Todays Educational News
கல்வி செய்தி
முக்கிய செய்திகள் – Google செய்திகள்
BBCTamil.com | இந்தியா
FLASH NEWS
விகடன்-தினத்தந்தி கல்வி செய்திகள்
முக்கிய செய்திகள்
மேலும் கல்வி செய்திகள்
Tamilnadu Teachers friendly blog
தினகரன் கல்வி செய்திகள்
தமிழ் முரசு செய்திகள்
தினகரன் முக்கிய செய்திகள் --
TEACHER TamilNadu
தமிழ் முரசு முக்கிய செய்திகள்
Dinamani
Daily Thanthi
கல்வி அஞ்சல்
புதிய தலைமுறை தொலைக்காட்சி
Wednesday, December 18, 2013
கல்வி வளர்ச்சியில் தென் மாநிலங்கள் "சூப்பர்'
கல்வி வளர்ச்சியில் வட மாநிலங்களை விட, தென் மாநிலங்கள் சிறப்பான இடத்தில் இருப்பதாக சமீபத்திய கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. தர வரிசையில், லட்சத்தீவுகள், புதுச்சேரி, தமிழ்நாடு முறையே, முதல் மூன்று இடங்களை வகிக்கின்றன. 
மத்திய அரசின் கீழ் டில்லியில் இயங்கும், திட்டமிடுதல் மற்றும் நிர்வாக தேசிய பல்கலைக்கழகம் சார்பில் மாவட்டவாரியாக இ.டி.ஐ., (எஜூகேஷன் டெவலப்மென்ட் இண்டக்ஸ்) விபரம் சேகரிக்கப்பட்டது. கல்வியின் வளர்ச்சி பற்றிய இக்கணக்கீட்டின்படி, பல மாநிலங்கள் முன்னேற்றம் இன்றி, முந்தைய ஆண்டுகளின் நிலையையே தொடர்ந்துள்ளன. குறிப்பாக இந்தி மொழி பேசும் மாநிலங்களில், கல்வி வளர்ச்சி அதிகம் சரிந்துள்ளது. அதேவேளையில் கல்வி உரிமை சட்டம் வந்த பிறகு, தென் மாநிலங்கள் விரைவான வளர்ச்சியை கண்டுள்ளன. இதன்படி அணுகுமுறை, உள்கட்டமைப்பு வசதி, ஆசிரியர்கள் மற்றும் திறமை வெளிப்பாடு ஆகியவை மேம்பட்டுள்ளன. இருப்பினும், பீகார், உ.பி., மற்றும் சில மாநிலங்கள் முயற்சி செய்தும், அதில் வெற்றி பெற முடியவில்லை.
மாவட்ட பள்ளிக் கல்வி தகவல்களின் அடிப்படையில், அடிப்படை மற்றும் மேல்கல்வி முறைகளில், லட்சத்தீவுகள் முதலிடம் வகிக்கிறது. இரண்டாவது இடத்தில் புதுச்சேரியும், அதற்கடுத்தடுத்த இடங்களில் தமிழ்நாடு, சிக்கிம், கர்நாடகாவும் வருகின்றன.தமிழ்நாட்டில், பள்ளிகளில் கொண்டுவரப்பட்ட மதிய உணவுத் திட்டத்தினால், கல்வித்தரம் குறையாமல் <உள்ளது. இதனால் தான் மூன்றாம் இடத்தில் உள்ளது. முந்தைய கல்விஆண்டில் 13வது இடத்திலிருந்த பஞ்சாப், 2012-13ல், ஆறாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது.2011-12 ல் ஏழாவது இடத்தைப் பிடித்திருந்த கேரளா, தற்போது 14வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இம்மாநிலம், தொடக்கக்கல்வி செயல்பாட்டில் பின்தங்கியதால் தான், மிகப்பெரும் சரிவை சந்தித்துள்ளது. 2011-12 ல், தொடக்கக் கல்விக்கான பட்டியலில் ஆறாவது இடத்திலிருந்த கேரளா, இப்போது 20வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
டில்லி, பத்தாவது இடத்திலிருந்து ஒரு இடம் பின்தங்கி, 11வது இடத்திற்கு வந்துவிட்டது. கடந்த கல்வி ஆண்டில் எட்டாவது இடம் வகித்த மகாராஷ்டிரா, தொடந்து அந்த இடத்திலேயே நீடிக்கிறது. ம.பி., 28வது இடத்தில் உள்ளது. பீகார் 33வது இடத்திலிருந்து 30வது இடத்திற்கு, சிறிய முன்னேற்றம் கண்டுள்ளது. உ.பி., 32லிருந்து 34வது இடத்திற்கும், ராஜஸ்தான் 23லிருந்து 25வது இடத்திற்கும், மேற்குவங்கம் 29லிருந்து 31வது இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளன.
Tuesday, December 17, 2013
Monday, December 16, 2013
பள்ளிகளில் கம்ப்யூட்டர் இருக்குது! மின்சாரம் இல்லே!
பள்ளிகளில் கம்ப்யூட்டர் இருக்குது! மின்சாரம் இல்லே!
கருத்துகள் (2) கருத்தை பதிவு செய்ய 
புதுடில்லி : நாட்டின் பெரும்பான்மையான துவக்கப் பள்ளிகளில், கம்ப்யூட் டர்கள் உள்ளன; ஆனால், கம்ப்யூட்டர் வழங்கப்பட்ட பெரும்பாலான பள்ளிகளில், கம்ப்யூட்டரை இயக்க, மின்சாரம் இல்லை.
ஆய்வில் கண்டுபிடிப்பு:
துவக்கப் பள்ளிகளுக்கு எளிதில் கம்ப்யூட்டர்கள் வழங்கப்பட்டு விடுகின்றன. ஆனால், அந்த கம்ப்யூட்டர்களை இயக்க, அந்தப் பள்ளிகளுக்கு, மின்சாரம் கிடைப்பது, குதிரைக்கொம்பாக உள்ளதாக, கல்வித் திட்டமிடல் மற்றும் நிர்வாக தேசிய பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த, முதல்வர், நிதிஷ்குமார் தலைமையிலான, பீகார் மாநிலத்தில், மொத்தமுள்ள துவக்கப் பள்ளிகளில், 4.80 சதவீதம் பள்ளிகளில் தான் கம்ப்யூட்டர் வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு, கம்ப்யூட்டர் வழங்கப்பட்ட பள்ளிகளில், 28.13 சதவீத பள்ளிகளில், மின்சார வசதி கிடையாது என்பது, அந்த நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
முடங்கி கிடக்கின்றன:
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியை சேர்ந்த, முதல்வர், ஹேமந்த் சோரன் தலைமையிலான, ஜார்க்கண்ட் மாநிலம், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, முதல்வர், தருண் கோகாய் தலைமையிலான அசாம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த, முதல்வர், மாணிக் சர்க்கார் தலைமையிலான, திரிபுரா மாநிலத்தில், 80 சதவீத பள்ளிகளுக்கு மின் இணைப்பு கிடையாது.ஆனால், அந்தப் பள்ளிகளில், 74 சதவீத பள்ளிகளுக்கு, கம்ப்யூட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, முதல்வர், சித்தராமைய்யா தலைமையிலான, கர்நாடக மாநில அரசில், 81 சதவீத துவக்கப் பள்ளிகளில் கம்ப்யூட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றில், 96 சதவீத கம்ப்யூட்டர்கள், பள்ளிகளில் மின் இணைப்பு இல்லாததால், முடங்கிக் கிடக்கின்றன.
Sunday, December 15, 2013
குக்கிராம பள்ளி ஆசிரியர்கள் கண்காணிப்பு:
குக்கிராம பள்ளி ஆசிரியர்கள் கண்காணிப்பு:
|
Posted Date : 10:12 (13/12/2013)Last updated : 10:12 (13/12/2013)
தமிழகத்தில் குக்கிராமங்களில் உள்ள பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் முறையாக செல்கிறார்களா என்பதை வட்டார அளவில் குழு அமைத்து கண்காணிக்க வேண்டும் என்று தொடக்க கல்வி இயக்குநர் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பான உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழகத்தில் குக்கிராமங்களில் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பள்ளிகளில் விடுப்பு விண்ணப்பம் அளிக்காமல் பணிக்கு வராமல் இருப்பதை கண்டறிந்து தடுப்பதற்காக வட்டார அளவில் குழுக்களை ஏற்படுத்தி கண்காணிப்பை தீவிரப்படுத்தி மேற்பார்வையிட வேண்டும். ஒவ்வொரு மாவட்ட தொடக்க கல்வி அலுவலரும், அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மை கல்வி அலுவலரும் இணைந்து இப்பணியை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் வட்டார அளவில் பஸ் வசதி இல்லாத கிராம பகுதிகளில் உள்ள பள்ளிகளின் பட்டியலை தயார் செய்து ஒரே நாளில் உதவி தொடக்க கல்வி அலுவலர், மேற்பார்வையாளர் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் ஆகியோர் பார்வையிட்டு பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் பணிக்கு வருகிறார்களா என்பதை கண்காணித்து அதன் அடிப்படையில் உடனடியாக மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும். காலையில் ஒரு பள்ளி, மாலையில் ஒரு பள்ளியை ஆய்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு வாரமும் இதுபோன்று திடீர் பார்வைகளை திட்டமிட்டு மேற்கொண்டு வாராந்திர அறிக்கையை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கு உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் அனுப்ப வேண்டும். மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அவற்றை தொகுத்து மாதாந்திர அறிக்கையாக தொடக்க கல்வி இயக்குநரகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்
|
Saturday, December 14, 2013
Thursday, December 12, 2013
தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள்தான் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும்: அப்துல் கலாம்
First Published : 12 December 2013 05:42 AM IST
தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள்தான் மாணவர்கள் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் கூறினார்.
சென்னை மண்டல கேந்திரிய வித்யாலயப் பள்ளிகள் சார்பில் கேந்திரிய வித்யாலய சங்கேதனின் பொன் விழா சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
கேந்திரிய வித்யாலயப் பள்ளிகளின் மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்ற இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று கலாம் பேசியது:
கடந்த 1963ஆம் ஆண்டு 20 பள்ளிகளுடன் கேந்திரிய வித்யாலயா சங்கேதன் தொடங்கப்பட்டது. இப்போது இந்த அமைப்பின் கீழ் நாடு முழுவதும் 1,100-க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. 11 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர்.
சென்னை மண்டலத்தில் உள்ள பள்ளிகளில் மட்டும் 51 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர். இந்த அமைப்புக்கு எனது வாழ்த்துகள்.
மாணவர்களிடம் பெரிய தாக்கத்தை ஆசிரியர்கள், குறிப்பாக தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஏற்படுத்த முடியும்.
ராமேசுவரம் தொடக்கப்பள்ளியில் எனது அறிவியல் ஆசிரியர் சிவசுப்பிரமணிய ஐயர் பறவைகள் குறித்து பாடம் நடத்தினர். அப்போது பறவைகள் எவ்வாறு பறக்கின்றன என்பதை வகுப்பறையில் விளக்கியதோடு, கடற்கரைக்கு அழைத்துச்சென்று எங்களை நேரடியாகவும் பார்க்கச் செய்தார். சிறுவனாக இருந்த என் மனதில் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. எனக்கு விமானியாக வேண்டும் என்ற ஆசை வந்தது. அடுத்து அவரிடம், "விமானியாக என்ன படிக்க வேண்டும்?' என்றுதான் கேட்டேன்.
அவரது ஆலோசனைப்படியே, பட்டப்படிப்பில் இயற்பியல் படித்தேன். அதன்பிறகு ஏரோநாட்டிக்கல் பொறியியல் படிப்பும் படித்தேன். நான் ராக்கெட் என்ஜினியராக, விண்வெளி விஞ்ஞானியாக பணியாற்றியிருந்தாலும், விமானியாக வேண்டும் என்கிற கனவு அவரது வகுப்பில்தான் உருவானது.
அந்தக் கனவை விடாமுயற்சியோடு பின்தொடர்ந்தேன். ஒருதுறையில் சிறந்து விளங்குவது என்பது விபத்தல்ல. அது ஒரு தொடர் முயற்சி. அனைத்திலும் சிறந்துவிளங்க வேண்டும் என்பது ஒரு கலாசாரமாகவே மாற வேண்டும். இந்த கலாசாரத்தை ஆசிரியர்கள்தான் மாணவர்களிடத்தில் ஏற்படுத்த வேண்டும், என்றார் அவர்.
கேந்திரிய வித்யாலய சங்கேதன் அமைப்பின் சென்னை மண்டல துணை கமிஷனர் என்.ஆர்.முரளி, சென்னை ஐ.ஐ.டி. டீன் பேராசிரியர் ராமமூர்த்தி, சி.பி.எஸ்.இ. மண்டல அலுவலர் டி.டி. சுதர்சன ராவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கருத்துகள்(2)
படித்தவர்களுக்கு வழிகாட்டியாக உந்துதலாக 90 சதவீதம் ஆசிரியரே.ஆசிரியர்கள் சமுதாயத்தின் முதுகெலும்பு போன்றவர்கள்.தொடக்கப்பள்ளி ஆசிரியர் குழந்தைகளுக்கேற்ப அவரவர் நிலை அறிந்து விளையும் பயிரை முளையிலே கண்டறிந்து ஊக்கப்படுத்தினால் சமுதாய மாற்றம் தானே நடக்கும்.எனது முதலாளி எந்த ஒரு செயலுக்கும் வேறுபாடின்றி அனைவருக்கும் நன்றி நன்றி சொல்லுவார்.அவர் தொழிலகத்தில் வேலை செய்யும் எங்களை ஊக்கப்படுத்தியது.இதே போன்ற செயலை என் சரித்திர ஆசிரியை சொல்லி கொடுத்தார்கள்.சமுதாயத்தில் உதவி செய்யும் ஒவ்வருக்கும் நன்றி சொல் என்றார்கள்.நான் பங்களாதேஷில் பணி புரியும்பொழுது நன்றி சொல்லும் பழக்கத்தை ஒவ்வரிடமும் சைக்கிள் ரிக்ஸா ஓட்டுனர் முதல் நான் அன்றாடம் சந்தித்த அனைவருக்கும் நன்றி சொல்லி வந்தேன்.ஆரம்பத்தில் ஒரு மாதிரியாக பார்த்தவர்கள் பழக பழக எல்லோரும் முகமலர்ச்சியுடன் என்னை வரவேற்றார்கள்.அது நல்ல ஒழுக்கத்தையும் கொடுத்தது.நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் என்றானே அவனை நினைத்து இன்றும் என் ஆசிரியர் முதலாளி நன்றி சொல்லிகொண்டேயிருக்க்றேன்
பதிவுசெய்தவர் ச.விஸ்வநாதன் 12/12/2013 09:06
The real teacher is child's mother and the real teachers are the teachers handling primary classes. They mould the child to read, listen, speak and write.
பதிவுசெய்தவர் MBJ PANCRAS 12/12/2013 15:13
3ம் வகுப்பு தரத்தில் எம்.ஏ. வினாத்தாள்! - மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை மாணவர்கள் திகைப்பு
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் சமீபத்தில் நடத்திய முதல் பருவ எம்.ஏ. தமிழ் தேர்வு வினாத்தாள், மாணவர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழுக்கு சிறப்பு சேர்க்கும் வகை யில், மனோன்மணீயம் நாடகத்தை இயற்றிய சுந்தரம்பிள்ளை பெயரில், திருநெல்வேலி அபிஷேகப்பட்டி யில் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இப்பல்கலைக்கழகத்தின் கீழ், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 64 கலை அறிவியல் கல்லூரி கள் செயல்படுகின்றன. இக்கல்லூரி களில் சமீபத்தில் இளங்கலை, முதுகலை தேர்வுகள் நடைபெற்றன.
வினாத்தாளால் வியப்பு
எம்.ஏ. தமிழ் முதலாண்டுக்கு, `இக்கால இலக்கியம்- கவிதையும் நாடகமும்’ என்ற பாடத்துக்கான தேர்வை எழுதிய மாணவர்கள் வியப்படைந்தனர். வினாத்தாளை பார்த்ததுமே, இத்தேர்வு 3-ம் வகுப்புக்கா? முதுகலை பட்டத்துக்கா? என்ற கேள்வி அவர்கள் மத்தியில் எழுந்தது.
பள்ளிகளில் பகுதி 1-க்கான வினாத்தாள் அமைவதை போன்று, வினாக்கள் இருந்தன. உதாரணத்துக்கு பகுதி 1-ல் குயில் பாட்டின் ஆசிரியர் யார்? உமக்கு பாடமாக வந்துள்ள பாரதிதாசன் கவிதை நூலை எழுதுக என்று மிக சாதாரணமாக 30 கேள்விகள் இடம் பெற்றிருந்தன. அவற்றுக்கு 4 விடைகளையும் அளித்து, அதில் ஒன்றை தேர்ந்தெடுத்து எழுதச் சொல்லியிருந்தனர்.
தொடக்கப்பள்ளிகளைப் போன்ற மிகச் சாதாரணமான வினாக்களே, முதுகலை தமிழ் வினாத்தாளில் இடம்பெற்றிருந்தது. வினாத்தாளைப் பார்த்து விடைகளை மாணவர், மாணவியர் மளமளவென எழுதி விட்டு சீக்கிரமே தேர்வு அறைகளில் இருந்து வெளியேறினர். பல்கலைக்கழகத்தின் தரம், உயர்கல்வியின் போக்கு, வினாத்தாள் தயாரிக்கும் குழுக்கள் குறித்து அவர்கள் கவலை தெரிவித்தனர்.
தரம் மேம்படுமா?
உயர்கல்வி தர மேம்பாட்டுக் காகவும், பாடத்திட்ட மேம்பாட்டுக் காகவும் பல்கலைக்கழக நிதி நல்கை குழுவும், உயர்கல்வித்துறையும் பல்வேறு செயல்திட்டங்களை அமல்படுத்தியிருக்கும் நிலையில், முதுகலை தரத்துக்கான வினாத் தாள்களை தயாரிக்காதது, மாணவர்கள் தரத்தை உயர்த்தாது ஏன் என்று தமிழ் பேராசிரியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
துறைசார்ந்த அனுபவம் மிக்க பேராசிரியர்களை கொண்டு வினாத்தாள்களை தயாரிப்பதுதான் வழக்கம். பல்கலைக் கழகத்துக்கு வெளியில் உள்ள கல்லூரி பேராசிரியர்கள் வினாத்தாள்களை தயாரித்தாலும், பல்கலைக்கழக அளவில் பேராசிரியர்கள் அடங்கிய மேற்பார்வை குழுக்களை அமைக்க வேண்டும் என்று தமிழ் பேராசிரியர்கள் வலியுறுத்துகிறார் கள்.
மாணவர்களை மழுங்கடிக்கலாமா?
மாணவர்கள் மத்தியில் தமிழ் பயில அதிக வரவேற்பு இல்லாத நிலையில், இதுபோன்ற வினாத்தாள்களை அளித்து அவர்களை வெறுப்படையச் செய்யும் நடவடிக்கைகளைத் தடுக்க வேண்டும். மாணவர்களின் உயர்கல்வி தரம் மேம்பட பேராசிரி யர்களும் முழுமனதுடன் செயல்பட வேண்டும். ஆசிரியர் சங்கங்களும், பல்கலைக்கழத்துடன் ஒத்துழைத்து இதுபோன்ற நிகழ்வுகள் தொடராமல் இருக்க செய்ய வேண்டும் என்பதே தமிழ் ஆர்வலர்கள் மற்றும் மாணவர்களின் விருப்பம்
தீத்திப்பாளையம் பள்ளியில் நாளை உளவியல் ஆலோசனை
கோவை,: கோவை பேரூர் அடுத்துள்ள தீத்திப்பாளையம் அரசுப் உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் கடந்த நவம்பர் மாதம் 20ம் தேதியன்று ஒரு நாள் சுற்றுலா பயணமாக அய்யசாமி மலைக்கோவிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பும்போது சரக்கு ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் பள்ளி மாணவி ரஞ்சிதா உயிரிழந்தார். மேலும் 212 மாணவிகள் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
இச்சம்பவத்தால் தீத்திப்பாளையம் கிராம மக்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் அதிர்ச்சியில் இருந்து மீளாமல் உள்ளனர். மன அதிர்ச்சியை களையும் வகையில் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள நடமாடும் உளவியல் ஆலோசனை மையம் தீத்திப்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி நாளை ஆலோசனை வழங்குகிறது.
இதுகுறித்து உளவியல் ஆலோசகர் அருள்வடிவு கூறுகையில்,“விபத்தில் படுகாயமடைந்த மாணவிகளுக்கும், பள்ளி ஆசிரியர்களுக்கும் விபத்தின் போது ஏற்பட்ட மன அதிர்ச்சியை போக்குவதற்காக எங்களின் சிறப்புக்குழு நாளை தீத்திப்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு செல்கிறது. மேலும் கோவையின் சிறப்பு உளவியல் ஆலோசகர்களான அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் செல்வராஜ் , பிஎஸ்ஜி கல்லூரியின் பேராசிரியர் ஜோதிமணி தலைமையில் ஆலோசனை வழங்கப்பட உள்ளது.
மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி வழிகாட்டுதலின் பேரில் நாளை பள்ளிக்கு சென்று ஆலோசனை வழங்குகிறோம்’ என்றார்
.
Tuesday, December 10, 2013
பள்ளிகளுக்கு இந்தியா "மேப்': 2 மாதங்களில் வழங்கப்படும்
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள 1.48 லட்சம் வகுப்பறைகளுக்கு இந்திய, தமிழக வரைபடங்கள் மற்றும் மாவட்ட வரைபடங்கள் 2 மாதங்களில் வழங்கப்பட உள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த வரைபடங்களை அச்சிடும் நிறுவனங்களைத் தேர்வு செய்வதற்கான தொழில்நுட்ப ஒப்பந்தப் புள்ளிகள் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 13) திறக்கப்பட உள்ளதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
மாணவர்களுக்கு வரலாறு மற்றும் புவியியல் பாடத்தை சிறந்த முறையில் கற்பிக்கவும், ஆர்வத்தை ஏற்படுத்தவும் வகுப்பறைகளுக்கு வரைபடங்கள் வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
இதையடுத்து, இந்த வரைபடங்களை அச்சிடுவதற்கான பணிகளை தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் மேற்கொண்டு வருகிறது.
இந்தப் பணிகள் தொடர்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறியது:
அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 1 லட்சத்து 48 ஆயிரத்து 245 வகுப்பறைகள் உள்ளன.
இந்த வகுப்பறைகளுக்கு தலா 3 வரைபடங்கள் வீதம் மொத்தம் 4 லட்சத்து 44 ஆயிரம் வரைபடங்கள் வழங்கப்பட உள்ளன.
மாணவர்கள் அனைவரும் எளிமையாகப் புரிந்துகொள்ளும் வகையில் தமிழில் இந்த வரைபடங்கள் இருக்கும். மாவட்ட வரைபடங்களின் மூலம் கிராமப்புறங்களில் உள்ள மாணவர்கள் கூட தங்களது ஊர்களை வரைபடங்களில் பார்க்கலாம். இது வரலாறு பாடங்களின் மேல் மாணவர்களின் ஆர்வத்தை அதிகரிக்கும்.
அதேபோல், இயற்கை வளங்கள் மற்றும் ஆறுகள், முக்கிய ஊர்கள் போன்றவற்றையும் மாணவர்கள் புத்தகங்களில் கற்கும்போதே, வரைபடங்களின் மூலம் அறிந்துகொள்வார்கள்.
வரைபடங்களை அச்சிடுவதற்கான சரியான அளவைப் பெறவும், சரியான காகிதத்தைத் தேர்வு செய்யவும் சற்று காலதாமதம் ஆகிவிட்டது. எனினும், ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்பட்டவுடன் வரைபடங்களை விரைவாக அச்சிடுமாறு அச்சிடும் நிறுவனங்களுக்கு உத்தரவிடப்படும்.
அடுத்த 2 மாதங்களுக்குள் வகுப்பறைகளுக்கு வரைபடங்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, இதற்கான பணிகள் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தேர்ந்தெடுக்கப்படும் நிறுவனங்கள் முதலில் மாதிரி வரைபடங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்திய மற்றும் தமிழக வரைபடங்களை அச்சிடுவதற்கு முன்னதாக இந்திய தலைமை நில அளவையாளர் அலுவலகத்திலும், மாவட்ட வரைபடங்களை அச்சிடுவதற்கு முன்னதாக மாவட்டங்களில் உள்ள நில அளவை உதவி இயக்குநர் அலுவலகங்களிலும் பதிப்பாளர்கள் அனுமதி பெற வேண்டும்.
அதன்பிறகே, வரைபடங்களை அச்சிட அனுமதி வழங்கப்படும்.
ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு அட்லஸ்: அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு 11 லட்சம் அட்லஸ் புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட உள்ளன. இந்தப் புத்தகங்கள் அடுத்த மாதத்துக்குள் மாணவர்களுக்கு வழங்கப்படும் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன
3ம் பருவ புத்தகம்: டிச.,25ம் தேதிக்குள் மாவட்டங்களுக்கு அனுப்பப்படும்
முப்பருவ முறையில் மூன்றாம் பருவத்துக்கான 2.4 கோடி புத்தகங்கள் டிசம்பர் 25-ஆம் தேதிக்குள் மாவட்டங்களுக்கு அனுப்பப்படும் என தமிழ்நாட்டுப் பாடநூல் கழக வட்டாரங்கள் தெரிவித்தன.
ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முப்பருவ முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
மூன்றாம் பருவத்துக்கான புத்தகங்கள் அச்சிடும் பணிகள் குறித்து தமிழ்நாட்டுப் பாடநூல் கழக வட்டாரங்கள் கூறியது:
மூன்றாம் பருவத்துக்கான வகுப்புகள் ஜனவரி 2-ஆம் தேதி தொடங்க உள்ளன. முதல் நாளிலேயே அனைத்து மாணவர்களுக்கும் புத்தகங்களை வழங்குவதற்காக புத்தகங்களை அச்சடிக்கும் பணி ஏற்கெனவே தொடங்கிவிட்டது. இதுவரை 70 சதவீத புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள புத்தகங்களும் அச்சடிக்கப்பட்டு மாவட்டங்களுக்கு டிசம்பர் 25-க்குள் அனுப்பப்பட்டு விடும்.
தமிழகம் முழுவதும் 66 புத்தக விநியோக மையங்களும், பாடநூல் கழகத்துக்குச் சொந்தமாக 22 கிடங்குகளும் உள்ளன. இந்த இடங்களுக்கு அனைத்துப் புத்தகங்களும் நேரடியாக அனுப்பப்படும்.
அங்கிருந்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் மூலமாக புத்தகங்கள் பள்ளிகளுக்கு விநியோகிக்கப்படும் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
புதுக்கோட்டை அரசுப் பள்ளியில் பசுமைப் புரட்சி
ஏராளமான மரங்களைக் கொண்டுள்ள மண்ணவேளாம்பட்டி பசுமைப் பள்ளி.
மலையும் மலைசார்ந்த தொழில்கள் நிறைந்த பகுதியான புதுக்கோட்டை மாவட்டம் அன்ன வாசல் அருகேயுள்ள மண்ணவேளாம் பட்டியில் 7.5 ஏக்கரில் 2007-ல் தரம் உயர்வு பெற்று புதிய இடத்தில் தேவையான கட்டி டங்கள், அடிப்படை வசதிகளுடன் அரசு உயர் நிலைப்பள்ளி தொடங்கப்பட்டது.
தரிசு நிலத்தில் வெட்ட வெளியாக இருந்த பள்ளி வளாகத்தை சோலை யாக மாற்றிட பள்ளி தொடங்கிய நாளில் இருந்தே மரம் வளர்ப்புப் பணியிலும் ஈடுபடத் தொடங்கினர் பள்ளி நிர்வாகத்தினர்.
மலைவேம்பு உள்பட 1250 மரங்கள்
அதன்படி, தற்போது 135 மாணவிகளுடன் 263 பேர் படிக்கும் இப்பள்ளியில் வேம்பு, புங்கன், சரக்கொன்றை, மயில்கொன்றை, வாகை, செம்மரம், அத்தி, இலுப்பை, மலை வேம்பு, உதியன், மாவிலிங்கம் உள்ளிட்ட சூழலைக் காக்கும் 1250 மரங்கள் புவிக்கு குடையாக உள்ளன. பள்ளியில் பயிலும் மாணவர்களைவிட 5 மடங்கு அதிகமாகவே மரங்கள் இங்கு உள்ளன.
மேலும், இப்பள்ளியில் மருத்துவக் குணம் கொண்ட தூதுவளை, கீழாநெல்லி, தும்பை, குப்பைமேனி, பிரண்டை, ஆடாதொடா, அருகம்புல், முடக்கத்தான், சிறியாநங்கை போன்ற கிராமங்களில் ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் மூலிகை செடிகளைக் கொண்டு வந்து விளக்கத்துடன் மூலிகைத்தோட்டமும், பள்ளி மதிய உணவுக்குத் தேவையான காய்கறி செடிகளும் தோட்டமாகப் பராமரிக்கப்படுகின்றன.
இவைகளைப் பாதுகாக்க மாணவ, மாணவிகளை வேளாண் மற்றும் சுகாதாரக் குழு என 2 குழுக்களாகப் பிரித்து, அவர்களை காவிரி, தாமிரபரணி, மகாநதி, கங்கை என வகைப்படுத்தி ஓய்வுநேரங்களில் மரங்கள், தோட்டப் பயிர்களுக்கு தண்ணீர் ஊற்றுவது, மரங்களைப் பாதுகாப்பது போன்ற பணிகளை மேற்கொள்ளச் செய்கின்றனர். இதன்மூலம் பள்ளி பசுமைப் பள்ளியாக மாறியதோடு மட்டுமில்லாமல் மாணவர்கள் கல்வி வளர்ச்சியுடன், இயற்கை வளம் குறித்த அறிவும் பெறுகின்றனர்.
பெற்றோர் ஆசிரியர் கழகம், கிராம கல்விக் குழுவினர், கிராம மக்களைக் கொண்டு நடத்தப்படும் மற்ற விழாக்களோடு சுற்றுச்சூழல் தினம், ஓசோன் தினம், இயற்கை பாதுகாப்பு தினம், மாசுக் கட்டுப் பாட்டுத் தினம், எரிசக்தி பாதுகாப்பு தினம், வனநாள் போன்ற இயற்கை சார்ந்த நிகழ்ச்சி களையும் பள்ளியில் நடத்துகின்றனர்.
இந்நிகழ்ச்சிகளில் மரங்களை பள்ளியில் வளர்ப்பதோடு ஒவ்வொருவரது வீடுகளி லும் வளர்க்க வேண்டுமென்ற அவசியத்தை யும் சூழலுக்காக அர்ப்பணிப்புப் பணி யில் ஈடுபட்டுள்ள மாணவ, மாணவிகளும் பாராட்டப்படுகின்றனர்.
“கிராம மக்கள் மரங்களின் மகத்துவத் தைப் புரிந்துகொண்டதால் விடுமுறை நாள்களில், கிராம மக்களே மரங்களைப் பாதுகாக்க ஒத்துழைக்கின்றனர். நாட்டின் எதிர்காலமே வகுப்பறையில்தான் தீர்மானிக் கப்படுவதால் மாணவர்களிடையே கல்வி யைக் கற்றுக்கொடுப்பதோடு மட்டுமில்லா மல் இயற்கை வளங்களையும் சூழலை யும் காப்பதும் நமது கடமை என்பதை மாணவர்கள் உணரவேண்டும் என்கிறார் பள்ளியின் தலைமை ஆசிரியர் எஸ். பாபு.
பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை
பதிவு செய்த நாள் : செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 9:14 PM IST
ராமநாதபுரம், டிச. 10–
தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில பொதுக்குழு கூட்டம், பதவி உயர்வு பெற்ற தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா மற்றும் கூட்டுறவு சங்க தேர்தலில் இயக்குனர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட சங்க நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா ராமநாதபுரத்தில் நடைபெற்றது.
ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளியில் நடந்த இந்த விழாவிற்கு கழகத்தின் மாநில தலைவர் சங்கரநாராயணன் தலைமை வகித்தார். மாநில பொதுக்செயலாளர் பாலகிருஷ்ணன், மாநில துணைத்தலைவர் ரவி, மண்டல இணை செயலாளர் ஷாஜகான் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார்.
கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் வருமாறு:–
பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், 2004–06–ம் ஆண்டில் தொகுப்பூதிய முறையில் நியமிக்கப்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கு நியமனம் செய்யப்பட்ட நாளில் இருந்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 10–ம் வகுப்பு வரை தமிழ் மட்டுமே பயிற்று மொழியாக நடைமுறைப்படுத்த வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் முதல் பாட வேளையாக மாணவர்களுக்கு நல்லொழுக்க கல்வியை அறிமுகப்படுத்த வேண்டும்.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மதுப்பழக்கத்தில் சிக்கி வருவதை தடுக்க பூரண மதுவிலக்கு திட்டத்தை அமுல்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகை கல்வி நிறுவனங்களின் அறக்கட்டளைகளை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும்.
அரசு பொறியியல் மற்றும் மருத்துவக்கல்லூரிகளில் உள்ள அனைத்து இலவச இடங்களையும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ–மாணவிகளுக்கே தர வரிசை அடிப்படையில் முன்னுரிமை கொடுத்து வழங்க வேண்டும். மைய அரசு பள்ளிகளில் உள்ளது போல் 9 மற்றும் 10–ம் வகுப்புகளுக்கு பாடம் நடத்த முதுகலை ஆசிரியர்களையே நியமிக்க வேண்டும். மாவட்ட கல்வி அலுவலர் நேரடியாக நியமனம் செய்யப்படுவதை உடனே நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மாவட்ட நிர்வாகிகள் தங்கபாண்டியன், ராமநாதன், செல்வராஜ், சுரேஷ் கண்ணன், செந்தில்குமார், நாகநாதன், பாரதிராஜன் உள்ளிட்ட மாநில மாவட்ட மண்டல நிர்வாகிகள் உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். ராமச்சந்திரன் நன்றி கூறினார்.
Sunday, December 08, 2013
பள்ளி உளவியல்
பள்ளி உளவியல்
By பாஞ்.இராமலிங்கம்
First Published : 25 November 2013 12:49 AM IST
பள்ளி உளவியல் - பாஞ்.இராமலிங்கம்; பக்.240; ரூ.300; தமிழ்ப் புதுவை வெளியீடு, 22, தேர் வீதி, பிள்ளைசாவடி, புதுவை-14.
மாணவர்களின் உளவியல் குறித்த அடிப்படை அம்சங்களை ஆசிரியர்கள் மட்டுமின்றி, பெற்றோர்களும் அறிந்து கொள்ளும் வகையில் எழுதப்பட்டுள்ள அவசியமான நூல்.
எதைக் கற்பது? எப்படிக் கற்பது? கற்றதை வாழ்வில் எப்படிப் பயன்படுத்துவது? என்பனவற்றை இந்நூல் விளக்குகிறது. குழந்தைகளை அடக்கி வளர்த்தலே அவர்களுக்கு திக்குவாய் பிரச்னை ஏற்பட முதல் காரணம்; திக்குவாய் உள்ள குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை வளர்ப்பதே அப் பிரச்னைக்குத் தீர்வு காண உதவும் என்கிறார் நூலாசிரியர். சமூக, பொருளாதார ஏற்றத் தாழ்வுகள், அவற்றால் ஏற்படும் தாழ்வு மனப்பான்மை ஆகியவற்றின் காரணமாகத் தோன்றும் மனச் சிதைவு நோய், மன நோய்களில் கடுமையான நோயாகும்.
குழந்தைகளை இதுபோன்ற உளவியல் பாதிப்புகளில் இருந்து விடுவிப்பதற்கு பள்ளிகளில் உளவியல் நிபுணர்களை பணியமர்த்த வேண்டியதன் அவசியத்தை இந்நூல் வலியுறுத்துகிறது. பள்ளி உளவியலைப் பற்றியதான நூலாக இருந்தாலும், உளவியலின் அடிப்படைகள், நம் நாட்டு, மேல் நாட்டு உளவியல் நிபுணர்களின் கருத்துகள், குழந்தைகளுக்கான உரிமைகள், அவர்கள் எதிர்கொள்ளும் சமூகப் பிரச்னைகள், கற்றல் குறைபாடுகள், தடைகள், அவற்றுக்கான தீர்வுகள், பாதிக்கப்பட்ட குழந்தைகளை இனம் காண்பது எப்படி? என ஒட்டு மொத்தமாக குழந்தைகளின் மனநலனுக்காகப் பேசும் இந்நூல் பள்ளி, கல்லூரிகளில் மட்டுமல்லாமல், ஒவ்வொரு வீட்டிலும் கட்டாயம் இடம் பெற வேண்டிய ஒன்றாகும்.
கனவு ஆசிரியர் - அமைச்சர்களின் ஆசிரியர்
கனவு ஆசிரியர் - அமைச்சர்களின் ஆசிரியர்
|
Posted Date : 14:12 (07/12/2013)Last updated : 14:12 (07/12/2013)
''அமைச்சராக, தேர்தலில் நின்று ஓட்டு கேட்க வேண்டிய அவசியம் இல்லை. தினமும் ஸ்கூலுக்கு வந்து, டீச்சர் சொல்றதைக் கேட்டாலே போதும். நாங்க அப்படித்தான் அமைச்சரானோம்'' என்கிறார்கள் இந்த மாணவர்கள்.
திருப்பூர் மாவட்டம், வீராட்சிமங்களம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் சுட்டி அமைச்சர்களைப் பார்க்கலாம் வாருங்கள்.
பள்ளி மாணவர்களுக்கு கபடி, கிரிக்கெட், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் எனப் பல்வேறு விளையாட்டுகளின் அடிப்படைகளைச் சொல்லித்தருவதும், பிற பள்ளிகளில் நடக்கும் விளையாட்டுப் போட்டிகளுக்கு துணையாகச் செல்வதும் விளையாட்டுத் துறை அமைச்சரின் வேலை.
''இப்ப நடந்த மாவட்ட அளவிலான செஸ் போட்டியில், எங்க ஸ்கூல் பையன்தான் ஜெயிச்சான். அப்போ, தலைமை ஆசிரியர் என்னையும் கூப்பிட்டுப் பாராட்டினார்'' என்று சொல்லும் விளையாட்டு அமைச்சர் சந்தோஷ்குமார் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி.
சுகாதாரத் துறை, பொதுப்பணித் துறை, முதலமைச்சர் என்று ஒவ்வொரு மாணவருக்கும் ஓர் அமைச்சர் பதவியைக் கொடுத்து, அவர்கள் செய்யவேண்டிய பணியை ஒதுக்கி இருக்கிறார், தலைமை ஆசிரியர் நடராஜ்.
''நான் 28 வருடங்களாக ஆசிரியராக உள்ளேன். இரண்டு வருடங்களுக்கு முன், இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராக வந்தேன். நான் படிக்கும்போது, எங்கள் பள்ளியில் மாணவர் மன்றத் தலைவராக நான் இருந்தேன். இந்த மாணவர்கள் ஆரம்பத்தில் பேசுவதற்கே கூச்சப்பட்டார்கள். இவர்களின் கூச்சத்தைப் போக்கவே, இந்த மாணவர் மன்றத்தைத் தொடங்கினேன். இதில் அமைச்சர்கள், முதலமைச்சர் தேர்வு நடக்கும். மாணவர்களின் வருகைப் பதிவு, படிப்பு, ஒழுக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் அமைச்சர்களைத் தேர்வு செய்வதால், மாணவர்களிடையே நாமும் சரியாகப் பள்ளிக்குச் செல்ல வேண்டும், படிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவானது'' என்கிறார்.
மாதந்தோறும் மாணவர் மன்றம் மூலம், அந்த மாதத்தில் வருகிற தலைவர்களின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாள் தினங்களுக்கு அவர்களைப் பற்றிப் பேச ஏற்பாடு செய்கிறார்.
''இதனால் கூச்சம் நீங்கி, 'மேடையில் எங்களாலும் தைரியமாகப் பேச முடியும்’ என்ற நம்பிக்கை வந்துள்ளது. பேச்சுப் போட்டியில் பங்கேற்று வெற்றியும் பெறுகிறோம்'' என்கிறார்கள் மாணவர்கள்.
படைப்பாற்றல் மற்றும் கல்வியில் மாவட்டத்தின் சிறந்த பள்ளியாக இந்தப் பள்ளி தேர்வாகி இருக்கிறது. கடந்த 22 வருடங்களாக ஆண்டு விழாவே கொண்டாடப்படாத இந்தப் பள்ளியில், இரண்டு வருடங்களாக ஆண்டு விழாவை சிறப்பாக நடத்திவருகிறார் நடராஜ்.
''இந்த வருடம் இந்தப் பள்ளியில்தான் மாவட்ட செஸ் விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. அதற்காக நிறையப் பேர் என்னைப் பாராட்டினாங்க. இதற்கு நான் மட்டும் காரணம் கிடையாது; மற்ற ஆசிரியர்களின் அர்ப்பணிப்பும், மாணவர்களின் பங்களிப்பும்தான் காரணம். நம் கடமையைக் கடனே என்று செய்யாமல், எப்படிச் செய்தால் இதில் மற்றவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தி, அவர்களையும் முழுமையாக ஈடுபடுத்தலாம் என யோசித்துச் செய்தாலே போதும். அதைத்தான் நான் செய்கிறேன்'' என்று அடக்கத்துடன் புன்னகைக்கிறார் நடராஜ்.
|
Subscribe to:
Posts (Atom)


