எலக்ட்ரானிக் மீடியாக்களின் பயன்பாடால் ஆசிரியர் நினைவுத்திறன் பாதிக்கிறது: துணைவேந்தர்பிப்ரவரி 08,2015,10:22 IST
காரைக்குடி: "எல்.சி.டி.,புரொஜக்டர் உள்ளிட்ட எலக்ட்ரானிக் மீடியாக்கள் மூலம் கற்பிப்பதால், ஆசிரியர்களின் நினைவு திறன் குறைந்து வருகிறது" என தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை., துணைவேந்தர் விஸ்வநாதன் கூறினார்.
காரைக்குடி ராஜராஜன் இன்ஜி., கல்லுாரியில் உலக தமிழ் பண்பாட்டு இயக்கம், மலேசிய தமிழ் மணி மன்றம், ஆயுத எழுத்து பன்னாட்டு தமிழியல் ஆய்விதழ் இயக்கம் சார்பில், மொழிப்பாடம் கற்றல், கற்பித்தலில் தற்கால போக்குகள் குறித்த கருத்தரங்கம் நடந்தது.
இதில் அவர் பேசியதாவது: சைகை வடிவமாக இருந்த மொழி, சித்திரம், எழுத்து, என வளர்ச்சி பெற்றது. மனிதனின் கலாசாரத்தை பிரதிபலிப்பது மொழி. புறா மூலம் அனுப்பப்பட்ட செய்தி பரிமாற்றம், இன்று பல்வேறு பரிணாமத்தை எட்டியுள்ளது. எலக்ட்ரானிக் மீடியா நம்மை ஆக்கிரமித்து விட்டது.
இவற்றை கற்றல், கற்பித்தல் பணிக்கு எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை நாம் கற்று கொள்ள வேண்டும். கரும்பலகையில் எழுதும்போது சரியான உச்சரிப்பு இருந்தது. கருத்தரங்குகளில் புரொஜக்டர் மூலம் கற்பிக்கப்படுகிறது. கரன்ட் கட் ஆனால், கற்பித்தலும் கட்டாகி விடுகிறது.
எலக்ட்ரானிக் மீடியாக்களால், நினைவு திறன் குறைந்துள்ளது. ஸ்பெல் செக் வந்த பிறகு தமிழை தவறின்றி எழுத முடியவில்லை. ஆசிரியர் இன்றி, மதிப்பு கல்வியை பெற முடியாது. ஆசிரியர் ஒருவரை எந்த எலக்ட்ரானிக் சாதனமும் வீழ்த்தி விட முடியாது. மொபைல் போனின் பயன்பாடு, கணினி பயன்பாட்டை குறைத்து விட்டது.
மொபைல் போனில் உள்ள நல்ல விஷயங்களை நாம் தள்ளி வைத்து, தேவையில்லாததை கற்று கொள்கிறோம். பேஸ்புக், வாட்ஸ் அப் போன்றவை, கற்பித்தல் பணியை எளிதாக்க கொண்டு வரப்பட்டவை. நம் வேலையை மிச்சப்படுத்துவதற்கு அல்ல. கருவிகள் நமக்கு உதவியாக இருக்க வேண்டும். அதற்கு நாம் அடிமையாகக்கூடாது, என்றார்.
No comments:
Post a Comment