Todays Educational News
கல்வி செய்தி
முக்கிய செய்திகள் – Google செய்திகள்
BBCTamil.com | இந்தியா
FLASH NEWS
விகடன்-தினத்தந்தி கல்வி செய்திகள்
முக்கிய செய்திகள்
மேலும் கல்வி செய்திகள்
Tamilnadu Teachers friendly blog
தினகரன் கல்வி செய்திகள்
தமிழ் முரசு செய்திகள்
தினகரன் முக்கிய செய்திகள் --
TEACHER TamilNadu
தமிழ் முரசு முக்கிய செய்திகள்
Dinamani
Daily Thanthi
கல்வி அஞ்சல்
புதிய தலைமுறை தொலைக்காட்சி
Sunday, April 21, 2013
DEMAND FOR RESERVATION FOR SC ST CANDIDATES IN TET
டி.இ.டி., தேர்வில் மதிப்பெண் சலுகை: எஸ்.சி., - எஸ்.டி.,க்கு வழங்க கோரிக்கை
ஏப்ரல் 21,2013,10:06 IST
சென்னை: "டி.இ.டி., தேர்வில், பி.சி., - எம்.பி.சி., - எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவு தேர்வர்களுக்கு, மதிப்பெண் சலுகை வழங்க வேண்டும்" என, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தி உள்ளது.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி, இந்த அமைப்பின் சார்பில், சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகில், நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். டி.இ.டி., தேர்வுகளில், எஸ்.சி, - எஸ்.டி., பிரிவு சமுதாயத்தில் இருந்து தேர்வு பெறுபவர்கள் எண்ணிக்கை, மிகவும் குறைவாக இருப்பதையும், பல மாநிலங்களில், இந்த பிரிவினருக்கு, மதிப்பெண் சலுகை வழங்குவதை சுட்டிக் காட்டியும், தமிழகத்திலும், மதிப்பெண் சலுகை வழங்க வேண்டும் என, அந்த அமைப்பு வலியுறுத்தி உள்ளது.
இந்த சலுகையை, மாற்றுத்திறனாளிகளுக்கும் வழங்க வேண்டும் என்றும், ஆசிரியர் தேர்வில், இட ஒதுக்கீட்டை, முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்றும், இந்த அமைப்பு வலியுறுத்தி உள்ளது. ஆசிரியர் தேர்வில், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினரின் பங்கு உயர வேண்டும் என்ற நோக்கத்தில், அம்பேத்கர் கல்வி வேலைவாய்ப்பு பயிற்சி மையம் என்ற, அமைப்பை உருவாக்கி, அதன் சார்பில், மேற்கண்ட சமுதாயத்தைச் சேர்ந்த தேர்வர்களுக்கு, சென்னையில் இலவச பயிற்சியை நடத்தி வருகின்றனர்.
Saturday, April 20, 2013
125 மாணவர் பயலும் பள்ளியில் ஒரே ஒரு ஆசிரியர்: பெற்றோர் அதிருப்தி
125 மாணவர் பயலும் பள்ளியில் ஒரே ஒரு ஆசிரியர்: பெற்றோர் அதிருப்தி
ஏப்ரல் 20,2013,08:22 IST
ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில், 125 மாணவர்கள் கொண்ட அரசு உதவி பெறும் தனியார் பள்ளி, தலைமை ஆசிரியர் ஒருவருடன் செயல்படுகிறது. இங்கு போதுமான ஆசிரியர்கள் இல்லாததால்,பெற்றோர் அதிருப்தியில் உள்ளனர்.
ராஜபாளையம் கட்டுவிநாயகர் கோயில் தெருவில், ஸ்ரீராமதனலட்சுமி அரசு உதவிபெறும் துவக்க பள்ளி உள்ளது.125 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். 1914ல் நிறுவப்பட்ட இந்த பள்ளியில், பல ஆண்டுகளாக தலைமை ஆசிரியர் முரளிதரன், ஆசிரியை மாரியம்மாள் என இருவர் மட்டுமே பணியில் இருந்தனர்.
கடந்த மாதம் உடல்நிலை சரியில்லாததால், மாரியம்மாள் விருப்ப ஓய்வு பெற்றார். தற்போது, தலைமை ஆசிரியர் ஒருவரே, அனைத்து வகுப்புகளையும் கவனிக்கிறார். மாணவர்களின் கல்வி தரம் குறித்து, பெற்றோர்கள் கவலை அடைந்துள்ளனர்.
இதனிடையே அவர்கள், நேற்று காலை பள்ளி முன் கூடினர். கல்வி பாதிக்கப்படுவதாக, தலைமை ஆசிரியர் முரளிதரனிடம் புகார் தெரிவித்தனர்.
கற்பகம், 59, "நான் இந்த பள்ளியின் முன்னாள் மாணவி. எனது மகள் படித்து, தற்போதும் பேரனும் இங்கு படிக்கிறான். கல்வியின் தரம் நன்றாக இருப்பதால், மற்ற தனியார் பள்ளி மாணவர்களை கூட இங்கு சேர்க்கின்றனர். சில ஆண்டுகளாக ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது,&'&' என்றார்.
மருதுபாண்டி, "அனைவருக்கும் கல்வி திட்டத்தில் விகிதாச்சார முறைப்படி ஆசிரியர்கள் நியமனம் உள்ளது. இங்கு 125 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியை இருந்தார். அவரும், விருப்ப ஓய்வு பெற்றபின், ஆசிரியர்களே இல்லாத நிலை உள்ளது" என்றார்.
உதவி தொடக்க கல்வி அலுவலர் முத்துராமலிங்கம், "ராஜபாளையத்தில் மட்டும் 38 ஆசிரியர் பணியிடம் உபரியாக உள்ளது. அரசு பள்ளி என்றால், உடனடியாக நிரப்பலாம். அரசு உதவிபெறும் பள்ளி என்பதால், தாமதமாகிறது. காலி பணியிடத்துடன் கூடுதல் பணியிடம் ஒதுக்கப்பட்டு, அடுத்த மாதம் முடிவில், போதுமான ஆசிரியர்கள் நியமிக்க வாய்ப்பு உள்ளது" என்றார்
அதட்டினால் வரமாட்டேன்: ஆசிரியரை மிரட்டும் மாணவி
காரைக்குடி : காரைக்குடி அருகே நென்மேனி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், இரண்டு மாணவர்கள் மட்டுமே படிக்கும் நிலையில், ஆசிரியர் அதட்டினால் பள்ளிக்கு வரமாட்டேன், என மாணவி கோரிக்கைக்கு கட்டுப்படும் நிலையில் ஆசிரியர்கள் உள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகேயுள்ள பெரிய கொட்டக்குடி ஊராட்சிக்குட்பட்ட நென்மேனியில், ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. கடந்த 1964ம் ஆண்டு துவக்கப்பட்டது. பொன் விழா கண்ட இந்த பள்ளியில் தான், இப்பகுதியை சேர்ந்த பெரும்பாலோனோர், பாலர் படிப்பை படித்தனர். விவசாயம் மட்டுமே பிரதான தொழில். காலத்தின் மாற்றம், இங்குள்ள பலரை, காரைக்குடிக்கு இடம் பெயர வைத்தது. இங்கு அ,ஆ., கற்றவர்கள், தங்கள் பிள்ளைகளை,ஆங்கில வழி பள்ளியில், சேர்த்து வருகின்றனர்.ஆரம்பத்தில் 85 மாணவர்களுடன் இயங்கிய, நென்மேனி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி, தற்போது இரண்டு மாணவர்களுடன் நான்கு ஆண்டுகளாக, இயங்கி வருகிறது.கடந்த ஆண்டு வரை, நதியா, 8, அவரது அண்ணன் மணிகண்டன்,10 பயின்று வந்தனர். தற்போது மணிகண்டன் ஆறாம் வகுப்புக்காக வேறு பள்ளிக்கு சென்றுவிட்டார். ஒரே மாணவருடன் இயங்க முடியாத நிலையில், இங்கு வேலை பார்க்கும், சமையல் உதவியாளர் அவரது உறவினர் பையனை, பள்ளியில் படிக்க வைப்பதற்காக வளர்த்து வருகிறார். ஒன்றாவது படிக்கும், அவனது பெயரும் மணிகண்டன். புனிதாராணி, விஜயலெட்சுமி என இரு ஆசிரியர்கள், ஒரு சமையல் உதவியாளர் உள்ளனர். இவர்களில் விஜயலெட்சுமி என்ற ஆசிரியர், சாக்கோட்டை ஒன்றியத்துக்குட்பட்ட பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் விடுப்பு எடுத்தால், மாற்றுப்பணிக்காக அவ்வப்போது சென்று விடுவார். நிரந்தரமாக இருப்பது, தலைமை ஆசிரியரான புனிதாராணி மட்டுமே.
இந்த பள்ளியில், 3 "டிவி', ஒரு "டிவிடி' பிளேயர், மற்றும் செயல்வழி கற்றலுக்கான அனைத்து வசதியும் உண்டு. படிக்க மாணவர்கள் தான் இல்லை. வெளியூருக்கு இடம் பெயர்ந்தவர்கள் மட்டுமன்றி, இவ்வூரில் உள்ளவர்களும் தங்கள் குழந்தைகளை, இப்பள்ளியில் சேர்க்க முன்வருவதில்லை.தற்போது படிக்கும்,நதியா என்ற மாணவியும், ஏம்பலை சேர்ந்தவர். தந்தை இல்லாத நிலையில், இப்பள்ளியில் பயின்று வருகிறார். அவரை ஆசிரியர் அதட்டினால், பள்ளிக்கு வருவதில்லை. வீட்டுக்கு தேடி செல்லும் போது, எனக்கு இந்த ஆசிரியரை பிடிக்கவில்லை.வேறு ஆசிரியர் வந்தால் தான் பள்ளிக்கு செல்வேன் என அடம்பிடிப்பாராம். இதனால், இருவரையும் அதட்ட கூட இந்த ஆசிரியர்களால் இயலவில்லை. நான்காம் வகுப்பு படித்து வரும் நதியா, ஆறாம் வகுப்புக்கு, வேறு பள்ளிக்கு சென்றால், ஒரே ஒரு மாணவர் மட்டுமே படிக்க வருவார்.நென்மேனிக்கு அருகில் உள்ள பெரிய கொட்டக்குடியில் உள்ள தொடக்கப்பள்ளியில், எட்டு மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர். காலத்திற்கு ஏற்ப தொடக்கப்பள்ளி கல்வி தரத்தை மேம்படுத்தினால் மட்டுமே, மாணவர்கள் சேர்க்கையை வலுப்படுத்த முடியும்.
தினமணியின் தவறான தலையங்கத்துக்கு ஒரு வருடத்துக்குப் பிறகு தக்க பதில்
24.05.2012 அன்று தினமணி யில் நாமக்கல் தனியார் பள்ளி ஆசிரியர்களை பாராட்டியும் அரசு பள்ளி ஆசிரியர்களை தரக்குறைவாகவும் எழுதப்பட்ட தலையங்கம்
Friday, April 19, 2013
20 மாநகராட்சி பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி: புதிதாக 10 மழலையர் பள்ளி
20 மாநகராட்சி பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி: புதிதாக 10 மழலையர் பள்ளிஏப்ரல் 19,2013,07:17 IST
சென்னை: சென்னை மாநகராட்சியின், 20 பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வியும், புதிதாக, 10 மழலையர் பள்ளிகளும் துவங்கப்படுகின்றன. இதுகுறித்த விவரங்களை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில், பல்வேறு நிலைகளில், 284 பள்ளிகள் உள்ளன. 95 ஆயிரம் மாணவர்கள் அவற்றில் படிக்கின்றனர். 99 ஆரம்ப, நடுநிலை பள்ளிகளில், ஆங்கில வழிக்கல்வி போதிக்கப்படுகிறது. வரும் கல்வியாண்டில், மேலும், 20 பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி போதிக்கப்படும் வகையில், முதல் வகுப்புகள் துவங்கப்படும் எனவும், 10 இடங்களில், மழலையர் பள்ளிகள் துவங்கப்படும் எனவும், மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவித்திருந்தது.
இதன்படி, வரும் கல்வியாண்டு முதல் இந்த பள்ளிகள் செயல்பட உள்ளன. பள்ளிகள் அமையும் இடங்களை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. ஜூன் மாதம் பள்ளிகள் துவங்கிய உடன், இதற்கான சேர்க்கை நடக்கும் என, மாநகராட்சி தெரிவித்துள்ளது.
புதிய ஆங்கில வழி பள்ளிகள், மழலையர் பள்ளிகள் பழைய சென்னை மாநகராட்சி பகுதிகளில் மட்டுமே துவங்கப்பட்டுள்ளன. விரிவாக்க பகுதிகளில் இந்த பள்ளிகள் துவங்கப்படவில்லை.
இதுகுறித்து, மாநகராட்சி கல்வி துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "விரிவாக்க பகுதிகளில், 133 பள்ளிகள் உள்ளன. இவை, அரசின் கட்டுப்பாட்டில், கல்வி மாவட்டங்களின் கீழ் செயல்படுகின்றன. மாநகராட்சி கல்வி துறையின் கட்டுப்பாட்டிற்குள் வராததால், ஆங்கில வழி, மழலையர் பள்ளிகள் துவங்க முடியவில்லை" என்றனர்.
எப்போது, இணைக்கப்படும் என, கேட்ட போது, "பள்ளிகளை இணைப்பது அரசின் கொள்கை முடிவு. இதுகுறித்து, அரசுக்கு அறிவுறுத்தியுள்ளோம்" என்றார்.
எங்கெங்கே ஆங்கில வழிக்கல்வி?
வார்டு பள்ளி, இடம்
35 நடுநிலைப் பள்ளி, சின்னாண்டி மடம்
37 தொடக்கப் பள்ளி, எம்.ஜி.ஆர்.நகர்
46 நடுநிலைப் பள்ளி, வியாசர்பாடி
48 நடுநிலைப் பள்ளி, 40, டி.எச்.,சாலை
58 நடுநிலைப் பள்ளி, வைக்கங்கராயன் தெரு
60 நடுநிலைப் பள்ளி, அங்கப்பா தெரு,
65 தொடக்கப் பள்ளி, கொளத்தூர்
67 தொடக்கப் பள்ளி, ஜி.கே.எம்.காலனி
68 நடுநிலைப் பள்ளி, கோபாலபுரம்
75 நடுநிலைப் பள்ளி, வெங்கடம்மாள் தெரு
76 நடுநிலைப் பள்ளி, அங்காளம்மன் தெரு
102 நடுநிலைப் பள்ளி, அமைந்தகரை
102 நடுநிலைப் பள்ளி, குஜ்ஜி தெரு
104 நடுநிலைப் பள்ளி, புல்லாபுரம்
114 நடுநிலைப்பள்ளி, பெல்ஸ் சாலை
120 நடுநிலைப் பள்ளி, கிருஷ்ணாம்பேட்டை
123 தொடக்கப் பள்ளி, வன்னிய தேனாம்பேட்டை
140 தொடக்கப் பள்ளி, வண்டிக்காரன் தெரு
175 தொடக்கப் பள்ளி, இந்திரா நகர்
177 தொடக்கப் பள்ளி, குயில்குப்பம்
மழலையர் பள்ளிகள் எங்கே?
39 தொடக்கப் பள்ளி, டி.எச்.,சாலை
50 உருது தொடக்கப் பள்ளி, அரத்தூண் சாலை
73 தொடக்கப் பள்ளி, திரு.வி.க.நகர்
102 நடுநிலைப் பள்ளி, அரும்பாக்கம்
96 தொடக்கப் பள்ளி, பாலவாயல் தெரு
110 தொடக்கப் பள்ளி, காம்தார் நகர்
116 நடுநிலைப் பள்ளி, திருவல்லிக்கேணி
137 தொடக்கப் பள்ளி, எம்.ஜி.ஆர்.நகர்
130 தொடக்கப் பள்ளி, புலியூர்
174 தொடக்கப் பள்ளி, மடுவன்கரை
பள்ளி கல்வித்துறையில் உளவியல் வல்லுனர் பணி
பள்ளி கல்வித்துறையில் உளவியல்
வல்லுனர் பணிஏப்ரல் 19,2013,07:18 IST
சென்னை: பத்து, "சைக்காலஜிஸ்ட்" பணியிடங்களை நிரப்ப, பள்ளி கல்வித்துறை, விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது.
பள்ளி கல்வித்துறையில், பிரச்சனைக்குரிய மாணவ, மாணவியருக்கு, கலந்தாய்வு அளிப்பதற்கான திட்டம், கடந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரில், அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தில், ஆண்டுக்கு, 10 மாதம் பணியாற்ற, 10, உளவியல் வல்லுனர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை, தற்போது, பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
இதற்கான மாதிரி விண்ணப்பம், தமிழக அரசு இணையதளத்தில், நேற்றிரவு வெளியிடப்பட்டது. எம்.எஸ்சி., சைக்காலஜி படித்தோர், இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். அனுபவம் உள்ளவர்களுக்கு, முன்னுரிமை அளிக்கப்படும்.
தேர்வு செய்யப்படுவோருக்கு, தொகுப்பூதியமாக, மாதம், 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். விண்ணப்பத்தை, "பதிவிறக்கம்" செய்தோ, அதே மாதிரி தட்டச்சு செய்தோ விண்ணப்பிக்கலாம். வரும், 25ம் தேதியில் இருந்து, மே, 10ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, "ஜாய் எபினேசர், உதவி இயக்குனர், பள்ளிகல்வி இயக்குரனகம், கல்லூரி சாலை, சென்னை-6&' என்ற முகவரிக்கு, பதிவு அஞ்சல் மூலம் மட்டும் அனுப்பி வைக்க வேண்டும்.
GOVERNMENT TO TAKE OVER AN AIDED SCHOOL
அரசு உதவி பெறும் பள்ளியை அரசே ஏற்க உத்தரவு
ஏப்ரல் 19,2013,07:21 IST
சென்னையை அடுத்த குன்றத்தூர், திருநாகேஸ்வரத்தில், வள்ளுவர் நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளி ஆசிரியர்கள், கடந்த ஆண்டு, பிப்ரவரியில், மாநில மனித உரிமைகள் ஆணையத்தில், ஒரு புகார் அளித்தனர்.சென்னை: "குன்றத்தூரை அடுத்த, திருநாகேஸ்வரத்தில் உள்ள, வள்ளுவர் நடுநிலைப் பள்ளியை, அரசு எடுத்துக் கொள்ள வேண்டும்" என, மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதில், "எங்கள் பள்ளியில், கழிப்பறை வசதி இல்லை. வகுப்பறைகளும் பழுதடைந்துள்ளதால், திறந்தவெளியில் பாடம் நடத்த வேண்டி உள்ளது. இதனால், மழைக்காலத்தில், மாணவர்கள், மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். எங்களுக்கு, ஊதிய உயர்வையும், பள்ளி நிர்வாகம் தரவில்லை" என, தெரிவித்திருந்தனர்.
புகார் தொடர்பாக, ஆரம்ப பள்ளிக் கல்வி இயக்குனர், காஞ்சிபுரம் மாவட்ட ஆரம்ப பள்ளிக் கல்வி அதிகாரி ஆகியோரிடம் இருந்து, விரிவான அறிக்கை பெறப்பட்டது. அந்த அறிக்கைகளின் அடிப்படையில், மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர் ஜெயந்தி பிறப்பித்துள்ள உத்தரவு:
அரசு உதவி பெறும் பள்ளியான, வள்ளுவர் நடுநிலைப் பள்ளியை, ஆரம்ப பள்ளிக் கல்வி இயக்ககம் ஏற்றுக் கொள்ள வேண்டும். அடுத்த கல்வியாண்டு துவங்குவதற்குள், இப்பள்ளியின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதுடன், ஆசிரியர்களுக்கு உரிய ஊதியத்தையும் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கணினி வழிக் கல்வி; "சிடி' க்களில் பாடம்: "கைப்பணத்தில்' கிராமத்து ஆசிரியர் சேவை
புதுக்குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஒன்று முதல் ஐந்து வகுப்புகளில், 66 மாணவர்கள் படிக்கின்றனர். இதில் கூலி வேலை செய்வோரின் குழந்தைகள் அதிகம். தலைமை ஆசிரியர் லாரன்ஸ் முயற்சியால், கணினி மூலம் கல்வி கற்கின்றனர். அவரது செலவில், பொது அறிவு, பாட சம்பந்தமான "சிடி' க்களை வாங்கி வைத்துள்ளார். ஒவ்வொரு பாடத்துக்கும் முன்பு, அது குறித்த தகவல்களை "சிடி' மூலம் மாணவர்களுக்கு கற்பிக்கிறார்; பொது அறிவு "சிடி' க்களும் காட்டப்படுகிறது. ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு, கணினியில், "மவுஸ்' கையாளுதல், கூட்டல், கழித்தல் கணக்கு போடுதல் உள்ளிட்டவை கற்றுத்தரப்படுகிறது. உணவு நேரத்திற்குப் பின், "டிவி' மூலம் "டிஸ்கவரி சேனல்' ஒளிபரப்பப்படுகிறது. மாணவர்கள் வனங்கள், வன உயிரினங்கள், கடல் வாழ் உயிரினங்களை பற்றியும் அறிந்து கொள்கின்றனர். "ஸ்போக்கன் இங்கிலீஸ்' கற்று கொடுக்கப்படுகிறது. தலைமை ஆசிரியர் கூறுகையில், ""அறிவியலின் வளர்ச்சி, நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. புத்தகப் படிப்போடு, உலகம் பற்றிய அறிவை, மாணவர்களுக்கு வளர்க்க வேண்டும். அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் கொடுக்கப்பட்ட "சிடி' க்களும் உள்ளன. மாணவர்களே "சிடி' யை போட்டு, பாடத்தை அறிந்து கொள்ள கற்றுக் கொடுக்கிறோம்,'' என்றார்.
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 80 சதவீதமானது
Invitation to connect on LinkedIn
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
Thursday, April 18, 2013
DOUBLE DEGREE -INTERIM STAY ORDER
இரட்டை பட்டம் பெற்றவர்கள் தொடர்ந்த
வழக்கில் தற்போது வழங்கப்பட்டுள்ள
இடைக்காலத் தடை தீர்ப்பு நகல் பெற
இங்கே சொடுக்கவும்
வழக்கில் தற்போது வழங்கப்பட்டுள்ள
இடைக்காலத் தடை தீர்ப்பு நகல் பெற
இங்கே சொடுக்கவும்
மத்திய அரசு ஊழியர்களுக்கு 8% அகவிலைப்படி உயர்வு?
புதுடில்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படியை 8 சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. டில்லியில் இன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 72 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது
nagai function photos
பார்வை :www.testfnagai.blogspot.com
அன்புடன்
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
நாகப்பட்டினம் மாவட்டக்கிளை
மத்திய அரசு ஊழியர்களுக்கு 8 சதவீதம் அகவிலைப்படி உயர்வு: இன்று அமைச்சரவை முடிவு
மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்காக வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி உயர்வு தொடர்பாக அறிக்கையின்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி உயர்வை 72 சதவீதத்தில் இருந்து 80 சதவீதமாக உயர்த்த உள்ளது. இந்த புதிய அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டால், அதன் மூலம் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 30 லட்சம் பென்ஷன்தாரர்களும் பயன்பெறுவர். மத்திய நிதித்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் மத்திய அரமைச்சரவை இந்த புதிய அகவிலைப்படி உயர்வு குறித்து இன்று முடிவு செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய அகவிலைப்படி உயர்வு 2013 ஜனவரி முதல் தேதியில் இருந்து தேதியிட்டு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 72 சதவீதமாக உயர்த்தி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மத்திய அரசு அறிவித்தது. இது 2012 ஜூலை முதல் தேதியில் இருந்து அமல்படுத்தப்பட்டது
மாணவ, மாணவியருக்கு பயன்படாத காலணி : அளவு மாறியதால் காட்சி பொருளாகும் பரிதாபம்
தமிழகத்தில் , கடந்த கல்வியாண்டில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு முதல், பத்தாம் வகுப்பு வரை படிக்கும், 81 லட்சத்து, 2,128 பேருக்கு, 94.76 கோடி ரூபாய் மதிப்பில், விலையில்லா காலணி வழங்கப்படும் என, தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். இதற்காக, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், ஒவ்வொரு மாணவருக்கும், தனித்தனியே கால் அளவு எடுக்கப்பட்டு, அதன் அளவுகளை, தேவைப் பட்டியலில் இணைத்து வழங்கும்படி அறிவிக்கப்பட்டிருந்தது. கல்வியாண்டு நிறைவடையும் நிலையில், அரசின் திட்டமான காலணி மற்றும் புத்தகப்பை மட்டும் வழங்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில், சேலம் ஊரக ஒன்றியத்துக்குட்பட்ட துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், மாணவ, மாணவியருக்கு காலணி வழங்கப்பட்டுள்ளது. இதில், 1ம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரை, 9 மற்றும், 12 என்ற இரண்டே அளவுகளில் மட்டுமே, காலணி வழங்கப்பட்டுள்ளது. இதனால் 6, 7, 8ம் வகுப்பு மாணவர்களில் பெரும்பாலானோருக்கு, இந்த அளவிலான காலணி போதவில்லை.இந்த காலணியை, பயன்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ள
TEXT BOOKS, UNIFORMS FREE OF COST FOR 1 CRORE STUDENTS
ஒரு கோடி மாணவர்களுக்கு இலவச பாடப் புத்தகங்கள், சீருடைஏப்ரல் 17,2013,09:28 IST
சென்னை: வரும் ஜூன் 3ம் தேதி, பள்ளிகள் திறந்ததும், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும், ஒரு கோடி மாணவ, மாணவியர்களுக்கு, இலவச பாடப் புத்தகங்கள், நோட்டுகள் மற்றும் ஒரு, "செட்" சீருடை ஆகியவற்றை வினியோகம் செய்வதற்கான ஏற்பாடுகள், முழு வீச்சில் நடந்து வருகின்றன.
வரும், 2013-14ம் கல்வி ஆண்டு, ஜூன் 3ம் தேதி துவங்குகிறது. பள்ளிகள் திறந்த முதல் நாளே, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், முதல் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை பயிலும், ஒரு கோடி மாணவ, மாணவியருக்கு, இலவச பாடப் புத்தகங்கள், நோட்டுகள் மற்றும் ஒரு, "செட்" சீருடை ஆகியவற்றை வழங்க வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, 32 மாவட்டங்களுக்கும், இலவச பாட புத்தகங்கள், நோட்டுகள் மற்றும் சீருடைகள் அனுப்பும் பணி, மும்முரமாக நடந்து வருகிறது. இதுகுறித்து, பள்ளிக் கல்வி வட்டாரங்கள், கூறியதாவது:
பள்ளி திறந்த முதல் நாளே, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும், ஒரு கோடி மாணவர்களுக்கு, புத்தகங்களும், நோட்டுகளும் வழங்கப்படும். மாணவர்களுக்கு, ஆண்டுக்கு நான்கு ஜோடி, இலவச சீருடைகள் வழங்கப்படுகின்றன. அதில், முதல்கட்டமாக, ஒரு ஜோடி சீருடை மட்டும், பள்ளி திறந்த நாளன்றே வழங்கப்படும். மீதியுள்ள மூன்று செட் சீருடைகள், படிப்படியாக, விரைந்து வழங்கப்படும். இவ்வாறு, பள்ளிக் கல்வி வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த பணிகளை, சிறப்பாக முடிக்க வேண்டும் என்பதற்காக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களின் உதவியாளர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களின் உதவியாளர்கள் ஆகியோருக்கு, பாடநூல் கழகம் சார்பில், பல்வேறு ஆலோசனைகள் வழங்கும் கூட்டம், டி.பி.ஐ., வளாகத்தில், நேற்று நடந்தது.
புதிய திட்டங்கள்: இலவச சைக்கிள், பஸ் பாஸ் உள்ளிட்ட சில திட்டங்கள், ஏற்கனவே அமலில் இருந்து வருகின்றன. கடந்த கல்வி ஆண்டில், இலவச கலர் பென்சில், "க்ரேயான்" பென்சில்கள், ஜியாமெட்ரி பாக்ஸ், அட்லஸ், காலணி, புத்தகப் பை ஆகிய திட்டங்கள், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டன.
மேலும், கூடுதலாக, இரண்டு, செட் சீருடைகள் வழங்கவும் உத்தரவிடப்பட்டது. இந்த திட்டங்களை, கடந்த கல்வி ஆண்டில் நிறைவேற்றுவதில், சிரமம் இருந்தது. "டெண்டர்" உள்ளிட்ட பல்வேறு பணிகள் இருந்ததால், பொருட்களை வழங்குவதில், கால தாமதம் ஏற்பட்டது.
ஆனால், வரும் கல்வி ஆண்டில், இது போன்ற தாமதங்கள் ஏற்படாது என்றும், அனைத்து இலவச பொருட்களும், ஒருசில மாதங்களில், முழுவதுமாக வழங்கி முடிக்கப்படும் என்றும், பள்ளிக் கல்வி இயக்குனரக வட்டாரங்கள் தெரிவித்தன.
Wednesday, April 17, 2013
ஊத்தங்கரை அருகே பள்ளி ஆசிரியை கடத்தல்
ஊத்தங்கரை அருகே பள்ளி ஆசிரியை கடத்தல் வேன் டிரைவர் மீது புகார்
ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே அரசு பள்ளி ஆசிரியையை மினி வேன் டிரைவர் கடத்தி சென்றதாக போலீசில் அவரது கணவர் புகார் கொடுத்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் தெய்வீகன் (36). கார்மென்ட்ஸ் நடத்தி வருகிறார். இவரது மனைவி மகாலட்சுமி (28). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர், கட்டமடுவு பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் இளநிலை ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.
கடந்த 12ம் தேதி மாலை 5.30 மணிக்கு உதவி தொடக்க கல்வி அலுவலகத்துக்கு சென்று வருவதாக கணவரிடம் கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த தெய்வீகன் மற்றும் அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். எங்கும் கிடைக்கவில்லை. இந்நிலையில், கட்டமடுவு பகுதியை சேர்ந்த மினி வேன் டிரைவர் பவுன்குமார் கடத்தி சென்றதாக சிங்காரப்பேட்டை போலீசில் தெய்வீகன் புகார் கொடுத்துள்ளார். இதன்பேரில் இன்ஸ்பெக்டர் தட்சிணாமூர்த்தி வழக்கு பதிந்து இருவரையும் தேடி வருகிறார்
Subscribe to:
Posts (Atom)






