மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை உயர்த்த நடவடிக்கை
By dn, சென்னை
First Published : 30 October 2012 03:06 PM IST
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று மேயர் சைதை துரைசாமி தெரிவித்தார்.
மாமன்றக் கூட்டத்தில் சென்னை மாநகராட்சியின் ஓராண்டு பணிகளை விளக்கி தயாரிக்கப்பட்ட 120 பக்க புத்தகத்தை மேயர் முழுவதுமாக படித்தார்.
அப்போது மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.
மன்றக் கூட்டத்தில் மேயர் கூறியது:
சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் 6,7,8 ஆகிய வகுப்புகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. இதற்கு ஆங்கில வழிக் கல்வி இல்லாதது ஒரு காரணம். மேலும், பல்வேறு வளர்ச்சிப் பணிகள் காரணமாக பலர் புறநகர் பகுதிகளுக்கு குடிபெயர்ந்து விட்டனர்.
மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அனைத்து மாநகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வியுடன் ஆங்கில வழிக் கல்வியும் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார் மேயர்.
No comments:
Post a Comment