SAY NO TO PPP, TET ,CPS

நிதி வழங்குக

GREAT SALUTE TO OUR ESWARANJI

Todays Educational News

கல்வி செய்தி

முக்கிய செய்திகள் – Google செய்திகள்

BBCTamil.com | இந்தியா

FLASH NEWS

முக்கிய செய்திகள்



FIGHT UNTILL YOU WIN YOUR DEMANDS

மேலும் கல்வி செய்திகள்

Tamilnadu Teachers friendly blog

தினகரன் கல்வி செய்திகள்

தமிழ் முரசு செய்திகள்

தினகரன் முக்கிய செய்திகள் --

TEACHER TamilNadu

தமிழ் முரசு முக்கிய செய்திகள்

Dinamani

Daily Thanthi

கல்வி அஞ்சல்

புதிய தலைமுறை தொலைக்காட்சி

Saturday, August 25, 2012

JUNIOR VIKATAN NEWS ABOUT ILLEGAL TRANSFERS

அமைச்சரைச் சுற்றி ஐந்து பேர்!'அதிரடி ஆடித் தள்ளுபடி... பள்ளிக் கல்வித் துறையில் உள்ள காலி இடங்கள் வாங்க, விற்க எங்களது கீழ்க்கண்ட அங்கீகாரம் பெற்ற முகவர்களை
 
 
 
 
 
 
(புரோக்கர்களை) மட்டுமே அணுகவும். 1. செல்வம் (ஸ்பெஷல் அடிஷனல் பி.ஏ) 2. துரைசாமி (அமைச்சரின் சகலை, காங்கிரஸ் கட்சியின் ஆயுட்கால உறுப்பினர்) 3. ராஜேந்திரன் (ஜூனியர் பி.ஏ.) 4. கலீல் (விஜய பாஸ்கர் எம்.எல்.ஏ-வின் பி.ஏ.) 5. ஆடிட்டர் ராஜா (அமைச்சரின் நண்பர்) இப்படிக்கு, என்றும் கல்விப் பணியில் என்.ஆர் சிவபதி அண்டு கோ பிரைவேட் லிமிடெட்’ - சில தினங்களுக்கு முன் எம்.எல்.ஏ ஹாஸ்டலில் உள்ள அனைத்து பிளாக்குகளிலும் இந்தத் திடீர் போஸ்டர்கள் முளைக்க... அடுத்த சில நிமிடங்களில் பெரும்பாடு பட்டு கிழித்து எறிந்தது ஒரு தரப்பு! என்ன நடக்கிறது என்.ஆர் சிவபதி கூடாரத்தில்? என்று விவரம் அறிந்த சிலரிடம் பேசினோம்

.

RE EXAM FOR TET -DUE TO LOW PASS PERCENTAGE

ஆசிரியர் தகுதி தேர்வு: குறைவான தேர்ச்சியால் மறுதேர்வு!
Posted Date : 16:09 (25/08/2012)Last updated : 16:55 (25/08/2012)
சென்னை: ஆசிரியர் தகுதி தேர்வில்,தேர்வு எழுதிய 6.76 லட்சம் பேரில் வெறும் 2448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பதால், தேர்ச்சி பெறாதவர்களுக்கு அக்டோபர் 3-ம் தேதி மறு தேர்வு நடத்தப்படும் எனஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.  

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்படுவோர், தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்று மத்திய அரசு, கடந்த 2009-ம் ஆண்டு சட்டம் இயற்றியது. 

இதன் அடிப்படையில் தமிழகத்தில் கடந்த ஜூலை 12ம் தேதி ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டது. மாநிலம் முழுவதும் 1,027 தேர்வு மையங்களில் நடந்த தேர்வை 6 லட்சத்து 76 ஆயிரம் பேர் எழுதினர். 10 நாட்கள் இடைவெளிக்கு பின் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான கீ ஆன்சர் வெளியிடப்பட்டது.

இந்நிலையில்,ஆசிரியர் தேர்வு வாரியம்  நேற்று நள்ளிரவு 2 மணியளவில், தகுதி தேர்வு முடிவுகளை www.trb.tn.nic.in என்ற தனது இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. இதில், 90 சதவீதம் பேர் 150 மதிப்பெண்களுக்கு 65 மதிப்பெண்கள்தான் பெற்றுள்ளனர். ஆனால், 90 மதிப்பெண் எடுத்தால் மட்டுமே தேர்ச்சி பெற முடியும்.

நேற்று இரவு வெளியிடப்பட்ட தகுதி தேர்வு முடிவுகளில் சுமார் 2448 பேர் மட்டும்தான் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்வு எழுதியவர்கள் பெற்ற மதிப்பெண்களும் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு எழுதியோர் அவர்களின் தேர்வு எண்ணை அதில் பதிவு செய்து தெரிந்து கொள்ளலாம்.

ஆசிரியர் தகுதி தேர்வில் 2448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளது கல்வித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதையடுத்து வருகிற அக்டோபர் 3-ம் தேதி மறுதேர்வு நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று அறிவித்துள்ளது.

இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் சுர்ஜித் சவுத்திரி இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில்,"ஆசிரியர் தகுதித் தேர்வை 6 லட்சத்து 76 ஆயிரத்து 863 பேர் எழுதினார்கள். இதில் 2,448 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தாள்-1 தேர்வில் 1,735 பேரும், தாள்-2 தேர்வில் 713 பேரும் வெற்றி பெற்றுள்ளனர். இதில் ஆண்கள் 768 பேரும், பெண்கள் 1,680 பேரும் அடங்குவர். தேர்ச்சி விகிதம் 0.70 சதவிகிதமாகும். தாள்-1-ல் உடுமலைப்பேட்டையை சேர்ந்த எம்.பிரியா 150 மதிப்பெண்ணுக்கு 122 மதிப்பெண் பெற்று முதல் ரேங்க் பெற்றார். தாள் 2-ல் கணிதம்- அறிவியல் பாடப்பிரிவில் நாகப்பட்டினம் வேதாரண்யத்தைச் சேர்ந்த பி.சித்ரா 142 மார்க் எடுத்து முதலிடம் பிடித்தார்.

சமூக அறிவியல் பாடப்பிரிவில் கம்பத்தைச் சேர்ந்த அருள்வாணி 125 மதிப்பெண் பெற்று முதலிடம் வகித்தார். தேர்ச்சி விகிதம் குறைவாக இருப்பதால் வெற்றி பெறாதவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. அக்டோபர் மாதம் 3-ந்தேதி தேர்ச்சி பெறாதவர்களுக்கு மேலும் ஒரு தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்விற்கு நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு தேர்விற்கும் 3 மணி நேரம் ஒதுக்கப்படுகிறது. இத்தேர்வை எழுத கட்டணம் செலுத்த தேவையில்லை.புதிதாக யாரும் விண்ணப்பிக்கவும் முடியாது.

ஏற்கனவே விண்ணப்பித்து தேர்ச்சி பெறாதவர்கள் மட்டுமே எழுத முடியும். மீண்டும் தேர்வு எழுதுபவர்களுக்கு விரைவில் ஹால் டிக்கெட் வழங்கப்படும். தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பதற்கு கடிதம் அனுப்பப்படும். தேர்வு முடிவுகளை www.trb.tn.nic.in இணை தளத்தில் பார்த்துக் கொள்ளலாம்” என்றார். 

கட்-ஆப் மதிப்பெண் குறைக்கப்படும்?

ஆசிரியர் தகுதி தேர்வுக்கான வினாக்கள் மிகவும் கடினமாக இருந்தது.கணித தேர்வுக்கு விடையளிக்க நேரம் போதவில்லை.அறிவிக்கப்பட்ட பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படவில்லை என்று தேர்வு எழுதியோர் பலரும் குற்றம்சாட்டினர். இதனால் தேர்ச்சிக்கான கட்-ஆப் மதிப்பெண்ணை குறைக்க வேண்டும் என்று தேர்வு எழுதியோர் தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டதால் கட்-ஆப் மதிப்பெண்ணை குறைப்பது குறித்து பரிசீலிக்கப்படலாம் எனத்தெரிகிறது.  

TEACHER DISMISSED FOR SEXUAL HARASSING STUDENTS


மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அரசு பள்ளி ஆசிரியர் டிஸ்மிஸ்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

சேந்தமங்கலம்: மாணவிகளிடம் சில்மிஷம் செய்ததாக புகார் கூறப்பட்ட அரசு பள்ளி ஆசிரியரை டிஸ்மிஸ் செய்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். இந்த அதிரடி நடவடிக்கை ஆசிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவிகளிடம் ஆசிரியர்கள் சிலர் சில்மிஷங்களில் ஈடுபடுவதாகவும், தேர்வில் தோல்வியடைய செய்துவிடுவேன் என மிரட்டி பாலியல் தொந்தரவு கொடுப்பதாகவும் பல இடங்களில் புகார்கள் எழுகின்றன. சில்மிஷ ஆசிரியர்களை கண்டித்து போராட்டங்களும் நடத்தப்படுகின்றன. இந்நிலையில், மாணவிகளுக்கு உடல் மற்றும் மன ரீதியாக பாதிப்பு ஏற்படுத்தும் ஆசிரியர்கள் மீது டிஸ்மிஸ் உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், சிலமிஷ புகாரில் சிக்கிய ஆசிரியரை டிஸ்மிஸ் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை அடுத்துள்ள வடுகப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக இருந்தவர் சத்யபிரபு (28). இவர், பள்ளி மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது. சக ஆசிரியைகளிடமும் இரட்டை அர்த்தத்தில் பேசி வந்துள்ளார். பாதிக்கப்பட்ட மாணவிகள், தங்களது பெற்றோரிடம் இதுபற்றி தெரிவித்தனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பெற்றோர்கள், பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டோர் திரண்டு பள்ளியை முற்றுகையிட்டனர். ஆசிரியர் சத்யபிரபு மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அருள்மொழிதேவி, பள்ளிக்கு வந்து விசாரணை நடத்தினார். மாணவிகள், ஆசிரியைகள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினார். அப்போது ஆசிரியர் சத்யபிரபுவின் செயல்பாடுகள் பற்றி அனைவரும் அதிருப்தி தெரிவித்தனர். இதையடுத்து அவரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் உத்தரவிட்டார். குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கும்படி ஆசிரியருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்நிலையில், தொடக்கக்கல்வித் துறை இணை இயக்குனர் லதா தலைமையிலான குழுவினர் கடந்த மாதம் சத்யபிரபுவிடம் விசாரணை நடத்தினர். அவர் அளித்த விளக்கத்தை குழுவினர் ஏற்றுக் கொள்ளவில்லை. அவரை டிஸ்மிஸ் செய்யும்படி தொடக்கக் கல்வித் துறை இயக்குனர் உத்தரவிட்டார். அதன்படி, ஆசிரியர் சத்யபிரபுவை டிஸ்மிஸ் செய்து தொடக்கக் கல்வி அலுவலர் நேற்று உத்தரவிட்டார்.

இதுகுறித்து டிஇஓ அருள்மொழி தேவி கூறும்போது, ‘‘பள்ளிக்கு வரும் அனைத்து குழந்தைகளையும் சமமாக நடத்த வேண்டும். ஏழை மாணவர்கள், பணக்கார குழந்தைகள் என ஆசிரியர்கள் பிரித்து பார்க்கக் கூடாது. உடலளவிலோ மனதளவிலோ குழந்தைகள் பாதிக்கப்படக் கூடாது என அரசு அறிவுறுத்தி உள்ளது. ஆனால் இதற்கு மாறாக ஒரு ஆசிரியரே நடந்து கொண்டிருக்கிறார். அதனால் அவரை டிஸ்மிஸ் செய்துள்ளோம்’’ என்றார். ஏற்கனவே கல்வி உதவித் தொகை மோசடியில் நாமக்கல் மாவட்ட தலைமை ஆசிரியர்கள் மீது அடுக்கடுக்கான புகார்கள் வந்துள்ளன. இந்நிலையில், செக்ஸ் டார்ச்சர் புகாரில் ஆசிரியர் டிஸ்மிஸ் செய்யப்பட்டிருப்பது கல்வித்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிறையில் ஆசிரியர் டிஸ்மிஸ் செய்யப்பட்ட ஆசிரியர் சத்யபிரபுவின் மனைவி சங்கீதா, புதன்சந்தை ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக பணியாற்றி வருகிறார். அவருக்கும் சக நர்ஸ் வசந்தகுமாரி என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது. கடந்த வாரம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்ற சத்யபிரபு, வசந்தகுமாரிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் சேந்தமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து சத்யபிரபுவை கைது செய்தனர். அவரை நாமக்கல் கிளை சிறையில் அடைத்துள்ளனர். இதனால், உதவி தொடக்க கல்வி அலுவலர் சிறைக்கு சென்று சத்யபிரபுவிடம் டிஸ்மிஸ் உத்தரவை வழங்கினார்.

நாமக்கல் : மனைவியுடன் பணியாற்றிய நர்சிற்கு கொலை மிரட்டல் விடு்த்ததாக கைது செய்யப்பட்டு, ஜாமினில் வெளிவந்த சி்ல்மிஷ ஆசிரியர் சத்தியபிரபு, தலைமை ஆசிரியரிடம் ஆபாச வார்த்தை பேசிய வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் வடுகபட்டி ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியவர் சத்தியபிரபு. இவர் ஆசிரியைகள், மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட புகாரை அடுத்து கடந்த ஜூன் மாதம் சஸ்பெண்‌ட் செய்யப்பட்டார். இந்நிலையில், இப்புகார் தொடர்பாக, அவர் நேற்று டிஸ்மிஸ் செய்யப்பட்டார். இந்நிலையில், கொலை மிரட்டல் வழக்கில் ஜாமின் கிடைத்ததையடுத்து வெளியே வந்தார். பள்ளி தலைமையாசிரியர் கிருஷண்வேணி (41), தன்னிடம் சத்தியபிரபு இரட்டை அர்த்த வசனத்தில் ஆபாசமாக பேசியதாக சேந்தமங்கலம போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தார். இதனையடுத்து, சத்திய பிரபு இன்று மீண்டும் கைது செய்யப்பட்டார்.

TEACHER ELIGIBILITY EXAM RESULTS PUBLISHED


ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு

First Published : 25 Aug 2012 11:22:58 AM IST


சென்னை, ஆக., 25 : தமிழகத்தில் கடந்த ஜூலை 12ம் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வினை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது. காலையில் முதல் தாளுக்கும், மதியம் இரண்டாம் தாளுக்கும் தேர்வு நடத்தப்பட்டது.

இந்நிலையில், இத்தேர்வுகளுக்கான முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று வெளியிட்டுள்ளது. தேர்வு முடிவுகளைக் காண http://trb.tn.nic.in/TET2012/24082012/status.asp இணைய தளத்தைப் பார்க்கவும்.

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முதல் தாளை 2,88,588 பேரும், இரண்டாம் தாளை 3,88,175 பேரும் எழுதினர்.

இத்தேர்வில் தலா 150 கேள்விகளுக்கு ஒன்றரை மணி நேரம் வழங்கப்பட்டிருந்தது. மொத்தமுள்ள மதிப்பெண்ணில் 60% மதிப்பெண்கள் எடுத்தவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

STUDENT PUNISHED BY HIS FATHER IN SCHOOL CAMPUS


சிறுவனை கயிறு கட்டி இழுத்து வந்த "பாசக்கார' தந்தை: பள்ளி வளாகத்தில் மரத்தில் கட்டி வைத்து தண்டனை

பாப்பிரெட்டிப்பட்டி:மொரப்பூர் அருகே, பள்ளிக்குச் சரியாகச் செல்லாத சிறுவனை, அவன் தந்தையே, கயிறு கட்டி இழுத்து வந்து, பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தில் கட்டி வைத்து, தண்டனை வழங்கினார். இச்சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில், மொரப்பூர் யூனியன், நடூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி, முருகன்,40; மனைவி வனிதா. இவர்களுக்கு, தனலட்சுமி,15, விஜயகுமார்,14, விநாயகம்,9, (பெயர் மாற்றப்பட்டுள்ளது), பவித்ரா,7, ஆகிய நான்கு குழந்தைகள் உள்ளனர்.தனலட்சுமி, விஜயகுமார் ஆகிய இருவரும், ஒன்பதாம் வகுப்புப் படித்து வருகின்றனர். விநாயகம், தாளநத்தம் அரசு நடுநிலைப் பள்ளியில், நான்காம் வகுப்புப் படிக்கிறார். பவித்ரா, அதே பள்ளியில், இரண்டாம் வகுப்புப் படிக்கிறார்.முருகன், பெங்களூரிலும், வனிதா, கோவையிலும் வேலை செய்கின்றனர்; மாதம் ஒரு முறை, குழந்தைகளை பார்த்து செல்வதோடு, சமையலுக்குத் தேவையான மளிகைப் பொருட்களை வாங்கிக் கொடுத்துச் செல்வர்.தனலட்சுமி, சமையல் மற்றும் வீட்டு வேலைகளை செய்து, தம்பி மற்றும் தங்கைகளை கவனித்து, பள்ளிக்கு அனுப்புகிறார்.

விநாயகம், ஒரு மாதமாகப் பள்ளிக்குச் செல்லாமல் ஏமாற்றி வந்தான். பள்ளி தலைமையாசிரியர் அசோகன் அழைத்த போதும், பள்ளிக்குச் செல்லாமல் போக்குக் காட்டினான். ஆசிரியர்கள், பெங்களூரில் உள்ள பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். முருகனும், வனிதாவும், 18ம் தேதி நடூர் வந்தனர். இரு நாட்களுக்கு, வனிதா, விநாயகத்தை பள்ளியில் விட்டுச் சென்றார்.விநாயகம் பள்ளியில் இருந்து வெளியேறி, விளையாடி விட்டு, பள்ளி முடிந்த பின், வீட்டுக்குச் சென்றான். இதை கண்காணித்த முருகன், நேற்று காலை, விநாயகத்தை அடித்து, அவன் கையில் கயிறு கட்டி, பள்ளிக்கு இழுத்து வந்தார்.அரை கி.மீ., தூரத்துக்கு இழுத்து வந்து, பள்ளியில் உள்ள மரத்தில் கட்டினார். சக மாணவர்கள், இந்தச் செயலைப் பார்த்து, வேதனை பட்டாலும், சிரித்தனர்; விநாயகம், பீதியில் உறைந்து போனான். உடற்கல்வி ஆசிரியர் மலையப்பன், மாணவனை மீட்டு, வகுப்பறைக்கு அனுப்பி வைத்தார்.

Friday, August 24, 2012

SMART CARD FOR ALL STUDENTS FROM 1 TO 8


SMART CARD FORMAT FOR STUDENTS FROM 1 TO 8



DOCUMENTS WORTH IN CRORE SEIZED FROM HOZUR AEEO


ஓசூர்: உதவி தொடக்கக் கல்வி அலுவலர் வீடு, அவரது மாமனார் வீடுகளில், லஞ்ச ஒழிப்பு போலீசார், நேற்று அதிகாலை, அதிரடி சோதனை நடத்தினர். கல்வித்துறை நிதியை மோசடி செய்தும், கோடிக்கணக்கில் சொத்துகளை வாங்கி குவித்தும், சேர்க்கப்பட்ட, 46 சொத்துகளுக்கான ஆவணங்களை போலீசார் கைப்பற்றினர்.
போலீசில் புகார்:

ஓசூர், உழவர் சந்தை, "நியூ டெம்பிள் லேண்ட் ஹட்கோ' பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 46; வேலூர் மாவட்டம், கனியம்பாடி உதவி தொடக்கக் கல்வி அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவர், கல்வித்துறை நிதிகளை மோசடி செய்து, கோடிக்கணக்கில் சொத்து சேர்த்ததாகவும், ஆசிரியர்களுக்கு இட மாறுதல், பணி நியமனம் பெற்று தருவதாக, பணம் பெற்றதாகவும், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு புகார் சென்றது.

அதிரடி சோதனை:

கிருஷ்ணகிரி மாவட்ட, லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி., ராமச்சந்திரன் தலைமையில், ஒரு குழுவினர், ஓசூரில் உள்ள வெங்கடேசன் வீட்டிலும், இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையில், மற்றொரு குழுவினர், சூளகிரியில் உள்ள, அவரது மாமனார் ஆஞ்சப்பா வீட்டிலும், நேற்று அதிகாலை, ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தினர். ஓசூர் வீட்டில் இருந்து, பல கோடி ரூபாய் மதிப்புள்ள, 41 சொத்துகளின் ஆவணங்களையும், சூளகிரியில், ஆஞ்சப்பா வீட்டில் இருந்த, வங்கி ஆவணங்களையும் கைப்பற்றினர்.

சொத்து பத்திரங்கள்:

டி.எஸ்.பி., ராமச்சந்திரன் கூறுகையில், ""தனியார் சந்தை விலை அடிப்படையில், கைப்பற்றப்பட்ட சொத்துகளை மதிப்பிடும்போது, வெங்கடேசன் வருமானத்துக்கு அதிகமாகவும், சட்டத்துக்கு விரோதமாகவும், கோடிக்கணக்கான ரூபாய் சொத்துகளை சேர்த்துள்ளதை உறுதி செய்துள்ளோம். அவர் மீது, துறைவாரியாக மேல்நடவடிக்கை எடுக்க, பரிந்துரை செய்வோம்,'' என்றார்.

அரசியல் தொடர்பு:

உதவி தொடக்கக் கல்வி அலுவலர் வெங்கடேசன், சூளகிரி ஒன்றிய, அரசு நடுநிலைப் பள்ளி ஒன்றில், உதவி ஆசிரியராக பணியில் சேர்ந்தார். அந்த பள்ளியின் தலைமை ஆசிரியரின் மகள் சித்ராவையே, திருமணம் செய்து, அதே பள்ளியில், தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றார். அதன்பின், ஈரோடு மாவட்டம், காங்கேயத்தில் உதவி தொடக்கக் கல்வி அலுவலராக, பதவி உயர்வு பெற்றார். இவருக்கு, தி.மு.க.,வில் முக்கிய அரசியல்வாதிகளுடன், நெருங்கிய தொடர்பு உள்ளதால், அதை பயன்படுத்தி, உடனடியாக, ஒருங்கிணைந்த தர்மபுரி மாவட்ட, நர்சரி பள்ளிகள் உதவி தொடக்கக் கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்றார். அதன்பின், மொரப்பூர், திருவண்ணாமலை, பர்கூர் என, பல்வேறு இடங்களில் பணிபுரிந்துள்ளார்.

ஏற்கனவே இடைநீக்கம்:

ஓசூர் அடுத்த அம்லட்டியில், முஸ்லிம் பிரமுகர் ஒருவரின் நிலத்தை, உதவி தொடக்கக் கல்வி அலுவலர் வெங்கடேசன் மோசடி செய்து, தன் மனைவி சித்ரா பெயரில், பத்திரப் பதிவு செய்தார். அவர் போலீசில் புகார் செய்ததால், நில அபகரிப்பு சட்டப்படி, 2011ம் ஆண்டு, வெங்கடேசனை போலீசார் கைது செய்தனர். இதனால், பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். அதன்பின், ஒரு வழியாக அந்த வழக்கில் இருந்து மீண்டு, வெளியே வந்த வெங்கடேசன், வேலூர் மாவட்டம், கனியம்பாடியில், மீண்டும் உதவி தொடக்கக் கல்வி அலுவலராக பணியில் சேர்ந்தார்.

ரியல் எஸ்டேட் தொழில்:

தி.மு.க., ஆட்சியில், (2008-09) ஓசூர் உதவி தொடக்கக் கல்வி அலுவலராக, வெங்கடேசன் பணியில் சேர்ந்தார். அப்போது, ஓசூர் பகுதியில், ரியல் எஸ்டேட் தொழில், கொடிகட்டி பறந்தது. உள்ளூர் ரியல் எஸ்டேட் புரோக்கர்களுடன் சேர்ந்து, அவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்ய துவங்கினார். இதன் மூலம், அவரது மனைவி சித்ரா, மாமனார் ஆஞ்சப்பா பெயர்களில், ஓசூர், சூளகிரி, உத்தனப்பள்ளி பகுதியில், கோடிக்கணக்கில் சொத்துகளை வாங்கிக் குவித்தார். மேலும், இவர், பைனான்ஸ் மற்றும் சீட்டுத் தொழிலும் நடத்தி வந்ததால், அதிருப்தியடைந்த ஆசிரியர் சங்கத்தினர், இவரை கண்டித்து, பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், இவர், திருவண்ணாமலை மாவட்டத்துக்கு இட மாற்றம் செய்யப்பட்டார்.


Thursday, August 23, 2012

22 TEACHERS WILL RECEIVE NATIONAL AWARDS

தமிழகத்தை சேர்ந்த 22 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருதுசென்னை : தமிழகத்தைச் சேர்ந்த, பள்ளி ஆசிரியர்கள், 22 பேருக்கு, தேசிய நல்லாசிரியர் விருதை வழங்கி, மத்திய அரசு கவுரவிக்க உள்ளது. முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான, செப்., 5ம் தேதி, ஆண்டுதோறும், ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இத்தினத்தில், சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களை கவுரவிக்கும் வகையில், மத்திய மற்றும் மாநில அரசுகள், நல்லாசிரியர் விருதை வழங்குகின்றன. கடந்த ஆண்டிற்கான, தேசிய நல்லாசிரியர் விருது, தமிழகத்தைச் சேர்ந்த துவக்கப் பள்ளி ஆசிரியர்கள், 15 பேர், பள்ளி கல்வித் துறை ஆசிரியர்கள், ஏழு பேர் என, மொத்தம், 22 பேருக்கு வழங்கப்பட உள்ளது. வரும், 5ம் தேதி, ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் விழாவில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விருதுகளை வழங்கி, ஆசிரியர்களை கவுரவிக்கிறார்.

Tuesday, August 21, 2012

DOUBLE DEGREE JUDGEMENT DOWNLOAD

விபரங்களுக்கு கீழே உள்ள லிங்கை காபி செய்து வேறு ப்ரௌசெரில்தொடரவும்

https://docs.google.com/open?id=0B2SoP8lxbo1XajhqVFFCQ3pwdU0

SCHOOL ACTIVITIES -INSTRUCTIONS TOBE FOLLOWED


பள்ளிகளுக்கான புதிய விதிமுறைகள் அறிவிப்பு-20-08-2012


திண்டுக்கல்: தமிழகத்தில் அரசு, தனியார் பள்ளிகளில் திங்கள் முதல் வெள்ளி வரை கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
இதில் கூறியுள்ளதாவது: திங்கள் கிழமை மட்டும் பள்ளிகளில் காலை மைதானத்தில் கூடி நின்று இறைவணக்கம் செய்யவேண்டும். அதில், தமிழ்தாய் வாழ்த்து, கொடியேற்றம், கொடிப்பாடல், உறுதிமொழி, சர்வசமய வழிபாடு, திருக்குறள் விளக்கம், செய்திவாசித்தல், இன்றைய சிந்தனை, பிறந்தநாள் வாழ்த்து, ஆசிரியர் உரை ஆகியவை 20 நிமிடத்திற்குள் இருக்கவேண்டும்.
 மதிய உணவு இடைவேளைக்கு முன், எளிய யோகா பயிற்சி, ஒழுக்ககல்வி, உடல்நலக்கல்வி, கலைக்கல்வி, சுற்றுச்சூழல், முதல் உதவி, தற்காப்பு விதிகள் கற்றுத்தர வேண்டும். மதிய உணவுக்கு பின், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புவரை தமிழ், ஆங்கிலத்தில், இரண்டு சொற்கள் எழுத சொல்லவேண்டும்.
ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை தமிழ், ஆங்கிலத்தில் இரண்டு சொற்கள் வாக்கியமாக அமைக்கவேண்டும்.வெள்ளிக்கிழமை, மாணவர்களின் பன்முகத் திறனை வெளிப்படுத்தும் வகையில் பேசுதல், நடித்தல், ஆடுதல், பாடுதல், நகைச்சுவை கூறுதல், மனக்கணக்கு, பொன்மொழிகள், பழமொழிகள் கூறுதலை செய்யவேண்டும், என கல்வித்துறை பள்ளிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. 

Monday, August 20, 2012

RTE TRAINING FOR PRIMARY & MIDDLE HMS


jäœehL bjhl¡f¡fšé Ïa¡Feç‹ brašKiwfŸ, br‹id-6
e.f.v© 13828/nf2/2012,  ehŸ 17.08.2012.
                                                      -------
bghUŸ

bjhl¡f¡fšé gæ‰Á FHªijfS¡fhd Ïytr k‰W« f£lha¡fšé  cçik¢r£l« - 2009   cjé¤ bjhl¡f¡fšé mYty®fŸ, bjhl¡f¥ gŸë, eLãiy¥gŸë jiyikahÁça®fS¡fhd RTE r£l« gæ‰Á kht£l¤Âš tH§Fjš rh®ªJ.

gh®it
1
muR  Miz (1o) v© 232, gŸë¡fšé¤ (Í1)Jiw,
ehŸ 27.06.2012.

2
muR Miz (1o) v© 233,  gŸë¡fšé¤ (Í1)Jiw,
ehŸ 27.06.2012.









                                                                              ----                                                         
                   gh®itæš f©l  murhizfë‹go bjhl¡f¡fšé Ïa¡ff¤Â‹ Ñœ cŸs bjhl¡f k‰W« eLãiy¥gŸë jiyikahÁça®fS¡F«, mid¤J x‹¿a§fëYŸs cjé¤ bjhl¡f¡fšé mYty® k‰W« TLjš cjé¤ bjhl¡f¡fšé mYty® / e®rç / m¿éaš  cjé¤bjhl¡f¡fšé mYty® M»nahU¡F« gæ‰Á më¡f mDk më¡f¥g£LŸsJ. mªjªj kht£l¤ÂYŸs mid¤J cjé¤bjhl¡f¡fšé mYty®fŸ k‰W« xU x‹¿a¤ÂèUªJ xU jiyikahÁça®, xU MÁça® nj®ªbjL¤J  (gæ‰Á  fU¤jhsuhf  nj®ªbjL¥gj‰fhf) gæ‰Á¡F nj®Î brŒJ 03.09.2012 m‹W mD¥òkhW nf£L¡bfhŸs¥gL»wh®fŸ. FHªijfS¡fhd Ïytr k‰W« f£lha¡fšé cçik¢r£l« 2009 rh®ªJ gæ‰Á më¡f Ñœ¡f©lthW mªjªj kht£l¤Âš 03.09.2012 xU ehŸ gæ‰Á kht£l¤Âš el¤j¥gl nt©L«.

                        ÏJ bjhl®ghf FHªijfS¡fhd Ïytr k‰W« f£lha¡fšé cçik¢r£l« -2009, khãy muÁ‹ éÂfŸ 2011 bjhl®ghd murhizfŸ k‰W« éÂKiwfŸ bfh©l xU ifnaL (Reference Book) khãy¡fšéæš gæ‰Á ãWtd« _y« jahç¡f¥g£LŸsJ.  mj‹ ÃuÂfŸ x›bthU kht£l¤ bjhl¡f¡fšé mYtyU¡F«  gæ‰Áæš g§nf‰F« v©â¡if¡F V‰g ò¤jf ifnaLfŸ    Ãç©£ brŒJ Ï›tYtyf« _y« kht£l¤Â‰F mD¥Ã it¡f¥gL«.

kht£l¡ fU¤jhs® gæ‰Á   - 03.09.2012
gæ‰Á neu«                             - fhiy 9.30 Kjš khiy 5.00 tiu
gæ‰Á ika«                           - mªjªj kht£l¤Âš nj®Î  brŒa¥g£l xU ikakhd 
                                                      gŸëæš eilbgW«

                        Ï¥gæ‰Á mid¤J kht£l§fëY« 03.09.2012 m‹W fhiy 9.30 Kjš kiy 5.00 kâ tiu eilbgW«.    khãy fšéæaš MuhŒ¢Á k‰W« gæ‰Á ãWtd Ïa¡Fe®, br‹id-6 mt®fŸ _y« br‹idæš flªj 11.07.2012 k‰W« 31.07.2012 m‹W eilbg‰w gæ‰Áæš bg‰w Kj‹ik¡ fU¤jhs®fŸ 03.09.2012 m‹W  eilbgW«  gæ‰Áæš fU¤jhsuhf¥  (Resource Person)  gâah‰w nt©L«.

                       
Ï¥gæ‰Áæš fyªJ bfhŸS« fU¤jhs®fisÍ«, cjé¤ bjhl¡f¡fšé
mYty®fisÍ« k‰W« gæ‰Áæš fyªJ bfhŸS« jiyik MÁça® k‰W«  MÁça®fisÍ« gâéL¥ò brŒÍ«goÍ«, nk‰fh© gæ‰Áæid Áwªj Kiwæš éÂKiwfS¡F£g£L el¤J«goÍ« mid¤J kht£l¤ bjhl¡f¡fšé mYty®fŸ nf£L¡ bfhŸs¥gL»wh®fŸ.

                        nkY« Ï¥gæ‰Áæš fU¤jhs®fŸ gæ‰Á el¤Jtj‰F VJthf r«gªj¥g£lt®fis gæ‰Á ehs‹W gæ‰Á ika¤Â‰F jtwhJ mD¥Ã it¡FkhW TLjš Kj‹ik¡fšé mYty® (m.f.Ï) kht£l MÁça®  fšé k‰W« gæ‰Á ãWtd Kjšt®fŸ nf£L¡bfhŸs¥gL»wh®fŸ.

                        kht£l¤Âš el¤j¥gL« gæ‰Á ika étu¤ij r«kªj¥g£l kht£l¤ bjhl¡f¡fšé mYty®fshš kht£l MÁça® fšé k‰W« gæ‰Á ãWtd Kjšt®fS¡F jftš bjça¥gL¤j¥glnt©L«.  nkY« gæ‰Áæš g§nf‰F« gæ‰Áahs®fS¡F fhiy , khiy ÏU ntisfëY« nr®¤J  fhà Á‰W©o tif¡F
% 10/-«, neh£ò¡ k‰W« ngdh tif¡F  %.10/-« bryÎ brŒayh«. gæ‰Áæš g§F bgWnth® ò¤jf« tH§f Ãç©£ brŒa %.50/- bryÎ brŒayh«. Ϫj gæ‰Á el¤Â Ko¡f¥g£l étu« F¿¤J  m¿¡if jtwhJ rk®¥Ã¡f kht£l¤ bjhl¡f¡fšé mYty®fŸ nf£L¡bfhŸs¥gL»wh®fŸ.


                                                                                                              bjhl¡f¡fšé Ïa¡Fe®

bgWe®
1. mid¤J kht£l¤ bjhl¡f¡fšé mYty®fŸ
2. mid¤J kht£l MÁça® fšé k‰W« gæ‰Á ãWtd Kjšt®fŸ
3. mid¤J kht£l¡TLjš Kj‹ik¡fšé mYty®fŸ
                                           ( midtU¡F«  fšé Ïa¡ff«)

efš
khãy £l Ïa¡Fe®,
midtU¡F« fšé Ïa¡ff«,
br‹id-6.                                      - jftY¡fhf gâÎl‹ mD¥g¥gL»wJ.

efš
Ïa¡Fe®,
khãy¡fšéæaš MuhŒ¢Á       
gæ‰Á ãWtd Ïa¡ff«,
br‹id-6.                                     -  fåÎl‹ mD¥g¥gL»wJ.

CO-SCHOLASTIC TRAINING FOR TEACHERS

AROUND 1000 TEACHERS HAVE APPLIED FOR 359 DR.RADHAKRISHNAN AWARD


359 சிறந்த ஆசிரியர் விருதுக்கு 1,000 பேர் போட்டி-19-08-2012


சென்னை: முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்., 5ல், சிறந்த ஆசிரியர், 359 பேருக்கு விருது வழங்கப்படுகிறது. இதற்கு, மாநிலம் முழுவதும் இருந்து, 1,000 பேர் போட்டியில் உள்ளனர்.
இம்மாத இறுதியில், பள்ளிக்கல்வி இயக்குனர் தலைமையிலான குழு கூடி, விண்ணப்பங்களை ஆய்வு செய்து, தகுதியான, 359 ஆசிரியரை தேர்வு செய்ய உள்ளது.
ஆசிரியர் பணியில் சேர்ந்து, படிப்படியாக உயர்ந்து, ஜனாதிபதி ஆனவர் ராதாகிருஷ்ணன். அவரின் பிறந்த நாளான செப்.,5ம் தேதி, தேசிய அளவில் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.
மத்திய அரசு விருது
மிகச் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர், தேசிய அளவிலும், அந்தந்த மாநில அளவிலும் தேர்வு செய்யப்பட்டு, மத்திய, மாநில அரசுகள் விருதுகள் வழங்கி கவுரவிக்கின்றன. மத்திய அரசின் விருது, ஒவ்வொரு மாநிலத்திற்கு தகுந்தாற்போல் வழங்கப்படுகின்றன. தமிழகத்திற்கு, 22 விருதுகள் வழங்கப்படுகின்றன. தமிழகத்திற்கான ஆசிரியர் பட்டியலை, ஓரிரு நாளில், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட உள்ளது.
மாநில அரசு விருது
மாநில அரசு சார்பில், 359 ஆசிரியருக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன. மாநிலத்தில், 66 கல்வி மாவட்டங்கள் உள்ளன. பள்ளிக் கல்வித்துறை மற்றும் தொடக்க கல்வித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர், மெட்ரிக் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர், ஆசிரியர் கல்வி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சித் துறையைச் சேர்ந்த பேராசிரியர் என, பல்வேறு துறைகளில் பணிபுரியும் சிறந்த ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, விருது வழங்கப்படும்.
அதன்படி, 2,000த்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள், கல்வி மாவட்டங்களில் பெறப்பட்டதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையிலான குழு, கல்வி மாவட்ட வாரியாக பெறப்பட்ட விண்ணப்பங்களை ஆய்வு செய்து, ஒரு கல்வி மாவட்டத்திற்கு ஆறு விண்ணப்பங்கள் வீதம் தேர்வு செய்து, மாநில அளவில் பள்ளிக் கல்வி இயக்குனர் தலைமையிலான குழுவிற்கு பரிந்துரைத்துள்ளது.
அதன்படி, மாநில குழுவிற்கு, 1,000 விண்ணப்பங்கள் வரை வந்துள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. பள்ளிக்கல்வி இயக்குனர் தேவராஜன் தலைமையிலான குழு, அடுத்த வாரத்தில் சென்னையில் கூடி, தகுதியான, 359 ஆசிரியரை தேர்வு செய்ய உள்ளது. இக்குழுவில், தொடக்கக் கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் உட்பட பலர் இடம் பெற்றுள்ளனர்.
அரசியல்வாதிகளை மொய்க்கும் ஆசிரியர்
சிறந்த நல்ஆசிரியர் விருதுக்கு, பரிந்துரை செய்யுமாறு, மாவட்ட அமைச்சர்கள், உள்ளூர் அரசியல் கட்சி பிரமுகர்கள், அதிகாரிகள் ஆகியோரை ஆசிரியர்கள் மொய்த்து வருகின்றனர். இது குறித்து, பள்ளிக் கல்வி இயக்குனர் தேவராஜனிடம் கேட்டபோது, "சிறந்த ஆசிரியர் தேர்வுக்கு, பல்வேறு தகுதிகள் உள்ளன. வரையறுக்கப்பட்ட தகுதிகள் உள்ளவருக்கு மட்டுமே, ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படும். ஆசிரியர் தேர்வு, நேர்மையான முறையில் நடக்கும்,&'&' என்றார்.
தகுதிகள் என்னென்ன?
பணிமூப்பு, கற்பித்தலில் உள்ள திறமை, சம்பந்தப்பட்ட ஆசிரியரின் பாடத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளில் மாணவ, மாணவியர் பெற்ற தேர்ச்சி சதவீதம், பொதுத்தேர்வில் பெற்ற தேர்ச்சி சதவீதம், தலைமை ஆசிரியராக இருந்தால், பள்ளி வளர்ச்சிக்காகவும், கல்வித்தர மேம்பாட்டிற்காகவும் ஒட்டுமொத்த அளவில், அவரின் செயல்பாடுகள் குறித்த விவரம் ஆய்வு செய்யப்படும்.
மேலும், பெண் கல்வியை ஊக்குவிக்க நடவடிக்கை எடுத்துள்ளனரா, எஸ்.சி.,-எஸ்.டி., பிரிவு மாணவர்கள் கல்வி பெறுவதற்காக சிறப்பு கவனம் எடுத்துக் கொண்டார்களா என்பது உட்பட பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்து, அதற்கேற்ப தகுதியான ஆசிரியர் தேர்வு செய்யப்படுவர்.

Sunday, August 19, 2012

SCHOLARSHIP ISSUED DETAILS ARE COLLECTED


கல்வி உதவித்தொகை விவரங்கள் கணக்கெடுக்கும் பணி-18-08-2012


தேனி: மாணவ, மாணவிகளுக்கு, கல்வி உதவித்தொகை வழங்கப்பட்ட விவரங்கள் கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், துப்புரவு பணியாளர்களின் குழந்தைகளுக்கும், சுகாதாரமற்ற பகுதிகளில் பணியாற்றும், தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும், ஆண்டுதோறும் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக எழுந்த புகாரை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் கடந்த 2011- 2012 ம் ஆண்டிற்கு மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்ட விவரத்தை கணக்கெடுக்க, அரசு உத்தரவிட்டுள்ளது.
இதை தொடர்ந்து, உதவித்தொகை வழங்கப்பட்ட மாணவ, மாணவிகளின் பெயர், படிக்கும் வகுப்பு, அவர்களின் பெற்றோர், தொழில், வழங்கப்பட்ட உதவித்தொகை விவரம், உதவித்தொகை பெற்றதற்கான ஒப்புகை சீட்டு உட்பட அனைத்து விவரங்களும் மாவட்ட நிர்வாகங்கள் மூலம் சேகரிக்கப்பட்டு வருகிறது.

Saturday, August 18, 2012

HAPPY BIRTHDAY TO MR.S.RAJARAJAN SIRKALI

பிறந்தநாள் வாழ்த்துக்கள் .

தமிழ்நாடு  தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சீர்காழி வட்டார கிளையின் எழுச்சிமிகு செயலளார் திரு. எஸ். இராஜராஜன் அவர்கள் குடும்பத்தாரோடு அனைத்து நலன்களும் பெற்று வளமுடன் வாழ 
-- 

நாகப்பட்டினம் மாவட்டக்கிளை வாழ்த்துகிறது 

DINAMALAR NEWS ON NAGAI KOOTTANI RESOLUTION


Friday, August 17, 2012

DINAMANI NEWS ABOUT KOOTTANI RESOLUTION



திருச்சி
தலைமை ஆசிரியர்களை அலைக்கழிக்க வேண்டாம்: ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்

First Published : 17 Aug 2012 01:02:15 PM IST


 நாகப்பட்டினம், ஆக. 16: புள்ளிவிவர சேகரிப்புக்காக ஊராட்சி ஒன்றிய பள்ளித் தலைமை ஆசிரியர்களை அலைக்கழிக்க வேண்டாம் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.
 நாகையில் புதன்கிழமை நடைபெற்ற கூட்டணியின் மாவட்டப் பொதுக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
 பள்ளிகளின் மாதாந்திர அறிக்கையிலேயே போதிய புள்ளிவிவரங்கள் அளிக்கப்படும் நிலையில், புள்ளிவிவர சேகரிப்புக்காக அடிக்கடி தலைமை ஆசிரியர்கள் கூட்டம் நடத்துவதைத் தவிர்க்க வேண்டும். இதனால், ஏற்படும் அலைக்கழிப்பு மற்றும் மாணவர்களின் கல்வி பாதிப்பை கருத்தில் கொண்டு, மாதத்துக்கு ஒரு கூட்டம் என வரையறுக்க வேண்டும்.
 நாகை மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மைக் கல்வி அலுவலர், பள்ளி ஆய்வு மற்றும் பயிற்சிகளின் போது ஆசிரியர்களை கண்ணியமாக நடத்த வேண்டும்.
 ஒன்றிய உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்களில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். பொது மாறுதல் கலந்தாய்வுக்குப் பின்னர், விதிகளுக்குப் புறம்பாக நடைபெறும் ஆசிரியர் பணியிட மாறுதல்களை தமிழக அரசு தடை செய்ய வேண்டும்.
 கூட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் ப. முருகபாஸ்கரன் தலைமை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர் ரா. முத்துக்கிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் மு. லெட்சுமிநாராயணன், துணைத் தலைவர்கள் சொ. மணிமாறன், வெ. ஜெயந்தி, துணைச் செயலாளர்கள் ரா. நீலா புவனேஸ்வரி, மா. சித்தார்த்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்