SAY NO TO PPP, TET ,CPS

நிதி வழங்குக

GREAT SALUTE TO OUR ESWARANJI

Todays Educational News

கல்வி செய்தி

முக்கிய செய்திகள் – Google செய்திகள்

BBCTamil.com | இந்தியா

FLASH NEWS

முக்கிய செய்திகள்



FIGHT UNTILL YOU WIN YOUR DEMANDS

மேலும் கல்வி செய்திகள்

Tamilnadu Teachers friendly blog

தினகரன் கல்வி செய்திகள்

தமிழ் முரசு செய்திகள்

தினகரன் முக்கிய செய்திகள் --

TEACHER TamilNadu

தமிழ் முரசு முக்கிய செய்திகள்

Dinamani

Daily Thanthi

கல்வி அஞ்சல்

புதிய தலைமுறை தொலைக்காட்சி

Thursday, July 12, 2012

sexual harassing teachers-dinamalar news

"சில்மிஷ ஆசிரிய, ஆசிரியைகள் பணி நீக்கம் செய்யப்படுவதுடன், அவர்களது கல்விச் சான்றிதழும் ரத்து செய்யப்படும்' என, முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ள போதும், நாமக்கல் "சில்மிஷ' ஆசிரியர் மீதான நடவடிக்கையை கல்வித்துறை அதிகாரிகள், கிடப்பில் போட்டுள்ளது, பெற்றோரை அதிர்ச்சியடைச் செய்துள்ளது.

நாமக்கல் அருகே வடுகப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக சத்தியபிரபு, 33, பணிபுரிந்து வந்தார். அவர், பள்ளி ஆசிரியைகளிடம், இரட்டை அர்த்தத்தில் பேசுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். அதுபோல் பள்ளி மாணவியரிடமும் "சில்மிஷ'த்திலும் ஈடுபட்டு வந்துள்ளார்.

புகார்:ஆசிரியர் சத்தியபிரபுவின் நடவடிக்கையால் தர்ம சங்கடத்திற்கு உள்ளான ஆசிரியைகள், அதுகுறித்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளிடம் மறைமுகமாக புகார் செய்துள்ளனர். எனினும், அவர் மீது, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வந்தனர்.அதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஆசிரியர் சத்தியபிரபு, தொடர்ந்து மாணவியரிடம், "சில்மிஷ'த்தில் ஈடுபட்டு வந்தார். ஒரு கட்டத்தில் அவரின் தொந்தரவு அதிகரிக்கவே, அதை பொறுக்க இயலாத மாணவியர் சிலர், "சில்மிஷ' ஆசிரியர் சத்தியபிரபுவின் நடவடிக்கைகள் பற்றி, தங்களது பெற்றோரிடம் கூறியுள்ளனர்.அதிர்ச்சியடைந்த பெற்றோர், சென்ற மாதம், 25ம் தேதி, பள்ளியை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து மாவட்ட கலெக்டர் குமரகுருபரன் உத்தரவு படி, ஆசிரியர் சத்தியபிரபுவை, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அருள்மொழி தேவி, "சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.
அலட்சியம்:
"பள்ளி மாணவ, மாணவியரிடம் தவறான முறையில் நடக்கும் ஆசிரிய, ஆசிரியைகள் பணியில் இருந்து நீக்கம் செய்யப்படுவதுடன், அவர்களது கல்விச் சான்றும் ரத்து செய்யப்படும்' என, தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளபோதும், அவர் மீதான நடவடிக்கை மட்டும் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது.மாணவ, மாணவியரிடம் தவறான முறையில் ஈடுபடும் ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் முறைகேட்டில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் உள்ளிட்டோர் மீது, துறை ரீதியாக முதலில், "சஸ்பெண்ட்' செய்யப்படுவர். இது, தற்காலிக பணி இடைநீக்கம் என்பதால், சம்மந்தப்பட்ட ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு முதல் ஆறு மாதத்திற்கு, அவர் பெற்று வந்த ஊதியத்தில், 50 சதவீத தொகை ஊதியமாக வழங்கப்படும்.ஆறு மாதத்திற்கு மேல் "சஸ்பெண்ட்' நடவடிக்கை நீடித்தால், அவருக்கு, 75 சதவீத தொகை ஊதியமாக வழங்கப்படும். எனவே, அரசுத் துறை நடவடிக்கையை பொறுத்தவரை, "சஸ்பெண்ட்' எல்லாம் வெறும் கண்துடைப்பு தான். எனவே, தமிழக முதல்வர் உத்தரவின் பேரில், வடுகப்பட்டி நடுநிலைப்பள்ளி ஆசிரியர் சத்தியபிரபுவை, பணி நீக்கம் செய்ய வேண்டும்.அவர் மீதான நடவடிக்கை, எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க முடியும் என, பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.ஆனால், சத்தியபிரபு மீதான அடுத்தகட்ட நடவடிக்கையை, மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள், விரைந்து மேற்கொள்ளாமல் சுணக்கம் காட்டுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.எப்போது?
இது குறித்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அருள்மொழிதேவி கூறியதாவது:
"ஆசிரியர் சத்யபிரபு மீது "சில்மிஷ' குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து, விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை முடிவில், "17பி' சார்ஜ் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை அறிக்கை, இயக்குனரகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
நான்கு ஆண்டாக ஒரே பள்ளி: ஆசிரியர் சத்தியபிரபு சென்னை பல்கலையில், கடந்த, 2000ம் ஆண்டு, பி.ஏ., ஆங்கிலம் படித்துள்ளார். அதே பல்கலையில், முதுகலை ஆங்கில பட்ட மேற்படிப்பு மற்றும் எம்.பில்., படித்துள்ளார். அவர் கடந்த, 2007ம் ஆண்டு, தர்மபுரி மாவட்டம் அரூரில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.அங்கு ஓராண்டு பணிபுரிந்த சத்தியபிரபு, அங்கிருந்து இடமாற்றம் பெற்று வடுகப்பட்டி பள்ளியில் சேர்ந்துள்ளார். தொடர்ந்து நான்காண்டாக அவர் வடுகப்பட்டி பள்ளியில் பணிபுரிந்துள்ளார். ஆசிரியர் சத்தியபிரபுவின் தந்தை பெரியசாமி, ஓய்வு பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியர். சத்தியபிரபுவின் மனைவி சங்கீதா, நாமக்கல் மாவட்டம், புதன்சந்தை, ஆரம்ப சுகாதார நிலையத்தில், தொகுப்பூதியத்தில் நர்சாக பணிபுரிந்து வருகிறார்.

ஆசிரியைகளிடமும் தவறாக பேசியதால் பணியிலிருந்து விடுவிப்பு:
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 2009-10ம் ஆண்டில், பள்ளி தொகுப்பு கருதாய்வு மையங்களுக்கு ஆசிரியர் சத்யபிரபு, ஒருங்கிணைப்பாளராக நியமனம் செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து மாவட்ட அளவில் நடந்த ஆங்கில பயிற்சி முகாமில் பங்கேற்றார்.
பயிற்சியில் நடத்தப்பட்ட விவரங்களை, ஒன்றிய அளவில் நடக்கும் பயிற்சி முகாமில், கருத்தாளாக பணியாற்றி, ஆசிரியர்களுக்கு விளக்க வேண்டும். அதன்படி சேந்தமங்கலம் வட்டார அளவில், துவக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கில பேச்சுத்திறன் குறித்த பயிற்சி அளித்து வந்தார்.அப்போது, ஆசிரியைகளிடம், இரட்டை அர்த்தத்தில் பேசுவதை, வழக்கமாக கொண்டிருந்தார். அதனால், அதிர்ச்சி அடைந்த ஆசிரியைகள் பலர், ஆங்கில மொழி பயிற்சிக்கு வருவதை தவிர்த்தனர். கல்வி இயக்க மாவட்ட அலுவலகத்துக்கு, அனைவரின் புகாரும் சென்றது. அதைத் தொடர்ந்து, "சில்மிஷ' ஆசிரியர் சத்யபிரபு, கருத்தாளர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

Wednesday, July 11, 2012

G.O.270 NORMS FOR ELEMENTARY DEPLOYMENT FOR BTS & SGTS

    bjhl¡f¡ fšé Ïa¡Feç‹ brašKiwfŸ, br‹id 600 006.

                                 e.f. v© 04404 / Ï1 / 2012, ehŸ 11.07.2012

bghUŸ :
bjhl¡f¡ fšé / 2012/2013 M« fšé M©L¡F¿a bghJ khWjš Cuh£Á x‹¿a«, efuh£Á k‰W« muR bjhl¡f k‰W« eLãiy¥ gŸëfëš cŸs cgç¥ gâæl§fëš gâòçÍ« Ïilãiy MÁça®fŸ k‰W« g£ljhç MÁça®fŸ gâ ãutš k‰W« khWjš më¤jš fhy m£ltiz rh®ªJ.

gh®it :
1.           murhiz ãiy v© 158, gŸë¡ fšé¤Jiw, ehŸ 18.05.2012
2.          murhiz (1o) v© 142, gŸë¡ fšé¤ Jiw, ehŸ 26.04.2012
3.          murhiz (1o) v© 270, gŸë¡ fšé¤ (t.br.2) Jiw, ehŸ 10.07.2012
                                                                                      ... ... ...

gh®it 1 k‰W« 2š fhQ« murhizæ‹go, Cuh£Á x‹¿a«, efuh£Á k‰W« muR bjhl¡f k‰W« eLãiy¥ gŸëfëš cŸs cgç¥ gâæl§fëš gâòçÍ« Ïilãiy MÁça®fŸ k‰W« g£ljhç MÁça®fis gâãutš brŒjš k‰W« khWjš më¤jš rh®ghd fhy m£ltiz ÑœF¿¤jthW.

t. v©
ehŸ
étu«
1.
21.07.2012 K‰gfš
g£ljhç MÁça® gâ ãutš
-
x‹¿a¤Â‰FŸ k‰W« x‹¿a« é£L x‹¿a«
2.
21.07.2012 Égfš
g£ljhç MÁça® khWjš
-
x‹¿a« é£L x‹¿a«
3.
22.07.2012
g£ljhç MÁça® gâ ãutš k‰W« khWjš
-
kht£l« é£L kht£l«
4.
28.07.2012
Ïilãiy MÁça® gâ ãutš k‰W« khWjš
-
x‹¿a¤Â‰FŸ
5.
29.07.2012
Ïilãiy MÁça® gâãutš k‰W« khWjš
-
x‹¿a« é£L x‹¿a«
6.
31.07.2012
Ïilãiy MÁça® gâãutš k‰W« khWjš
-
kht£l« é£L kht£l«

nk‰fhQ« fhy m£ltizæ‹go cça MizfŸ tH§f¥gl nt©oÍŸsjhš, Ïytr k‰W« f£lha¡ fšé cçik¢ r£l« 2009 ‹go, 01.09.2011š cŸs khzt®fë‹ v©â¡ifæ‹ mo¥gilæš, gâ ãutš k‰W« khWjš rh®ghd Ïilãiy MÁça®fŸ k‰W« g£ljhç MÁça®fë‹ bga®¥g£oaiy x‹¿a thçahfΫ, kht£l« KGik¡Fkhf¤ bjhF¤J 16.07.2012 ¡FŸ jah® ãiyæš it¤ÂU¡FkhW mid¤J kht£l¤ bjhl¡f¡ fšé mYty®fS« gâ¡f¥gL»wh®fŸ.

ÏJ äfΫ mtru«.
     x¥g«/-                 
bjhl¡f¡ fšé Ïa¡Fe®
bgWe®
mid¤J kht£l¤ bjhl¡f¡ fšé mYty®fŸ

KALVI VALARCHI NAAL CAN BE CELEBRATED ON 14 OR 16


வேலை நாளில் கல்வி வளர்ச்சி தினம்: பள்ளி கல்வித்துறை-11-07-2012

 கமாராஜர் பிறந்த நாளான ஜூலை 15, விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை வருவதால், கல்வி வளர்ச்சி தினத்தை, பள்ளி வேலை நாளில் கொண்டாட, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
காமராஜர் பிறந்த தினமான ஜூலை 15ம் தேதி , கல்வி வளர்ச்சி நாளாக பள்ளிகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு ஜூலை 15 ஞாயிற்றுக்கிழமை வருவதால், ஜூலை 14 அல்லது ஜூலை 16 ஆகிய இரு தினங்களில், ஏதாவது ஒரு நாளில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
கல்வி வளர்ச்சி நாளில், மாணவர்கள் இடையே போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன. கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டம் குறித்து, அதன் போட்டோக்களுடன் அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களில் சமர்ப்பிக்க, தலைமையாசிரியர்களை பள்ளிக்கல்வித்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

G.O 264 REGARDING MORNING SCHOOL PRAYER ONLY ON MONDAYS

TRB JD WARNS NOT TO GET CHEATED FOR TET EXAM

டி.இ.டி.,தேர்வுக்கு பணம் கொடுத்து ஏமாறாதீர்: டி.ஆர்.பி.,இணை இயக்குனர் எச்சரிக்கைடி.இ.டி., தகுதித்தேர்வுக்கு யாரிடமும் பணம் கொடுத்து ஏமாறாதீர் என ஆசிரியர்களுக்கு டி.ஆர்.பி.,இணை இயக்குனர் சேதுராம வர்மா எச்சரித்துள்ளார்.
இளநிலை பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு நாளை நடக்கிறது. மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் இத்தேர்வுக்கான ஏற்பாடுகளை டி.ஆர்.பி., இணை இயக்குனர் சேதுராம வர்மா கவனிக்கிறார். சிவகங்கையில் இன்று சி.இ.ஓ., ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்த இத்தேர்வு கண்காணிப்பாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் விதிமுறை குறித்து விளக்கினார். அவர் கூறியதாவது: 5 மாவட்டத்திலும் இடைநிலை ஆசிரியர்கள் 40 ஆயிரத்து 500 பேரும், 50 ஆயிரத்து 400 பி.எட்., ஆசிரியர்களும் இத்தேர்வை எழுதுகின்றனர். தேர்வில் யாரும் பாதிக்காத வகையில் நடந்து கொள்ள கண்காணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு கீழ் தள தேர்வு மையம் ஒதுக்கப்படும். குறுக்கு வழியில் வெற்றி பெற யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்.முறைகேடு இன்றி, 100 சதவீத நம்பக தன்மையுடன் தேர்வு நடக்கிறது. மார்க் அடிப்படையில் பி.எட்., ஆசிரியர்களுக்கு பணி வழங்கப்படும். வெற்றி பெறும் இடைநிலை ஆசிரியர்கள் பதிவு மூப்பில் பணியில் சேரலாம். முதன் முறையாக குறைந்த ஊழியர்களை கொண்டு, அதிக எண்ணிக்கையிலான ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு நடத்தப்படுகிறது. ஒரு சில விண்ணப்பதாரர்கள் தவறு செய்திருந்தபோதிலும், முதன்முறை என்பதால் தேர்வுக்கு அனுமதித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். 

Tuesday, July 10, 2012

DINAMANI ARTICLE SCANS CCE & METHODOLOGY

  சமனில்லாத சமன்!
ம. பண்டரிநாதன்
கடந்த ஆண்டு இதே காலத்தில் சமச்சீர் கல்வி பற்றி மிகப்பெரிய குழப்பம் ஆசிரியர்களிடையேயும் மாணவர்களிடையேயும் இருந்தது. இது தொடர்பாக போராட்டங்களும் ஆங்காங்கே நடந்தன. தில்லி உச்ச நீதிமன்றம்வரை சென்ற அந்தப் பிரச்னை ஒரு வழியாக சுமுகமாக்கப்பட்டது. கல்வி அனைவருக்கும் சமமாக்கப்பட வேண்டும் என்ற பெயரில் சமச்சீர் உருவாக்கப்பட்டது பாராட்டுக்குரியதுதான்.

 ""ஒரு கட்டடத்தை இரு தூண்கள் தாங்கிக் கொண்டுள்ளன. அதில் ஒரு தூணின் மேற்பகுதி சிறிது உடைந்துவிட்டது. இப்போது மேல்தளம் சமனில்லாமல் ஒரு புறம் சரிந்துள்ளது. இதனை சமன்செய்வதற்கான பல வழிகள் தொடர்பாகக் கூறப்பட்ட ஒரு யோசனை செயல்படுத்தப்பட்டது. அது என்னவென்றால், நன்றாக உள்ள மற்றொரு தூணையும் உடைந்த தூணின் அளவுக்கு உடைப்பதென்பது. அது அவ்வாறே மேற்கொள்ளப்பட்டு மேல் தளத்தைச் சமன்படுத்தியாயிற்று''.
 இதுபோன்று எளிதில் புரியக்கூடிய, அழகான எடுத்துக்காட்டுகளைக் கொண்டிருக்கும் சமச்சீர் புத்தகம் அனைவரிடத்திலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்போதைக்குப் பிரச்னை அதுவல்ல.
 8-ஆம் வகுப்பு வரை அமல்படுத்தப்பட்டுள்ள, மாணவர்களும் ஆசிரியர்களும் செயல்படுத்த வேண்டிய பல்வேறு செயல்பாடுகளைப் பற்றித்தான். செயல்வழிக்கற்றல், படைப்பாற்றல் கல்வி முறை மூலம் மாணவர்கள் பாடங்களைக் கற்கும் முறை இந்த ஆண்டு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இதனால் தினமும் அதிகநேரம் படிப்பது என்பது மாறி அதிகநேரம் செயல்வழிக் கற்றல் என்றாகிறது. இது பாடங்களை எளிதில் புரிந்து கொள்வதற்குச் சிறந்த வாய்ப்பாக அமைந்திருக்கிறது.
 இந்த செயல் வழிக்கற்றலுக்காக மாணவர்களுக்கு சில மூலப்பொருள்கள் (சார்ட், அதில் ஒட்டுவதற்குப் படங்கள்..,) தேவைப்படுகின்றன. இதற்காக ஒவ்வொரு மாணவனுக்கும் தினமும் குறைந்தது 20 ரூபாய் தேவைப்படுகிறது. 20 ரூபாய் என்பது உயர் வருவாய் பிரிவினருக்கு பெரும் தொகையல்ல. அரசுப் பள்ளியில் குழந்தைகளை விட்டுவிட்டு டாஸ்மாக்கில் நாள்தோறும் வருகையைப் பதிவு செய்யும் தந்தைக்கும், இலவசமாக அளிக்கக்கூடிய அரிசியைக்கூட கிலோ ரூ.3-க்கு வாங்கும் தாய்க்கும் இது பெருந்தொகையே! இது மாணவர்களுடைய பிரச்னை.
 இந்தமுறையில் ஆசிரியர்களுக்கு என்ன பிரச்னை? இங்குதான் ஆசிரியர்கள் ஆசிரியர்களாக அல்லாமல் மாணவர்களின் செயல்பாடுகளை ஆவணப்படுத்தும் அலுவலர்களாக மாறியிருக்கின்றனர்.
 ஒவ்வொரு மாணவனுக்கும் 5 அல்லது 6 பக்கம் ஒதுக்கப்பட்டு, மாணவர்களைத் தனித்தனியே கவனித்து அவர்களைப் பற்றி வளர் மதிப்பீடு, தொகுப்பு மதிப்பீடு என்று ஆவணப்படுத்தும் வேலை ஆசிரியர்களுக்கு. இதனால் கற்றுத்தரும் நேரம் குறைவாகவும் ஆவணப்படுத்தும் நேரம் அதிகமாகவும் செலவிட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. உதாரணத்துக்கு மாணவனிடம் ஆசிரியர் ஒரு கேள்வி கேட்டால், மாணவனிடம் என்ன கேள்வியைக் கேட்டோம் என்று ஆவணப்படுத்த வேண்டும். மாணவன் புத்தகத்தை கையில் தொட்டால், அதற்கு தனி மதிப்பெண் என்று அதனையும் பதிவு செய்ய வேண்டும்.
 இந்த வேலைகளையெல்லாம் செய்துதான் மாணவன் எந்த இடத்தில் தேங்குகிறான், தொய்வடைகிறான் என்று ஆசிரியர் அறிய வேண்டியதில்லை. மாணவர்களின் சில செயல்பாடுகளை வைத்தே அவனைப் பற்றி கணிக்கக் கூடிய திறமை ஆசிரியர்களிடத்தில் உண்டு. மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகவும் ஆசிரியர்கள் எண்ணிக்கை குறைவாகவும் உள்ள பள்ளிகளில் மாணவர்களின் தகவல்களை ஆவணப்படுத்தும் முறை எப்படி சாத்தியமாகும்?
 இந்நிலையில் இத்தனை வழிமுறைகளை அமல்படுத்தினால் மாணவர்களுக்குக் கல்வி சுமையாகின்றதோ இல்லையோ ஆசிரியர்களுக்கு சுமையாகிவிடாதா?
 ஆசிரியர்களைப் பொருத்தவரையில் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களைக் காட்டிலும், தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் மேலானவர்கள். புதிதாகக் கொண்டு வந்துள்ள முறை தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கு உகந்த சூழலை ஏற்படுத்தியுள்ளதா?
 வண்டியில் சாட்டையைக் கையில் வைத்துக்கொண்டு உட்கார்ந்திருப்பவர் பாரத்தை இழுக்கும் எருதின் கஷ்டத்தை அறிந்திருக்க வாய்ப்பில்லை.
 கல்வி முறைகளில் உள்ள குறைகளைக் கூறினால், ""சம்பளம் அதிகம்; அதனால் வேலை அதிகம்; இதைக் கூட அவர்கள் செய்ய முடியாதா?'' என்று கேள்விக்கணைகள். வேலை செய்ய ஆசிரியர்கள் தயார். ஆனால், ஓட்டைப் பானையை வைத்து செடிகளுக்கு எப்படி நீர் ஊற்றுவது? இங்கு மாற்ற வேண்டியது பானையையா, நீர் ஊற்றுபவர்களையா?
 கால்குலேட்டர் வந்தவுடன் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் திறன் குறைந்தது; செல்போன் வந்தவுடன் நினைவுத்திறன் குறைந்தது; இவைகளை இழந்து நாம் எதைப்பெற்றோம் என்று தெரியவில்லை.
 அதேபோல் தொழில்நுட்பம் வந்தபின் எழுதுவது குறைந்தது. அட்டை வழி, செயல்வழி கற்றல்கள் மூலம் மாணவனின் வாசிப்புத் திறன் மறைந்து கொண்டிருக்கிறது. எழுத்து, வாசிப்பு இவையிரண்டும் இல்லாமல் எப்படி ஒரு மொழியைக் காப்பாற்றுவது?
 மாற்றங்கள் வரும்போது ஒன்றை நாம் இழக்கத்தான் வேண்டும். மாற்றத்தை மறுப்பவர்கள் பிற்போக்காளர்கள், இந்த காலத்துக்கு உதவ மாட்டார்கள் என்று மாற்றத்தை ஏற்பவர்கள் ஏளனம் செய்கிறார்கள்.
 அசோகர் மரம் நட்ட வரலாற்றுக் கல்வியைத் தூக்கிப்போடுங்கள். இந்த காலத்துக்கு ஏற்ற கல்வியை உருவாக்குங்கள் என்று முற்போக்கு சிந்தனைவாதிகளின் (?) குரல்கள் முன்பு கேட்டன.
 ஆனால் இன்றோ, உலக வெப்பமயமாதலைத் தடுக்க ஜி-20 மாநாட்டில் ஆலோசிக்கப்படுகிறது. மரத்தின் அருமை குறித்து அரசு பல விளம்பரங்களைச் செய்து வருகிறது. மரங்களை வளர்க்க பல இயக்கங்கள் தோன்றிவிட்டன.
 இப்போதாவது புரிகிறதா, பழைய கல்வி முறை எவ்வளவு உகந்ததென்று? எந்தக் கல்வி முறையை மாற்ற வேண்டுமென்று யார் கூறுவது? மாற்றங்களை நாம் ஒத்துக் கொண்டுதான் ஆகவேண்டுமா? அவ்வாறாயின், உருவில் சிறியதாக இருந்து அறை முழுவதும் மணத்தை பரப்பக்கூடிய மல்லிகை போல்தானே அது இருக்க வேண்டும். அதைவிடுத்து காற்றிலே பட்டவுடன் சுருங்கி விடும் பஞ்சு மிட்டாய் போன்று இருந்து என்ன பயன்?
 இந்த வகையான கற்றல் முறைகள் எல்லாம் சிபிஎஸ்இ-க்கு ஈடாக உருவாக்கப்பட்டிருக்கிறது என்பது அதிகாரிகளின் கருத்து. ஒருவேளை இந்த முறையும் அதற்கு ஈடாகவில்லையென்றால் என்ன செய்வது என்று ஆசிரியர்களிடம் கேள்வியெழுப்பினால், "நாம் என்ன செய்ய, அரசன் எவ்வழியோ நாம் அவ்வழி' என்ற பழமொழியை நினைவூட்டுகிறார்கள்.
 நீரில் நனைந்த காகிதமோ, அட்டையோ ஈரம் காய்ந்தபின் முன்பைவிட விறைப்பாகத்தான் இருக்கும். அதற்காக அது உறுதியாகத்தான் உள்ளது என்று கூறிவிட முடியுமா?
 முன்னர் பார்த்த கட்டட உதாரணத்தில், எதிர்கால சிந்தனையின்றி மேல்தளம் சமன்செய்யப்பட்டது. பாருங்கள், நாளைக்கு ஏற்கெனவே பாதிப்படைந்த தூண் பளு தாங்காமல் மேலும் பாதிப்படைந்தால் மேல்தளத்தை எப்படி சமன் செய்வது? மீண்டும் நன்றாக உள்ள தூணை வெட்டி சமன் செய்வதா? இதைத் தவிர்க்க முன்னரே என்ன செய்திருக்க வேண்டும்?

THIRUNELVELI DEEO OFFICE STAFF ARRESTED FOR GETTING BRIBE FROM A TEACHER

ஆசிரியரிடம் லஞ்சம் வாங்கிய கல்வித்துறை அதிகாரி கைது திருநெல்வேலி: ஆசிரியரிடம் ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கல்வித்துறை அதிகாரி லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். நெல்லை மாவட்டம் ரெட்டியார்புரத்தை சேர்ந்தவர் எபினேசர் ஜெபக்கனி. இவர் கடந்த 2001ம் ஆண்டு ஆசிரியர் பணியில் சேர்ந்தார். இவருக்கு கடந்த 2007ம் வரையிலான ஆண்டிற்கு சம்பளம் கிடைக்கவில்லை. இது குறித்து அவர் மாவட்ட கல்வித்துறை அதிகாரியிடம் புகார் செய்தார். 

இவரது மனுவை பரிசீலனை செய்த கல்வித்துறை அலுவலகத்தில் பணிபுரியம் ஜெரால்டு வசீகரன்(45), 8 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டார். லஞ்சம் கொடுக்க மறுத்த எபினேசர், லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., தங்கசாமியிடம் புகார் மனு அளித்தார். அவரது ஆலோசனையின் பேரில் ரசாயனம் தடவிய 8 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்த போது ஜெரால்டு வசீகரனை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஜெரால்டு விசாரணைக்கு பின்னர் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். ஜெரால்டு முன்னர் நெல்லையில் பணிபுரிந்தபோது லஞ்ச புகார் காரணமாக நான்குநேரிக்கு மாற்றப்பட்டார். பின்னர் அவர் மீண்டும் நெல்லை வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

WILL TET EXAM BE TOUGH?


டி.இ.டி தேர்வு கடினமாக இருக்குமா?-10-07-2012


சென்னை: வரும் 12ம் தேதி நடக்க உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வு (டி.இ.டி.,), கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எட்டாம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தின்படி தேர்வு என்றாலும், பிளஸ் 2 நிலையில், கேள்விகள் கடுமையாகவும், சிந்தித்து விடை அளிக்கும் வகையிலும் இருக்கும் என கூறப்படுகிறது.
திணறடித்த குரூப்-4: கடந்த 7ம் தேதி, டி.என்.பி.எஸ்.சி., நடத்திய குரூப்-4 தேர்வில், 10 லட்சம் பேர் பங்கேற்றனர். 10ம் வகுப்பு கல்வித்தகுதி நிலையில் நடக்கும் தேர்வு என்றாலும், மிகக் கடுமையாக, தேர்வர்களை குழப்பும் வகையில், நீண்ட நேரம் சிந்தித்து விடை அளிக்கும் வகையில், கேள்வித்தாள் அமைந்தது. இதனால், தேர்வெழுதியவர்கள் புலம்பி வருகின்றனர்.
குறைந்த எண்ணிக்கையிலான பணியிடங்களுக்கு, பன்மடங்கு போட்டி எனும்போது, கடுமையான தேர்வு முறையை கையாளாவிடில், ஆட்களை தேர்வு செய்வதில் சிரமம் ஏற்படும் நிலையும் உள்ளது. இந்நிலையில், 12ம் தேதி, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) நடத்தும், டி.இ.டி., தேர்வு நடக்கிறது. குரூப்-4 தேர்வெழுதிய தேர்வர்கள் பலர், டி.இ.டி., தேர்வையும் எழுத உள்ளனர்.
10ம் வகுப்பு நிலையில் நடந்த தேர்வே அதிர்ச்சி அடைய வைத்ததால், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் நிலையில் நடக்கும் தேர்வு எப்படி இருக்குமோ என, பீதி அடைந்து உள்ளனர்.
திறமையை சோதிப்போம்: ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் இடைநிலை ஆசிரியருக்கு, ஆரம்பக்கல்வி நிலையிலும்; ஆறு, ஏழு மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பாடம் எடுக்கும் பட்டதாரி ஆசிரியருக்கு, எட்டாம் வகுப்பு பாடத்திட்ட அளவிலும், தேர்வு நடக்க வேண்டும். எனினும், இரு பிரிவு ஆசிரியருக்குமே, பிளஸ் 2 பாடத்திட்ட நிலையில், கேள்விகள் கேட்கப்பட உள்ளன.
இது குறித்து, டி.ஆர்.பி., வட்டாரம் கூறும்போது, இருக்கும். ஆசிரியர் பணிக்கு வருபவரின் திறமையை சோதிக்கும் வகையிலும், சிந்திக்கும் திறனுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாகவும், கேள்விகள் இருக்கும்,&'&' என்றனர்.
பட்டதாரி ஆசிரியருக்கு சவால்: டி.இ.டி., தேர்வு, 150 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது. கட்டாயக் கல்வி சட்டத்தின்படி, ஆசிரியர் பணியில் உள்ளவர்கள் மற்றும் ஆசிரியர் பணிக்கு செல்ல இருப்பவர்கள், தேர்ச்சி பெற, 90 மதிப்பெண் (60 சதவீதம்) பெற வேண்டும். இடைநிலை ஆசிரியரைப் பொறுத்தவரை, தேர்ச்சி பெற்றால் போதும். ஏனெனில், அவர்கள் வேலை வாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையில்தான் நியமிக்கப்பட உள்ளனர்.
ஆனால், பட்டதாரி ஆசிரியரைப் பொறுத்தவரை, முழுக்க முழுக்க மதிப்பெண் அடிப்படையில்தான் நியமிக்கப்பட உள்ளனர். எனவே, இடைநிலை ஆசிரியரை விட, பட்டதாரி ஆசிரியருக்கு, இந்த தேர்வு பெரும் சவாலாக இருக்கும்.

Monday, July 09, 2012

-Students who need special attention -should be taken care

-G.O.231-TEACHER FIXATION TABLE -

EDUCATIONAL SECRETARY INSTRUCTS SCHOOL WORKING MODE-

RTI to be introduced in school syllabus-


பள்ளி பாடத்திட்டத்தில் ஆர்.டி.ஐ. - மத்திய அரசு பரிசீலனை-09-07-2012



புதுடில்லி: தகவல் பெறும் உரிமைச் சட்டம் (ஆர்.டி.ஐ.,) குறித்து, மக்களிடம் அதிக அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ள மத்திய அரசு, இந்தச் சட்டத்தின் பல அம்சங்களை பள்ளிப் பாடத்திட்டத்தில் அறிமுகப்படுத்துவது குறித்து பரிசீலித்து வருகிறது.
தகவல் பெறும் உரிமைச் சட்டம் தொடர்பான விவகாரங்களில், முதன்மையான நிறுவனமாகச் செயல்படும் மத்தியப் பணியாளர் நலத்துறை இதுதொடர்பாக, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலுடன் (என்.சி. இ.ஆர்.டி.,) பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதற்கான வரைவுத் திட்டமும் விரைவில் தயாராக உள்ளது.
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் உள்ள முக்கிய அம்சங்களை, பள்ளிப் பாடத்திட்டத்தில் இடம் பெறச் செய்யும் விவகாரம், தற்போதுதான் ஆரம்பகட்ட நிலையில் உள்ளது. என்.சி.இ.ஆர்.டி., உடன் கலந்து ஆலோசித்த பின்னரே, இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என, மத்தியப் பணியாளர் நலத்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது:மத்திய, மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள, பல்வேறு துறைகளிலும், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் விபரங்கள் கேட்டு, ஏராளமான விண்ணப்பங்கள் குவிந்து வருவதால், பள்ளிப் பாடத்திட்டத்தில் இந்தச் சட்டம் தொடர்பான விவரங்களை இடம் பெறச் செய்யும் யோசனை உருவாகியுள்ளது.
அரசு நிர்வாகத்தின் செயல்பாடுகளை மேம்படுத்துவதில், தகவல் பெறும் உரிமைச் சட்டம் முக்கியப் பங்கு வகிக்கிறது.சில துறைகளின் செயல்பாடுகளில் உள்ள குறைபாடுகள் மற்றும் திறமைகள் எல்லாம், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்படும் விண்ணப்பங்கள் மூலம் தெரியவந்துள்ளன.
அதனால், இந்தச் சட்ட அம்சங்களை பள்ளிப் பாடத்திட்டங்களில் இடம் பெறச் செய்வது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. ஏழாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பாடத்திட்டங்களில், இவை இடம் பெறலாம்.இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

Saturday, July 07, 2012

NEW HEALTH INSURANCE CARDS BEFORE AUGUST END

ஆகஸ்ட் மாதத்திற்குள் புதிய காப்பீடு அட்டை:காப்பீடு நிறுவனத்திற்கு அரசு உத்தரவு
சென்னை:புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கான, புதிய அடையாள அட்டையை, வரும் ஆகஸ்ட் மாத இறுதிக்குள், அரசு ஊழியர்களுக்கு வழங்க, சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனத்திற்கு, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.நான்கு ஆண்டு காலத்திற்கு...தமிழக அரசின் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு, மருத்துவ சிகிச்சைக்காக நான்கு ஆண்டு காலத்திற்கு, நான்கு லட்சம் ரூபாய் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்திற்கான, காப்பீடு வழங்கும், புதிய நிறுவனத்தை தேர்வு செய்ய, தேசிய அளவில் ஒப்பந்தம் கோரப்பட்டது. தொடர்ந்து, "தி யுனைட்டட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிட்' நிறுவனம், வரும் ஜூலை முதல் தேதி முதல், புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனமாக, தேர்வு செய்யப்பட்டது.
புதிய அரசாணை: ஏற்கனவே, அமலில் உள்ள மருத்துவ காப்பீட்டு திட்டம், கடந்த, 2008ம் ஆண்டு, ஜூலை 11 முதல் துவக்கப்பட்டு, நான்கு ஆண்டுகள் செயல்படுத்தப்பட்டு, கடந்த மாதம், 10ம் தேதியுடன், முடிவடைந்துள்ளது. புதிய திட்டம், வரும் ஜூலை 1ம் தேதி முதல் துவக்கப்பட்டு, நான்கு ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும். இத்திட்டத்திற்கு முதற்கட்டமாக, ஐந்து கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்தது. இந்நிலையில், பயன் பெறும் அரசு ஊழியர்களுக்கு, புதிய திட்டத்தின் கீழ் அடையாள அட்டை வழங்குவது தொடர்பாக, புதிய அரசாணை ஒன்றை நிதித்துறை பிறப்பித்துள்ளது.

புதிய நடைமுறைகள்: இதன் படி, பழைய காப்பீட்டு திட்டத்தில் இருப்பவர்களும், சமீபத்தில் அரசு பணியில் சேர்ந்தவர்களும், புதிய திட்டத்தின் கீழ் இணைவதற்கான, விண்ணப்பங்கள் பெறுதல், பூர்த்தி செய்தல், புதிய அட்டை வழங்குதல் தொடர்பான நடைமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில், சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனம், அட்டை வழங்குவதற்கான விண்ணப்பங்களை, அரசு அலுவலகங்களில் உள்ள, சம்பளக் கணக்கு அதிகாரிகளுக்கு, அனுப்பி வைக்க வேண்டும். அவர்கள், தங்கள் அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு, அந்த விண்ணப்பத்தை அளித்து, பூர்த்தி செய்து, பெற்று, மீண்டும், காப்பீட்டு நிறுவனத்திற்கு அளிக்க வேண்டும்.

20ம் தேதிக்குள் விண்ணப்பம்: இதில், ஏற்கனவே பயன்பெறும் ஊழியர்கள், புதியதாக சேர்ந்துள்ள ஊழியர்கள், என அனைவரும், தங்கள் குடும்பத்தினர் பற்றிய தகவல்களுடன், விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ,வரும் 20ம் தேதிக்குள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அளிக்கவேண்டும். அந்த விண்ணப்பங்களை, இம்மாதம் 31ம் தேதிக்குள், காப்பீட்டு நிறுவனத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பத்தை பெறும் காப்பீட்டு நிறுவனம், ஆகஸ்ட் மாதம், 31ம் தேதிக்குள், புதிய காப்பீட்டு திட்டத்திற்கான அடையாள அட்டைகளை தயாரித்து, சம்பந்தப்பட்ட அரசு அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.ஒரு வேளை புதிய அடையாள அட்டையை தொலைத்து விட்டால், 50 ரூபாய் செலவில், புதிய அட்டையை, ஊழியருக்கு, காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டும் என்றும் அரசாணையில் கூறப்பட்டுள்ளது. மேலும், காப்பீடு தொடர்பான தகவல்கள், அளிக்கப்படும் மருத்துவ சேவைகள், காப்பீட்டு திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகள் குறித்த விவரங்களை, www.tn.gov.in/karuvoolamஎன்ற இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம்.

KARUNANIDHI SEEKS CLARIFICATION ON RTE FROM CENTRAL GOVT


கல்வி உரிமைச் சட்டம் குறித்த நீதிபதியின் கேள்விகளுக்கு மத்திய அரசு பதில்தர வேண்டும்: கருணாநிதி



Arasiyal News
சென்னை, ஜூலை 7: மத்திய அரசு நிறைவேற்றியுள்ள இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் மீது சென்னை உயர்நீதிமன்றம் சில கேள்விகளை எழுப்பியுள்ளது.. இதற்கு மத்திய அரசு பதிலளிக்க முன்வரவேண்டும் என்று கருணாநிதி கேட்டுக் கொண்டுள்ளார்.
இன்று அவர் வெளியிட்ட கேள்வி-பதில் பாணியிலான அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார்.
"மத்திய அரசு நிறைவேற்றியுள்ள இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தைப் பற்றி சென்னை உயர் நீதிமன்றம் சில கேள்விகளை எழுப்பியிருக்கிறதே?” என்ற கேள்விக்கு கருணாநிதியின் பதில்...
"இந்தச் சட்டத்தின்படி ஆறு முதல் பதினான்கு வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு கல்வி இலவசமாக வழங்கு வதற்கு உரிய வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன. கல்விக் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிக்கூடங்களிலும், 25 சதவிகிதம் இடஒதுக்கீடு செய்ய வேண்டும். எல்லா வகுப்புகளுக்கும் தனியார்பள்ளிக்கூடங்களில் 25 சதவிகித இட ஒதுக்கீடு உண்டு என்றுதான் நினைத்தார்கள். ஆனால் இந்த ஆண்டு முதல் வகுப்புக்கு மட்டும், இந்தச் சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இது பலருக்குத் தெரியாது. இதனால் பல குழப்பங்கள் ஏற்பட்டன. எல்லாகுழப்பங்களுக்கும் விடை தெரியும் வகையில், வினாக்களை எழுப்பும் நமது சென்னை உயர் நீதி மன்றம், இந்தப் பிரச்சினையிலும் வழக்கு தொடர்ந்துள்ள ஐந்து பெற்றோர்களின் மனுக்களை விசாரிக்கும்போது நீதியரசர்  கே.சந்துரு பல தெளிவற்ற விவகாரங்கள் இதிலே இருப்பதைச் சுட்டிக்காட்டி யிருக்கிறார். நீதிபதி அவர்கள் எழுப்பியுள்ள கேள்விகளுக்கெல்லாம் இந்தச் சட்டத்தில் சரியான விளக்கம் இல்லை. உதாரணமாக 
பக்கத்தில் உள்ள பள்ளிக் கூடங்களில் 25 சதவீத இட ஒதுக்கீடு என்றால், எந்தப்பகுதியைப் பக்கத்தில் உள்ள பகுதி என்று நிர்ணயிப்பது? பெற்றோர் தங்கள் பிள்ளைகளை சேர்க்க முற்படும்போது தங்களுக்கு விருப்பப்பட்டபள்ளிக் கூடத்தையும் தேர்ந்தெடுக்க முடியுமா?
 இது பற்றிய புகாரை பெற்றோர் கொடுக்க வேண்டுமென்றால் யாரிடம் கொடுப்பது? 
இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப் படுவதை யார் கண்காணிப்பது? 
பள்ளிக்கூடங்களே மாணவர்களைத் தேர்ந்தெடுக்க முடியுமா, அப்படியென்றால், அதற்கு எந்த முறையைக் கடைப்பிடிக்க வேண்டும்?
ஒருவேளை அந்தப் பள்ளிக் கூடத்தில் எல்.கே.ஜி. வகுப்பு இருந்தால், அதில் இந்த மாணவர்களைச் சேர்க்க முடியாதா?
 ஒரு பகுதியில் இரண்டு, மூன்று பள்ளிக் கூடங்கள் இருந்தால், அதில் எந்தப் பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் இலவச கல்வி பெற முடியும்? 
இலவசக் கல்வி மட்டும் என்றால், அவர்களுக்கு சீருடை, கல்விச் சுற்றுலா உள்ளிட்ட மற்ற செலவுகள் வழங்கப்படுமா? என்று அடுக்கடுக்காக உயர் நீதிமன்ற நீதியரசர் நல்ல பல சந்தேகங்களையெல்லாம் எழுப்பி யிருக்கிறார். மத்திய அரசு இந்தக் கேள்வி களுக்கெல்லாம் நல்ல, முறையான விளக்கங்களை அளிக்க முன் வர வேண்டும். அப்போது தான் மத்திய அரசு இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்ததின் நோக்கத்தின் பலன்களை அனைவரும் அடைய முடியும்.”

Friday, July 06, 2012

life threat to nursery school teacher

ஆசிரியைக்கு கொலை மிரட்டல்: பள்ளி தாளாளருக்கு வலை


பல்லடம்: ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்த, பள்ளி தாளாளரை போலீசார் தேடி வருகின்றனர். கோவையில், ப.வடுகபாளையத்தில், நர்சரி பள்ளி நடத்தி வருபவர் பாலசுப்ரமணியம், 50. இவரது பள்ளியில், அதே பகுதியை சேர்ந்த பாலசரஸ்வதி, 34, ஆசிரியையாக பணிபுரிகிறார். இவரது மகள்கள் மதுஸ்ரீ, ஐந்தாம் வகுப்பும், அபிநயஸ்ரீ முதல் வகுப்பும், இதே பள்ளியில் படித்து வருகின்றனர். மகள்களை, வேறு பள்ளியில் சேர்க்க, பால சரஸ்வதி முயன்றார். பள்ளி நிர்வாகத்திடம் மாற்றுச் சான்றிதழ் (டி.சி.,) கேட்ட நிலையில், கோபமடைந்த தாளாளர் பாலசுப்ரமணியம், தன்னிடம் கடனாக வாங்கிய, 20 ஆயிரம் ரூபாயை, உடனடியாக திருப்பிக் கொடுத்தால், மாற்றுச் சான்றிதழ் தருவதாகக் கூறினார். இதற்கு பாலசரஸ்வதி, சில மாதம் அவகாசம் கேட்டார். மறுப்பு தெரிவித்த பாலசுப்ரமணியம், ஆசிரியை வீட்டுக்குச் சென்று, "டிவி' மற்றும் எலக்ட்ரிக்கல் பொருட்களை எடுத்துச் செல்ல முயன்றதாகவும், அவரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கவலையடைந்த ஆசிரியை, விஷம் குடித்து, பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆசிரியை பால சரஸ்வதி கொடுத்த புகார் அடிப்படையில், பல்லடம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள தாளாளர் பாலசுப்ரமணியத்தை தேடி வருகின்றனர்.