

கல்வி செய்தி

முக்கிய செய்திகள் – Google செய்திகள்

BBCTamil.com | இந்தியா

FLASH NEWS

முக்கிய செய்திகள்



FIGHT UNTILL YOU WIN YOUR DEMANDS

மேலும் கல்வி செய்திகள்

Tamilnadu Teachers friendly blog

தினகரன் கல்வி செய்திகள்

தமிழ் முரசு செய்திகள்

தினகரன் முக்கிய செய்திகள் --

TEACHER TamilNadu

தமிழ் முரசு முக்கிய செய்திகள்

Dinamani

Daily Thanthi

கல்வி அஞ்சல்

புதிய தலைமுறை தொலைக்காட்சி

Wednesday, September 19, 2012

2ND TERM TEXT BOOKS AFTER 1ST TERM HOLIDAYS


இரண்டாம் பருவத்திற்கு பாடப் புத்தகங்கள் வினியோகம்-20-09-2012



சென்னை: நடப்புக் கல்வியாண்டில், இரண்டாம் பருவத்திற்கான பாடப்புத்தக வினியோகத்தை, பள்ளிக் கல்வி அமைச்சர் சிவபதி, சென்னையில் நேற்று துவக்கி வைத்தார். இரண்டாம் பாடப் பருவத்திற்காக, மொத்தம், 56 தலைப்புகளில், 2.2 கோடி புத்தகங்கள் வினியோகம் செய்யப்படுகின்றன.
தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளிலும், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, முப்பருவக் கல்வி முறைத் திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஜூன் முதல், செப்டம்பர் வரையிலான முதல் பருவம், இம்மாத இறுதியுடன் முடிகிறது.
இதையடுத்து, அக்டோபர் முதல், டிசம்பர் வரையிலான இரண்டாம் பருவத்திற்கு, பாடப் புத்தகங்கள் வினியோகம் செய்யும் பணி, சென்னையில் நேற்று துவங்கியது. எழும்பூர், மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவில், பள்ளிக் கல்வி அமைச்சர் சிவபதி, மாணவியருக்கு, பாடப் புத்தகங்களை வழங்கினார்.

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper வரும் 25ம் தேதிக்குள், அனைத்துப் பள்ளிகளுக்கும் புத்தகங்கள் அனுப்பப்படும் என்றும், காலாண்டு விடுமுறை முடிந்து, அக்டோபர் 4ம் தேதி மாணவ, மாணவியர், பள்ளிகளுக்குத் திரும்பியதும், பாடப் புத்தகங்கள் வழங்கப்படும் என்றும், பள்ளிக் கல்வித்துறை அறிவித்து உள்ளது.
முதல், இரண்டாம் வகுப்புப் புத்தகங்களின் விலை, 70 ரூபாய், மூன்றாம் வகுப்பு முதல், ஆறாம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்களின் விலை, 85 ரூபாய், ஏழு, எட்டாம் வகுப்புப் புத்தகங்களின் விலை, 100 ரூபாய்.

.2ம் பருவ பாடபுத்தகங்கள் அடுத்த மாதம் வழங்கப்படும்

First Published : 18 Sep 2012 03:53:16 PM IST


சென்னை, செப்.,18: இரண்டாம் பருவ பாடபுத்தகங்கள் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது.

இந்த புத்தகங்கள் அனைத்தும் காலாண்டுத் தேர்வு விடுமுறைக்கு பிறகு மாணவர்களுக்கு வழங்கப்படும் என்று கல்வித்துறை அறித்துள்ளது.

2012
15
Sep
காலாண்டு தேர்வு விடுமுறைக்கு பிறகு 2ம் பருவ பாட நூல்கள் வினியோகம்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper













திருப்பூர் :மாணவர்களின் புத்தக சுமையை குறைப்பதற்காக ஒன்று  முதல் எட்டாம் வகுப்பு வரை முப்பருவ முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் முதல் பருவமாகவும், அக்டோபர், நவம்பர், டிசம்பர் 2ம் பருவமாகவும், ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் 3ம் பருவமாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. சமச்சீர் கல்வி முறையில் அறிமுகப்படுத்தப்பட்ட பாடப்புத்தகங்கள் அனைத்தும் மூன்றாகப் பிரிக்கப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டன. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஒரு பருவத்துக்கு ஒரு புத்தகமும், 6 முதல் 8ம் வகுப்பு வரை ஒரு பருவத்துக்கு 2 புத்தகங்களும் வழங்கப்பட்டன. 2ம் பருவத்திற்கான இந்தப் புத்தகங்கள் அனைத்தும் மாவட்ட பாடநூல¢ இருப்பு கிடங்குகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. தமிழ்நாட்டு பாடநூல் கழக நிர்வாக இயக்குநர் கோபால் கூறுகையில், ‘2ம் பருவ பாட புத்தகங்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது. புத்தகங்கள் காலாண்டு தேர்வு விடுமுறைக்கு பிறகு மாணவர்களுக்கு வழங்கப்படும். மெட்ரிக் பள்ளிகளுக்கு தேவையான ¢அளவு பாட நூல்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள¢ளது’ என்றார்

No comments: