Pages

Wednesday, October 17, 2012

TEACHERS GHERO OFFICER AT MADURAI


ஆசிரியைகள் முற்றுகையால் பரபரப்பு

பதிவு செய்த நேரம்:2012-10-17 12:10:31
மதுரை ஈ.வெ.ரா. பள்ளியில் நடந்த விழா விற்கு மாநகராட்சி கல்வி அதிகாரி மதியழகராஜ் காலை 8.45மணிக்கு வந் தார். தலைமையாசிரியை அறையில் வருகைப்பதிவேட்டில் கையெழுத்திட்டு  கொண்டிருந்த இரு ஆசிரியைகள் காலதாமதமாக வந் திருப்பதாக கூறி அதிகாரி கடுமையான வார்த்தை பேசியதாக புகார் எழுந்தது. வருகைப் பதிவேட்டையும் அதிகாரியின் டிரைவர் பறித்து சென்றதாக கூறப்படுகிறது. ஆசிரியைகள் ஆத்திரமடைந்தனர். 
விழா முடிந்தபிறகு, கல்வி அதிகாரியை கண்டித்து ஆசிரியைகள் அவரை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட் டது. இரு ஆசிரியைகளு டன், தலைமையாசிரியை விஜயலட்சுமி, கல்வி அதி காரி மதியழகராஜ் பேச்சுவார்த்தை நடத்தினர். கல்வி அதிகாரி வருத்தம் தெரிவித்தததால் பிரச்னை முடிவுக்கு வந்த தாக தெரிவிக்கப்பட்டது. கல்வி அதிகாரி மதியழகராஜிடம் கேட்டபோது, தவறான புரிதலால் பிரச்னை ஏற்பட்டு, பேசி தீர்க்கப்பட்டது என்றார்.

No comments:

Post a Comment