Pages

Thursday, October 11, 2012

KILVELUR BLOCK EXECUTIVE BODY MEETING -DINAKARAN


ஆசிரியர் கூட்டணி செயற்குழு

பதிவு செய்த நேரம்:2012-10-11 10:09:54
கீழ்வேளூர், : தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார செயற்குழு கூட்டம் கீழ்வேளூரில் நடந்தது. வட்டார தலைவர் ரமேஷ்குமார் தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் தங்கமோகன், மாவட்ட துணைத்தலைவர் மணிமாறன், வட்டார துணைத்தலைவர் மணிவாசகம் முன்னிலை வகித்தனர். வட்டார செயலாளர் சண்முகசுந்தரம் வரவேற்றார். 
உயர்கல்வி பெற்றவர்களுக்கு நிலுவையில் உள்ள ஊக்க ஊதியம், ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு தொகை, பதவி உயர்வுக்கான நிர்ணய தொகையை உடனே வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட பிரதிநிதி கோபாலகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர்கள் இந்திரா, வேம்பையன், ஐயப்பன், சரஸ்வதி, உதயசூரியன், திலகா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். வட்டார பொருளாளர் அருள்முருகன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment