SAY NO TO PPP, TET ,CPS

நிதி வழங்குக

GREAT SALUTE TO OUR ESWARANJI

Todays Educational News

கல்வி செய்தி

முக்கிய செய்திகள் – Google செய்திகள்

BBCTamil.com | இந்தியா

FLASH NEWS

முக்கிய செய்திகள்



FIGHT UNTILL YOU WIN YOUR DEMANDS

மேலும் கல்வி செய்திகள்

Tamilnadu Teachers friendly blog

தினகரன் கல்வி செய்திகள்

தமிழ் முரசு செய்திகள்

தினகரன் முக்கிய செய்திகள் --

TEACHER TamilNadu

தமிழ் முரசு முக்கிய செய்திகள்

Dinamani

Daily Thanthi

கல்வி அஞ்சல்

புதிய தலைமுறை தொலைக்காட்சி

Saturday, January 12, 2013

பண்ருட்டி அருகே பள்ளி கட்டடப் பணி : மாணவர்களை ஈடுபடுத்தும் அவலம்ஜனவரி 12,2013,07:19 IST

பண்ருட்டி : பண்ருட்டி அடுத்தசேமக்கோட்டை ஆதிதிராவிட நலதுவக்கப்பள்ளி சுற்றுச்சுவர் கட்டும்பணியில் பள்ளி மாணவர்களைபயன்படுத்தும் அவலம் நடந்துவருகிறது.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த சேமக்கோட்டை ஆதிதிராவிட நலத் துவக்கப் பள்ளி இயங்கிவருகிறது. 180 மாணவ, மாணவிகள் படித்து வரும் இப்பள்ளியில் சுற்றுச்சுவர் இல்லாததால் இரவுநேரங்களில் சமூக விரோதிகளின் புகலிடமாகவும், திறந்த வெளி கழிப்பிடமாகவும்பயன்படுத்தப்பட்டு வந்தது.
இதனால், பள்ளிக்கு சுற்றுச் சுவர் கட்ட வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.அதனையேற்று பள்ளியில் சுற்றுச் சுவர் கட்டும் பணி கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது.இந்தப் பணியில் ஒரு கொத்தனார் மட்டுமே ஈடுபட்டுள்ளார். செங்கல் எடுத்துக் கொடுக்கசித்தாளுக்கு பதிலாக மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நேற்று 5ம் வகுப்பு படிக்கும் மாணவர் தினா, முத்துக்குமரன், கவுதமன், சசிதரன் ஆகியோர்கொத்தனாருக்கு செங்கல் எடுத்துக் கொடுத்தனர். இதனை போட்டோ எடுத்ததை அறிந்த, தலைமைஆசிரியர் கிரேசி, "பள்ளி வேலையை மாணவர்கள் தான் செய்ய வேண்டும். இதில் என்ன தவறுஉள்ளது" என கூலாக பதில் அளித்தார்.
மாணவர்கள் படிக்க பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்பி வைக்கின்றனர். ஆனால், ஆசிரியர்கள் சிலர்அத்துமீறி மாணவர்களை இதுபோன்று பிற பணிகளில் ஈடுபடுத்துவது தொடர்ந்து கொண்டுதான்உள்ளது. இந்த அத்து மீறலை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பள்ளிப் பணிகளை கவனிக்காத தலைமை ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடிஜனவரி 12,2013,07:15 IST


அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களில் சிலர், பள்ளி வேலை நாட்களில், பிற பணி என்றபெயரில், வெளியூர் செல்வதும், சொந்த பணிகளை கவனிப்பதாகவும், அரசின் கவனத்திற்கு புகார்சென்றது. இதனால், அலுவலக பணிகளுடன், மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்படுவதைதவிர்க்க, பள்ளிக் கல்வித்துறை புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.சிவகங்கை: பிற பணி என்ற பெயரில், பள்ளிக்கூட பணிகளை கவனிக்காத, தலைமை ஆசிரியர்களுக்கு, ஆறு முக்கிய விதிமுறைகளை விதித்து, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி... பள்ளி வேலை நாட்களில் தலைமை ஆசிரியர்கள், பிற பணிக்காக வெளியூர் செல்ல, சி.இ.ஓ.,வின் முன்அனுமதியை பெற வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை வலியுறுத்தியுள்ளது.
அதன்படி... பள்ளி வேலை நாட்களில் தலைமை ஆசிரியர்கள், பிற பணிக்காக வெளியூர் செல்ல,சி.இ.ஓ.,வின் முன்அனுமதியை பெற வேண்டும்.
பிற பணி விவரங்களை, பள்ளியில் பராமரிக்கப்படும் நடமாடும் பதிவேட்டில் பதிய வேண்டும்.இதே விவரங்களை, சி.இ.ஓ., அலுவலக நடமாடும் பதிவேட்டிலும் இடம் பெற செய்ய வேண்டும்.
சி.இ.ஓ.,க்கள் தங்களது மாவட்டத்தில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்களின், பிற பணிகளைஅறிந்து, தேவைப்படும் பட்சத்தில், உயரதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும். தவிர்க்க முடியாதகாரணத்திற்காக மட்டுமே, தலைமை ஆசிரியர்களை, சி.இ.ஓ.,க்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள்நேரில் வரவழைக்க வேண்டும்.
சி.இ.ஓ., - டி.இ.ஓ., அலுவலகங்களில் தபால் கொடுத்தல் போன்ற சாதாரண பணிகளுக்கு, பள்ளிஅலுவலக ஊழியர் அல்லது பணி சுமையில்லாத பிற ஆசிரியர்களை பயன்படுத்தலாம். இந்தவிதிமுறைகள் அடங்கிய உத்தரவு கடிதம், பள்ளிக்கல்வித் துறை மூலம், சி.இ.ஓ.,அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது
-- 
பார்வை :www.testfnagai.blogspot.com
அன்புடன்
தமிழ்நாடு  தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
 

நாகப்பட்டினம் மாவட்டக்கிளை

Thursday, January 10, 2013

Tuesday, January 08, 2013

வாருங்கள் நண்பர்களே ! பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்திற்கு எதிரான நமது போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்



dharna photos continuation 6

தொகுப்பு வள மையக்கூட்டத்திற்கு அறிவியல் கையேடு


ஜனவரி 19 ம் தேதி நடைபெறவுள்ள தொகுப்பு வள மையக்கூட்டத்திற்குஅறிவியல் கையேடு பெற இங்கே சொடுக்கவும்

nagai dharna koottani - continued 5

தற்செயல் விடுப்பு நமது உரிமை சும்மா தினமலர் செய்தியெல்லாம் நம்பாதீங்க


சேலம்: அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில், பயிற்சி தரப்படும் நாளன்று, அதிகமான ஆசிரியர்கள் விடுமுறை எடுப்பதால், அரசின் முயற்சியும், நிதியும் வீணாவதுடன், மாணவர் நலனும் பாதிக்கப்படுகிறது. அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், முதல் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியரின் கல்வித்தரத்தை மேம்படுத்த பல்வேறு செயல்திட்டங்கள் அமல்படுத்தப்படுகிறது. இதில், ஐந்தாம் வகுப்பு வரை, செயல்வழிக்கற்றல் முறையும், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை, படைப்பாற்றல் முறையும் செயல்படுத்தப்படுகிறது.
இதில், ஒவ்வொரு ஆண்டும் பாடத்திட்டங்களில் ஏற்படும் மாற்றங்கள், புதிதாக சேர்க்க வேண்டிய பகுதிகள் உள்ளிட்டவை குறித்து, அனைத்து ஆசிரியர்களுக்கும், 15 நாட்கள் வரை பயிற்சியளிக்கப்படுகிறது. சனிக்கிழமைகளில் நடைபெறும் இப்பயிற்சிகளில், அனைத்து ஆசிரியர்களும் கலந்து கொள்ள வேண்டும், என அனைவருக்கும் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. பயிற்சியன்று கலந்து கொள்ள முடியாத கட்டாயம் ஏற்படும் பட்சத்தில்,அப்பகுதி உதவி தொடக்கக்கல்வி அலுவலர் அனுமதி பெற்று, விடுமுறை எடுத்துக்கொள்ளலாம், என விதிவிலக்கு அளிக்கப்பட்டது. ஆனால், இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, ஆசிரியர்கள் பயிற்சிக்கு செல்வதை தவிர்த்து வருகின்றனர். கடந்த ஜனவரி, 5ம் தேதி சேலம் மாவட்டதுவக்க மற்றும் நடுநிலை ஆசிரியர்களுக்கு, கலை மற்றும் கைவினை பொருட்கள் தயாரிப்பு குறித்து, அந்தந்த வட்டார வளமையங்களில், ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது. அன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர் சங்கங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தின. இதில், கலந்து கொள்வதற்காக, பல ஆசிரியர்கள் விடுமுறை (சி.எல்.,) எடுத்து, பயிற்சி வகுப்பில் பங்கேற்பதை தவிர்த்தனர். இதனால் பயிற்சியில், 20 சதவிகிதத்துக்கும்மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்கவில்லை. இதுகுறித்து அனைவருக்கும் கல்வி இயக்கக அலுவலர் ஒருவர் கூறியதாவது: பல கோடி ரூபாய் செலவில், புதிய கல்வி முறைகளை அரசு செயல்படுத்துகிறது. இவற்றை அமல்படுத்துவதற்காக, ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. 

அப்பயிற்சியின் போது, விடுமுறை எடுப்பதால், அத்திறன்களை மாணவர்களிடம் கொண்டு செல்வதில் தடங்கல் ஏற்படுகிறது. மாணவர் நலன் பாதிக்கும் என்பதாலேயே, பயிற்சியின் போது, விடுமுறை வழங்கக்கூடாது, என உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


ஆனாலும், அவர்கள் ஒவ்வொரு பயிற்சியின் போதும் ஆசிரியர்களுக்கு விடுமுறை எடுக்க அனுமதி வழங்குகின்றனர். இதனால், அரசு திட்ட நிதி வீணாவதுடன், மாணவர் நலனும் பாதிக்கப்படுகிறது. இதை தவிர்க்க, அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். இவ்வாறு அவர் கூறினார். 

koottaini dharna -photo continuation -4