Pages

Saturday, March 24, 2012

ஆசிரியர் தகுதித் தேர்வு : முதல் தாள் பாடப்பிரிவு விவரம்




First Published : 23 Mar 2012 01:23:11 PM IST

Last Updated : 23 Mar 2012 01:29:16 PM IST
பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றுபவர்களுக்கு தேசிய மற்றும் மாநில அளவில் தகுதித் தேர்வினை நடத்தி, அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு பணி வழங்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தை அடுத்து, தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது.

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வான டிஎன் டிஇடி தேர்வு வரும் ஜூன் மாதம் 3ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பம் வழங்கும் பணி மார்ச் 22ம் தேதி துவங்கியுள்ளது. இந்த நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு எந்தப் பாடப்பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இந்த தேர்வு 5 பாடபிரிவுகளைக் கொண்டதாகும். 1. குழந்தை மேம்பாடும், கற்பித்தல் முறைகளும், 2. தமிழ்/தெலுங்கு/மலையாளம்/கன்னடம்/உருது, 3. ஆங்கிலம், 4. கணிதம், 5. சுற்றுச்சூழல் படிப்பு ஆகிய பாடங்களின் கீழ் ஒவ்வொரு பிரிவிற்கும் தலா 30 கேள்விகள் கேட்கப்படும்.

பொதுவாக இத்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு அரசு பணி வாய்ப்பு வழங்கப்படும் என்பதால் தற்போது இத்தேர்வை எழுதும் ஆர்வம் அதிகரித்துள்ளது. 150க்கு 90 மதிப்பெண் அதாவது 60% மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சி பெற்றவராக அறிவிக்கப்படுவர்.

1 முதல் 5ம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் இந்த முதல் தாள் தேர்வினை எழுத வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முதல் தாள் தேர்வெழுதுவோருக்கான பாடப்பிரிவு விவரம் கீழே வழங்கப்பட்டுள்ளது.

1. குழந்தை மேம்பாடும், கற்பித்தல் முறைகளும்,2. தமிழ்3. ஆங்கிலம்4. கணிதம்5. சுற்றுச்சூழல் படிப்பு

No comments:

Post a Comment