இன்று முதல் காலாண்டு பொதுத் தேர்வுகள் துவக்கம்
First Published : 12 Sep 2012 11:03:34 AM IST
சென்னை, செப்.,12: தமிழகம் முழுவதும் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு ஒரே நடைமுறையில் காலாண்டுத் தேர்வுகள் இன்று முதல் துவங்குகிறது.
காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளில் வழங்கப்படும் கேள்வித்தாளுக்கும், பொதுத்தேர்வில் வழங்கும் கேள்வித்தாளுக்கும் வித்தியாசம் இருப்பதால் பொதுத்தேர்வை எழுதும் நேரத்தில் மாணவர்கள் திணறுகின்றனர். எனவே மாணவர்களின் நலன் குறித்து பொதுத்தேர்வு நடத்துவது போலவே காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகள் நடத்த, தேர்வுத்துறை ஏற்பாடு செய்துள்ளது.
பத்தாம் வகுப்பு தேர்வுகள் இன்று தொடங்கி செப்.,20ம் தேதி வரையும், பிளஸ் 2 தேர்வுகள் இன்று முதல் செப்.,25ம் தேதி வரையும் நடைபெறுகின்றது.
பொதுத்தேர்வைப் போலவே கேள்வித்தாளை படித்துப் பார்க்கவும், விடைத்தாளில் உள்ள விவரங்களை பூர்த்தி செய்யவும் 15 நிமிடம் வழங்கப்படும். அதன்பின் காலை 10.15க்கு தேர்வு துவங்கும் என தேர்வுத்துறை மண்டல துணை இயக்குனர்கள் கூறியுள்ளனர்
ஒரே நடைமுறை - துவங்கியது காலாண்டு தேர்வு-12-09-2012
சென்னை: கடந்த ஆண்டு வரை, மாவட்ட அளவில் நடந்து வந்த, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகள், இந்த ஆண்டு முதல், மாநில அளவில், ஒரே மாதிரியாக நடத்தப்படுகின்றன. தேர்வுத்துறை தயாரித்து வழங்கியுள்ள கேள்வித்தாள் அடிப்படையில், இன்று முதல், காலாண்டுத் தேர்வுகள் துவங்குகின்றன.
வருவாய் மாவட்ட அளவில் நடக்கும் காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளில் வழங்கப்படும் கேள்வித்தாளுக்கும், பொதுத்தேர்வில், தேர்வுத்துறை வழங்கும் கேள்வித்தாளுக்கும் வித்தியாசம் இருப்பதாகவும், இதனால் பொதுத்தேர்வில் மாணவ, மாணவியர் திணறுவதும், அரசின் கவனத்திற்கு வந்தது. அத்துடன், தேர்வை நடத்தும் முறைகளிலும், தேர்வு அறைகளில் மாணவ, மாணவியர் கடைப்பிடிக்கும் முறைகளிலும், ஒரே சீரான நடைமுறை இல்லாததால், பொதுத்தேர்வில், மாணவர்கள் சிரமப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, காலாண்டு, அரையாண்டுத் தேர்வையும், பொதுத்தேர்வைப் போல், தேர்வுத்துறை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, இரு வகுப்பு மாணவ, மாணவியருக்கும், பாட வாரியாக கேள்வித்தாளை தயாரித்து, அதை, "சிடி"யில் பதிவு செய்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடம், தேர்வுத்துறை ஒப்படைத்தது. அவர்கள், "பிரின்ட்" எடுத்து, பள்ளிகளுக்கு வினியோகம் செய்தனர்.
இதுகுறித்து, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி கூறியதாவது: பொதுத் தேர்வைப் போலவே, கேள்வித்தாளை படித்துப் பார்க்கவும், விடைத்தாளில் உள்ள விவரங்களை பூர்த்தி செய்யவும், 15 நிமிடங்கள் வழங்கப்படும். அதன்பின், காலை, 10:15க்கு, தேர்வு துவங்கும். 10ம் வகுப்பு தேர்வு, 12:45க்கும், பிளஸ் 2 தேர்வு, 1:15க்கும் முடிவடையும். தேர்வுத்துறை மண்டல துணை இயக்குனர்கள், தேர்வுப் பணியை பார்வையிடுவர். இவ்வாறு, வசுந்தரா தேவி கூறினார்.
வினாத்தாள் வழங்குவதில் குளறுபடி காலாண்டு தேர்வுகள் தாமதம்
சென்னை: கேள்வித்தாள் அனுப்புவதில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக சென்னையின் பல்வேறு பள்ளிகளில் காலாண்டு தேர்வுகள் 2 மணி நேரம் தாமதமாக துவங்கின. அரசு தேர்வுகளுக்கு நடப்பாண்டில் ஒன்று முதல் பிளஸ் 2 வரையான வகுப்புகளுக்கு கேள்வித்தாள்களை அரசே அச்சிட்டு வழங்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அரசு தேர்வுத்துறை கேள்வித்தாளுக்கான மாடல் வினாத்தாளை அனுப்பும். அதை பெற்றுக் கொள்ளும் முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேள்வித்தாளை வடிவமைத்து அச்சிட்டு மாணவர்களுக்கு வழங்குவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.
ஆனால் காலாண்டு தேர்வு இன்று காலை 10 மணிக்கு தொடங்கியபோது பல பள்ளிகளுக்கு கேள்வித்தாள் வந்து சேரவில்லை. 10 மற்றும் பிளஸ் 2 தேர்வுகளுக்காக அந்தந்த பள்ளிகளுக்கு ஒரே ஒரு வினாத்தாளை மட்டும் அனுப்பிய தேர்வுத்துறை, மீதமுள்ள மாணவர்களுக்கு ஜெராக்ஸ் பிரதி மூலம் கேள்வித்தாளை கொடுக்க உத்தரவிட்டது. இதனால் ஜெராக்ஸ் மெஷின் உள்ள பள்ளிகளில் உடனுக்குடன் பிரதிகள் எடுக்கப்பட்டு, மாணவர்களுக்கு வழங்கப்பட்டு தேர்வு எழுதினர்.
ஆனால் ஜெராக்ஸ் மெஷின் இல்லாத பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கேள்வித்தாள்களோடு, தனியார் ஜெராக்ஸ் கடைகளுக்கு சென்று ஜெராக்ஸ் பிரதி எடுத்தனர். ஏற்கனவே கடைகளில் கூட்டம் இருந்த நிலையில் தலைமையாசிரியர்களுக்கு உடனுக்குடன் பிரதிகள் கிடைக்கவில்லை. இதனால் தேர்வுகள் தொடங்குவது 2 மணி நேரம் வரை தாமதமானது. 6 முதல் 8 வகுப்புகளுக்கும் இதே நிலைதான் நீடித்தது. மாநிலம் முழுவதும் இதே நிலைதான் இருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment