மாணவர் தற்கொலை செய்த விவகாரம்
தலைமை ஆசிரியை, ஆசிரியை கைது
மாற்றம் செய்த நேரம்:8/28/2012 2:21:35 AM
சேரன்மகாதேவி : நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் நயினார்குளத்தை சேர்ந்த தொழிலாளி வெள்ளப்பாண்டி மகன் சுஜீத்குமார்(14). இவர் வீரவநல்லூர் தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் பள்ளியில் பூந்தொட்டி உடைந்தது தொடர்பாக மாணவர் சுஜீத்குமாருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. பூந்தொட்டியை தான் உடைக்கவில்லை என்று கூறி அபராதம் செலுத்த மறுத்த மாணவரை ஆசிரியை அடித்துள்ளார். இதனால் மனமுடைந்த சுஜீத்குமார் நேற்று காலை 11 மணிக்கு பள்ளியில் இருந்து வீடு திரும்பினார். அங்கு சுஜீத்குமார் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் அவரது சடலத்துடன் பாபநாசம் , நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். சேரன்மகாதேவி சப்,கலெக்டர் ரோகினி ராம்தாஸ் மற்றும் போலீசார் வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். மாணவரின் உடல் பரிசோதனைக்காக அம்பை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனால் அந்த பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மாணவரின் சித்தப்பா அம்பேத்கர் கொடுத்த புகாரின்பேரில் பள்ளி நிர்வாகிகள் மங்கையர்க்கரசி, ஷியாம், தலைமை ஆசிரியை ஜாய்ஸ்ராணி, வகுப்பு ஆசிரியை விமலாபாய், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் முகமது இலியாஸ் ஆகியோர் மீது தற்கொலைக்கு தூண்டியது மற்றும் தீண்டாமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். ஜாய்ஸ் ராணி, விமலாபாய் இருவரையும் கைது செய்து சேரன்மகாதேவி கோர்ட்டில் மாஜிஸ்திரேட் சுதாகர் முன் ஆஜர்படுத்தி பாளை. சிறையில் அடைத்தனர். மற்ற மூவரையும் தேடி வருகின்றனர்.

No comments:
Post a Comment