SAY NO TO PPP, TET ,CPS

நிதி வழங்குக

GREAT SALUTE TO OUR ESWARANJI

Todays Educational News

கல்வி செய்தி

முக்கிய செய்திகள் – Google செய்திகள்

BBCTamil.com | இந்தியா

FLASH NEWS

முக்கிய செய்திகள்



FIGHT UNTILL YOU WIN YOUR DEMANDS

மேலும் கல்வி செய்திகள்

Tamilnadu Teachers friendly blog

தினகரன் கல்வி செய்திகள்

தமிழ் முரசு செய்திகள்

தினகரன் முக்கிய செய்திகள் --

TEACHER TamilNadu

தமிழ் முரசு முக்கிய செய்திகள்

Dinamani

Daily Thanthi

கல்வி அஞ்சல்

புதிய தலைமுறை தொலைக்காட்சி

Monday, August 13, 2012

DINAMANI EDITORIAL RECOMMENDS TET EXAM FOR THE TEACHERS WHO ARE ALREADY IN SERVICE. IT QUESTIONS THE ELIGIBILITY OF TEACHERS


இது பொறுப்பதில்லை!

Fir
 ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றியடைய பயிற்சி தருவதாக தமிழ்நாடு முழுவதும் புற்றீசல் போல பல நிறுவனங்கள் தோன்றின. பார்த்த இடத்தில் எல்லாம் சுவரொட்டிகள், ஃபிளக்ஸ் பேனர்கள், துண்டுப் பிரசுரங்கள்! விண்ணப்பித்த 6.5 லட்சம் பேரில் சுமார் 5 லட்சம்பேர் இந்தப் பயிற்சி மையங்களில் சேர்ந்தனர். இவர்களுக்காக வினா-விடை புத்தகங்கள் அச்சிடப்பட்டு அமோகமாக விற்பனையாயின.
 தகுதித்தேர்வு பயிற்சி நிறுவனங்கள் ஒவ்வொருவரிடமும் குறைந்தபட்சம் ரூ.5,000 கட்டணம் வசூலித்தன. அந்தவகையில் இந்த புற்றீசல் கல்வி நிறுவனங்களுக்கு கிடைத்த வருமானம் ஏறக்குறைய ரூ.250 கோடி!
 ஆனால், தேர்வு எழுதியவர்களில் சுமார் 2,000 பேர் மட்டுமே 150-க்கு 90 மதிப்பெண் பெற்று, தேர்ச்சிபெற முடிந்துள்ளது. தகுதித் தேர்வுக்கான சிறப்புப் பயிற்சி பெற்றும்கூட வெறும் 5% பேர்தான் தேர்ச்சி பெற முடிந்துள்ளது என்றால் இவர்கள் கல்வியியல் கல்லூரிகளில் பெற்ற ஆசிரியர் பயிற்சி எத்தகையது? இத்தகைய தகுதித் தேர்வு இல்லாமலேயே இவர்கள் பணிநியமனம் பெற்றிருந்தால் இவர்களில் பலரும் ஆசிரியர்களாகி, நம் வருங்காலத் தலைமுறையை வழிநடத்தும் கொடுமை அரங்கேறியிருக்கும்!
 இப்போது இந்தப் பயிற்சி நிறுவனங்கள் பல்வேறு அரசியல் கட்சிகள் மூலம் அரசுக்கு கருத்துநெருக்கடி கொடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன. "தேர்வு வினாத் தாள் மிகவும் கடினமாக இருந்தது'. "மீண்டும் தேர்வு நடத்த வேண்டும்'. "தேர்ச்சி மதிப்பெண்ணை 150-க்கு 90 என்பதை 150-க்கு 50 என்று குறைக்க வேண்டும்' என்றெல்லாம் பேச வைக்கின்றன.
 தகுதித்தேர்வில் வெறும் 2,000 பேரைத் தவிர யாரும் தேர்ச்சி பெறாமல் போனதற்கு வினாக்கள் காரணமல்ல, அதை எழுதியவர்களும், அவர்கள் ஏற்கெனவே தேர்ச்சி பெற்ற விதமும்தான் காரணம் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
 தமிழ்நாட்டில் உள்ள 600-க்கும் அதிகமான, கல்வியியல் கல்லூரிகளில் 95% சுயநிதிக் கல்லூரிகள். இங்கே மாணவர் சேர்க்கையைப் பணம் தீர்மானிக்கிறது. குடும்ப நிர்பந்தம், கல்யாணம், பிள்ளைப்பேறு என்று கல்லூரிக்கு வராமலேயே வருகைப்பதிவு பெற முடியும்; செய்முறை மதிப்பெண்களைப் பெற முடியும். மதிப்பெண்ணை மாற்றிப்போட முடியும். இப்படியான முறைகேடுகள் ஒருபுறம் இருக்க, கற்பித்தல் பணிக்குத் தகுதிவாய்ந்த பேராசிரியர்கள் இருக்கிறார்களா என்றால், பல நிறுவனங்களில் அதுவும் அரிது. இங்கே படித்தவர்களில் பலரும், எப்படியும் அரசுப் பள்ளி ஆசிரியர் வேலையை ""வாங்கி''விட வேண்டும் என்று படித்தவர்கள். ஆகவேதான், பலரால் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற இயலவில்லை. இதுதான் கசப்பான உண்மை.
 ஆசிரியர் தகுதித்தேர்வை தமிழக அரசு நடத்தியதால் இந்த அவலட்சணமான நிலைமை அம்பலப்பட்டுள்ளது. கடந்த திமுக ஆட்சியில் தகுதித்தேர்வு இல்லாமல் பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர் நியமனம் பெற்றவர்களை இப்போது இந்தத் தேர்வை எழுதச் சொன்னால், அவர்களில் எத்தனை பேர் தேர்ச்சி பெறுவார்கள்? யோசித்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது. தகுதியின்றி பணிநியமனம் பெற்றவர்களின் தவறான கற்பித்தலால் எத்தனைக் குழந்தைகளின் எதிர்காலம் பாழாகப் போகிறதோ என்று நமக்கு கவலை ஏற்படுகிறது.
 அவர்களுக்கும் இப்படியொரு தேர்வு நடத்தினால் அதில் என்ன தவறு? இவர்களுக்கு பென்ஷன் வரை மக்கள் வரிப்பணம்தான் வழங்கப்படப்போகிறது என்பதைக் காட்டிலும், இவர்கள்தான் அடுத்த மூன்று தலைமுறைகளை உருவாக்கப் போகிறவர்கள் என்பதால், இவர்கள் தகுதியையும் சோதிப்பது என்று அரசு முடிவு செய்தால், அதில் எப்படி குற்றம் காண முடியும்?
 தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகள் மட்டுமே இலவசக் கல்வியை அளிக்கின்றன. கடந்த தலைமுறையினர் அனைவரும் அரசுப் பள்ளியில் படித்து, அறிவு பெற்றவர்கள்தான். அந்நாளில் அரசுப் பள்ளிகள் வசதிகளில் குறைவுபட்டிருந்ததே தவிர, கற்பித்தலில் குறைவுபட்டதில்லை!. இன்று அரசுப் பள்ளியில் தன் குழந்தையைச் சேர்க்க தினக்கூலியாளரும் தயங்குகிறார் என்றால், பிழை அரசு ஆசிரியர்கள் மீதுதான் இருக்கிறது. அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தகுதி பெற்றவர்களாக இருந்தால் மட்டுமே, அவர்கள் அர்ப்பணிப்பு உள்ளவர்களாகவும் மாறுவார்கள்.
 ஆசிரியராகப் பணிநியமனம் பெற்றுவிட்ட பிறகு, தான் கற்பிக்கும் பாடம் மற்றும் பொதுஅறிவில் தன் அறிவை விரிவுசெய்யத் தேவையில்லை என்கின்ற தேக்கநிலையை அரசுப்பணி உருவாக்கிவிடும் என்றால், அது எப்படி சரியாக இருக்கும்?
 பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை, தாங்கள் பயிற்றுவிக்கும் பாடங்கள், மற்றும் பொதுஅறிவை மையப்படுத்தி தேர்வு எழுதும்படி செய்து, அவர்கள் அத்தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணியில் தொடரவும், பதவி உயர்வு மற்றும் சலுகைகள் பெறவும் வழிகோல வேண்டும். அப்போதுதான், ஆசிரியருக்கான நியமன உத்தரவு வாங்கிய அடுத்த நாளே, எதையுமே படிக்க வேண்டியதில்லை என்கின்ற போக்கு தொடராது.
 அரசு ஊழியர்கள் மற்றும் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகள் அரசுப் பள்ளியில்தான் படிக்க வேண்டும் என்பதைக் கட்டாயமாக்க வேண்டும். அவர்களது குழந்தைகள் அங்கே படித்தால்தான் பள்ளியின் வசதி, கற்பித்தலின் தரம் ஆகியவற்றில் ஆசிரியர், மாவட்டக் கல்வி அலுவலர், மாவட்ட ஆட்சியர் வரை அனைவரும் ஆர்வம் காட்டுவார்கள். அப்போதுதான் பள்ளிக் கல்வித் தரம் உயரும். மக்களுக்கும் தரமான இலவசக் கல்வி கிடைக்கும்.
 தமிழகத்தின் அத்தனை அரசுப் பள்ளிகளும் சிறப்பானவையாக மாறவேண்டும் என்றால், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை முன்பை போல அதிகரிக்க வேண்டும் என்றால், ஆசிரியர்களின் தரத்தை அரசு உறுதிப்படுத்த வேண்டும். இதில் எந்தவித அரசியல் சமரசமும் கூடாது. இல்லையென்றால், பள்ளிக் கல்விக்காக அரசு ஒதுக்கும் நமது வரிப்பணம் ரூ.14,000 கோடியும் விழலுக்கு இறைத்த நீர்தான்!

No comments: