பள்ளி கட்டிட கான்ட்ராக்டா.. தலைதெறிக்க ஓடும் ஒப்பந்ததாரர்கள்
‘பள்ளி குழந்தைகள் விபத்தில் பலியான சம்பவம் ஏற்படுத்திய அதிர்ச்சியின் எதிரொலியா பள்ளியோட அடிப்படை கட்டமைப்பு வசதி மற்றும் வாகன பராமரிப்பு பற்றியும் வாரா வாரம் ஆய்வு செய்யறதுக்காக அம்மாக்கள் கொண்ட குழு அமைக்க அரசு ஆணை பிறப்பிச்சிருக்கு. இந்த குழு கண்டிப்பான குழுவா அமைச்சு கண்காணிச்சா எதிர்காலத்துல இதுபோன்ற உயிரிழப்புகள தடுக்க வாய்ப்பிருக்கு...’ விக்கிரமாதித்தன் தோளிலிருந்த வேதாளம் பேச்சை தொடங்கியது. ‘இதே ஆணைல பள்ளிகளுக்கு விதிச்சிருக்கற மத்த நடைமுறைகளயும் கடைபிடிச்சா பிள்ளைகள அனுப்பும் பெற்றோர்களுக்கு கொஞ்சம் ஆறுதல் கெடக்கும்.
‘மலைகோட்டை கோயில் இருக்கற ஊர்ல கார்ப்பரேஷன் பள்ளி பலவற்றுக்கு போதிய கட்டிட வசதியில்லாம இருக்காம். இதால மாணவர் சேர்க்கை மந்தமாவே இருக்காம். மாநகராட்சில நிதி நெறய இருந்தும் பள்ளிகளுக்கு செலவு செய்யப்படாம இருக்காம். பள்ளி கட்டிடம் கட்டுனா போதிய லாபம் கெடக்காதாம். கவுன்ஸு தொடங்கி வட்டம் வரை கட்டிங் கொடுக்கணும், கட்டிங் போக மீதமிருக்கும் பணத்துல கட்டிடம் கட்டினா தரமா இருக்காது. பிற்காலத்துல இடிஞ்சு விழுந்தா ரிஸ்க்னு பள்ளி கட்டி கான்ட்ராக்ட்னாலே தலை தெறிக்க ஒப்பந்தக்காரங்க ஓடுறாங்களாம்... ரோடு வேலன்னா மட்டும் போட்டி போட்றாங்களாம். ரோடு வேலைக்கு ஏன் இவ்ளோ போட்டின்னு இந்த மழை காலத்துல பல ரோடுங்க பல்லை காட்டுறதே பாத்தாலே புரிஞ்சிடும்... ஒன்றிய உதவி தொடக்க கல்வி அலுவலருங்க செய்யற அக்க போரை பத்தி பிறகு சொல்றேன்...’ என்றபடி பறந்தது வேதாளம்.
No comments:
Post a Comment