நாகப்பட்டினம்: வேளாங்கண்ணியில் பள்ளி நிர்வாகம் மாணவனை கண்டித்து, பெற்றோரை அழைத்து வரக்கூறியதால் பள்ளியில் இருந்து வெளியேறிய மாணவன், குளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்த Œம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகை அடுத்த வேளாங்கண்ணியில், செயின்ட் ஆரோக்கிய அன்னை மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 750 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் கலிலுல் ரகுமான் என்பவரது மகன் சலிம், கடந்த 5ம் தேதியில் இருந்து 7ம் தேதி வரை பள்ளிக்கு வரவில்லை. நேற்று காலை பள்ளிக்கு வந்த சலீமை, பெற்றோருடன் வந்தால் தான் வகுப்பிற்கு செல்ல முடியும் என்று பள்ளி நிர்வாகத்தினர் கண்டிப்பாக கூறி வெளியேற்றியுள்ளனர். பள்ளியில் இருந்து வெளியேறிய மாணவன், சற்று நேரத்தில் மாந்தோப்பு என்ற இடத்தில் உள்ள குளத்தில் பிணமாக மிதந்து கிடந்தார். அவரது நண்பர்கள் சிலர் இது குறித்து மாணவனது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். ஆத்திரமடைந்த சலீம் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பள்ளியின் வரவேற்பு அறையை அடித்து உடைத்து, சாலை மறியலில் ஈடுபட்டனர். வேளாங்கண்ணி போலீஸ் இன்ஸ்பெக்டர் சச்சிதானந்தம், மறியலில் ஈடுபட்டவர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. மாணவரது தாத்தா மஜித் அளித்த புகாரின் படி வேளாங்கண்ணி போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Todays Educational News
கல்வி செய்தி
முக்கிய செய்திகள் – Google செய்திகள்
BBCTamil.com | இந்தியா
FLASH NEWS
விகடன்-தினத்தந்தி கல்வி செய்திகள்
முக்கிய செய்திகள்
மேலும் கல்வி செய்திகள்
Tamilnadu Teachers friendly blog
தினகரன் கல்வி செய்திகள்
தமிழ் முரசு செய்திகள்
தினகரன் முக்கிய செய்திகள் --
TEACHER TamilNadu
தமிழ் முரசு முக்கிய செய்திகள்
Dinamani
Daily Thanthi
கல்வி அஞ்சல்
புதிய தலைமுறை தொலைக்காட்சி
Friday, November 09, 2012
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment