ஆரம்ப பள்ளிகளில் பழைய முறையிலேயே பாடங்கள்-06-10-2012
சென்னை: ஆரம்ப பள்ளிகளில் "செயல்வழி" கற்றல் முறைக்கு குட்பை சொல்லி, பழைய முறையில் பாடங்கள் நடத்தி வருகின்றனர்.
செயல்வழி கற்றல் அட்டைகள் வழங்காததால், இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பல்வேறு புதிய முறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அனைவருக்கும் கல்வி, இடைநிற்றல் கல்வி, செயல்வழி கற்றல், தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு என பல முறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக பழைய முறையை தவிர்த்து, ஒவ்வொரு மாணவ, மாணவியரும் திறமைக்கேற்ப, எளிதாக புரிந்து படிக்கும் முறையில் மாற்றியமைக்கப்பட்டது. முதல் ஐந்து வகுப்புகளுக்கு செயல்வழி கற்றல் முறை அறிமுகம் செய்யப்பட்டது. ஒவ்வொரு வகுப்பிற்கும் செயல்வழி கற்றல் அட்டைகள் வழங்கப்பட்டன.
மாணவ மாணவிகள், அட்டைகளை எடுத்து படித்துக் கொள்ளலாம். அவரவர் திறமைக்கேற்றவாறு, முடிந்த அளவு படிக்கலாம். நான்கு மாதங்களாக செயல்வி கற்றல் அட்டைகள் பள்ளிகளுக்கு வழங்கப்படவில்லை. இதனால், ஆரம்ப பள்ளிகளில் செயல்வழிகற்றல் முறையில் பாடங்கள் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மாறாக, பழைய முறையில் மீண்டும் வாசித்தல், கரும்பலகையில் எழுதி படித்தல், மனப்பாடம் செய்தல் முறைகள் பின்பற்றப்படுகின்றன.
No comments:
Post a Comment