2012
27
Aug
பள்ளிப்பட்டு: தமிழ் ஆசிரியர் நியமிக்க வலியுறுத்தி பள்ளிக்கு செல்லாமல் மாணவர்கள் புறக்கணித்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே கீழ்கால்பட்டு பகுதியில் அரசு நிதி உதவி பெறும் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 1ம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை 18 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இங்கு தமிழ் ஆசிரியர் கிடையாது. தமிழ் ஆசிரியர் நியமிக்கவேண்டும் என பெற்றோர், மாணவர்கள் கல்வித்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர். தலைமை ஆசிரியர் (பொறுப்பு) பூங்கோதை உள்ளார். 3 வயது குழந்தைகளையும் சேர்க்கவேண்டும் என்று பூங்கோதைக்கு பள்ளி நிர்வாகம் கடும் நெருக்கடி கொடுக்கிறதாம். இந்த நிலையில், இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவர்கள், வகுப்புகளை புறக்கணித்தனர். பெற்றோர்களும் பள்ளி முன் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ் ஆசிரியர் நியமிக்கவேண்டும் என்று கோஷங்கள் போட்டனர். போலீசார் வந்து அவர்களிடம் பேசினர். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

No comments:
Post a Comment