Pages

Wednesday, June 27, 2012

CCE TRAINING CAMP FOR TEACHERS


ஆசிரியர்களுக்கு தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு பயிற்சி



விருதுநகர், ஜூன் 27: விருதுநகரில் அனைவருக்கும் கல்வி இயக்கம் வட்டார வள மையம் சார்பில் உயர் மற்றும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான தொடர் மற்றும் முழுமையான மதி்ப்பீட்டு முகாம் பயிற்சி 27.06.12 நடைபெற்றது.

இந்தப்பயிற்சி முகாமிற்கு உதவி திட்ட அலுவலர் மாடசாமி தலைமை வகித்து பயிற்சி வகுப்பையும் தொடங்கி வைத்தார். இதில், ஆசிரியர் மதிப்பீடு படிவம், மாணவர் திறன் பதிவேடு, கல்வி இணைச்செயல்பாடுகள் பதிவேடு குறித்து வட்டார வளமையத்தின் ஆசிரியர் பயிற்றுநர்களால் விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் பயிற்றுநர்களாக வினிதா, அமுதா, செல்வி, கவிதா, கலா உள்ளிட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்.

மேலும், இப்பயிற்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கூடுதல் கல்வி அலுவலர்(பொறுப்பு) த.பகவதி பார்வையிட்டு ஆய்வு செய்து முப்பருவ கல்வி முறை குறித்தும் தொடர் மற்றும் மதிப்பீட்டு முகாம் குறித்தும் உயர் மற்றும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கினார். இந்தப் பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொன்.மாரியப்பன் செய்திருந்தார்.  
 

No comments:

Post a Comment