2012
25
Aug
நாமக்கல்: மாணவிகளுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாக டிஸ்மிஸ் செய்யப்பட்ட நாமக்கல் ஆசிரியரின் கல்வித்தகுதியும் பறிபோகிறது. நாமக்கல் அருகே உள்ள வடுகப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் சத்யபிரபு (32). இவர், பள்ளி மாணவிகள் மற்றும் ஆசிரியைகளை செக்ஸ் டார்ச்சர் செய்து வந்தார். ஆசிரியரின் மோசமான செயல்பாட்டை கண்டித்து பெற்றோர்கள் கடந்த ஜூன் 25ம் தேதி பள்ளி முன், போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சத்யபிரபு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில் இவரை ஆசிரியர் பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்து மாவட்ட தொடக்ககல்வி அலுவலர் அருள்மொழிதேவி உத்தரவிட்டார். பள்ளி மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபடும் ஆசிரியர்களை டிஸ்மிஸ் செய்வதுடன், அவர்களின் கல்வி தகுதியையும் ரத்து செய்ய வேண்டும் என கடந்த ஜூன் மாத இறுதியில் தமிழக அரசு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் சத்யபிரபு டிஸ்மிஸ் செய்யப்பட்டார். சத்யபிரபுவின் கல்வித்தகுதி ரத்து குறித்து அருள்மொழிதேவி கூறுகையில், ‘’தற்போது டிஸ்மிஸ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடக்கல்வித்துறை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து உத்தரவு வந்த பிறகு அந்த நடவடிக்கையும் எடுக்கப்படும்’’ என்றார்.
சேந்தமங்கலம் உதவி தொடக்கல்வி அலுவலகத்தில் தான் சத்யபிரபுவின் சர்வீஸ் ரெஜிஸ்டர் மெயின்டைன் செய்யப்படுகிறது. பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்படும் போது மீண்டும் அவர் அரசு வேலைக்கு சேர முடியாதபடி பட்டபடிப்பு சான்றிதழில் குறிப்பு எழுதிய பிறகே சம்பந்தப்பட்டவரிடம் உயர் அதிகாரிகள் ஒப்படைப்பார்கள். தற்போது கல்விதகுதியே ரத்து செய்ய வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளதால் இதற்கான வழிகாட்டும் நெறிமுறைக்காக மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் காத்திருக்கிறது.

No comments:
Post a Comment