அரசு நிதியுதவி பள்ளிகளில் முறைகேடு: உதவி தொடக்க கல்வி அலுவலர் இடைநீக்கம்
First Published : 30 Aug 2012 03:42:36 AM IST
வேலூர், ஆக. 29: ராணிப்பேட்டையில், அரசு நிதியுதவி பெறும் இரு பள்ளிகளில் நடந்த முறைகேடு தொடர்பாக வாலாஜா வட்டார கிழக்கு சரக உதவித் தொடக்க கல்வி அலுவலர் பூங்கோதை இடைநீக்கம் செய்யப்பட்டார்.
ராணிப்பேட்டையில் அரசு நிதியுதவி பெறும் தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகமாக காண்பித்து, கூடுதல் ஆசிரியர்களை நியமித்து முறைகேடுகள் செய்துள்ளதாக புகார்கள் வந்தது.
இதையடுத்து அப் பள்ளிகளில் வேலூர் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் திங்கள்கிழமை திடீர் சோதனை நடத்தி வாலாஜா வட்டார கிழக்கு சரக உதவித் தொடக்க கல்வி அலுவலர் பூங்கோதை, பள்ளித் தாளாளர் கருணாகர சஞ்சீவிதாஸ், தலைமை ஆசிரியை ஆலீஸ் தபித்தாள், மற்றொரு பள்ளியின் தாளாளர் கெஜலட்சுமி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து பூங்கோதையை இடைநீக்கம் செய்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் அலுவலகம் புதன்கிழமை உத்தரவிட்டது.
No comments:
Post a Comment