SAY NO TO PPP, TET ,CPS

நிதி வழங்குக

GREAT SALUTE TO OUR ESWARANJI

Todays Educational News

கல்வி செய்தி

முக்கிய செய்திகள் – Google செய்திகள்

BBCTamil.com | இந்தியா

FLASH NEWS

முக்கிய செய்திகள்



FIGHT UNTILL YOU WIN YOUR DEMANDS

மேலும் கல்வி செய்திகள்

Tamilnadu Teachers friendly blog

தினகரன் கல்வி செய்திகள்

தமிழ் முரசு செய்திகள்

தினகரன் முக்கிய செய்திகள் --

TEACHER TamilNadu

தமிழ் முரசு முக்கிய செய்திகள்

Dinamani

Daily Thanthi

கல்வி அஞ்சல்

புதிய தலைமுறை தொலைக்காட்சி

Tuesday, March 11, 2014

Monday, March 10, 2014

MUPPERUM VIZHA 09.03.2014 FIRST SET PHOTOS

MUPPERUM VIZHA -NAGAI

--
பார்வை :www.testfnagai.blogspot.com

www.facebook.com/nagai.koottani
அன்புடன்

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
நாகப்பட்டினம் மாவட்டக்கிளை

Sunday, March 09, 2014

--
பார்வை :www.testfnagai.blogspot.com

www.facebook.com/nagai.koottani
அன்புடன்

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
நாகப்பட்டினம் மாவட்டக்கிளை

nagapattinam vattaram mupperum vizha 9.3.14

--
பார்வை :www.testfnagai.blogspot.com

www.facebook.com/nagai.koottani
அன்புடன்

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
நாகப்பட்டினம் மாவட்டக்கிளை

Sunday, March 02, 2014

ஆசிரியர்களுக்கு இந்திய மொழிகளில் பயிற்சி!

ஆசிரியர்களுக்கு இந்திய மொழிகளில் பயிற்சி!

இந்திய மொழிகளைக் கற்க விரும்பும் ஆசிரியர்களுக்கும் புதியமொழியைக் கற்பதில் ஆர்வமுள்ளவர்களுக்கும் பத்து மாத காலப்  பயிற்சி அளிக்கிறது இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம்.

சிரியர்களுக்கு குறிப்பிட்ட சில இந்திய மொழிகளில் பத்து மாத காலப் பயிற்சி அளிக்கப்படுகிறது. சிறுபான்மை மொழியை பேசக் கூடியவர்களும், மொழிபெயர்ப்பாளர்களும் மொழியைக் கற்பதில் ஆர்வமுள்ளவர்களும் இந்தப் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். மொத்தம் 561 பேருக்கு இந்தப் பயிற்சி அளிக்கப்படும்.

மைசூரில் மானச கங்கோத்ரியில் உள்ள தென் மண்டல மொழிகளின் மையத்தில் கன்னடம், மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. புவனேஸ்வரத்தில் உள்ள கிழக்கு மண்டல மொழிகளின் மையத்தில் பெங்காலி, மைதிலி, ஒரியா மற்றும் சந்தாலி ஆகிய மொழிகளையும் பாட்டியாலாவில் இருக்கும் பஞ்சாபி பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள வடக்கு மண்டல மொழிகளின் மையத்தில் டோக்ரி, காஷ்மீரி, பஞ்சாபி, உருது ஆகிய மொழிகளையும் புனேயில் இருக்கும் டெக்கான் கல்லூரி வளாகத்தில் உள்ள மேற்கு மண்டல மொழிகளின் மையத்தில் குஜராத்தி, கொங்கணி, மராத்தி, சிந்தி ஆகிய மொழிகளையும் சோலோன் மற்றும் லக்னோவில் உள்ள உருது கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி மையங்களில் உருது மொழியையும் குவாஹாத்தியில் உள்ள வடகிழக்கு மண்டல மொழிகளின் மையத்தில் அஸாமி, போடோ, மணிப்புரி மற்றும் நேபாளி மொழிகளையும் கற்கலாம்.

விண்ணப்பதாரர்கள் இதற்கு முன் இந்த மையங்களில் ஏதேனும் மொழிகளில் பயிற்சி பெற்றிருக்கக் கூடாது. விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சி பெற விரும்பும் மொழியில் முன் அறிவு இருக்கக்கூடாது. அரசுப் பள்ளிகளில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் மூன்று ஆண்டுகள் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு இந்தப் பயிற்சியில் 80 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மிகக் குறைவாக அறியப்பட்ட சிறுபான்மையினர் மற்றும் பழங்குடியினரின் மொழிகளை பேசுபவர்களில் இளநிலைப் பட்டம் பெற்றவர்களுக்கு 10 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மொழிப் பாடத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் அல்லது இளநிலை பட்டப் படிப்பில் மொழியை முதல் பாடமாகவோ அல்லது விருப்பப் பாடமாகவோ படித்தவர்களுக்கு 10 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளிலிருந்து தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களுக்கு அவர்களது ஊதியம் வழங்கும் அலுவலரால் அனுப்பப்படும் இறுதி ஊதியச் சான்றிதழ் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும். பயிற்சி பெறும் மற்றவர்களுக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். அத்துடன், பயிற்சிக் காலத்தில் ஆசிரியர்கள் உள்பட பயிற்சி பெறும் அனைவருக்கும் மாதம் ரூ,500 வழங்கப்படும்.

இந்தப் பயிற்சி குறித்த விவரங்கள், இந்திய மொழிகளின் நடுவண் நிறுவன இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மண்டல மையங்களிலும் விண்ணப்பங்கள் கிடைக்கும். விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து அதனுடன், ரூ.150-க்கான கோடிட்ட வரைவோலையை The Director, CIIL, Mysore  என்ற முகவரிக்கு வருகிற மார்ச் 31-ஆம் தேதிக்குள் கிடைக்கும்படி சாதாரணத் தபாலில் அனுப்பி வைக்க வேண்டும்.

விவரங்களுக்கு: www.ciil.org,  தொலைபேசி எண்: 0821-2345156

அசத்தும் அரசுப் பள்ளி!

அசத்தும்  அரசுப் பள்ளி!
ரஞ்சித் வைத்தியலிங்கம் (புதிய தலைமுறை பயிற்சிப் பத்திரிக்கையாளர்)

தனியார் பள்ளிகளுக்கு இணையாக அனைத்து வசதிகளுடன் இயங்கி வருகிறது ஓர் அரசுப் பள்ளி.

பள்ளிக் கட்டணம், டொனேஷன், வேன் கட்டணம் என்று ஆயிரக்கணக்கில் பணத்தை தனியார் பள்ளியில் செலவழிப்பதை நிறுத்தி, நிறைவான கல்வி பெற உங்கள் பிள்ளைகளை எங்கள் பள்ளியில் சேர்ப்பீர்..!’

அரசுப் பள்ளிக்கு விளம்பரமா? என்று ஒரு கணம் யோசிக்க வைத்தது அந்த துண்டுப் பிரசுரம்.

ஆம். காஞ்சிபுரம் மாவட்டம் ஆத்தனஞ்சேரியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்குத்தான் இந்த விளம்பரம். 1962-இல் தோற்றுவிக்கப்பட்ட இப்பள்ளி 2012-இல் பொன் விழாவைக்  கொண்டாடியது. தொடர்ந்து 2013-2014-ஆம் கல்வியாண்டில் ஆங்கில வழிக் கல்வியை அறிமுகப்படுத்தியது இந்தப் பள்ளி. அதற்காகத்தான் மேலே படித்த விளம்பரம். அதைத் தொடர்ந்து பள்ளியின் சிறப்பு அம்சங்களாகப் பட்டியலிடப்பட்டிருந்தவற்றை நேரில் சென்று பார்த்தோம். கொஞ்சமும் மிகையில்லை.அதுதான் உண்மை.

அதற்கு ஓர் உதாரணம்: பள்ளியில் படிக்கும் குழந்தைகள் தூய்மையான காற்றை சுவாசித்து ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மூலிகைத் தோட்டம்.

தற்போது இப்பள்ளியில் மொத்தம் 2 ஆசிரியர்களும், 6 ஆசிரியைகளும் பணியாற்றுகின்றனர். ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள இந்த நடுநிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு, திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாட்களும் காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரை ‘ஸ்போக்கன் இங்கிலீஷ்’ வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. தினமும் மதியம் 12 மணிக்கு   மாணவர்களுக்கு யோகா பயிற்றுவிக்கப்படுகிறது. சிறப்பு வகுப்புகள் மூலம் தினமும் பாட்டு, நடனம் கற்றுத் தரப்படுகின்றன. கணினிப் பயிற்சி, கராத்தே பயிற்சி அளிக்கப்படுகின்றன. சதுரங்கம், கேரம் போன்ற  நுண்ணறிவுத்திறன் வளர்க்கும் விளையாட்டுக்களும் சொல்லித் தரப்படுகின்றன.

முதல் மற்றும்  இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வீடியோக்கள் மூலம் பாடங்கள்  சொல்லித் தரப்படுகின்றன.

பள்ளியின் இத்தகைய வளர்ச்சிக்கான காரணம் குறித்தும் எல்லா அரசுப் பள்ளிகளிலும் தரமான கல்வியும், கல்வியுடன் கூடிய பாட இணைச் செயல்பாடுகளையும் (Co-Curricular Activities)  திறம்பட செயல்படுத்த என்ன செய்யலாம் என்பது பற்றியும் தலைமையாசிரியை சுகிகலா நம்மிடம் பகிர்ந்து கொண்டவை:

“தமிழக அரசின் முக்கியக் குறிக்கோள்களான பள்ளிப் படிப்பு இடை நிற்றலைத் தவிர்ப்பது, பள்ளி வயது மாணவர்கள் அனைவரையும் பள்ளியில் சேர்ப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறோம். எங்கள் பள்ளி அமைந்துள்ள கிராமத்தில் பள்ளி வயது மாணவர்கள் அனைவரையும் பள்ளியில் சேர்த்து படிக்க வைக்கிறோம். ஒன்று முதல் நான்கு வகுப்புகளுக்கு SAMBL (Simplified Activity Based Learning) முறையிலும், ஐந்தாம் வகுப்பிற்கு SALM (simplified Activity Learning Method)ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு ALM (Activity Learning Method) முறையிலும் கற்பித்து தரமான கல்வியை அளித்து வருகிறோம். தவிர மாணவர்களின் முழு ஆளுமைத் தன்மையை வெளிப்படுத்த வழிவகுக்கும் வகையில் இசை, நடனம், ஸ்போக்கன் இங்கிலீஷ், கராத்தே, யோகா ஆகியவற்றையும் கற்றுத்தருகிறோம். இதற்காக மாதம் 13 ஆயிரம் ரூபாய் செலவாகிறது. பெற்றோர் - ஆசிரியர் கழகம், கிராமக் கல்விக்குழு, பள்ளி மேலாண்மைக் குழு ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் இதனை சாத்தியமாக்கியிருக்கிறோம். இங்கு பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களும் மிகுந்த ஒத்துழைப்பு தருகின்றனர். முழு ஈடுபாட்டோடு ஒவ்வொரு மாணவனின் வளர்ச்சியிலும் அக்கறை எடுத்துக்கொள்கின்றனர்.வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களே அதிகம் இருப்பதால் அவர்களின் மன நிலை அறிந்து அதற்கேற்ப கல்விச் சூழலுக்கு அவர்களை ஆயத்தப்படுத்துகிறோம்.

கடந்த ஆண்டில் முதல் வகுப்பில் 20 பேர் மட்டுமே சேர்ந்திருந்தனர்.  இந்த கல்வியாண்டில் 43 பேர்  சேர்ந்துள்ளனர். ஆங்கில வழிக்கல்வியின் அறிமுகமும் அர்ப்பணிப்புமிக்க ஆசிரியர்களுமே இதற்குக் காரணம். தமிழ்வழி, ஆங்கிலவழி எனப் பாகுபாடின்றி தரமான கல்வியை அரசுப் பள்ளிகள் கொடுத்தால் நிச்சயம் பொதுமக்கள் தனியார் பள்ளிகளை நாடமாட்டார்கள். அதற்கு எங்கள் பள்ளி ஒரு சாட்சி” எனப் பெருமிதத்துடன் கூறும் தலைமையாசிரியை சுகிகலா, 2012-2013-ஆம் ஆண்டுக்கான குடியரசுத் தலைவரின் நல்லாசிரியர் விருதைப் பெற்றிருக்கிறார். கடந்த ஆண்டு தமிழக அரசின் சிறந்த பள்ளிக்கான விருதையும் ஆத்தனஞ்சேரி அரசுப் பள்ளி பெற்று பெருமை சேர்த்துள்ளது.

திரையில் அறிவு ஒளி ஏற்றும் ஆசிரியர்

திரையில் அறிவு ஒளி ஏற்றும் ஆசிரியர்
)
 ''பள்ளிப் பாடத்திட்டம் என்பது, தானாக மாணவர்களைப் புத்தகம் எடுத்து, படிக்கத் தூண்ட வேண்டும். அதற்காக, என்னாலான முடிந்த சிறு முயற்சிதான் இது'' என்கிறார் வில்சன் பிரபாகர்.
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி டி.யூ.என்.எஸ் வைத்தியலிங்கம் மேல்நிலைப் பள்ளியின், உதவித் தலைமை ஆசிரியர் வில்சன் பிரபாகர். ''மாணவர்கள், பாடங்களை விரும்பிக் கற்கவும் சந்தேகங்களைக் காட்சிகள் மூலம் தெளிவாக அறியவும் என்ன செய்யலாம் என யோசித்தேன். எனது சொந்தச் செலவில் கணினி, புரொஜெக்டர், ஸ்க்ரீன், பாடத்திட்டங்கள் சம்பந்தமான குறுந்தகடுகளை வாங்கினேன். அதை வகுப்பில் போட்டுக் காண்பிக்கிறேன். இதனால் மாணவர்கள் ஆர்வத்துடன் கற்கிறார்கள்'' என்கிறார்.
இவர், 18 வருடங்களாக என்.சி.சி. ஆசிரியராகப் பணியாற்றி உள்ளார். ''வில்சன் சாரைப் பற்றிச் சொல்ல நிறைய இருக்கு. 'வாழ்க்கையில் முன்னேற, எண்ணும் எழுத்தும் மட்டும் போதாது. அதையும் தாண்டி நிறைய இருக்கு’னு சொல்வார். உடல்திறன் மேம்பட, கராத்தே ஆசிரியரை வரவழைத்து, எங்களுக்கு பயிற்சி கொடுக்கிறார்'' என்கிறார் ஒரு மாணவர்.
''சார் வீட்டில அறிஞர்கள், வரலாற்று நாயகர்களின் வரலாறு, இலக்கியங்கள் என நிறையப் புத்தகங்கள் இருக்கும். அதை எடுத்துவந்து கொடுப்பார். பள்ளியில் ஒரு நூலகத்தையும் உருவாக்கி இருக்கிறார்'' என்கிறார் ஒரு மாணவி.
''ஆசிரியர்கள் மாணவர்களில் இருந்து எந்த வகையிலும் தனியாகத் தெரியக் கூடாது என்பதற்காக மாணவர்களைப் போலவே சீருடை அணிந்து வருவார். அதாவது, வெள்ளை சட்டை, நீலநிற பேன்ட் என ஒரு வருடம் முழுக்க வந்தால், அடுத்த வருடம் வேறு சீருடை'' என்கிறார் ஒரு மாணவர்.

மாதம்தோறும் வகுப்பு மாணவர்களுக்கு பாடத்திட்டத்தில் இருந்து விநாடி-வினா போட்டி நடத்தி, பரிசு கொடுக்கும் வில்சன் பிரபாகர், ''என் பள்ளி மாணவர்கள் மட்டும் இல்லாமல், அருகில் உள்ள பள்ளி மாணவர்களும் பயனடைய நினைக்கிறேன். எந்தப் பள்ளியில் கூப்பிட்டாலும் நேரம் ஒதுக்கி, புரொஜெக்டர் மூலம் பாடங்கள், ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்பெடுக்கத் தயாராக இருக்கிறேன்'' என்கிறார்.
இவருடைய சேவையை, விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி ஜெயக்குமார் பாராட்டியிருக்கிறார். ''இந்த உலகில், நாம் பெரியதாகச் சாதிக்க வேண்டியது இல்லை. வந்தோம் சென்றோம் என்பதைக் கொஞ்சம் மாற்றி, 'வந்தோம் செய்தோம்’ என்று இருந்தாலே போதும்'' என்று சிரிக்கிறார் இந்த அற்புத ஆசிரியர்.