மாணவரே இல்லாத அரசு பள்ளி தலைமை ஆசிரியர் இடைநீக்கம்-11-11-2012
சேலம் மாவட்டம், ஆத்தூர் நகராட்சி, வடக்கு காடு சக்தி நகர் பகுதியில், 1966ம் ஆண்டு முதல், நகராட்சி தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை, படிக்கும் மாணவர்களுக்கு ஒரு தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் என, இரண்டு ஆசிரியர்கள் பணிபுரிந்து வந்தனர்.ஆத்தூர்: மாணவர்களே இல்லாமல் இயங்கி வந்த, நகராட்சி தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியரை, மாவட்ட கல்வி அலுவலர், பணி இடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இதில், ஆசிரியர் ஒருவர், வேறு பள்ளிக்கு பணி மாறுதலில் சென்று விட்டார். தலைமை ஆசிரியர் சாந்தி, காலை, 11:00 மணிக்கு மேல் பள்ளிக்கு வந்ததால், மாணவர்களது பெற்றோர், தொடக்கப் பள்ளிக்கு அனுப்புவதை தவிர்த்து, தனியார் பள்ளியில், மாணவர்களை சேர்த்தனர்.
தற்போது, ஒரு மாணவர் கூட இல்லாத நிலையில், தலைமை ஆசிரியர் சாந்தி, நான்கு மாதங்களுக்கு மேல், 12 முதல், 16 மாணவர்கள் வருவதாக, "போலியாக&' வருகை பதிவேட்டில் குறிப்பிட்டு வந்துள்ளார். தவிர, "வராத&' மாணவர்களுக்கும் சேர்த்து, சத்துணவு மையத்தில், சமையல் செய்து, கணக்கு காட்டி வந்தனர்.
இதுகுறித்து, "தினமலர்&' இதழில், படத்துடன் விரிவான செய்தி வெளியானது. அதையடுத்து, தமிழக தொடக்க கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவுப்படி, சேலம் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மனோகரன், ஆத்தூர் உதவி தொடக்க கல்வி அலுவலர் சுப்ரமணி ஆகியோர், நகராட்சி தொடக்கப் பள்ளியில் ஆய்வு செய்தனர்.
அப்போது, ஒரு மாணவர் கூட இல்லாத நிலையில், பள்ளி செயல்பட்டு வந்ததாகக் கணக்கு காட்டி வந்ததை கண்டு, அதிர்ச்சியடைந்தனர். அதன்பின், முல்லைவாடி தொடக்கப் பள்ளி ஆசிரியர் மாதவனை, இப்பள்ளி ஆசிரியராக நியமனம் செய்து, மாணவர் சேர்க்கைக்கு நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டனர்.
நேற்று, வடக்கு காடு, நகராட்சி தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தியை, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மனோகரன், "சஸ்பெண்ட்&' செய்து, உத்தரவிட்டார். வராத மாணவர்களுக்கு, சமையல் செய்து கொடுத்த, சத்துணவு அமைப்பாளர், சமையலர் ஆகியோர் மீது, நடவடிக்கை எடுக்கும்படி, மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment