Pages

Friday, September 21, 2012

D.A. HIKE NOT NOW-IT MAY TAKE TIME-DINAMALAR

அகவிலைப்படி உயர்வு இப்போதைக்கு இல்லை
புதுடில்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கான, அகவிலைப்படியை, 7 சதவீதம் உயர்த்துவது குறித்து முடிவெடுப்பது தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு, தற்போது, 65 சதவீத அகவிலைப்படி வழங்கப்படுகிறது. இதை, 72 சதவீதமாக உயர்த்த, அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பான முடிவு, பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில், நாளை (செப். 21) கூடும், பொருளாதார விவகாரங்களுக்கான, மத்திய அமைச்சரவை குழு கூட்டத்தில் எடுக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அமைச்சரவை கூட்டம், திடீரென அடுத்த வாரத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. டில்லியில் உள்ள அரசியல் சூழ்நிலை காரணமாகவே, இன்று நடைபெறுவதாக இருந்த அமைச்சரவைக் கூட்டம், ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

No comments:

Post a Comment