Pages

Sunday, August 25, 2013

சிகரத்தை நோக்கி...

சிகரத்தை நோக்கி...

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி என்ற பேரியக்கமானது தன் வரலாற்றுச் சுவடுகளை காலக்கோடுகளில் பதித்த இயக்கம்.

1946 ல் பெல்லாரியில் தென்னிந்திய ஆசிரியர் சங்கத்தால் நடத்தப்பட்ட மாநாட்டில் கல்லூரி பேராசிரியர்கள்,மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் ஆகியவர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, நடத்தப்பட்ட நிலையில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் புறந்தள்ளப்படுகிறார்கள் என்பதை எண்ணிய மாஸ்டர்வா.இராமுண்ணி அவர்கள், அம் மாநாட்டுப் பந்தலிலேயே தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கென தனியான இயக்கம் வேண்டும் என தீர்மானிக்கப்பட்டு,அன்று தொடங்கப்பட்டது தான் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.

1947 ல் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் ஊதிய உயர்வுக்காக மிதிவண்டியில் சென்று போராடி பெற்று தந்தவர்கள் ,1956-ல் பென்சன்,கிராஜீவிட்டி,மற்றும் பணி நீடிப்பு –என நாம்இன்று அனுபவிக்கும் ஒவ்வொரு சலுகையுமே போராடி தான் பெற்றுள்ளார்கள்.

போராட்டம் இல்லாத வாழ்க்கை ருசிக்காது,
போராட்ட களமே காணாத இயக்கம் நிலைக்காது.

நமக்காக போராடிய , கொடி ஏந்திய கைகள் பல. அவர்களின் கைகள் இன்றும் ஓயவில்லை.அவர்களின் மனதில் இயக்க அலை இன்னும் அடங்க வில்லை.

ஓட்டப்பந்தயத்தில் ஓடுபவன் பக்கத்தில் ஓடுபவனை பார்த்துக் கொண்டு இருந்தால் வெற்றி பெற முடியாது.அது போல விமர்சனங்களுக்கு பதில் சொல்லிக் கொண்டு இருந்தால் நாம் இயக்கத்திற்காக உழைக்க வேண்டிய நேரங்கள் தான் வீணடிக்கப்படுகின்றன.

நமக்கு தேரோட்டுபவன் கண்ணன். சல்லியன் அல்ல என்பதை நாம் முதலில் நினைவில் கொள்ள வேண்டும். படி, படியாக வளர்ந்து சிகரத்தின் உச்சிக்கு சென்ற பிறகு, சிகரத்தை தொடும் தூரத்தை மட்டும் பார்த்தால் போதும்.

காய்ச்ச மரம் தான் கல்லடி படும் என்பார்கள்.அதற்காக மரம் என்ன காய்க்காமலா நின்று விடும்.அவர்கள் விமர்சனங்ளே நம் இயக்கத்தின்உயர்வுக்கு, இலட்சியத்துக்கும் அடிக்கோலாய் அமையும்.

துரு பிடித்த இதயங்களை தூக்கி போட்டு,உயர்ந்த இலட்சியங்களை கொண்டே, இயக்கம் சொல்லும் பாதையிலே இணைந்திடுவோம். 

சிறை நிரப்பியே சிகரத்தை தொட்டு விடுவோம்.

சி.பிரபா. தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, நாகப்பட்டின

No comments:

Post a Comment