SAY NO TO PPP, TET ,CPS

நிதி வழங்குக

GREAT SALUTE TO OUR ESWARANJI

Todays Educational News

கல்வி செய்தி

முக்கிய செய்திகள் – Google செய்திகள்

BBCTamil.com | இந்தியா

FLASH NEWS

முக்கிய செய்திகள்



FIGHT UNTILL YOU WIN YOUR DEMANDS

மேலும் கல்வி செய்திகள்

Tamilnadu Teachers friendly blog

தினகரன் கல்வி செய்திகள்

தமிழ் முரசு செய்திகள்

தினகரன் முக்கிய செய்திகள் --

TEACHER TamilNadu

தமிழ் முரசு முக்கிய செய்திகள்

Dinamani

Daily Thanthi

கல்வி அஞ்சல்

புதிய தலைமுறை தொலைக்காட்சி

Saturday, October 19, 2013

மறக்க முடியாத மாணவர்கள்: ஹேமா.


Posted Date : 13:10 (15/10/2013)Last updated : 11:10 (16/10/2013)
D. விஜய லெட்சுமி
 
"வாவ், வெரிகுட் ஹேமா குரூப்தான் இந்த கணக்கை ரொம்ப சரியா பண்ணியிருக்கு. Keep it up ஹேமா! எல்லோரும் ஹேமாவுக்கு clap பண்ணுங்க.."
 
கைதட்டல் ஒலி காதைப்  பிளக்க,
 
"ம்!போதும் போதும் , விட்டால் தட்டிக்கிட்டே இந்த period ஐ ஒட்டிடுவீங்க, அடுத்த கணக்கை பார்ப்போம்" என்றபடி ஒரு கணக்கை கரும்பலகையில் எழுதி விட்டு திரும்பும் முன் அதற்கான சரியான பதில் முன் வரிசையிலிருந்து வந்தது , "யார் சொன்னது, ஹேமா குரல் மாதிரி கேட்டுச்சே" என்றேன்.
 
 
"ஆமாம் மேம், அவ தான் சொன்னா". உடன் இருந்த மாணவிகள் கோரஸ் பாட "வெரிகுட் ஹேமா, பரவாயில்லை கேட்பதற்குள்ளேயே ஆன்சர் பண்ற" என்று நான் பாராட்ட மற்ற மாணவிகள் "ஏய் எழுந்து நில்லு" என்று தொந்தரவு செய்த பிறகு மெதுவாக எழுந்தாள். தலையை குனிந்துக்கொண்டு உடலை குறுக்கிக்கொண்டு அவள் நின்ற விதம் சற்றே விநோதமாய் இருக்க அவளை உற்றுப்பார்த்தேன். இதற்கு முன்னும் பல நேரங்களில் அவள் உட்கார்ந்துக்கொண்டே பதில் அளிப்பதை கவனித்திருக்கிறேன். சில நேரங்களில் எனக்கே கோபம் வந்ததுண்டு, இதென்ன பழக்கம் என்று. ஆனால் என் எண்ணம் தவறு என்று இப்போது புரிந்தது. நின்றிருந்தவளை கவனித்துப்பார்த்தேன். ஆறாம் வகுப்பில் தைத்திருந்த சட்டையையும் ஸ்லிப்பையுமே இந்த ஆண்டும் அணிந்துகொண்டிருந்ததில் மூச்சு விட முடியாத அளவுக்கு அது உடலை இறுக்கமாக பிடித்திருக்க தன்  உடல் வளர்ச்சியில் வெட்கி உடலை முன்புறமாக வளைத்து நின்றிருந்தாள் .
 
குழந்தைகளின் உடல் வளர்ச்சி இந்த வயதில் அபரிமிதமாக இருக்கும் என்று தெரியாதா? சென்ற ஆண்டு அணிந்திருந்த ஆடையே இந்த ஆண்டுக்கு எப்படி பொருத்தமாக இருக்கும்? இதைக்கூட கவனிக்காமல் வீடுகளில் இந்த அம்மாக்கள் என்னதான் செய்கின்றனர்! முகம் தெரியாத அந்த தாயின் மீது கோபம் கோபமாய் வந்தது.
 
அவளை அருகில் அழைத்தேன், "நாளைக்கு அம்மாவை ஸ்கூலுக்கு வரச்சொல்லு நான் பேசணும்" என்றேன். "சரிங்க மேம்" என்றபடி போய்  உட்கார்ந்துக்கொண்டாள். அந்த பாட வேளை  முடிந்து வேறு வகுப்புக்கு சென்றுக் கொண்டிருந்த என்னை மைதானத்தில் வழிமறித்தனர் 7 ஆம் வகுப்புக் குட்டிப் பெண்கள் இருவர். "என்னம்மா" என்றேன்.
 
''மேம்! நீங்க அவங்க அம்மாவை வரச்சொன்னீங்க இல்லையா, அதனால ஹேமா அழறா. அவங்க வரமாட்டாங்களாம்!''
 
''ஏன் வரமாட்டாங்க?''
 
இரு பெண்களும் ஒருவரையொருவர் பார்க்க , ஒருத்தி தயங்கியபடியே சொன்னாள்.
 
"ஹேமாவுக்கு அம்மா இல்லை. சித்திதான் இருக்காங்க". 
 
"ஓ! சரி அவங்களுக்கு குழந்தைங்க இருக்காங்களா?"
 
"இல்லை மேம்! ஹேமாவும் அவ தம்பியும் முதல் அம்மாவோட பசங்க. இவங்களுக்கு குழந்தை இல்ல."
 
"சரி நீங்க போங்க, அதை அப்புறம் பார்க்கலாம். ஹேமாகிட்ட அவ அம்மாவைப்பத்தி சொன்னதை சொல்லக்கூடாது, சரியா?" என்று அறிவுறுத்தி அனுப்பினேன். "சரிங்க மேம்" என்றபடி ஓடிப்போயினர். 
 
ஒரு நாள் அவகாசத்தில் என் ஏற்பாட்டின் படி ஹேமாவின் அம்மா என் எதிரே நின்றிருக்க, வகுப்பறையிலிருந்து ஹோமாவை வரவழைத்து இருவரையும் பார்த்து ஆரம்பித்தேன்.
 
"உங்களை பார்த்து நான் ரொம்ப பெருமைப்படறேன். ஹேமா தினமும் அவ்ளோ அழகா தலை பின்னி, பூ வச்சி, மடிப்புக் கலையாம ட்ரெஸ் பண்ணிட்டு ஸ்கூலுக்கு வரா. ஆனா இதை சொல்ல எனக்கு தயக்கமா இருக்கு. இருந்தாலும் வேற வழி இல்லை. அவ போட்டிருக்கிற ட்ரெஸ்ஸை பாருங்க. எவ்வளவு இறுக்கமா இருக்கு. இதனால குழந்தை, மற்ற பிள்ளைங்க முன்னாடி எழுந்து நிற்கவே வெட்கப்படறா. இதையெல்லாம் குழந்தைங்க நம்மக்கிட்ட சொல்ல கூச்சப்படுவாங்க. நீங்கதான் அவங்களுக்கு சரியான நேரத்தில தேவையான விஷயங்களை பார்த்து செய்யணும்" என்றேன். ஹேமாவைப் பார்த்து, "அம்மா உனக்காக எவ்வளவு அக்கறையா வந்திருக்காங்க அவங்களை பார்த்தாயா, எப்படி இருக்காங்க. உன்னை இவ்வளவு அழகா ஸ்கூலுக்கு அனுப்பி வைக்கறவங்க, தன்னைப் பற்றி கவலைப்பட்டது போலவே தெரியல. இதுபோல அம்மா கிடைக்க நீ கொடுத்து வெச்சிருக்கணும் பெண்ணே" என்றேன். மிக எளிமையாய் மஞ்சள் தடவிய முகத்துடன் நின்றிருந்த அந்த பாமரத்தாயின் விழிகளில் சட்டென கண்ணீர் எட்டிப்பார்த்தது.
 
அம்மாவைப் பார்த்துச்  சொன்னேன், "அம்மா, உங்க பெண்ணை நெனச்சு நீங்களும் பெருமைப்பட்டுக்கலாம். அவ்வளவு அழகா படிக்கறா. அத்தனை அமைதி. இது போல பெண் இல்லையேன்னு என்னையே ஏங்க வைக்கிறா" என்றேன். 
 
விழிகளை மறைத்த கண்ணீரை துடைத்தப்படி தலைகுனிந்துக்கொண்டாள் ஹேமா. இருவருக்குள்ளும் ஒருவர் மீது ஒருவர் பழகிய பாசம் இருக்கின்றது. அவர்கள் அதை வார்த்தைகளால் பரிமாறிக்கொண்டதில்லை என்பதை புரிந்துக்கொண்டேன். இருவரும் கடைசிவரை சொல்லவில்லை தாங்கள் சொந்த அம்மாவும் பெண்ணும் அல்ல என்று. நானும் தெரிந்ததாய்  காட்டிக்கொள்ளவில்லை.
 
அடுத்த வாரமே புது ஆடையில் எழுந்து நின்று பதில் சொல்ல ஆரம்பித்த குட்டி ஹேமாவின் மனதில் எனக்கான ஒரு இடம் உருவாகி இருந்தது.
 
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு,
 
முத்துப்பற்களின் வெள்ளைச்சிரிப்பை புறங்கையால் மறைத்து வசீகரிக்கும் அதே ஹேமா. நன்றாய்  வளர்ந்திருந்தாள் . ஒன்பதாம் வகுப்பு ஆங்கில ஆசிரியையாக மீண்டும் நான். அரையாண்டுத்தேர்வுகள் நடைப்பெற்றுக்கொண்டிருந்த சமயம், ஹேமாவின் அம்மா என்னைப் பார்க்க வந்திருந்தார். அதே வெகுளிப்பார்வை. கூடவே அழுகை!, "இந்தப்பொண்ணு இப்படிப்பண்ணும்னு நான் நெனைக்கவே இல்ல. பாக்கறவங்க என்னைத்தானே சொல்லுவாங்க அவ புள்ளையா இருந்தா இப்படி விடுவாளான்னு!".
 
"என்ன ஆச்சு என்றேன். பசங்க என்னென்னவோ சொல்றாங்க. வரப்புல, போற வழியில எல்லாம் யாரோ பையனப் பார்த்து சிரிக்கறாளாம். பூ வாங்கினாளாம். நீங்கதான் அதுக்கு புத்திமதி சொல்லணும். என் புள்ளைக்கு மேல  அவமேல பாசம் வெச்சிருக்கேன். அவதான் என்கூட ஒத்தப்பேச்சு பேசறதில்ல. நாம ஏதாவது கேக்கப்போயி அது ஏதாவது பண்ணிக்குமோன்னு எனக்கு பயம். அப்புறம் அவங்க அப்பா என்ன கொன்னேபோடுவாரு. அதுன்னா அவங்களுக்கு உசுரு" என்றார். 
 
"சரி, நான் விசாரிக்கிறேன், நீங்க கவலைப்படாம போங்க", என்று அவரை அனுப்பிவிட்டு ஹேமாவின் தோழிகளை விசாரித்ததில் அம்மா சொன்னது உண்மை என்று புரிந்தது. ஹேமாவை அழைத்தேன். "என்ன பெண்ணே, இப்பல்லாம் படிக்கிறதோட வேற வேலையெல்லாம் கூட பாக்க ஆரம்பிச்சிட்ட போலருக்கு", என்றேன். 
அதிர்ந்து நிமிர்ந்தாள் ஹேமா .குற்றவுணர்வு குறுகுறுக்க அமைதிகாத்தாள். "இந்த வயசுல நம்மை பாக்கறவாங்க மேல எல்லாம் ஈர்ப்பு வர்றது சகஜம் தான். ஆனால் பார்க்கறவங்க எல்லாம் உண்மையான அன்போட பழகுவாங்கன்னு சொல்லமுடியாது. நான் சொல்ல வர்றது என்னன்னு உனக்கு புரியுதா? இதுக்கப்புறம் இந்த பூ வாங்கற வேலையெல்லாம்  பார்க்காதே ,உங்க அப்பாவுக்கு தெரிஞ்சா எவ்வளவு வருத்தப்படுவாரு தெரியுமா?" முகம் மாறிப்போனவள் சொன்னாள், திடீர்ன்னு  பூ கொடுத்தப்ப என்ன பண்றதுன்னு  தெரியாம வாங்கிட்டேன். இனிமே அந்த வழியா போகவே மாட்டேன் மேம். தொண்டை அடைக்க சொன்னாள். மறு நாள் அம்மாவை வரவழைத்து சொன்னேன், "நீங்க உங்க அன்பை மனசுக்குள்ள பூட்டி வச்சுக்கிட்டிருந்தா அது எப்படி அவளுக்கு தெரியும்?வீட்டுக்குள்ள கிடைக்காதத வெளியில் தேடியிருக்கா. ஏதோ ஒரு இடத்துல கிடைச்சதும் மனம் தடுமாறியிருக்கு. சின்ன பெண்தானே. புரியல.இன்னும் நீங்க நெருங்கி பழகுங்க. அவளோட நிறைய பேசுங்க. இந்த வயசு பசங்க இப்படித்தான் இருப்பாங்க. நாம தான் பத்திரமா பார்த்துக்கணும். எல்லா குழந்தைக்கும் தெளிவு இருக்கும்னு சொல்ல முடியாது. அவங்க தெளிவாகறவரை கொஞ்சம் கவனிச்சிக்கங்க. அவங்க அப்பாவை அவளோட நல்லா பேச சொல்லுங்க எல்லாம் சரியாயிடும்" என்றேன் .நன்றிப்பெருக்குடன் விடைப்பெற்றார் அந்த தாய்!.
 
பேருந்து நெரிசலில் வலுக்கட்டாயமாக முன்னேற்றப்பட்டதில் [வாழ்க்கையில் முன்னேற முடிகிறதோ இல்லையோ பேருந்தில் மட்டும் கட்டாய முன்னேற்றம் கிடைத்துவிடுகிறது ] முன்புறம் அமர்ந்திருந்த பெண்ணின் மீது மோதி  நிமிர்ந்தபோதுதான் கவனித்தேன் அவளை. ஹேமா !ஆறாம் வகுப்பு குட்டி பெண்ணாய் பார்த்தபோதிருந்த அதே அமைதி, அதே வசீகரமான வெட்கச்  சிரிப்பு ,ஆனால் அனுபவத்தின் வாசல் விரிவடைந்த சுவடுகள் தெரிந்த முகம் வேலைக்குப் போகும் பெண்களுக்கே உரிய கம்பீரத்துடன் இருந்தாள்  ஹேமா ..அப்போதுதான் அவளும் என்னை கவனித்தவள்,படக்கென எழுந்து உக்காருங்க மேம் என்றாள் .தாங்க்  யு  செல்லம் என்று சொல்லி கேட்டேன்", இன்னும் கூட மேம் ஞாபகம் இருக்கா?"
 
சற்றே மௌனித்தவள் சொன்னாள் ",உங்களை மறக்க முடியுமா மேம்? "குரலில் அத்தனை உணர்ச்சி!"
 
 
(D.விஜய லெட்சுமி, அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றுபவர். அவர் தன்னிடம் படித்த மறக்க முடியாத மாணவர்களைப் பற்றி எழுதி வருகிறார். இதை படிக்கும் மற்ற ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களைப் பற்றியும் அல்லது கல்வி தொடர்பான மற்ற விஷயங்கள் பற்றியும் படைப்புகளை எங்களுக்கு அனுப்பலாம்)
.

தமிழகத்தில் 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப முடிவு

அண்மையில் நடந்து முடிந்த தகுதித் தேர்வு மூலம் 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்காக பாட வாரியான காலியிடங்களை கணக்கெடுக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
13 ஆயிரம் இடங்கள் இடைநிலை ஆசிரியர்களுக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் கடந்த ஆகஸ்ட் 17, 18 ஆகிய தேதிகளில் தகுதித்தேர்வு நடத்தப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய இந்த தகுதித்தேர்வை ஆறரை லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் எழுதினர். விடைத்தாள் மதிப்பீடு தொடர்பான அனைத்து பணிகளும் முடிவடைந்து விட்டன. தேர்வு முடிவுகளை ஒரு வாரத் தில் வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இந்த தகுதித்தேர்வு மூலம் 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. இதில் பட்டதாரி ஆசிரியர் பணி இடங்கள் மட்டும் 10 ஆயிரம் அடங்கும். மீதமுள்ள 3 ஆயிரம் இடங்கள் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் ஆகும்.
பாடவாரியாக கணக்கெடுப்பு பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் குறித்த விவரங்கள் பள்ளிக் கல்வித்துறை, தொடக்கக் கல்வித்துறை, ஆதி திராவிடர் நலத்துறை, நகராட்சி பள்ளிகள், சென்னை மாநகராட்சி, கோவை மாநகராட்சி என பல்வேறு துறைகளில் இருந்து வந்துள்ளன.
பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை பாடவாரியாகவும், துறைவாரியாகவும் கணக்கெடுக்கும் பணி ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தில் மும்முரமாக நடந்து வருகிறது. இப்பணி முடிந்தவுடன் தகுதித்தேர்வு முடிவு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Thursday, October 17, 2013

website for CCE

Way2Cce Logo

அரசு + ஆசிரியர் + மாணவர் = சமச்சீர்க் கல்வி

இன்றைய சமகாலக் கல்வியில் சமச்சீர் என்ற வார்த்தை எல்லார் வாயிலும் உச்சரிக்கப்படும் ஒன்று. கடந்த வருடங்களில் தொடங்கிய சமச்சீர்க் கல்வி தற்போது ஒன்பதாம் வகுப்பிற்குப் பாய்ந்துள்ளதை அநேகர் ஆதரிக்கின்றனர். சிலர் புறக்கணிக்கின்றனர். அந்த விஷயத்திற்கு நாம் போகத்தேவையில்லை. இப்போது நாம் பார்க்கப்போவது, அரசு - ஆசிரியர் - மாணவர் என்ற சிறிய முக்கோணத்திற்குள் இயக்கப்படும் சமச்சீர்க் கல்விக் கொள்கையைப் பற்றியதுதான்.
சமச்சீர்க் கல்வித் திட்டத்தை முன்னிலைப்படுத்திய அரசின் செயல்பாட்டைப் பற்றி முதலில் காண்போம். ஏற்கெனவே இருந்த கல்விக் கொள்கையில் உள்ள பின்னடைவு அல்லது சமூக மாற்றத்திற்கான புதியவழிக் கல்விக்கொள்கையாக இது அமையும் என அரசு நினைத்திருக்கலாம்.
வழக்கமான பாடத்திட்டத்தில் ஒவ்வொரு மாதம், ஒவ்வொரு வாரம் ஆசிரியர் நடத்த வேண்டிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டிருக்கும். அந்தந்த வாரத்திற்குள்ளான பாடத்தை நடத்தி, தேர்வு வைத்து, மாணவர்களை தேர்ச்சி அடைய வைக்கவேண்டும் என்கிற உத்வேகம் அதில் இருக்கும். இதனடிப்படையில் காலாண்டுத் தேர்வு தொடங்கி முழுஆண்டுத் தேர்வு வரையிலான தேர்வுகளும், அதற்குள் இடைப்பருவத் தேர்வுகளும் நடக்கும். ஒரு மாணவனின் தேர்ச்சி வெற்றி என்பது பாட அளவில் குறைந்தது 35 சதவீதம், அதிகபட்சம் 100 சதவீதம்.
இது இப்போது சமச்சீர்கல்வியில் மாறி இருக்கிறது. ஒவ்வொரு பாடத்திட்டத்திலும், இந்த வாரம் நடத்தவேண்டிய பாடம் எது, அதில் ஆசிரியர் தரவேண்டிய வளரறி மதிப்பீடுகள் FA (a), (b) (1. வகுப்பறையில் மாணவரின் பாட எதிர்வினை), (2.மாணவர்களுக்குத் தரவேண்டிய செயல்திட்டம்) எவை என்பது குறிப்பிடப்பட்டுள்து நாம் வரவேற்கத் தகுந்த ஒன்று. அரசின் பாடத்திட்டத்தினை ஆசிரியர்கள் மாற்றி அமைத்துக்கொள்ளலாம் என்கிற அரசின் நெகிழ்வுத்தன்மையையும் நாம் பாராட்டவேண்டும். ஆக, இத்துடன் அரசின் மகத்தான பணி தொடங்கிவிட்டது..
அடுத்து, ஆசிரியர்களின் நிலையைப் பார்ப்போம். அரசு வெளியிட்டுள்ள பாடத்திட்டத்தின்படி அவர்கள் நடந்துகொள்கிறார்களா என்பதே ஐயம். இன்னும் இதை நடைமுறைப்படுத்த ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டும், அவர்கள் தெளிவு அடையவில்லை என்றே தோன்றுகிறது. பாடத்திட்டத்தின்படி குறுதேர்வு வினாத்தாள்களை (மாதிரிகளை அரசு வழங்கியுள்ளது) அவர்கள் தயாரித்து, மாணவர்களுக்குக் கற்றலடைவுச் சிறு மதிப்பீடு வைத்து, மதிப்பெண்ணைப் பதிவேட்டில் குறிக்கிறார்களா அல்லது 'ஏறக்குறைய' என்ற அடிப்படையில், மாணவர்களின் கல்வித்தரத்தை வைத்து மதிப்பெண் தருகிறார்களா என்பது தெரியவில்லை.
உதாரணமாக, வளரறி மதிப்பீடு-அ-விற்கு 40 மதிப்பெண். அதில் ஏதாவது நான்கு பாடவேளையில், 10 மதிப்பெண்ணிற்கு 4 ஆக வைத்துக் கொள்ளலாம். இதற்கு ஆதாரம் தேவையில்லை. அதாவது பாடம் நடத்தும்போது முன்னும் பின்னுமாகக் கற்றல் - கற்பித்தலில் மாணவனின் எதிர்வினை என்பதால் தேவையில்லை. எனவே ஆசிரியர்கள் தாராளமாக, நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்கு 10 மதிப்பெண், மோசமாகப் படிக்கும் மாணவர்களுக்கு 5 மதிப்பெண் குறித்துக்கொள்ளலாம் என்கிற அவல நிலை இதில் ஏற்படுகிறது. இப்படி 4 மதிப்பீடுகளிலும் இச்செயல் நிகழும்.
மதிப்பிற்குரிய ஆசிரியர்கள் இந்த தவறைச் செய்வதில்லை. தெளிவற்ற, குழப்பமான, ஆதாரம் எதுவும் தேவையில்லை என்கிற நிலையை உணர்ந்த சில மோசமான ஆசிரியர்கள் மதிப்பெண்ணை வழங்கிவிடுகிறார்கள். இது மாணவர்களைப் பாதிக்கும் ஒன்று.
கம்பர் பற்றி ஆசிரியர் வினவும் ஐயங்களுக்கு, உடனடியாகப் பதில் தரும் மாணவர்களுக்கு அதிக மதிப்பெண் வழங்குவது தவறில்லை. பதிலளிக்க தயங்கும், அதைப்பற்றித் தெரியாத மாணவர்களுக்குக் கம்பர் பற்றி விஷயங்களை, அம்மாணவர்களுக்குச் சொல்லி, அவர்களைத் திரும்ப சொல்ல வைக்கவேண்டும் என்று கல்விக்கொள்கை சொல்கிறது. இதை ஆசிரியர்கள் பின்பற்றுகிறார்கள் என்றால் மகிழ்ச்சிதான்.
பாடக்குறிப்பேட்டில் பயன்படுத்தும் கருவிகள் என்ன என்பதைக் குறிப்பிடும் ஆசிரியர்கள், அதைக் கடைபிடிக்கும்போது கற்பித்தல் சிறப்பாக நடைபெறும். தனக்கான வளரறி மதிப்பீடுகளை (குறுந்தேர்வு, செயல்திட்டம்) ஆசிரியர்கள் மாற்றிக் கொள்ளலாம் என்கிற முழு சுதந்திரத்தை அரசு வழங்கிய பின், பொதுபுத்தி மனோநிலையில், எல்லா பாட ஆசிரியர்களும் அதைப் பின்பற்றும் செக்குமாட்டுத்தனத்தை விடவேண்டும். அவர்களாக, தம் மாணவர்களின் கல்வித் தரத்தினை முன்னேற்றும் வகையில் வளரறி மதிப்பீடுகளை அமைத்துக்கொள்ளவேண்டும்.
கிராமப்புற மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட செயல்திட்டத்திற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் ஆசிரியர்கள் மேற்கொள்ளவேண்டும். அதாவது பள்ளு இலக்கியம் பற்றியோ, அக்பர் பற்றியோ செயல்திட்டம் தரும்போது, கிராமப்புற மாணவர்களுக்கு அதற்கான வழிவகைகள் அமைவதில்லை. இணையமோ, நூலகமோ இல்லாத கிராமப்புற மாணவர்களுக்கு ஆசிரியர்தான் பள்ளி வழியாகவோ, தன்னுடைய பொருளாதாரத்தின் வழியாகவோ செய்யவேண்டும். அவர்கள் நாம் பெறாத பிள்ளைகள் என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். செய்வார்களா ஆசிரியர்கள்? பாடத்தினைத் தவிர்த்து, பாடம் தொடர்பான பல விஷயங்களை மாணவர்கள் கற்கத்தான் சமச்சீர்க்கல்வி. இதை மாணவர்களிடம் கையளிப்பார்களா ஆசிரியர்கள்?
இனி, மாணவர்கள். இந்தக் கல்விக்கொள்கை இவர்களுக்காக வடிவமைக்கப்பட்டது என்றும் இவர்கள் அறிவாளியாக ஆக ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் ஆசிரியர்கள் அவ்வப்போது வகுப்பறையில் சொல்லி வருகிறார்கள். இருந்தாலும் நகர மாணவர்களைவிட, கிராமப்புற மாணவர்கள் நிலைதான் படுமோசம். நெகிழ்வான கல்விக்கொள்கையினை அவர்கள் சிறிது தடுமாற்றத்துடன் வரவேற்கிறார்கள். காரணம் செக்குமாட்டு வாசிப்பிலிருந்து, புதிய, எளிமையான கற்றல் தளத்திற்கு அவர்கள் மாறிவிட்டதே. கடைசி பெஞ்ச் மாணவர்களை முதல் பெஞ்ச மாணவர்களாக மாற்றுவதே இக்கொள்கை. ஆனால், அவர்கள் உழைக்காமலேயே மதிப்பெண் பெற்றுவிடுகிறார்கள். அதாவது குறைந்த மதிப்பெண் 5. இதிலிருந்து அவர்கள் விடுபடவேண்டும். குழு மனப்பான்மையுடன் கற்றல்திறன் அதிகம் உள்ள மாணவர்களுடன், ஆசிரியருடன் இணைந்து தம் கற்றலை மேம்படுத்த முனையவேண்டும்.
ஆசிரியர் வழியாக மட்டும் கற்றல் என்பது இல்லாமல், ஆசிரியர் உதவியுடன் கற்றல் என்பதை மாணவர்கள் உணரவேண்டும். இணையமோ, நூலகமோ இல்லாத கிராமம் எனில், ஆசிரியர்கள் உதவியுடன் கற்றலை உருவாக்கிக்கொள்ளலாம். அதற்கு மாணவனின் வேட்கையும் வேகமும் தான், ஆசிரியர்களை உழைக்கச்செய்யும். அந்த வேட்கையையும் வேகத்தையும் மாணவர்கள் பெற்றிடவேண்டும். இலவச மதிப்பெண்களைப் புறக்கணித்து, தனது தகுதியை மேம்படுத்தி, தன் உழைப்பு மதிப்பெண் பெற முயலவேண்டும். மிகத் தைரியமாக, ஆசிரியர்களிடம் உதவி கேட்கவேண்டும். தன்னுடைய கற்றலில் உள்ள குறைபாடுகள் எவை? அவற்றை எவ்வாறு போக்குவது? என்கிற ஆலோசனையை மாணவர்கள் ஆசிரியரிடம் பெறவேண்டும். அரைகுறை கல்வி அறிவு பெற்ற பெற்றோர், கிராமத்திலிருந்து வரும் மாணவர்களுக்கு, மிகச் சிறந்த இடம் பள்ளிதான். அதை இவர்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
கடைசியாக சில விஷயங்கள்...
அரசு செய்யவேண்டியவை
1. அரசு மிகச் சிறந்த பாடத்திட்டத்தினைத் தயாரித்துள்ளது. கூடவே way2cce.com என்ற இணையத்தின் வழியாக ஆசிரியர்களுக்கான இ-மதிப்பெண் பதிவேடு தயாரித்துள்ளது. (இதில் பெரும்பாலான பள்ளிகள் தங்கள் பெயரினைப் பதிவு செய்துகொள்ளவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது. எத்தனை ஆசிரியர்களுக்கு இது தெரியும் என்றும் தெரியவில்லை. இதில் மதிப்பெண்களைப் பதிவு செய்யவேண்டும் என்கிற கட்டாயத்தை அரசு உருவாக்கவேண்டும்.)
2. நூலகமோ, இணையமோ இல்லாத ஊர்களில் இயங்கும் பள்ளிகளில், மாணவர்கள் பயன்படுத்த கணினி வசதியை ஏற்படுத்தியிருந்தாலும், அது முழுமையாகச் செயல்படுகிறதா என்பதை கவனிக்கவேண்டும்.
3. மாணவர்கள் கற்றலை மேம்படுத்த, ஆசிரியர் அளிக்கும் செயல்திட்டங்களை உருவாக்க 'நூலகம்' என்கிற பாடவேளையை உருவாக்கவேண்டும்.
4. ஆசிரியர்கள் பள்ளியில் உள்ள கணினியைப் பயன்படுத்திக்கொள்ள, அச்சு (print ) எடுத்துக்கொள்ள தலைமையாசிரியர் அனுமதிக்கவேண்டும் என்ற கட்டாயத்தை அரசு ஆணையிடவேண்டும். (பெரும்பாலான பள்ளிகளில் பணம் இல்லை என்கிற கதையைத் தான் தலைமையாசிரியர்கள் சொல்கிறார்கள். பல தலைமையாசிரியர்களுக்குக் கணினியை இயக்கத் தெரியாது என்பது வேறு விஷயம்)
5. கணிப்பொறி என்கிற பாடவேளையை அரசு உருவாக்கியுள்ளமைக்கு நன்றி. ஆனால் கிராமப்புற மாணவர்கள் அத்தனைபேருக்கும் கணிப்பொறி இயக்கத் தெரிந்திருக்கிறதா என்பதைக் அவ்வப்போது கண்காணிக்கும் பணியையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
ஆசிரியர்கள் செய்யவேண்டியவை
1. தலைமை ஆசிரியர்கள் உதவியில்லாமல், முழு முயற்சி எடுத்துத் தன் பொருளாதாரத்தினை முன்வைத்து கற்றலுக்கான கருவிகளை மாணவர்களுக்குத் தயாரித்துத் தர முன் வரவேண்டும்.
2. கற்றல் குறைவான மாணவர்களுக்கு, இவர்கள் நம் பிள்ளைகள் என்கிற உணர்வுடன் மீண்டும் கற்பிக்கவேண்டும்.
3. இணையத்தை இயக்கவும், தேடுபொறியில் செயல்படவும் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கவேண்டும். (கணிப்பொறி பாடவேளை என்பது வெறும் பாடவேளையாக இருக்கிறது.) ஒவ்வொரு மாணவரும் கணினியை இயக்கத் தெரிந்திருக்கிறார்களா என்பது குறித்து ஆசிரியர்கள் ஆய்வு மேற்கொள்ளவேண்டும்.
மாணவர்கள் செய்யவேண்டியவை
1. கற்றல் குறைவாக இருப்பின், தகுந்த பாட ஆசிரியரிடம் தன் கற்றலை மேம்படுத்திக் கொள்ளவேண்டும்.
2. செயல்திட்டத்திற்கான கருவிகள் இல்லாதபோது, ஆசிரியரிடமே அதைப் பெற்று செயல்படவேண்டும்.
3. இலவச மதிப்பெண்ணை மறுத்து, உழைப்பு மதிப்பெண்ணைப் பெற வேண்டும்.
4. எந்த தயக்கமும் இல்லாமல், தன் ஐயங்களைக் கேட்டு தெளிவு கொள்ளவேண்டும்.
ராணிதிலக், கட்டுரையாளர் - தொடர்புக்கு raa.damodaran@gmail.com

இனிமையாக கணிதம் படிக்க எளியமுறை - ஆசிரியர் உமாதாணுவின் கண்டுபிடிப்பு

  • உமாதாணு கண்டுப்பிடித்த யூனூஸ் முறை
    உமாதாணு கண்டுப்பிடித்த யூனூஸ் முறை
  • மனைவியுடன் உமாதாணு
    மனைவியுடன் உமாதாணு
கணிதப் பாடத்தை ஆர்வத்துடன் படிக்க எளிய வழிமுறைகள் மூலம் வழிகாட்டுகிறார் ஓய்வுபெற்ற கணித ஆசிரியர் உமாதாணு.
இனிமையாகவும், ஆர்வத்தோடும் கணிதப் பாடங்களை படிப்பதற்கு ஒரு எளிய வழிமுறையைக் கண்டுபிடித்திருக்கிறார் ஓய்வுபெற்ற கணித ஆசிரியர் என்.உமாதாணு.
கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமத்தில் ஏழ்மையான விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவர், கல்லூரியில் அவருக்குப் பிடித்த கணிதப் பாடத்தை படித்தார். அதுவே, அவரது வாழ்வில் பெரிய திருப்புமுனையாக அமைந்துவிட்டது.
1962-ல் கணித ஆசிரியராக கோவையில் பணியைத் தொடங்கினார் உமாதாணு. இரண்டு தனியார் பள்ளிகளில் 35 ஆண்டுகள் பணியாற்றி 1997-ல் ஓய்வுபெற்றார். அதன்பிறகு ஏழை மாணவர்களுக்கு உதவ திட்டமிட்டார்.
வசதிபடைத்த மாணவர்கள் அபாகஸ் போன்ற பயிற்சிகள் மூலம் கணிதத்திறனை வளர்த்துக் கொள்கிறார்கள். அந்த மாதிரியான வாய்ப்பு இல்லாத ஏழை, எளிய மாணவர்களுக்கு நடைமுறை வாழ்க்கையுடன் ஒப்பிட்டு கணிதம் கற்றுக்கொடுக்கும் எளிய முறையையும்,அதற்கான உபகரணங்களையும் உருவாக்கினார். இந்தப் பணியில் அவரது மனைவி கனகம் உறுதுணையாக இருந்தார்.
உதாரணத்துக்கு, கணக்குப் பாடத்தின் முக்கோணயியல், வாழ்க்கையில் எவ்வாறு பயன்படுகிறது என்று விளக்குகிறார். மெரினா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்க அதிகாரிக்கு, கடலுக்குள் ஒரு கப்பல் மூழ்கிக் கொண்டிருப்பதாக தகவல் வருகிறது. உடனே அந்த அதிகாரி, அந்த கப்பல் கடலில் எவ்வளவு தொலைவில் இருக்கிறது என்று கண்டறிவதற்காக, எவ்வளவு இறக்கக் கோணத்தில் கப்பல் தெரிகிறது என்று கிளினாமீட்டர் உதவியுடன் பார்த்து கணக்கீடு செய்வார். கரையில் இருந்து எவ்வளவு வேகமாக பாதுகாப்பு கப்பல் சென்றால், மூழ்கும் கப்பலில் உள்ள சிப்பந்திகளை காப்பாற்ற முடியும் என்று சில நொடிகளிலே கணக்கிட்டு வழிகாட்டுவார். இப்படி, ஏற்றகோணம்,இறக்ககோணம் வாழ்க்கையில் எவ்வளவு பயன்படுகிறது என்று விளக்கிவிட்டால், மாணவர்கள் உற்சாகமாக இந்தப் பகுதியைப் படிப்பார்கள். இதேமாதிரி ஒவ்வொரு பாடப்பகுதியையும் வாழ்வியலோடு ஒப்பிட்டு சொல்லிக் கொடுத்தால் மாணவர்கள் புரிந்து நினைவில் கொள்வதற்கு எளிதாக இருக்கும்.
எவ்வளவு பெரிய எண்ணாக இருந்தாலும், அதன் காரணிகளை எளிதாக கண்டுபிடிக்கும் முறையை உருவாக்கியிருப்பதாகச் சொல்லும் உமாதாணு, அதனை உதாரணத்துடன் விளக்குகிறார்.
இரு எண்களின் பெருக்குத் தொகை -480, கூட்டுத் தொகை -1 என்று எடுத்துக் கொண்டால், இதன் காரணிகளைக் கண்டுபிடிக்க தற்போதைய கற்பிக்கும் முறையில் 8 முதல் 10 நிமிடங்கள் வரை ஆகும். ஆனால், நான் கண்டுபிடித்துள்ள முறையில் இரண்டே நிமிடங்களில் காரணிகளைக் கண்டுபிடிக்க முடியும் என்கிறார். அதாவது, பெரிய எண்ணை சிறிய எண்ணால் வகுக்க வேண்டும். அதேநேரத்தில் சிறிய எண்ணை அதே எண்ணால் பெருக்க வேண்டும். அப்படி செய்தால், எவ்வளவு பெரிய எண்ணாக இருந்தாலும் இரண்டே நிமிடங்களில் விடை கிடைத்துவிடும். இந்த எளியமுறைக்கு யூனூஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது.
அதுபோல, 6-ம் வகுப்பில் இருந்தே ஜியோமெட்ரிக் பயன்படுத்தும் மாணவர்களுக்கு மூலை மட்டங்களின் முழு பயன்பாடு சொல்லித் தரப்படுவதில்லை. மூலை மட்டங்களைக் கொண்டு இணைகோடு, செங்குத்துக் கோடு வரையலாம் என்று மட்டும் சொல்லிக் கொடுக்கிறார்கள். ஆனால், மூலை மட்டங்களைக் கொண்டு எந்த அளவில் வேண்டுமானாலும் கோணங்களை வரைய முடியும் என்பதை கண்டுபிடித்துள்ளார்.
இப்படி மூலைமட்டங்களின் பயன்பாட்டை பள்ளியிலே முழுமையாக படித்துவிட்டால் பி.இ. படிக்கும்போது எளிதாக இருக்கும் என்கிறார்.
கணிதப் பாடத்தை இனிமையாகக் கற்றுக்கொடுக்க இவர் கண்டுபிடித்துள்ள எளியமுறை, தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகம் போன்ற வெளிமாநிலங்கள், அயல்நாடுகளையும் எட்டியிருக்கிறது.
சென்னை மாநகராட்சி மாணவர்களையும் இப்போது தொட்டிருக்கிறது. இனி வரும்காலத்தில் சென்னைப் பள்ளி மாணவர்களும் கணிதப்பாடத்தில் சக்கை போடு போடுவார்கள் என்று நம்பலாம்

தமிழகத்திலேயே முதன்முதலாக பூட்டப்பட்ட அரசுப் பள்ளி

'எங்க ஊர் குழந்தைகள் வெளியூர் போய் படிக்க முடியலை. உள்ளூர்ல ஒரு பள்ளிக்கூடம் கட்டிக்கொடுங்க...' என்றோ, 'எங்க கிராமப் பள்ளியை நடுநிலை அல்லது உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்துங்கள்' என்றோ கோரிக்கைகள் வைக்கப்படுவதைதான் பார்த்திருப்போம். இதற்கான போராட்டங்கள்கூட தூள் பறக்கும். ஆனால், 'எங்க ஊர் அரசுப் பள்ளியை இழுத்து மூடிவிடுங்கள்...' என்ற கோரிக்கை 'அத்திப்பூ' ஆச்சர்யம்தானே. கிருஷ்ணகிரி மாவட்ட மலைக் கிராமம் ஒன்றில்தான் இப்படி ஒரு கோரிக்கை.
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் ஒன்றியத்தில் பெட்டமுகிலாளம் என்ற ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சிக்கு உள்பட்ட கிராமங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மலைமுகட்டில் அமைந்திருக்கும். இவற்றில் சில கிராமங்களுக்கு கால்நடையாக மட்டும்தான் போக முடியும். அப்படியான கிராமம்தான் புல்லஅள்ளி. 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை 80 வீடுகளுடன் கம்பீரமாக இயங்கிய விவசாய கிராமம். டன் கணக்கில் தானியங்களை இருப்புவைக்க ஏற்ற வகையில் கட்டப்பட்ட வீடுகள். இங்கு சில வீடுகளில் மட்டும்தான் மக்கள் வசிக்கிறார்கள். பொருளாதாரம் எனும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, இந்தக் கிராமத்தில் 33 ஆண்டுகளாகச் செயல்பட்ட அரசு ஆரம்பப் பள்ளிக்கு மூடுவிழா நடத்தப்பட்டுள்ளது.
ஒன்றரை மணி நேர நடைப்பயணம்
புல்லஅள்ளி மலைக் கிராமத்தில் கடந்த 1979-ம் ஆண்டு அரசு ஆரம்பப் பள்ளி தொடங்கப்பட்டது. புல்லஅள்ளி, ஆலாப்பட்டி ஆகிய இரண்டு கிராமங்களைச் சேர்ந்த குழந்தைகளும் படிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இந்தப் பள்ளியில், அதிகபட்சமாக 60 குழந்தைகள் வரை படித்திருக்கிறார்கள். இங்கிருந்து 8 கிலோ மீட்டர் தூரத்துக்கு கரடுமுரடான மண் சாலையில் இருசக்கர வாகனங்களில் மட்டும் 'திக்திக்' பயணம் செய்தால்தான் மலையடிவாரத்தை அடையலாம். இன்னொரு மாற்றுவழி 3 கி.மீ. தூரம்கொண்டது. படிகட்டுகளாக அமைந்துள்ள இந்த வழியில் நடந்துபோக ஒன்றரை மணி நேரம் ஆகும். இப்படியொரு சூழலில் வாழும் மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் கிடைப்பது சவாலாக மாறியது. மேலும், பொய்த்துப்போன மழை, கைகொடுக்காத விவசாயம் போன்ற காரணங்களாலும், இங்கு வாழ்ந்த மக்கள் ஒன்றன்பின் ஒன்றாக மலையை விட்டு இடம்பெயர ஆரம்பித்தனர்.
தனியார் பள்ளிகளில்…
தற்போது புல்லஅள்ளி கிராமத்தில் வெறும் 8 குடும்பங்கள் மட்டுமே வசிக்கின்றன. ஆலாப்பட்டி கிராமத்தில் இன்றைக்கு மிச்சமிருப்பவை 7 குடும்பங்கள்தான். கடந்த 2012-13-ம் கல்வியாண்டில் இங்கே படித்த குழந்தைகளின் எண்ணிக்கை 10-க்கும் கீழே குறைந்தது. தற்போது எவருமே இல்லை. மலைமேல் வசிக்கும் சில குடும்பங்கள்கூட தங்கள் குழந்தைகளை மலையடிவாரத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் சேர்த்துவிட்டனர். எனவே நடப்புக் கல்வியாண்டில் இந்த பள்ளியில் ஒரு குழந்தைகூட புதிதாக சேர்க்கப்படவில்லை. இந்த நிலையிலும் இந்தப் பள்ளிக்கு என நியமிக்கப்பட்ட செல்வக்குமார் என்ற ஆசிரியர் தினமும் நடந்தே மலையேறி வந்து போயிருக்கிறார். இதை கவனித்த அந்தக் கிராம மக்கள் கெலமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், உதவி தொடக்கக் கல்வி அலுவலகத்திலும், 'எங்கள் ஊர் பள்ளியில் சேர்ந்து படிக்க குழந்தைகளே இல்லை. இங்கு நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியருக்கும், அதிகாரிகளுக்கும்கூட இது வீண் சிரமம். எனவே எங்கள் ஊருக்கு பள்ளி வேண்டாம்' என்று சமீபத்தில் மனு கொடுத்திருக்கிறார்கள். அதை ஏற்றுக்கொண்ட அதிகாரிகள், 'ஆசிரியர் அந்தப் பள்ளிக்கு வருவதை மட்டும் தற்காலிகமாக நிறுத்துகிறோம். அடுத்த ஆண்டில் அங்கே தங்கள் குழந்தைகளைப் படிக்க வைக்க பெற்றோர் முன்வந்தால் மீண்டும் பள்ளி செயல்படும். தொடர்ந்து குழந்தைகள் வராத நிலை இருந்தால் பள்ளியை ரத்து செய்வது குறித்து உயர் அதிகாரிகள் முடிவு செய்வர்' என்று தெரிவித்துள்ளனர். இதையொட்டி ஆகஸ்ட் மாதத்துக்குப் பிறகு அந்த ஓராசிரியரும் வருவது நின்றுபோயிருக்கிறது.
புல்லஅள்ளியில் வசிக்கும், 1-வது வார்டு ஊராட்சி உறுப்பினர் சக்திவேல் பேசும்போது, "ரெண்டு கிராமங்களிலும் சேர்த்து சுமார் 300 ஏக்கர் விவசாய நிலம் இருக்கு. அவ்வப்போது இங்கே யானை நடமாட்டம் உண்டு. நிலத்தை நம்பி வாழ்ந்த மக்கள் நவீன வாழ்க்கை முறையை விரும்பி படிப்படியா கீழே இடம்பெயர்ந்துடாங்க. அவங்களோட நிலங்களையும் பெங்களூரு தொழிலதிபர்களுக்கு வித்துட்டாங்க. மிச்சமிருக்கும் சிலரும் இன்னும் கொஞ்ச நாள்ல கீழே நகர்ந்திடுவோம். இங்குள்ள பள்ளிக்கூடத்துல சேர குழந்தைகளே இல்லை. அதனாலதான் பள்ளியை 'ரத்து பண்ணிடுங்க'னு மனு கொடுத்தோம். நானும் இந்தப் பள்ளியில்தான் படிச்சேன். எந்த நேரமும் குழந்தைகளின் கூச்சல் கேட்டுக்கிட்டே இருந்த எங்க ஊர் பள்ளிக்கூடத்தைப் பூட்டிய நிலையில் பார்க்க வேதனையாத்தான் இருக்கு..." என்றார் சக்திவேல்.
''இதோ.... இதுதான் நான் படிச்ச பள்ளிக்கூடம்...' என பெருமையுடன் தாங்கள் படித்த பள்ளிக்கூடத்தைக் காட்டுபவர்களை நாம் பார்த்திருப்போம். தமிழகத்திலேயே முதல்முறையாக புல்லஅள்ளி மக்கள் துரதிர்ஷ்டவசமாக... மூடிக்கிடக்கும் பள்ளியைக் காட்டி, 'நாங்கள் ஒரு காலத்தில் படித்த பள்ளிக்கூடம்' என்கிறார்கள் கடந்த கால ஞாபகம் மிதக்கும் கண்களுடன்

எப்படிப்பட்ட மாணவர்களை உருவாக்குகிறோம்?

சில நாட்களுக்கு முன்னால் சென்னையில் உள்ள முக்கியமான பள்ளிக்குச் சென்றிருந்தேன். ஒரு காலத்தில் அப்பள்ளியில் மெட்ரிகுலேஷன் பாடத்திட்டத்தின் கீழ் கல்வி பயிற்றுவிக்கப்பட்டது. சமச்சீர்க் கல்வி நடைமுறைக்கு வந்துவிட்ட நிலையில், மெட்ரிகுலேஷன் பாடத்திட்டத்தைக் கைவிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட நூற்றுக்கணக்கான பள்ளிகளில் அதுவும் ஒன்று. சமச்சீர்க் கல்வி தரமாக இல்லை என்ற தோற்றம் உருவாக்கப்பட்டதும் பல பெற்றோர்கள் சி.பி.எஸ்.ஈ. பள்ளிகளில் சேர்ப்பதற்கான பிரயத்தனத்தைத் தொடர்ந்ததால், பல மெட்ரிகுலேசன் பள்ளிகளும் சி.பி.எஸ்.ஈ. பாடத்திட்டத்தை அறிமுகம் செய்யத் தலைப்பட்டன. மனப்பாடம் செய்யும் முறையைத் தொடர்ந்து ஊக்குவிக்கும் சமச்சீர்க் கல்வியை விட, சி.பி.எஸ்.ஈ. பாடத்திட்டம் சிறந்தது என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமிருக்க வாய்ப்பில்லை.
ஆனால் மாநில அரசின் தடையில்லாச் சான்றிதழ் பெற வேண்டிய நிர்ப்பந்தத்தின் காரணமாக, சமச்சீர்க் கல்வியைப் பயிற்றுவிப்பதுடன், பள்ளி வளாகத்திலேயே சி.பி.எஸ்.ஈ. பாடத்திட்டத்தைப் பயிற்றுவிக்கும் வகுப்புகளைத் தனியாகத் தொடங்கின. நான் மேலே கூறும் பள்ளியும் இந்த நடைமுறையைப் பின்பற்றிவருகிறது.
இதற்காக அப்பள்ளியின் அடிப்படைக் கட்டமைப்பில் மாபெரும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எல்லா வகுப்புகளுமே குளிர்சாதன வசதி கொண்டவையாக மாற்றப்பட்டுள்ளன. அதன் வெளித்தோற்றத்தைக் காணும் யாருமே அதை ஒரு பன்னாட்டுத் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் அலுவலகமாகத்தான் கருத நேரிடும். அந்த அளவுக்கு நேர்த்தியான வடிவமைப்பு. அதற்காக அப்பள்ளி கொடுத்திருக்கும் முதல் விலை விளையாட்டு. இத்தனைக்கும் எல்லா விளையாட்டிலும் சிறந்த அணிகளை உருவாக்கி வைத்திருக்கும் பள்ளிகளில் அதுவும் ஒன்று.
குளிர்சாதன வசதி எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றும் காலம் தூரத்தில் இல்லை. மாணவர்களை விளையாட அனுமதித்தால், பந்து தெரியாமல் கண்ணாடி கதவுகளிலும் ஜன்னலிலும் பட்டு உடைந்து விடும் என்பதால் மாணவர்கள் விளையாட அனுமதிக்கப்படுவதில்லை.
இன்று சென்னையில் மாணவர்களை அதிக அளவில் மதிப்பெண் பெறுவதற்குத் தயார் செய்யும் பள்ளிகள் எதுவிலும் பெயரளவுக்குத்தான் விளையாட்டு உள்ளது என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். சில பள்ளிகள் அருகில் இருக்கும் மாநகராட்சி மைதானத்தைப் பயன்படுத்துகின்றன. பள்ளியில் உள்ளே இடம் இருந்தால் இன்னும் பல வகுப்புகளைக் கட்டி பல மாணவர்களைச் சேர்க்கலாம் அல்லவா!
நான் குறிப்பிடும் பள்ளியில் சி.பி.எஸ்.இ. கல்வி பயிலும் மாணவர்கள் பெரும்பாலும் குளிர்சாதன வசதியுள்ள மகிழுந்துகளில் வந்து இறங்குகிறார்கள். பள்ளியின் சார்பாக மாணவர்களை அழைத்து வர இயக்கப்படும் பேருந்துகளும் குளிர்சாதன வசதி கொண்டவையே. மழலையில் பள்ளி இரண்டு ஆண்டுகள், அதன்பிறகு முழுமையான பள்ளிக் கல்வி 12 ஆண்டுகள் என இந்த மாணவர்களின் பெரும்பாலான நேரம் குளிர்சாதன அறையிலேயே கழியும். ஏற்கெனவே பல பள்ளிகள் தங்கள் நிறுவனத்தைக் குறித்து விளம்பரம் செய்யும்போது, வகுப்பறைகள் குளிர்சாதன வசதிகொண்டவை என்றுதான் தெரிவிக்கின்றன.
நமக்குள்ளே எழும் கேள்வி என்னவென்றால், இந்தியா போன்ற வெப்பப் பிரதேசங்களில், குளிர்சாதன அறையிலேயே தயாரிக்கப்படும் மாணவர்கள் உடல்ரீதியாக எத்தகையை வலுவுடையவர்களாக இருப்பார்கள் என்பதுதான். வாழ்க்கை முழுவதும் குளிர்சாதன வசதியில் புழங்குவதற்கான செல்வச் செழிப்பில் வாழ்பவர்களாக அவர்கள் இருக்கலாம். ஆனால் இந்தியச் சமூகத்துக்கும் இந்த மாணவர்களுக்கு இடையே பெரும் சுவற்றை இந்தக் குளிர்சாதன வகுப்பறைகள் எழுப்பிவிடும் என்பதில் சற்றும் ஐயமில்லை. களத்தில் இறங்கிப் பணியாற்ற வேண்டியிருக்கும் எந்த வேலைக்கும் இவர்கள் லாயக்கற்றவர்களாகவே தயாராவார்கள்.
இங்கு ஒரு முக்கிய நிகழ்வைச் சொல்லியாக வேண்டும். சென்னையில் உள்ள கிறித்தவக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் முதல்வராகப் பணியாற்றிய குருவில்லா ஜேக்கப், ஆசிரியர்களுக்கெல்லாம் முன்மாதிரியாகத் திகழ்ந்தவர். சில ஆண்டுகளுக்கு முன்னால் அவருடைய நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. அதற்கு முன்னதாக நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அவருடைய மாணவர்கள் கலந்துகொண்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் தாங்கள் சார்ந்திருக்கும் துறையில் பெரும் செல்வாக்குப் படைத்தவர்கள். குருவில்லா ஜேக்கப்பின் ஆளுமையைப் பல கோணங்களில் விளக்கிய அவர்கள், விளையாட்டுத் துறையில் அவருக்கு இருந்த ஆர்வத்தை முக்கியமாகக் குறிப்பிட்டுச் சொன்னார்கள். மாணவர்கள் கால்பந்து ஆடும்போது களத்துக்கு வெளியே நின்று ஊக்குவிக்கும் குருவில்லா ஜேக்கப், மழை பெய்துவிட்டால் எல்லோரையும் ரக்பி ஆடுமாறு சொல்வாராம். மழையில் நனைந்து கொண்டு, சகதியிலும் சேற்றிலும் புரண்டு விளையாட வேண்டும். இந்த வயதில் விளையாடாமல் எந்த வயதில் விளையாடுவது என்பாராம்.
வெயில் படக் கூடாது என்பதற்காகக் குளிர்சாதன வகுப்பறைக்கு அனுப்பும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மழையில் நனைய அனுமதிப்பார்கள் என்று நினைத்துப் பார்க்க முடியவில்லை. குருவில்லா ஜேக்கப் போன்ற பள்ளி முதல்வர்கள் மேல் அவர்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவும் முனையலாம்.
நாள்தோறும் வெளியாகும் ஆராய்ச்சி முடிவுகள் அதிகப்படியான சுத்தம் நிறைந்த பகுதியில் வாழும் குழந்தைகளின் நோய் எதிர்ப்புத் திறன் குறைவாக இருப்பதாக மீண்டும் மீண்டும் நிரூபிக்கின்றன. அதற்காக அழுக்கில் தினமும் புரண்டு எழுந்திருக்க வேண்டும் என்று யாரும் வாதம் செய்யப்போவதில்லை. சுத்தம் தேவைதான். அதற்காகச் சிறிய வயதிலேயே தூசு படாமல், அழுக்குப் படாமல், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை மட்டுமே குடித்து, துரித உணவகங்களின் தயாரிப்புகளை உண்டு, உப்பும் காரமும் அதிகமாக சேர்த்து பொரிக்கப்பட்ட உணவுகளைக் கொரித்துக் கொண்டு, உடற்பயிற்சி எதுவும் இல்லாத குழந்தையில் உடல் நலன் எப்படி இருக்கும் என்பதை விளக்கப் பொதுமருத்துவத்தில் பட்டம் பெற்ற மருத்துவர் தேவையில்லை. போதுமான அளவு சூரிய ஒளி படாதவர்களின் உடல் விட்டமின் டி தேவையை எப்படிப் பூர்த்தி செய்துகொள்ளும்? அதற்கும் மாத்திரைகளை விழுங்கச் செய்யப் பெற்றோர்கள் தயாராக இருக்கலாம்.
ஏற்கெனவே குழந்தைகள் தங்களின் குழந்தைப் பருவத்தை இழந்துகொண்டிருக்கிறார்கள். படிப்பு, படிப்பு, படிப்பு. பெற்றோர்களின் எண்ணத்தை முற்றிலுமாக இந்த வார்த்தை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறது.
காலையில் எட்டு மணிக்குக் குளத்துக்கு குளிக்கச் சென்றால், சதையைக் கையால் பிய்த்து எறிந்துவிடும் அளவுக்குத் தண்ணீரில் ஊறிக் கிடக்கும் உடலில், அப்பா அம்மா, தாத்தாக்களின் வசவுகள்தான் எங்களைப் போன்றவர்களைக் கரையேற்றும். வகுப்பில் நுழையும்போது நேரம் கடந்துவிட்டதற்காக வாத்தியாரிடம் வசவும் அடியும் உண்டு.
இன்று இரவெல்லாம் தொலைக்காட்சி பார்ப்பதும், கணினியில் விளையாடுவதுமாய் பொழுதைப் போக்கிவிட்டு, காலையில் வேறு வழியின்றி எழுந்து, அவசர அவசரமாய்க் குளித்துவிட்டு, பாதி நாட்கள் குளிக்காமலும், எதையும் சாப்பிடாமல் பேருக்கு இரண்டு சப்பாத்தியையோ, ரொட்டியையோ எடுத்துக்கொண்டு ஓடும் பிள்ளைகளிடம் நம்முடைய குழந்தைப் பருவத்தைச் சொன்னால் பொறாமைப்படுகிறார்கள்.
எல்லாத் துறைகளிலும் கணினி புகுந்துவிட்ட நிலையில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் முதல் சென்னையில் உள்ள லயோலா கல்லூரிவரை மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆனால் சென்னையில் உள்ள ஒரு பிரபல பள்ளியில் மழலையர் பள்ளியில் சேருவதற்கு முந்தைய நாள் இரவே வரிசையில் காத்துக் கிடக்க வேண்டும். தூக்கத்தை இழந்து ஒருவர் மேல் ஒருவர் சாய்ந்தபடி நிற்கும் பெற்றோரை விட மிகப் பெரிய விளம்பரத்தை யாரும் தங்களுக்குத் தந்து விட முடியாது என்று அப்பள்ளி நிர்வாகம் நினைத்திருக்கலாம்.
இப்படிப்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் நல்ல நிலையில் இருக்கிறார்கள். மாதந்தோறும் கைநிறைய சம்பளம் வாங்கலாம். உலகமெங்கும் பரந்து நிறைந்திருக்கலாம். அவ்வளவு சிறப்பான கல்வி. ஆண்டு தோறும் நோபல் விருதுகள் வழங்கும் போதும், வேறு துறைக்கான விருதுகள் வழங்கும் போதும் ஆர்வத்துடன் விருதாளர்களின் பின்புலத்தை ஆராய்கிறேன். என் கண்ணில் இப்பள்ளிகளின் முன்னால் மாணவர்கள் யாரும் தென்படவில்லை. வெறும் படிப்பை மட்டுமே முன்னிறுத்தும் பள்ளிகள், பல்துறை சார்ந்த அறிவுடன் கூடிய ஆளுமைகளை உருவாக்கத் தவறிவிடுகின்றன.
முந்தைய தலைமுறையைக் காட்டிலும் புத்திசாலிகளாக இருந்தாலும், இன்றைய தலைமுறைக்குத் தன்னைச் சுற்றி நடக்கும் எல்லாமே எல்லாமே அந்நியப்பட்டு நிற்கிறது.
கல்வியின் பயனே பொருளீட்டுவது என்ற பாதையில் பயணித்திருக்கும் சமூகம் வேறு எப்படி இருக்க முடியும்? அறிவின் எல்லையைத் தொடர்ந்து விரிவாக்கும் கருவி என்ற தகுதியைக் கல்வி இழந்துவிட்டது. தங்கள் பள்ளி மாணவர்கள் 12ஆம் வகுப்பில் பெற்றிருக்கும் மதிப்பெண்களை விளம்பரம் செய்து பெருமைப்பட்டுக்கொள்கின்றன பல கல்வி நிலையங்கள். அண்மையில் சென்னையில் உள்ள புகழ்பெற்ற பொறியியல் கல்லூரியில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றிபெற்று, தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்புக் கிடைத்தும், அவற்றை உதறி விட்டு, இந்திய ஆட்சிப் பணிக்குத் தயாராகிக்கொண்டிருக்கும் மாணவரைச் சந்தித்தேன். தன்னுடைய அறிவு எல்லாமே புத்தகம் சாரந்ததுதான் என்றும், தன்னால் ஒரு ஒலி பெருக்கியைக்கூடச் சரி செய்ய முடியாது என்றும் ஒப்புக்கொண்டார். இந்தியத் தொழிற்கல்வி பெரும்பாலும் இப்படிப்பட்ட மாணவர்களைத்தான் உருவாக்குகிறது

Wednesday, October 16, 2013

விஜய தசமி: அரசு பள்ளிகள் கவனிக்குமா?


Posted Date : 13:10 (15/10/2013)Last updated : 09:10 (16/10/2013)
ஒருவரின் கனவில் மிக முக்கியமானது தங்கள் பிள்ளைகளுக்கு சிறந்த கல்வி தருவதுதான். கல்விதான் தங்கள் பிள்ளையின் வாழ்க்கையைச் சிறக்க வைக்க முடியும் எனும் நம்பிக்கையே இதற்கு காரணம். தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜீ அட்மிசனுக்காக நீண்ட வரிசையில் பெற்றோர்கள் நிற்பதும் இதைத்தான் காட்டுகிறது.
 
தங்கள் பிள்ளைகள் முதன்முதலாக பள்ளி செல்லும் நாளை பெற்றோர்கள் மிகவும் முக்கியமான நாளாக அமைகிறது. பக்கத்து மாநிலமான கேரளாவில் விஜய தசமியன்று மலையாளத்தின் பிரதானமான எழுத்தாளர்களிடம் தங்கள் பிள்ளையை அழைத்துச் சென்று மொழியின் முதலெழுத்தை அவர் கைபிடித்து எழுத வைத்து பூஜைகள் செய்கிறார்கள். தமிழகத்திலும் பலர் தங்கள் பிள்ளைகள் விஜயதசமியன்று கல்வியைத் துவங்க வேண்டுமென்று விரும்புகின்றனர். சிலர் கோவில்களில் தங்கள் பிள்ளைகளின் கல்விக்காக சிறப்பு பூஜைகள் செய்கின்றனர்.  இதை நன்கு புரிந்துகொண்ட தனியார் நர்சரி பள்ளிகள் விஜய தசமியன்று தங்கள் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கப்படுவார்கள் என்று விளம்பரம் செய்து அதற்காக காத்திருக்கின்றனர். அவர்கள் எதிர்பார்த்ததுபோலவே பெற்றோர்களும் பள்ளியை நோக்கி விரைகின்றனர். 
 
ஆனால், வருடந்தோறும் மாணவர் சேர்க்கை குறைந்துவரும் அரசு பள்ளிகள் விஜயதசமியைக் கண்டுகொள்வதாக தெரியவில்லை. அநேக அரசு பள்ளிகளில் அன்று பூட்டுதான் தொங்குகிறது. விஜயதசமியை அரசுப் பள்ளிகள் மாணவர்களை ஈர்க்கும் விதமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். குறைந்த பட்சம் தொடக்கப்பள்ளிகளுக்கு விஜய தசமியன்று விடுமுறை அளிக்காமல், மாணவர் சேர்க்கைக்காக வேலை நாளாக்கலாம். அதற்காக அரசு செய்தித் தாள் மற்றும் காட்சி ஊடகங்கள் வழியே விளம்பரமும் செய்தால் இந்த விஷயம் பொதுமக்களின் செவிகளுக்கு எளிதில் போய் சேரும். 
 
விஜய தசமியன்று அரசுப் பள்ளிகளில் புதிதாக சேரும் மாணவர்களை வரவேற்கும் விழாக்கள் ஏற்பாடு செய்யலாம். அப்பகுதி பிரமுகர்களை சிறப்பு விருந்தினராக அழைக்கவும் செய்யலாம். இவை எல்லாம் அரசு பள்ளியை நோக்கி பெற்றோர்களை வர செய்யக்கூடும்.  

REQUEST FOR HOLIDAY ON NOVEMBER 1

Tuesday, October 15, 2013

CBSE பள்ளி ஆசிரியர் பணி: 2014க்கான தகுதி தேர்வு அறிவிப்பு


First Published : 13 October 2013 01:14 PM IST
CBSE பாடத்திட்டத்தின் கீழ் இயங்கி வரும் மத்திய அரசு பள்ளிகளில் காலியாக உள்ள தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர் பணிக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு-2014க்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
நுழைவுத்தேர்வின் பெயர்: Central Teacher Eligibility Test (CTET)-Feb -2014
நுழைவத்தேர்வு நடைபெறும் நாள்: 16.02.2014
கல்வித்தகுதி: 50 சதவிகித மதிப்பெண்களுடன் +2 தேர்ச்சியுடன் இரண்டு வருட டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி முடித்திருக்க வேண்டும். அல்லது ஏதாவதொரு பட்டபடிப்புடன் பி.எட். பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் CTET நுழைவுத் தேர்வு மூலம் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
+2 மற்றும் டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் நுழைவுத்தேர்வில் வெற்றி பெறும்பட்சத்தில் மத்திய அரசின் கீழ் செயல்படும் CBSE பள்ளிகளில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
பட்டப்படிப்பு மற்றும் பி.எட் முடித்தவர்கள் நடுநிலைப்பள்ளி ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம்: தாள் I அல்லது II இரண்டு எழுதுபவர்களுக்கு ரூ.500. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.250. தாள் I மற்றும் தாள் II இரண்டு எழுதுபவர்களுக்கு ரூ.800. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.400. இதனை ''Secretary, Central Board of Secondary Education, Delhi  என்ற பெயரில் தில்லியில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும். டி.டி.யின் பின் புறம் விண்ணப்பத்தின் பதிவு எண், விண்ணப்பதாரரின் பெயர், முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றை குறிப்பிடவும்.
விண்ணப்பிக்கும் முறை: www.ctet.nic.in அல்லது www.cbse.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின் அதன் பிரிண்ட் அவுட்டை பதிவிறக்கம் செய்து தேவையான சான்றுகளின் நகல்களுடன் பதிவு/விரைவு அஞ்சலில் அனுப்ப வேண்டும்.
எழுத்துத்தேர்வு நடைபெறும் தேதி:
தாள் I (வகுப்பு I to V) : 16 Feb, 2014 (09.30 AM to 12.00 PM)
தாள் II (வகுப்பு VI to VIII) : 16th Feb, 2014 (14.00 PM to 16.30 PM)
எழுத்துத் தேர்வுக்கான காலம் 2.30 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 31.10.2013
விண்ணப்பத்தை அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:
The Assistant Secretary (CTET), Central Board of Secondary Education , PS 1 -2 , Institutional Area, I.P Extn, Patparganj , Delhi- 110 092
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ctet.nic.in or www.cbse.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

15,000 பணியிடம் நிரப்ப திட்டம் ஆசிரியர் தகுதி தேர்வு 10 நாளில் முடிவு வெளியீடு

பி.எட்., நுழைவுத்தேர்வு அக்.,20ம் தேதி ஒத்தி வைப்பு


First Published : 14 October 2013 09:43 AM IST
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின், தொலைதூரக் கல்வி மையத்தில் பி.எட்., நுழைவுத்தேர்வு அக்.,20க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
பி.எட்., படிப்பில் சேர நுழைவுத்தேர்வு நடத்தப்படுகின்றது. அதன்படி அக்.,6ம் தேதி நடைபெற இருந்த நுழைவுத்தேர்வு, நிர்வாகத்தின் தவிர்க்க முடியாத சில காரணங்களால் அக்.,20ம் தேதி ஒத்தி வைத்துள்ளது.
கூடுதல் தகவல்களுக்கு பாரதிதாசன் பல்கலைக்கழக இணையதளத்தை பார்க்கலாம்.

Saturday, October 12, 2013

Thursday, October 10, 2013

SOLUTION FOR TEACHERS DEFICIT

கல்விக்கான மத்திய ஆலோசனைக் குழு கூட்டம்: பல்லம் ராஜூ புறக்கணிப்பு



























டெல்லியில் இன்று நடைபெற்று வரும் கல்விக்கான மத்திய ஆலோசனைக் குழு கூட்டத்தை, மத்திய மனிதவளத்துறை அமைச்சர் பல்லம் ராஜூ புறக்கணித்துள்ளார். இதனால், மனிதவளத்துறை இணையமைச்சர் ஜிதின் பிரசாதா கூட்டத்திற்கு தலைமையேற்றார்.
மதிய உணவுத் திட்டத்தை மேம்படுத்துவது, ஆசிரியர் நலன் ஆகியன தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கும் பொருட்டு கல்விக்கான மத்திய ஆலோசனைக் குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த கூட்டத்தை பல்லம் ராஜூ புறக்கணித்துள்ளார்.
தனி தெலுங்கானா அமைக்க ஒப்புதல் அளித்த மத்திய அமைச்சரவையின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மத்திய அமைச்சர் பதவியை பல்லம் ராஜூ ராஜிநாமா செய்தார்.
அமைச்சர்கள் கூட்டங்களை தவிர்த்து வரும் பல்லம் ராஜூ, டெல்லியில் நடைபெறும் அனைத்து மாநில கல்வி அமைச்சர்கள் பங்கேற்கும் கல்விக்கான மத்திய ஆலோசனைக்குழு கூட்டத்தையும் புறக்கணித்துள்ளார்

DA G.O 401