Pages

Saturday, August 17, 2013

தர்மபுரியில் 144 உத்தரவு இருக்கும் நிலையில் கூட்டம்: ஆசிரியர் கூட்டணி மீது வழக்கு

தர்மபுரியில் 144 உத்தரவு இருக்கும் நிலையில் கூட்டம்:
ஆசிரியர் கூட்டணி மீது வழக்கு
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், சென்னையில் நடக்க உள்ள மாநாடு தொடர்பாக தருமபுரி செங்குந்தர் திருமண மண்டபத்தில் இன்று கூட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அகில இந்திய பொதுச் செயலாளர் எஸ்.ஈஸ்வரன், பொ காமராஜ், பொது செயலர் ந.ரங்கராஜ்,  மாநில பொருளாளர் ஜோசப் சேவியர் மாவட்டத் தலைவர் கே.சுப்பிர மணியன் உள்ளிட்ட 500 பேர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.
தருமபுரியில் 144 தடை உத்தரவு இருக்கும் நிலையில் அனுமதியின்றி கூட்டம் நடத்தியதாக 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment