Pages

Friday, August 31, 2012

2 STUDENTS INJURED DUE TO PILLAR COLLAPSE IN HOSUR


பள்ளி நுழைவு வாயிலில்


தூண்கள் சரிந்து விழுந்து 2 மாணவர்கள் 

படுகாயம்


ஓசூர் : ஓசூர் அருகே பள்ளி நுழைவு வாயில் தூண்கள் கீழே விழுந்ததில் 2 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள எஸ். முதுகானப்பள்ளியைச் சேர்ந்தவர் ஆஞ்சப்பா. இவரது மகன் மல்லேஷ் (8). இவன் அங்குள்ள தெலுங்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறான். அதே பள்ளியில் மாணவன் வெங்கடேஷ் (10) என்பவன் 5ம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று காலை பள்ளிக்கு சென்ற இருவரும் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து பள்ளி கேட்டை பிடித்து விளையாடினர். அப்போது, கேட்டின் இருபுறமும் உள்ள தூண்கள் சரிந்து மாணவர்கள் மீது விழுந்தது.

இதில் மல்லேசுக்கு தலையிலும், வெங்கடேசுக்கு காலிலும் பலத்த காயம் ஏற்பட்டது. வலியால் அலறி துடித்த அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த தகவல் அறிந்ததும் கல்வித் துறை அதிகாரிகள் எஸ்.முதுகானப்பள்ளி கிராமத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். சம்பவம் குறித்து கெலமங்கலம் போலீசாரும் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment