SAY NO TO PPP, TET ,CPS

நிதி வழங்குக

GREAT SALUTE TO OUR ESWARANJI

FLASH NEWS

முக்கிய செய்திகள்



FIGHT UNTILL YOU WIN YOUR DEMANDS

தமிழ் முரசு செய்திகள்

Error loading feed.

தமிழ் முரசு முக்கிய செய்திகள்

Error loading feed.

Daily Thanthi

Error loading feed.

புதிய தலைமுறை தொலைக்காட்சி

    Friday, May 31, 2013

    BALAJI KEY PERSON FOR CHENNAI DISTRICT S.S.L.C. RESULTS

    சென்னை தேர்ச்சி விகிதம் 94.61%... வெற்றியின் பின்னணியில் சிறப்புப் பயிற்றுனர் பாலாஜி!
    Posted Date : 16:05 (31/05/2013)Last updated : 16:05 (31/05/2013)
    பத்தாம் வகுப்புத் தேர்வில் வியத்தகு சாதனைகளில் ஒன்றாக, சென்னை வருவாய் மாவட்டம் 94.61 சதவீத தேர்ச்சி விகிதத்தைப் பெற்றுள்ளது. 

    அதுமட்டுமல்ல... சென்னைப் பள்ளிகளில் ஒன்றிரெண்டு பள்ளிகளே நூறு சதவீத தேர்ச்சி பெறுவது அசாதாரணம் என்ற நிலையில், இப்போது 15 பள்ளிகள் சென்டம் சாதித்திருப்பதும் புதிய வரலாறு.

    கடந்த 20 ஆண்டுகால பள்ளிக் கல்வி வரலாற்றில் இது குறிப்பிடத்தக்க சாதனையாகக் கருதப்படுகிறது, இதன் பின்னணியில் சென்னை மேயர் சைதை துரைசாமியும், சிறப்புப் பயிற்றுனர் எஸ்.பாலாஜியும் இருந்திருக்கிறார். 

    மதுரையில் தாசில்தாராக இருந்த பாலாஜி, கடந்த 20 ஆண்டுகளாக கல்விச்சேவையாற்றி வருகிறார். ஏழைக் குழந்தைகளுக்காக கல்வி அமைப்புகள் மூலம் நல்ல கல்வியைப் பெற வழிவகுத்துள்ளார். அவரது உறுதுணையுடன் கல்வி பெற்ற ஆயிரக்கணக்கான ஏழை மாணவர்கள் இன்று நல்ல நிலையில் உள்ளனர். 

    தாசில்தார் பாலாஜி பற்றி கேட்டறிந்த சென்னை மேயர் சைதை துரைசாமி, அவரை சென்னைக்கு அழைத்துவரும் முயற்சியில் இறங்கினார். பாலாஜியை ஓர் ஆண்டு ஆன் டெபுட்டேஷனில் சென்னையில் சிறப்புப் பயிற்றுனராக நியமிக்க நடவடிக்கை எடுத்தார். 

    கடந்த ஆண்டு ஜூலையில் சிறப்புப் பயிற்றுனராகப் பொறுப்பேற்ற தாசில்தார் பாலாஜி, சென்னையில் உள்ள அனைத்து மாநகராட்சிப் பள்ளிகளிலும் கற்பித்தலில் அதிரடி மாற்றங்களையும், புதிய உத்திகளையும் கொண்டுவந்தார். 

    அதன்படி, அரசு மாநகாரட்சிப் பள்ளிகளில் கற்றல் திறன் மிகுந்த 10-ம் வகுப்பு மாணவர்களுக்கும், மெதுவாகக் கற்கும் மாணவர்களுக்கும் தனித்தனியாக சிறப்பு வகுப்புகள் எடுக்கப்பட்டன. 

    அரசு அளித்த ஒரு காரை எடுத்துக்கொண்டு காலை 7 மணிக்கு கெஸ்ட் ஹவுஸில் இருந்து புறப்படும் பாலாஜி, அனைத்துப் பள்ளிகளுக்கும் சென்று மாலை 6 மணிக்குத் திரும்புவார். தினமும் சில பள்ளிகளில் தானே சிறப்பு வகுப்புகளை நடத்துவார். ஆசிரியர்களுக்கு கற்பித்தல் உத்திகளைச் சொல்லித் தருவதுடன், அவர்களைப் பின்னால் அமரவைத்துவிட்டு, தானே பாடங்களை நடத்தி, எப்படி நடத்த வேண்டும் என்பதை நேரடியாகச் சொல்லித் தருவார். 

    மெதுவாகக் கற்கும் மாணவர்களுக்காக 15 பக்கங்கள் கொண்ட கையேடு ஒன்றை இவர் உருவாக்கினார். அதுவே மாணவர்களின் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது. 

    மாநகராட்சிப் பள்ளி மட்டுமின்றி, தனியார் பள்ளிகளும் பாலாஜி உருவாக்கியக்  கையேட்டை மாணவர்கள் பயன்படுத்த வைத்ததால், அவர்களாலும் நல்ல ரிசல்ட் கொடுக்க முடிந்திருக்கிறது. 

    தற்போது மீண்டும் மதுரையில் பணியைத் தொடர்ந்துள்ள பாலாஜியிடம், சென்னைப் பள்ளிகளின் இந்தச் சாதனையில் அங்கம் வகித்தது குறித்து கேட்டபோது, "சென்னையில் ஓராண்டு காலம் சிறப்புப் பயிற்றுனாராகச் சிறப்பாக செயல்பட்டதற்கு சென்னை மேயரின் ஊக்கமும் ஆதரவும் மிக முக்கியக் காரணம்.   

    சமச்சீர் கல்வி தொடங்கி ஓராண்டுதான் ஆனதால், சிறப்பு புக்லெட் ஒன்றை மாணவர்களுக்காக உருவாக்கினேன். ஓராண்டுக்கான கேள்வித் தாள்கள் மட்டுமே கொண்டு கையேடு உருவாக்க முடியாது. எனவே, அனைத்துப் பாடங்களையும் முழுமையாக உள்வாங்கி, முக்கியக் கேள்விகளையும், அதற்கு எளிதாக விடையளிக்கும் வழிமுறைகளையும் சேர்த்தேன். அதனை சென்னைப் பள்ளிகளின் மாணவர்கள் பயன்படுத்தினர். அதுவே, தேர்வில் அதிக மதிப்பெண்களுடன் வெற்றி பெற துணைபுரிந்தது. 

    சென்னை மாணவர்களின் ஆர்வம் என்னை வியக்கவைத்தது. சனி, ஞாயிறுகளில் என் கெஸ்ட் ஹவுஸுக்கே பலர் வந்துவிடுவார்கள். சிறப்பு வகுப்புகளுக்குத் தவறாமல் கலந்துகொள்வார்கள். ஆசிரியர்களும் நல்ல ஒத்துழைப்புத் தந்தனர். இந்தக் கூட்டு முயற்சியால்தான் இத்தகைய வெற்றி சாத்தியமானது. 

    சென்னை மாணவர்கள் பலரும் திணரும் கணிதம், ஆங்கிலம் பாடங்களில் சிறப்பு கவனம் செலுத்தினேன். ஆங்கிலத்துக்கு 7 மணி நேரம் பேசி, ஒரு சிடியை உருவாக்கினேன். அதை அனைத்துப் பள்ளிகளுக்கு மேயர் கொண்டு சேர்த்தார். அதன்மூலம் ஆசிரியர்கள் எளிய முறையில் பாடங்களை நடத்தி, மாணவர்கள் புரிந்து படிப்பதற்கு உதவியாக இருந்தது. 

    ஒரு நிகழ்ச்சியில் சென்னைப் பள்ளி மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர். அதில், என்னைப் பற்றி ஃபீட்பேக் தெரிந்துகொள்வதற்காக, மாணவர்களைக் கருத்துகூறச் சொன்னார் மேயர். அப்போது, பல மாணவர்கள் எழுந்து உற்சாகமாகப் பேசத் தொடங்கினர். நம் மாணவர்கள் அப்படி பேசுவார்கள் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. அவருக்கு பயங்கர ஆச்சரியம். அதில் ஒரு ஸ்டூடன்ட் ஸ்டேட் லெவல் மார்க் எடுப்பேன் என்று சொன்னார். அந்த மாணவர் இப்போது 491 மதிப்பெண்கள் பெற்றுள்ளார் என்ற செய்தி கேட்டபோது, என் பணியியில் நிறைவு அடைகிறேன்" என்று நெகிழ்ச்சியுடன் சொன்னார் பாலாஜி.

    No comments: