Pages

Saturday, September 08, 2012

Rs.2000 CRORES ALLOTED FOR SSA


2012
07
Sep
அனைவருக்கும் கல்வி திட்டம் ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

/
அரக்கோணம்: குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைப்படுத்துவதற்கான  விழிப்புணர்வு கருத்தரங்கம் அரக்கோணத்தில் நடந்தது. இதில் பங்கேற்ற அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குனர் முகமது அஸ்லம் அளித்த பேட்டி: கட்டாய கல்வி உரிமை சட்டம் குறித்து மாவட்டம்தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து மற்ற மாவட்டங்களிலும் நடத்தப்பட உள்ளது. மாநிலம் முழுவதும் அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் புதிய கட்டிட பணிகள், மாற்று திறனுடைய மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள், கல்வி தொடர்பான உபகரணங்கள், ஆசிரியர் சம்பளம், பயிற்சி வகுப்புகள் உள்ளிட்ட பணிகளுக்காக சுமார் ரூ.2 ஆயிரம் கோடி நிதி அரசால் ஒதுக்கப்பட்டு உள்ளது

No comments:

Post a Comment