புதுடில்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியினை 7 சதவீதம் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. டீசல்விலை உயர்வு, சில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டிற்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. மேலும் கடும் பணவீக்க விகிதம் அதிகரித்துள்ள நிலையில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படியினை மத்திய அரசு 7 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இது குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்திருப்பதாவது: கடந்த மார்ச் மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 58 சதவீதம் இருந்ததை 65 சதவீதமாக உயர்த்தி, ஜனவரி 1 2012-ம் ஆண்டில் இருந்து கணக்கிடப்பட்டது.
தற்போது அகவிலைப்படியை மேலும் 7 சதவீதமாக அதிகரித்து 65 ல் இருந்து 72 ஆக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் 50 லட்சத்தி்ற்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்களும், 30 லட்சம் ஓய்வூதியர்களும் என மொத்தம் 80 லட்சம் பேர் பயனடைவர். இது கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் கணக்கீட்டு அதற்கான நிலுவைத்தொகை வழங்கப்படலாம். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
விலைவாசி உயர்வு : மத்திய அரசு ஊழியர்களுக்கு 7% அகவிலைப்படி உயர்வு
First Published : 20 Sep 2012 03:46:13 PM IST
புது தில்லி, செப்., 20 : விலைவாசி உயர்ந்துள்ளதால், மத்திய அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்படும் அகவிலைப்படியை 7% உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. முறைப்படியான அறிவிப்பு நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 65 சதவீதம் அகவிலைப்படியாக வழங்கப்பட்டு வருகிறது. விலை வாசி உயர்வு காரணமாக அகவிலைப்படியை உயர்த்தி வழங்கக் கோரி பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டது.
இது குறித்து மத்திய அமைச்சரவை கடந்த சில நாட்களாகக் கூடி விவாதித்து வந்தது. இந்த நிலையில், அகவிலைப்படியை 7% உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த உயர்வினால் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 72% ஆக உயர்ந்துள்ளது. அரசு ஊழியர்கள் மட்டுமல்லாமல், ஓய்வூதியம் பெற்று வரும் 30 லட்சம் பேரும் இதன் மூலம் பயன்பெறுவார்கள்.
No comments:
Post a Comment