SAY NO TO PPP, TET ,CPS

நிதி வழங்குக

GREAT SALUTE TO OUR ESWARANJI

Todays Educational News

கல்வி செய்தி

முக்கிய செய்திகள் – Google செய்திகள்

BBCTamil.com | இந்தியா

FLASH NEWS

முக்கிய செய்திகள்



FIGHT UNTILL YOU WIN YOUR DEMANDS

மேலும் கல்வி செய்திகள்

Tamilnadu Teachers friendly blog

தினகரன் கல்வி செய்திகள்

தமிழ் முரசு செய்திகள்

தினகரன் முக்கிய செய்திகள் --

TEACHER TamilNadu

தமிழ் முரசு முக்கிய செய்திகள்

Dinamani

Daily Thanthi

கல்வி அஞ்சல்

புதிய தலைமுறை தொலைக்காட்சி

Saturday, November 10, 2012

NO FUND ALLOTTED FOR SSA GROUP VISITING SCHOOLS


நிதிஒதுக்கீடு இல்லை: அனைவருக்கும் கல்வி திட்ட மேற்பார்வையாளர் அவதி-09-11-2012


அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ், ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரை, கல்வியின் தரம், பள்ளியில் வசதி மேம்படுத்துதல், புதிய கல்வி முறை, ஆசிரியர்களுக்கு பயிற்சி உள்ளிட்ட செயல்திட்டங்கள் அமல்படுத்தப்படுகிறது. இவற்றை பார்வையிட, அவ்வப்போது மாநில அளவில் மற்றும் மத்திய மனிதவளத் துறையில் இருந்து ஆய்வு செய்யவும், பள்ளிகளை பார்வையிடவும், பல்வேறு குழுக்கள் வருகை தருகின்றன.சேலம்: அனைவருக்கும் கல்வி திட்டத்தில், பள்ளிகளுக்கு, விசிட் வரும் குழுக்களுக்கான செலவுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாததால், மேற்பார்வையாளர்கள் மாதந்தோறும், 3,000 ரூபாய் வரை சொந்தப் பணத்தை செலவு செய்ய வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.

சேலம் மாவட்டத்தில், 21 வட்டார வளமையங்கள் அமைந்துள்ளன. இவற்றில் மேற்பார்வையாளர்களாக உள்ளவர்களிடமே, இக்குழுவினை அழைத்து செல்லும் செலவுகளை, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஒப்படைத்து விடுவதால், மேற்பார்வையாளர்கள் தங்களது சொந்தப் பணத்தை செலவு செய்ய வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.
இதுகுறித்து சேலம் மாவட்ட வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் சிலர் கூறியதாவது: கடந்த மாதத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் மாலதி தலைமையிலான ஆய்வுக்கு, அனைத்து வட்டார வளமையங்களிலும் ஆய்வு நடத்தியது.
நான்கு பேர் வரை அதிலும், பெண்களும் இருப்பதால், கார் மூலமாகவே பள்ளிக்கு அழைத்து செல்ல வேண்டியுள்ளது. மேலும் அவர்களுக்கு மதிய உணவு உள்ளிட்ட செலவுகளையும் சேர்த்து, 2,000 முதல், 3,000 ரூபாய் வரை செலவானது. இதில் திட்ட நிதியிலும் எவ்வித ஒதுக்கீடும் செய்யப்படவில்லை. இதை செய்ய வேண்டிய மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களோ, தங்களுக்கு சம்பந்தம் இல்லை என, ஒதுங்கி கொள்கின்றனர்.
இதனால் கடந்த மாதமே, சொந்த பணத்தை செலவு செய்தோம். தற்போது அன்னை தெரஸா பல்கலையில் இருந்து, ஆய்வுக்குழு அனைத்து வட்டார வளமையங்களிலும் ஆய்வு நடத்தி வருகிறது. இதன் செலவையும் வழக்கம் போல, மேற்பார்வையாளர்களிடமே ஒப்படைத்துள்ளனர்.
இதனால் ஒவ்வொரு மாதமும், 3,000 ரூபாய் வரை மேற்பார்வையாளர்கள் தங்களது சொந்தப்பணத்தில் இருந்து செலவு செய்ய வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments: