Pages

Monday, August 06, 2012

STATEWIDE INSPECTION REG.SCHOLARSHIP SCANDAL

மாநிலம் முழுவதும் ஆய்வு நடத்த உத்தரவு
சென்னை, ஆக. 5: மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை கையாடல் தொடர்பாக மாநிலம் முழுவதும் ஆய்வு நடத்த தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் தொடர்பாக தொடக்கக் கல்வித் துறை சார்பில் அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் இந்தக் கல்வி உதவித் தொகை மாணவர்களுக்கு முறையாக வழங்கப்பட்டிருக்கிறதா என ஆய்வு நடத்துமாறு, மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment