SAY NO TO PPP, TET ,CPS

நிதி வழங்குக

GREAT SALUTE TO OUR ESWARANJI

Todays Educational News

கல்வி செய்தி

முக்கிய செய்திகள் – Google செய்திகள்

BBCTamil.com | இந்தியா

FLASH NEWS

முக்கிய செய்திகள்



FIGHT UNTILL YOU WIN YOUR DEMANDS

மேலும் கல்வி செய்திகள்

Tamilnadu Teachers friendly blog

தினகரன் கல்வி செய்திகள்

தமிழ் முரசு செய்திகள்

தினகரன் முக்கிய செய்திகள் --

TEACHER TamilNadu

தமிழ் முரசு முக்கிய செய்திகள்

Dinamani

Daily Thanthi

கல்வி அஞ்சல்

புதிய தலைமுறை தொலைக்காட்சி

Saturday, August 25, 2012

STUDENT PUNISHED BY HIS FATHER IN SCHOOL CAMPUS


சிறுவனை கயிறு கட்டி இழுத்து வந்த "பாசக்கார' தந்தை: பள்ளி வளாகத்தில் மரத்தில் கட்டி வைத்து தண்டனை

பாப்பிரெட்டிப்பட்டி:மொரப்பூர் அருகே, பள்ளிக்குச் சரியாகச் செல்லாத சிறுவனை, அவன் தந்தையே, கயிறு கட்டி இழுத்து வந்து, பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தில் கட்டி வைத்து, தண்டனை வழங்கினார். இச்சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில், மொரப்பூர் யூனியன், நடூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி, முருகன்,40; மனைவி வனிதா. இவர்களுக்கு, தனலட்சுமி,15, விஜயகுமார்,14, விநாயகம்,9, (பெயர் மாற்றப்பட்டுள்ளது), பவித்ரா,7, ஆகிய நான்கு குழந்தைகள் உள்ளனர்.தனலட்சுமி, விஜயகுமார் ஆகிய இருவரும், ஒன்பதாம் வகுப்புப் படித்து வருகின்றனர். விநாயகம், தாளநத்தம் அரசு நடுநிலைப் பள்ளியில், நான்காம் வகுப்புப் படிக்கிறார். பவித்ரா, அதே பள்ளியில், இரண்டாம் வகுப்புப் படிக்கிறார்.முருகன், பெங்களூரிலும், வனிதா, கோவையிலும் வேலை செய்கின்றனர்; மாதம் ஒரு முறை, குழந்தைகளை பார்த்து செல்வதோடு, சமையலுக்குத் தேவையான மளிகைப் பொருட்களை வாங்கிக் கொடுத்துச் செல்வர்.தனலட்சுமி, சமையல் மற்றும் வீட்டு வேலைகளை செய்து, தம்பி மற்றும் தங்கைகளை கவனித்து, பள்ளிக்கு அனுப்புகிறார்.

விநாயகம், ஒரு மாதமாகப் பள்ளிக்குச் செல்லாமல் ஏமாற்றி வந்தான். பள்ளி தலைமையாசிரியர் அசோகன் அழைத்த போதும், பள்ளிக்குச் செல்லாமல் போக்குக் காட்டினான். ஆசிரியர்கள், பெங்களூரில் உள்ள பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். முருகனும், வனிதாவும், 18ம் தேதி நடூர் வந்தனர். இரு நாட்களுக்கு, வனிதா, விநாயகத்தை பள்ளியில் விட்டுச் சென்றார்.விநாயகம் பள்ளியில் இருந்து வெளியேறி, விளையாடி விட்டு, பள்ளி முடிந்த பின், வீட்டுக்குச் சென்றான். இதை கண்காணித்த முருகன், நேற்று காலை, விநாயகத்தை அடித்து, அவன் கையில் கயிறு கட்டி, பள்ளிக்கு இழுத்து வந்தார்.அரை கி.மீ., தூரத்துக்கு இழுத்து வந்து, பள்ளியில் உள்ள மரத்தில் கட்டினார். சக மாணவர்கள், இந்தச் செயலைப் பார்த்து, வேதனை பட்டாலும், சிரித்தனர்; விநாயகம், பீதியில் உறைந்து போனான். உடற்கல்வி ஆசிரியர் மலையப்பன், மாணவனை மீட்டு, வகுப்பறைக்கு அனுப்பி வைத்தார்.

No comments: